Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yeidhavanai Thedi...
Yeidhavanai Thedi...
Yeidhavanai Thedi...
Ebook128 pages1 hour

Yeidhavanai Thedi...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580132405390
Yeidhavanai Thedi...

Read more from Nc. Mohandoss

Related to Yeidhavanai Thedi...

Related ebooks

Related categories

Reviews for Yeidhavanai Thedi...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yeidhavanai Thedi... - NC. Mohandoss

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    எய்தவனைத் தேடி...

    Yeidhavanai Thedi...

    Author :

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூலாசிரியரைப் பற்றி

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் - நான்கு

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    அத்தியாயம் எட்டு

    அத்தியாயம் ஒன்பது

    அத்தியாயம் பத்து

    அத்தியாயம் பதினொன்று

    நூலாசிரியரைப் பற்றி

    பிறருக்கு யோசனைகள் - புத்திமதிகள் சொல்வதும், எழுதுவதும், மிக எளிது. அவற்றை கடைப்பிடிப்பதுதான் கடினம். எழுத்தும் பேச்சும் வெறும் உபதேசங்களாக மட்டுமின்றி அவற்றை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும் என்று தீவிரமாயிருக்கும் எழுத்தாளர்களில் என்.சி. மோகன்தாஸும் ஒருவர்.

    எழுத்துலகில் இதுவரை 500+ சிறுகதைகள், 200+ நாவல்கள், 10+ குறுநாவல்கள், 3,000+ கட்டுரைகள், 4 டி.வி. நாடகங்கள் என பிரபல இதழ்களில் எழுதி, அவைகள் 100+ புத்தகங்களாக 10+ பதிப்பகங்கள் மூலமும் ஆன்லைனிலும் வெளியாகியுள்ளன.

    திருச்சி மாவட்ட - லால்குடி வட்டத்தில் நம்புகுறிச்சி எனும் (போஸ்டாபீஸ் இல்லாத - போன் உண்டு) கிராமத்தில் பிறந்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் B.Sc இரசாயனம் படித்து, கொச்சின், சென்னை, குவைத் பெட்ரோலியம் கம்பெனிகளில் வேலைபார்த்து எழுத்தையும் சமூகத் தொண்டையும் தொடர்ந்து வருகிறார்.

    குவைத்தில் சேவை குணமுள்ள நண்பர்களுடன் Indian Frontliners அமைப்பை நிறுவி, அதன் முலம் குவைத்தில் வெற்றிகரமாய் செயல்பட்டுவரும் இந்தியர்களின் வெற்றிப் பயணத்தை Indian Frontliners தலைப்பில் புத்தகமாய் தொகுத்து - இதுவரை 22 பகுதிகள் வெளியிட்டுள்ளார்.

    இந்த நூல்களை - குவைத்தில் அகில இந்திய அளவில் பிரபலங்களை வரவழைத்து, வெளியிட்டு நிதி திரட்டி பல நற்காரியங்கள் செய்து வருகிறார்கள். அத்துடன் www.iflkuwait.com இணையதளத்தின் ஆசிரியராகவும் இருந்து அதன் மூலமும் இவரது சேவை, இந்தியாவிலிருந்தும் தொடர்கிறது.

    எங்கும் எதிலும் இந்தியர் என்ற உணர்வை தூக்கிப் பிடிப்பார் என் சி எம்.

    இவரது IFL நேரடியாகவும், இந்திய தூதரகம் மற்றும் பிற சேவை நிறுவனங்கள் மூலமாகவும், கல்வி - சுகாதாரம் - பேரிடர்நிவாரணம் - முதியோர் பராமரிப்பு, கோவிட் நிவாரணம் - என அனைத்து தருணங்களிலும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாய் சிறந்த சேவைக்காக Dr. கலாம் விருது, குவைத் இந்திய தூதரகத்தின் சேவை விருது, முல்லைச்சரம் பொன்விழாவில் இசைஞானி விருது, இலக்கியவீதி அமைப்பின் அன்னம் விருது, கலாம் சர்வதேச விருது, கம்பன் கழக விருது என பல விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர்.

    இந்த வாழ்வில் – இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி பண்ணி பார்ப்பதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமில்லை. பிறருக்கு உதவும் அளவில் வசதி வாய்ப்புகளை தந்துள்ள இறைவனுக்கு மோகன்தாஸ் நன்றி தெரிவிப்பதுடன், தன்னை இந்தளவிற்கு வளர உதவின, ஆசிரியர் சாவி, தினமலர் ஆசிரியர் கே. ராமசுப்பு, லேனா-ரவி தமிழ்வாணன், ஆசிரியர் மணியன், வண்ணப்பட யோகா, ப்ரியா கல்யாணராமன், பாவைசந்திரன், ஜீஏ, நண்பன் மனோகர், பி. வெங்கடராமன் முதல் பலரையும் நமஸ்கரிப்பதில் பெருமைப்படுகிறார்.

    அத்தியாயம் ஒன்று

    அதிகாலை ஐந்து மணிக்கு பீச்ரோடு சுத்தமாயிருந்தது. பனி, விளக்கு ஒளியில் செம்மை பரப்பியிருந்தது, மணலி இன்டஸ்ட்ரீஸ்க்கு போகும் ஷிப்ட் பஸ்களும், வேன்களும் வழுக்கிக்கொண்டு ஓடின.

