Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mala Ennai Mannippaya?
Mala Ennai Mannippaya?
Mala Ennai Mannippaya?
Ebook98 pages32 minutes

Mala Ennai Mannippaya?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாலா மற்றும் கணபதியை கொல்ல நினைப்பவர்களை தேடி அலையும் சந்தோஷ் (ம) திவ்யா. ஏன் அவர்களை கொல்ல நினைக்கிறார்கள்? மாலா கணபதியால் பாதிக்கப்பட்டவர் யார்? சந்தோஷ் (ம) திவ்யா இருவரும் மாலா கணபதியால் என்ன சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்? இறுதியில் மாலா கணபதியை கண்டுபிடித்தார்களா?மாலா மற்றும் கணபதி இருவரும் என்ன ஆனார்கள்? பல்வேறு திருப்பங்கள் நிறைந்த கதை களத்தை வாசித்து தெரிந்து கொள்வோம்....

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580132407024
Mala Ennai Mannippaya?

Read more from Nc. Mohandoss

Related to Mala Ennai Mannippaya?

Related ebooks

Reviews for Mala Ennai Mannippaya?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mala Ennai Mannippaya? - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    மாலா என்னை மன்னிப்பாயா?

    Mala Ennai Mannippaya?

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    அது ராத்திரி நேரம்.

    எர்ணாகுளத்தின் ஜோஸ் ஜங்ஷனில் வெளிச்சமாயிருந்தது. சிலோன் பேக் ஹவுஸ் ரெஸ்ட்டாரெண்டில் சந்தோஷும் திவ்யாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

    அவர்களின் கண்ணும் கண்ணும் நோக்கின. கீழே காலும் காலும் பின்னிக்கொண்டிருந்தன.

    சில்லி சிக்கனிற்கு ஆர்டர் வாங்கிக்கொண்டு போன வெயிட்டரை இன்னும் காணவில்லை. லீவில் ஊருக்குப் போய்விட்டாரோ என்னவோ தெரியவில்லை.

    ஜில் வாட்டரை உறிஞ்சினார்கள். பார்த்துக்கொண்டார்கள். சூப்பை ஸ்விப் பண்ணினார்கள். ஹாப்பி பர்த்டே சந்தோஷ்!

    தாங்க்ஸ்! என்ற சந்தோஷ் திவ்யா... தாங்க்ஸ்ன்னு வெறுமே சொல்லக்கூடாது. முத்தம் கொடுத்துதான் சொல்லணும்னு சொல்லியிருக்காங்க.

    யார்?

    எங்க பாட்டி சிரித்தாள். பாட்டி சொல்லே எனக்கு மந்திரம் தெரியுமில்லே.

    சரி இருங்க. பாட்டி சொல்லைத் தட்ட வேணாம். கொடுத்திருங்க! என்று கையை நீட்டினாள். அவன் முகம் - இல்லை உதடுகள் சுண்டிப்போயின.

    உங்க பாட்டி வேற என்னவெல்லாம் சொல்லியிருக்காங்க?

    விடாதே, காதலி முத்தம் கொடுன்னு கையைத்தான் நீட்டுவா. நீ கன்னத்தையே கேளுன்னு,

    அப்படியா. உங்க பாட்டியோட கன்னத்தை அப்புறமா நான் கவனிச்சுக்கிறேன். தோ - அயிட்டம்ஸ் வந்துருச்சு. சாப்பிடுங்க!

    சாப்பிட்டார்கள்.

    வெளியே வந்து பான்பீடா போட்டார்கள், கட்டிப்பிடிக்காத குறையாய் நடந்து - வழியில் சோடியம் வேப்பர் லேம்புகள் செம்மை பரப்பியிருந்தன. கடற்காற்று இதமாய் அடித்தது. ரோடு சைடுகளில் ‘கையேந்தி பவன்’ கடைகள்.

    யாரோ இரண்டு பேர், கருப்பாய் - முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்த ‘அந்த மாதிரி’ பெண்ணின் பின்னால் போய்க்கொண்டிருத்தார்கள்.

    முதல்ல இடுப்பிலிருந்து கையை எடுங்க. என்னவோ கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்ட மாதிரி. ஆட்டோவை கூப்பிடுங்க!

    ஆட்டோவா? இதுக்குதான் அப்பவே சொன்னேன். ஸ்கூட்டர் கொண்டு வருகிறேன். நீ ஹாயாய் பின்னால அழுத்திக்கிட்டு என் இடுப்பை பிடிச்சுக்கன்னு!

    ஆசை... ஆசை!

    ஆட்டோவில் ஏறி, வைட்டிலா ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்! என்றான். மெதுவா போ - அவசரம் ஒண்ணுமில்லை!

    ஆட்டோவின் குதிப்புகளுக்கு அவன் சந்தோஷப்பட்டான். ஆட்டோவுல போகும்போது பிரிஞ்சு உட்காரக்கூடாதுன்னு எங்க பாட்டி...

    போதும் - போதும்! உங்க பாட்டியோட வேணும்னா சேர்ந்து உட்கார்ந்து போங்க!

    வைட்டிலா பைபாஸ் ரோடு தாண்டி, பவர் ஹவுஸ் தாண்டி, ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலுக்குள் ஆட்டோ புக, இவ்ட நிறுத்தியால் மதி.

    சட்டென் இறங்கிக்கொண்டாள்.

    திவ்யா... உள்ளேயே விட்டுரலாமே!

    வேணாம். வேணாம். அப்புறம் தோழிங்களோட கிண்டல் தாங்க முடியாது. பை - பை!

    திவ்யாவிற்கு உடலெல்லாம் களைப்பாயிருந்தது. நாளெல்லாம் டி.வி. எஸ்ஸில் டைப் அடித்து அடித்து ஐந்து மணிக்கு அப்பாடா என்று வெளியே வரும்போது அப்படியே சந்தோஷ் தள்ளிக்கொண்டு போயிருந்தான்.

    முகம் கழுவக்கூட விடவில்லை. உடலெல்லாம் வியர்வை கசகசத்தது. போய் ஆசை தீரக் குளித்துவிட்டு முடியைப் பரப்பி படுக்கையில் விழ வேண்டும். நாளைக்கு ஞாயிறு. ஜாலிதான்!

    ரிசப்ஷன் கடிகாரத்தில் மணி எட்டரை காட்டியது. தன் வாட்ச்சை கழற்றி சரி பண்ணிக்கொண்டு -

    அறை பூட்டைத் திறந்து, ஹேண்ட் பேகை எறிந்துவிட்டு டிரஸ் மாற்றப் போனபோது எதிர்த்த ரூம் பெண் ஓடி வந்தாள்.

    சேச்சி... நிங்ஙளுக்கு ஒரு...

    ஏண்டி! நீ தமிழச்சிதானே, அப்புறம் என்ன மலையாளம்?

    ஸாரிக்கா. பழக்க தோஷம்!

    சரி. இப்போ சொல்லு. என்ன விஷயம்?

    கொஞ்சம் முன்னாடி போன் மேஸேஜ் வந்தது. திருச்சியில உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். உடனே புறப்பட்டு வரச் சொன்னாங்க!

    உடம்பு சரியில்லையா.

    Enjoying the preview?
    Page 1 of 1