Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mul Naduve Malar Valarthu!
Mul Naduve Malar Valarthu!
Mul Naduve Malar Valarthu!
Ebook151 pages58 minutes

Mul Naduve Malar Valarthu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவன் இறந்த பிறகு தன் ஒரே மகன் தங்கராசுவை பொத்தி பொத்தி வளர்க்கிறாள் தெய்வானை. இருபத்தி நாலு மணி நேரமும் தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே வளர்ந்த காரணத்தால் வாலிபனாகியும் சிறுவனைப் போலவே நடந்து கொண்டான் தங்கராசு. ஆண் பிள்ளையாய்ப் பிறந்து ஒரு பெண் பிள்ளை போல் வளர்ந்து விட்ட தன் மகனுக்குத் திருமணம் செய்ய நினைக்கிறாள் தெய்வானை. தரகர் மூலம் சகுந்தலாவை அவனுக்கு மணம் முடிக்கிறாள்.
சகுந்தலாவோ தங்கராசுவுக்கு நேர் எதிர். பிறப்பில் பென்ணாய் இருந்து கொண்டு வளர்ப்பில் ஒரு ஆண் மகனைப் போல் வளர்க்கப்பட்டவள்.
இருவரும் பல தருணங்களில் மோதுகின்றனர்.
ஒரு கட்டத்தில் சகுந்தலா கணவனைப் பிரிகிறாள்.
தனியாக இருக்கும் மகனுக்கு ஆதரவாய் தெய்வானை வருகிறாள்.
அது பொறுக்காமல் சகுந்தலா அவளையும் விரட்டியடிக்கிறாள்.
மீதியை வாசித்து ரசியுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005122
Mul Naduve Malar Valarthu!

Read more from Mukil Dinakaran

Related to Mul Naduve Malar Valarthu!

Related ebooks

Reviews for Mul Naduve Malar Valarthu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mul Naduve Malar Valarthu! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    முள் நடுவே மலர் வளர்த்து!

    Mul Naduve Malar Valarthu!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    இரு கைகளிலும் கனமான பைகளைச் சுமந்தபடி ரேஷன் கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள் தெய்வானை. வாழ்க்கையில் கொஞ்சமாய் சந்தோஷங்களையும், நிறைய சோகங்களையும் மட்டுமே அனுபவித்த பெண்மணி அவள், என்பது அவளது தளர்வான நடையிலேயே தெரிந்தது. கண்களுக்குக் கீழே கெட்டியாய் விழுந்திருந்த கருப்பு வளையம் அவளது துயரங்களின் சின்னம். தும்பைப்பூ போல் வெளுத்திருந்த அவள் தலை முடி மூப்பின் வண்ணம்.

    காலை நேர வெயில், அவளது முன் நெற்றியில் வியர்வை மொட்டுக்களை உற்பத்தி செய்திருந்தது. கால்கள் தெருவில் நடந்து கொண்டிருந்தாலும், கண்கள் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவள் மனம் மட்டும் எங்கோ சிந்தித்துக் கொண்டிருந்தது. ஹூம்! ஒரே மகனாச்சேன்னு பொத்திப் பொத்தி... பொட்டப் புள்ளையை வளர்க்கற மாதிரி, தங்கராசுவை கண்ணுக்குள்ளாரவே வெச்சு வளர்த்தேன்! அக்கம் பக்கத்துல யாரு கூடவும் பேச விடாமல், பழக விடாமல்... இருபத்தியேழு வயசு வரைக்கும் அவனை ஒரு குழந்தையைக் காப்பாத்துற மாதிரிக் காப்பாத்தினேன்! அதெல்லாம்தான் இப்ப தப்பாப் போச்சு!

    க்ரீச்சென்று வெகு சமீபத்தில் ஏதோ வாகனம் வந்து பிரேக்கிட,

    திடுக்கிட்டுப் போய், கையிலிருந்த இரண்டு பைகளையும் அப்படியே கீழே நழுவ விட்டவள், காதுகளைப் பொத்திக் கொண்டு... கண்களை இறுக மூடிக் கொண்டு, நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றாள்.

    இதயம் பட... பட... வென்று துடித்தது. கைகளும், கால்களும் வெட... வெட வென்று நடுங்கின.

