Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இனியெல்லாம் சுகமே..!
இனியெல்லாம் சுகமே..!
இனியெல்லாம் சுகமே..!
Ebook144 pages55 minutes

இனியெல்லாம் சுகமே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆபீசுக்கு கிளம்பும் பரபரப்பில் இருந்தாள் லாவண்யா. நேரம் ஒன்பது பத்து குளித்த ஈரத் தலையை முடியிட்டிருந்தாள்... அதிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. லாவண்யாவின் மாமியார் கோமதி குரல் கொடுத்தாள்...

"லாவண்யாம்மா தலையை துவட்டிட்டு வேலையைப் பாரு நீர் கோர்த்துக்கிச்சுன்னா கஷ்டமாயிடும், கரிசனமாய் வந்தது மாமியார் கோமதியின் வார்த்தைகள்.

"சரி அத்தே... இட்லி ஈடுலயே இருக்குது எடுத்துக்கங்க புதினாச் சட்டினி அரைச்சிருக்கறேன்..." என்றவாறே தலையை துவட்டினாள் லாவண்யா.

"நான் பார்த்துக்கறேன்... நீ கிளம்புற வேலையைப் பாரு" என்றாள் கோமதி...

"அத்தே மதியத்துக்கு புளிக்குழம்பு வச்சுட்டேன் அப்பளம் வறுத்துக்கங்க கூட்டு ஒண்ணும் வைக்கலை, காய்கறி காலியாயிருக்குது கவனிக்காம விட்டுட்டேன்"

"சரிம்மா இதுல என்ன இருக்குது நான் பார்த்துக்கறேன்"

"அப்புறம் கேஸ் வரும் கடுகு டப்பாவுல பணம் வச்சிருக்கறேன்... பில் தொகைக்கு மேல ஒரு பத்து ரூபா கொடுங்க அதுக்கு மேல கேட்டான்னா என்னை செல்லுல கூப்பிடுங்க..."

"அது தெரியாதம்மா... அன்னிக்கு நீ போட்ட போடுல இப்ப பத்து பைசா கூட கேட்கிறதில்லை..."

"இல்லை அத்தே பழைய ஆளு வந்தா ஓகே புதுசா வந்தான்னா கூட கேட்பான் கைகால் இல்லாதவங்க, பார்வைத் திறன் இல்லாதவங்க, முதியோர்களுக்கு உதவி பண்ணணும். இந்த மாதிரி கொள்ளையடிக்கிறவங்களுக்கு நாம துணை போகக் கூடாது"

"சரிம்மா... சரிம்மா காலையிலேயே பொங்காத அப்புறம் வேலை செய்யுற இடத்திலயும் உன்னை அறியாம கோபம் வரும்"

புன்னகைத்தாள் லாவண்யா... புன்னகைக்கும் போது தெரியும் எத்துப்பல் அவள் முகத்திற்கு மேலும் அழகைக் கொடுத்தது.

கண்ணாடி முன்நின்று தலையை சடையிட்டு, லேசாக பவுடர் பூசி நெற்றிக்கு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிட்டு கண்ணாடியில் சற்று நேரம் தன் முகத்தைப் பார்த்தாள்... திருப்தியாய் உணர்ந்தவள் கைப்பையை சோதனையிட்டாள். சின்னதாய் ஒரு பவுடர் டப்பா சிறிய கண்ணாடி இருந்தது. அந்த மூன்று நாள் சமாச்சாரம் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தாள். இரண்டு மட்டும் இருந்தது. மாலையில் வரும்போது பாட் வாங்க வேண்டும். அத்தைக்கு கால்வலித் தைலம் வாங்க வேண்டும்.சீக்கிரம் அத்தைக்கு காட்ராக்ட் ஆபரேஷ்ன் செய்யணும் அதுக்கு லோன் போடணும். எண்ணியவாறு அடுக்களைக்குள் சென்று டிபன் பாக்சை எடுத்து பைக்குள் வைத்தாள். வெறும் புளிக்குழம்பு மட்டும் ஒரு கூட்டு செய்ய காலையில் நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. நோயாளி அத்தையால் பெரிதாக சமையலில் அவளுக்கு உதவ முடியவில்லை… மனதில் நினைத்தாள் ஆபீஸ் கேண்டீனில் வடை போடுவார்கள் அதை இன்று கூட்டுக்கு தொட்டுக்கிட வேண்டியது தான்.' எண்ணியவள் பஸ்சிற்கு சில்லரை சரியாக இருக்கிறதா என்று பார்த்து திருப்திபட்டுக் கொண்டாள்.மழை வருகிறதோ இல்லையோ எப்பொழுதும் லாவண்யாவின் கைப் பையில் குடை இருக்கும். மெரூன் நிற காட்டன் சேலை மேட்சிங் பிளவுஸில் சராசரிக்கு அதிகமான உயரத்தில் அழகி என்ற லிஸ்டில் வந்தாள் லாவண்யா...