    கண்ணகி சிலையோரம் சிலபேர் காரை நிறுத்திவிட்டு தங்களின் போஷாக்கான தொந்தியையும், கொலஸ்ட்ராலையும் கரைக்க வேண்டி பிரயத்னம் நடத்தினர். ஓடி மூச்சிரைத்தனர். வியர்த்தனர்.

    திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்டில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் எண்ணெய் வழிந்த முகத்துடன் ஜனங்களை உதிர்த்தன. பெரம்பலூரிலிருந்து ஒரு மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்த நம்பர் நூற்றி மூணு பஸ்ஸிலிருந்து ரங்கன் தலை முடியை ஒதுக்கிக் கொண்டு கீழே குதித்தான்.

    அவனுக்கு இருபத்தைந்து வயது. அவனுடைய உருவம் மட்டுமில்லை, மனதும் கூட இறுக்கம் தான். அப்போது குளிருக்கு வேண்டி தெருவில் பேரம் பேசி வாங்கியிருந்த சொட்டர் போட்டிருந்தான். கையில், பொங்கலுக்கு துணி எடுத்த போது கிடைத்த துணி பையை ஏந்திருந்தான்.

    அவன் சற்றுக் கோபக்காரன். நல்ல அறிவும், நன்னடத்தையும் இருந்தும் கூட அவனால் சமுதாயத்தில் நல்ல பெயரெடுக்க முடியாமலிருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவனது கோபம்…

    எவரையாவது பிடிக்கவில்லையென்றாலோ, இல்லை எவரைப்பற்றியாவது கெட்ட தகவல் கிடைத்தாலோ அவன் சும்மா இருக்க மாட்டான். வீணாக போய் தலையை கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்வான்.

    பாதிக்கப்பட்டவர்கள் ராசியாகிப் போவார்கள். இவன் பேரில் மட்டும் கடைசியில் விரோதம் நிலைக்கும், வீண் பழி மிஞ்சும்.

    இப்போது அவன் மெட்ராஸிற்கு வந்தது எவரையும் பகைத்துக் கொள்வதற்கோ இல்லை பழித்தீர்க்கவோ இல்லை தன்னுடைய அக்கா லோராவைப் பார்க்க.

    அவள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் அருகில் தங்கியிருந்தாள். லோரா ஒரு துரதீர்ஷ்டகட்டை. அவளுக்கிருந்த அழகிற்கும் படிப்பிற்கும் எப்படியெப்படியெல்லாமோ உயர்ந்திருக்கலாம்.

    நல்ல வரணாய் பார்த்து வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டிருக்கலாம் ஆனால் இப்போதோ… வெளியே சொல்லவே வெட்கக்கேடு.

    பிரபல லெதர் கம்பெனியான வி வி அண்ட் வியை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா…? நாம் உபயோகிக்கும் அன்றாட லெதர் பொருட்களில் பெரும்பாலும் அவர்கள் தயாரித்ததாகதானிருக்கும். அல்லது அவர்கள் தயாரித்து வெளிநாட்டு முத்திரையுடன் பர்மா பஜாரிலும் ஏர் போர்ட்டிலும் கிடைக்கும்.

    அக்கம்பெனியின் பார்ட்னரும் சென்னை பிராஞ்சின்

    எம்.டி-யுமான விசுவநாதன் இருக்கிறாரே… அவரது… அவரது ஆசை நாயகி அவள்! பச்சையாய் சொல்லணும் என்றால் வெப்பாட்டி.

    அவள் இந்த நிலமைக்கு தரம் தாழ நேரிடும் என்று அவளோ அல்லது குடும்பத்தினரோ சற்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை வீட்டு வறுமையிலும் கஷ்டத்திலும் கூட அவள் சமத்தாய் படித்து, கம்ப்யூட்டரில் டிப்ளமோ வாங்கி பர்சனல் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக அந்த கம்பெனியில் சேர்ந்திருந்தாள்.

    அவளுடைய சம்பளத்தை நம்பி குடும்பம் சந்தோஷப்பட்டது. வயதான அப்பாவும் சிக்கான அம்மாவும் அவளிடம் நிறையவே எதிர்ப்பார்த்திருந்தனர்.

    ஆனால் அவர்களுடைய எதிர்ப்பார்ப்பை லோராவின் அழகே அழித்துவிட்டது. லோராவின் கவர்ச்சி விசுவநாதனை வீழ்த்திற்று. படுத்திற்று. அவர் அவளை பைத்யமாய் சுற்றிச்சுற்றி வந்து, அளவுக்கு அதிகமாய் பணமும், சுதந்திரமும் கொடுத்து, எல்லா வெளி இடங்களுக்கும் தன்னுடன் அழைத்துப் போய் அவள் மனதை வசியம் பண்ணி தனக்கு ஏறக்குறைய இரண்டாம் மனைவியாக்கிக் கொண்டார்.

    அவளுடைய எதிர்ப்பெல்லாம் அவரிடம் செல்லுபடியாகவில்லை. என்னை நம்பி பெரிய குடும்பமே இருக்கிறது என்று சொல்லிப் பார்த்தாள்.

    இருக்கட்டும் அவர்களை கரையேற்ற வேண்டியது என் பொறுப்பு

    என் சம்பளம் அவர்களுக்கு தேவை

    "அதனாலென்ன நான் அனுப்பி வைக்கிறேன். நீ வேலை செய்ய வேண்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1