    ஏங் கெழவி! வூட்டுல சொல்லிக்கிட்டு வந்துட்டியா? சாவறதுக்கு உனக்கு என் வண்டிதானா கெடைச்சது? என்று எவனோ ஒரு ஆட்டோக்காரன் திட்டி விட்டுச் செல்ல,

    மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள். ஆட்டோ என்னை இடித்துத் தள்ளவில்லையா? லேசாய் ஆறுதல் அடைந்தவள், அப்போதுதான் கவனித்தாள், தெருவில் எல்லோரும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். தன்மானம் உறுத்த, கீழே குனிந்து பைகளை நிதானமாக எடுத்தாள். நல்லவேளையாக அதிலிருந்த பொருட்கள் எதுவும் தரையில் சிந்தவில்லை. சிந்தியிருந்தால், தெருவில் உட்கார்ந்து அதை வேறு அள்ளிக் கொண்டிருக்க வேண்டும்.

    அடுத்த நிமிடம், அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்தால் போதும், என்கிற எண்ணத்தில் வேக, வேகமாக கால்களை எட்டிப் போட்டு நடக்கத் துவங்கினாள்.

    வயதுக்கு மீறிய வேகத்தால், பத்து நிமிட நடைக்குப் பின், லேசாய் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அடடே! ரேஷனுக்கு வர்ற அவசரத்துல பிரஷ்ஷர் மாத்திரை போட மறந்துட்டோமே... இப்ப என்ன பண்றது? கொஞ்சம் ஏமாந்தா ஆளைக் கீழே தள்ளிடுமே! மெல்ல தலையைத் தூக்கி பக்கத்தில் தெரிந்தவர்கள் வீடு ஏதாவது இருக்கின்றதா? என்று தேடினாள் தெய்வானை.

    சட்டென்று ஞாபகத்தில் வந்தது. அட... நம்ம கருப்பு சரசு வீடு... இங்கதானே எங்கியோ இருந்திச்சு? முன்னாடி கூட பூவரச மரம் இருக்குமே! தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, பூவரச மர வீட்டைத் தேடியவாறே நடந்தாள். கால்கள் நடைக்கு ஒத்துழைக்காமல் பின்னிப் பிணைந்து கொண்டு அவளைத் தள்ளாட வைத்தன.

    பார்வை லேசாய் மசமசப்புத் தட்டியது. அய்யய்யோ... கீழே விழுந்து விடாமல் இருக்கணுமே!

    கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், அந்தக் கருப்பு சரசுவே எதிரில் வர, டீ... சரசு! என்று அழைத்தாள் தெய்வானை. அவள் குரல் அவளுக்கே கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் கேட்டது.

    அட... தெய்வானையக்கா! எங்க இந்தப் பக்கம்? சகஜமாய்க் கேட்டபடியே அருகில் வந்தவள், தெய்வானையின் முக வாட்டத்தையும், உடம்பின் தள்ளாட்டத்தையும் பார்த்துப் பதட்டமாகி, என்னக்கா? என்னாச்சு? உடம்பு சரியில்லையா? அவளது தோளைத் தொட்டுப் பிடித்தவாறே கேட்டாள்.

    தெய்வானையிடமிருந்து அந்தக் கேள்விக்கு பதில் வராது போக, நிலைமையைப் புரிந்து கொண்ட கருப்பு சரசு, சரி... சரி... வா... இதான் எங்க வீடு! உள்ளார வந்து கொஞ்சம் படு! சூடா ஒரு டம்ளர் கருங்காப்பி போட்டுத் தர்றேன்... குடிச்சிட்டு சித்த ஓய்வெடு... எல்லாம் சரியாய்ப் போயிடும்! இதெல்லாம் வயசான வர்ற தளர்ச்சிதான் சொல்லியவாறே தெய்வானையின் கைகளிலிருந்த பைகளைத் தான் வாங்கி கொண்டு, கைத்தாங்கலாக அவளை உள்ளே அழைத்துச் சென்று, திண்ணையில் படுக்க வைத்தாள்.

    அந்த நிமிடத்தில் அந்தத் திண்ணை தெய்வானைக்கு பஞ்சு மெத்தையாய்த் தெரிந்தது. கைகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தாள்.

    அப்படியே கொஞ்ச நேரம் படுத்திருக்கா... இதோ வந்துடறேன்! சொல்லி விட்டு காபி போடச் சென்றாள் கருப்பு சரசு. பேச்சு வள... வள வென்றிருந்தாலும் அந்தக் கருப்பு சரசு பாசாங்கில்லாப் பாசக்காரி. நிஜமான நேசக்காரி. வஞ்சகமில்லா வெள்ளை மனசுக்காரி.

    ஐந்தே நிமிடத்தில் காபியுடன் வந்தவள், ஆற்றி... ஆற்றி... இதமான சூடாக்கி, தெய்வானையிடம் நீட்டினாள்.