"அத்தே கிளம்புறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்ட லாவண்யாவை கையமர்த்திய கோமதி கூறினாள்...

"லாவண்யா நேத்து பூ வாங்கி ஃபிரிட்ஜ்ல வச்சிருக்கறேன் எடுத்து வச்சுட்டுப் போ"

"சாரி... அத்தை மறந்திட்டேன்" என்றவாறு ஃபிரிட்ஜை திறந்து பாதி மலர்ந்த அந்த மல்லிகைச் சரத்தை கொண்டையில் வைத்து விட்டு கிளம்பினாள் லாவண்யா...

முன் வாசலில் பெரிதாக ஃபிரேம் இட்டு... மாலை போட்டு அலங்கார விளக்கு மாட்டப்பட்டிருந்த போட்டோவிலிருந்து ரகுவரன் மனைவி வேலைக்குச் செல்லும் அழகை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223810872
இனியெல்லாம் சுகமே..!

Read more from Sahitha Murugan

Related to இனியெல்லாம் சுகமே..!

Related ebooks

Related categories

Reviews for இனியெல்லாம் சுகமே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இனியெல்லாம் சுகமே..! - Sahitha Murugan

    1

    ஆபீசுக்கு கிளம்பும் பரபரப்பில் இருந்தாள் லாவண்யா. நேரம் ஒன்பது பத்து குளித்த ஈரத் தலையை முடியிட்டிருந்தாள்... அதிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. லாவண்யாவின் மாமியார் கோமதி குரல் கொடுத்தாள்...

    "லாவண்யாம்மா தலையை துவட்டிட்டு வேலையைப் பாரு நீர் கோர்த்துக்கிச்சுன்னா கஷ்டமாயிடும், கரிசனமாய் வந்தது மாமியார் கோமதியின் வார்த்தைகள்.

    சரி அத்தே... இட்லி ஈடுலயே இருக்குது எடுத்துக்கங்க புதினாச் சட்டினி அரைச்சிருக்கறேன்... என்றவாறே தலையை துவட்டினாள் லாவண்யா.

    நான் பார்த்துக்கறேன்... நீ கிளம்புற வேலையைப் பாரு என்றாள் கோமதி...

    அத்தே மதியத்துக்கு புளிக்குழம்பு வச்சுட்டேன் அப்பளம் வறுத்துக்கங்க கூட்டு ஒண்ணும் வைக்கலை, காய்கறி காலியாயிருக்குது கவனிக்காம விட்டுட்டேன்

    சரிம்மா இதுல என்ன இருக்குது நான் பார்த்துக்கறேன்

    அப்புறம் கேஸ் வரும் கடுகு டப்பாவுல பணம் வச்சிருக்கறேன்... பில் தொகைக்கு மேல ஒரு பத்து ரூபா கொடுங்க அதுக்கு மேல கேட்டான்னா என்னை செல்லுல கூப்பிடுங்க...

    அது தெரியாதம்மா... அன்னிக்கு நீ போட்ட போடுல இப்ப பத்து பைசா கூட கேட்கிறதில்லை...

    இல்லை அத்தே பழைய ஆளு வந்தா ஓகே புதுசா வந்தான்னா கூட கேட்பான் கைகால் இல்லாதவங்க, பார்வைத் திறன் இல்லாதவங்க, முதியோர்களுக்கு உதவி பண்ணணும். இந்த மாதிரி கொள்ளையடிக்கிறவங்களுக்கு நாம துணை போகக் கூடாது

    சரிம்மா... சரிம்மா காலையிலேயே பொங்காத அப்புறம் வேலை செய்யுற இடத்திலயும் உன்னை அறியாம கோபம் வரும்

    புன்னகைத்தாள் லாவண்யா... புன்னகைக்கும் போது தெரியும் எத்துப்பல் அவள் முகத்திற்கு மேலும் அழகைக் கொடுத்தது.

    கண்ணாடி முன்நின்று தலையை சடையிட்டு, லேசாக பவுடர் பூசி நெற்றிக்கு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிட்டு கண்ணாடியில் சற்று நேரம் தன் முகத்தைப் பார்த்தாள்... திருப்தியாய் உணர்ந்தவள் கைப்பையை சோதனையிட்டாள். சின்னதாய் ஒரு பவுடர் டப்பா சிறிய கண்ணாடி இருந்தது. அந்த மூன்று நாள் சமாச்சாரம் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தாள். இரண்டு மட்டும் இருந்தது. மாலையில் வரும்போது பாட் வாங்க வேண்டும். அத்தைக்கு கால்வலித் தைலம் வாங்க வேண்டும்.சீக்கிரம் அத்தைக்கு காட்ராக்ட் ஆபரேஷ்ன் செய்யணும் அதுக்கு லோன் போடணும். எண்ணியவாறு அடுக்களைக்குள் சென்று டிபன் பாக்சை எடுத்து பைக்குள் வைத்தாள். வெறும் புளிக்குழம்பு மட்டும் ஒரு கூட்டு செய்ய காலையில் நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. நோயாளி அத்தையால் பெரிதாக சமையலில் அவளுக்கு உதவ முடியவில்லை… மனதில் நினைத்தாள் ஆபீஸ் கேண்டீனில் வடை போடுவார்கள் அதை இன்று கூட்டுக்கு தொட்டுக்கிட வேண்டியது தான்.’ எண்ணியவள் பஸ்சிற்கு சில்லரை சரியாக இருக்கிறதா என்று பார்த்து திருப்திபட்டுக் கொண்டாள்.மழை வருகிறதோ இல்லையோ எப்பொழுதும் லாவண்யாவின் கைப் பையில் குடை இருக்கும். மெரூன் நிற காட்டன் சேலை மேட்சிங் பிளவுஸில் சராசரிக்கு அதிகமான உயரத்தில் அழகி என்ற லிஸ்டில் வந்தாள் லாவண்யா...

    அத்தே கிளம்புறேன் என்று கூறிவிட்டு புறப்பட்ட லாவண்யாவை கையமர்த்திய கோமதி கூறினாள்...

    லாவண்யா நேத்து பூ வாங்கி ஃபிரிட்ஜ்ல வச்சிருக்கறேன் எடுத்து வச்சுட்டுப் போ

    சாரி... அத்தை மறந்திட்டேன் என்றவாறு ஃபிரிட்ஜை திறந்து பாதி மலர்ந்த அந்த மல்லிகைச் சரத்தை கொண்டையில் வைத்து விட்டு கிளம்பினாள் லாவண்யா...

    முன் வாசலில் பெரிதாக ஃபிரேம் இட்டு... மாலை போட்டு அலங்கார விளக்கு மாட்டப்பட்டிருந்த போட்டோவிலிருந்து ரகுவரன் மனைவி வேலைக்குச் செல்லும் அழகை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்!

    2

    காலையிலேயே சூரியன் சுள்ளென்று சுட ஆரம்பித்திருந்தான். முகம் முத்து முத்தாய் வியர்க்க ஆரம்பித்திருந்தது லாவண்யாவிற்கு... ஹேண்ட் பேக்கை திறந்து கைக்குட்டையை எடுத்து துளிர்ந்த வியர்வையை மெல்ல ஒற்றியெடுத்தாள்... சாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது... வழக்கமாக அவள் செல்லும் பேருந்தை எதிர்பார்க்க ஆரம்பித்தாள் லாவண்யா...பஸ் ஷெல்டரில் கணிசமான கூட்டம். மணித்துளிகள் மரணமடைந்து கொண்டிருந்தது.

    பஸ் நிறுத்தத்தின் எதிர்புறம் எதேச்சையாக கண்களை செலுத்திய லாவண்யாவின் உடல் இப்பொழுது முற்றிலும் குப்பென்று வியர்த்தது. அங்கே ஹோண்டா பைக்கில் அமர்ந்து எதிர்புற பஸ் ஸ்டாப்பை... குறிப்பாக லாவண்யாவை குறுகுறுவென்று பார்த்த வண்ணம் நின்றிருந்தான் அந்த யுவன்...

    ஆறடியை நெருக்கிய உயரம், சிவந்த நிறம்... மேவாயில் மீசையை செழிப்பாக வளர்த்திருந்தான். சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட தாடை... ஒரு கண்ணியமான தோற்றத்தை மொத்தத்தில் காட்டினான் அந்த இளைஞன்... ஸ்டான்ட் இடப்படாத வண்டியின் மேல் ஆரோகணித்திருந்த அவன் லாவண்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