    எழுந்து அதை வாங்கிப் பருகிய தெய்வானைக்கு, அது தேவாமிர்தமாக இருந்தது.

    ஒவ்வொரு வாயாய் நிதானமாய்ப் பருகியவள், கண்களில் நன்றியைத் தேக்கிக் கொண்டு சரசுவைப் பார்த்தாள். அவள் பருகி முடித்துக் கொடுத்த டம்ளரை வாங்கிய கருப்பு சரசு, அட... உடனே எந்திரிச்சு இந்த ஏறு வெயில்ல போக வேணாம்... மறுபடியும் கிறு... கிறு... ன்னு வந்துடும்! பேசாம இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கா! என்றாள்.

    போதும் சரசு... இப்பவே கொஞ்சம் தேவலாம் போலத்தான் இருக்கு! சொல்லும் போது தெய்வானையின் குரலில் இருந்த விரக்தியையும், வேதனையையும் புரிந்து கொண்ட கருப்பு சரசு கேட்டாள்.

    அக்கா... உன் மொகத்தைப் பார்த்தாலே தெரியுது... உள்ளுக்குள்ளார எதையோ நெனச்சு வேதனைப் பட்டுட்டு இருக்கே!ன்னு! சொல்லுக்கா... என்ன பிரச்சினை உனக்கு? பேசியவாறே முறத்தில் ரேஷன் அரிசியை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள் சரசு. படிக்காதவளாய் இருந்தாலும் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தெளிவான தீர்வைச் சொல்லுவதில் கெட்டிக்காரி சரசு.

    என்னத்தைடி சொல்லுறது? ஆம்பளைப் பையனைப் பெத்து... அவனைப் பொம்பளைப் புள்ளைய வளர்த்துற மாதிரி வளர்த்த கதையச் சொல்லவா? இல்லை... அப்பா இல்லாத பிள்ளையொண்ணு அப்பிராணியாப் போன கதையைச் சொல்லவா? எதைடியம்மா சொல்லச் சொல்லுறே? பாசத்தைக் கொட்டி வளர்த்தது... மோசத்தில் முடிஞ்சிருக்கு!" சோகத்திலும் வார்த்தைகள் புன்னகையோடு வந்தன தெய்வானைக்கு.

    அரிசியில் கிடக்கும் கற்களையும், நெல் மணிகளையும், பதர்களையும் பொறுக்கித் தூர எறிந்து கொண்டிருந்த கருப்பு சரசு சிரித்தாள். த பாருக்கா! எனக்கு அந்தக் கதையெல்லாம் வேண்டாம்! இப்ப உன் மொகம் வாடிக் கெடக்கே? அது ஏன்? அதுக்கான காரணத்தை மட்டும் சொல்லு! பழைய கதையெல்லாம் இங்க தெரியாமலா இருக்கு

    வழக்கமான பிரச்சினைதான் தாயி! என் மருமகக்காரி மகனோட சண்டை போட்டுக்கிட்டு, பொறந்த ஊட்டுக்கே போயிட்டாளாம்! மகன் மட்டும்தான் தனியா இருக்கானாம்! தகவல் காதுக்கு வந்திருக்கு... அதைக் கேட்டதிலிருந்துதான் மனசும் கெட்டுப் போச்சு... ஒடம்பும் கெட்டுப் போச்சு!! தழுதழுத்த குரலில் சொன்னாள் தெய்வானை.

    அடப் பாவமே! அவளுக்கு இதே பொழப்பாப் போச்சு! எட்டுக்கு ஏழு தரம் புருஷன் கூட சண்டை போட்டுக்க வேண்டியது... பொறந்த ஊட்டுக்கு ஓடிட வேண்டியது... ச்சை... என்ன பொம்பளையோ? கண்ணாலங் கட்டிட்டு வந்த நாள்ல இருந்து தனிக்குடித்தனம்... தனிக்குடித்தனம்!ன்னு தாண்டவமாடினா... சரின்னு அவ வாயை அடைக்கற மாதிரி நீயும் அதுகளுக்கு தனியா வீடு பாத்து... தனிக்குடித்தனம் வெச்சுக் குடுத்திட்டு... நீ தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கே! அப்புறம் இன்னும் என்ன வேணுமாம் அந்தச் சிறுக்கிக்கு? கருப்பு சரசு கோபமானால் கட்டுப்பாடின்றி வாயாடுவாள். முகத்தில் பல்வேறு பாவங்களை பல விதத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1