    வியர்த்த லாவண்யாவின் கண்கள் வரவேண்டிய பேருந்தை தேடியது... அவள் அலுவலகம் கிளம்பும் பேருந்து நிறுத்தத்தின் எதிரில் நின்று கொண்டு அவன் இவளை பார்ப்பதை ஒரு சில நாட்களாக வழக்கமாக கொண்டிருக்கிறான். என்ன வேண்டும் அவனுக்கு? வழக்கமான ரோட் சைட் ரோமியோ முகம் இல்லை அவனுக்கு. கண்ணியமான தோற்றம் கொண்ட அவன் செய்யும் வேலை கண்ணியமாப் படவில்லை அவளுக்கு. வழக்கமான ஆடவன் தானோ இவன்? கண்ணுக்கு லட்சணமாய் ஒருத்தியை பார்த்ததும் அவள் பின்னே அலையும் ஒரு சாதாரண பிறவிதானோ இவனும்? அல்லது பெண்களை தொடர்ந்து பின் தொடர்ந்து பெண்களை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவனோ? அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது அவளுக்கு... ‘நிறைய சினிமாக்கள் பார்த்து கெட்டுப் போயிருக்கிறேன் நான்... பட்டப்பகலில் ஒருவன் ஒரு பெண்ணைக் கடத்துவது எல்லாம் சினிமாவில் தான் நடக்கும்... இது காதல் விவகாரமத்தான் இருக்கும்’ எண்ணிய வண்ணம் நிமிர்ந்தவள் கண்ணில் அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்து கொண்டிருப்பது பட்டது... .சற்று ஆசுவாசம் அடைந்தவள் நிறைமாத கற்பிணி போல் மூச்சு வாங்க வந்து நின்ற பேருந்தில் நெருக்கி ஏறி நடுவில் சென்று நின்றாள்... கூட்டத்தில் கிடைத்த இடைவெளியில் தலைகுனிந்து எதிர் பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தாள். அவன் ஹோண்டாவை ஸ்டார்ட் செய்வது தெரிந்தது... பேருந்து வேகமெடுக்கவும் சீரான இடைவெளியில் அவன் அவள் இருந்த பேருந்தை பின் தொடர ஆரம்பித்தான்.

    தினமும் பேருந்து நிறுத்தத்தில் நின்று பார்த்து விட்டு எதிர்திசையில் கிளம்புவான் அவன்... இன்று பேருந்தை தொடர்ந்து வருவதை கண்டு பதற்றமடைந்தாள் லாவண்யா... மனம் என்னென்னவோ நினைத்துப் பதற ஆரம்பித்தது...

    இருபது நிமிடப் பயணம் அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது... நடத்துனர் நிறுத்தத்தின் பெயர் சொல்லி கூவிய பின்னே சுயநினைவுக்கு வந்தாள் லாவண்யா. மண்டை முழுவதும் அந்த சுருட்டை முடி இளைஞனே அமர்ந்திருந்ததால் அவள் புற உலகை மறந்திருந்தாள்... கூட்டத்தை விலக்கி முன்வாசல் வழியாக சாலையில் இறங்கினாள்... கரும் புகையை கக்கிய வண்ணம் லொடலொட சத்தத்தை கிளம்பியவாறு கிளம்பியது அந்த நகரப் பேருந்து...

    கீழே இறங்கியவள் கண்கள் சாலையில் அவனைத் தேடியது... ‘அப்பாடா ஆள் கண்ணில் தட்டுப்படவில்லை... அவன் பேருந்தின் பின்னால் வரவில்லை… கிளம்பியவன் வேறு பக்கம் திரும்பிவிட்டான் போல’ மனதில் நினைத்தவள் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தை நோக்கி நடையை போட்டாள்... சாலை ஓரம் நடந்தவளை மறித்தவாறு வந்து நின்றது அந்த ஹோண்டா பைக்...

    அதில் அமர்ந்திருந்தான் அந்த சுருட்டைமுடி இளைஞன்... சப்த நாடியும் ஒடுங்கி பேச்செழாமல் நின்றாள் லாவண்யா. நாக்கு அவளுக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது... இத்தனை நாளும் தூரத்தில் நின்று பார்த்து விட்டு விலகிச் சென்றவனை இன்று அருகில் பார்த்ததும் அவள் எப்படி அவனை எதிர்கொள்வது என்று தெரியாமல் பதறியபடி நின்றாள்... அவனிடமிருந்து ரம்யமான சென்டின் நறுமணம் கிளம்பி அவள் நாசியை துளைத்தது...

    சற்று நேரத்தில் சகஜமானவள் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள், ஏய் மிஸ்டர் யாரு நீங்க? எதுக்காக என்னை வழி மறிச்சு நிற்கறீங்க?. அந்த நிலையிலும் வார்த்தையில் ‘நீங்கள்’ என்ற மரியாதையையே காட்டினாள் லாவண்யா, காரணம் அவன் தோற்றம்... பொறுக்கி என்ற லிஸ்டில் அவனை அவள் மனம் சேர்க்கவில்லை... மீண்டும் அவளே தொடர்ந்தாள்...

    "மிஸ்டர் பார்க்க டீசன்டா இருக்கறீங்க... ஆனா செய்யிற செயல் டீசன்டா இல்லை. மரியாதையா வழிவிட்டு விலகிப் போயிடுங்க... இது பப்ளிக் ரோடு... கூட்டமான

    Enjoying the preview?
    Page 1 of 1