Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தேடிவந்த உறவுகள்...
தேடிவந்த உறவுகள்...
தேடிவந்த உறவுகள்...
Ebook137 pages51 minutes

தேடிவந்த உறவுகள்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அந்த பென்ஸ் கார் ட்ராஃபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. காலை நேர நாகர்கோவில் நகரம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. நகர்ந்து சென்ற பென்சின் எண் சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் என்று கூறியது. காரினுள் இனிய இளையராஜா சங்கீதம் கசிந்தது. கூகுள் மேப்பை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தான் காருக்குள் அமர்ந்திருந்த பாண்டியன். கார் அனந்தன்நகர் கடந்து அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் வேகமெடுத்தது. அடுத்த பத்து நிமிடத்தில் ஆசாரிபள்ளத்தை அடைந்தது பென்ஸ். அங்கிருந்து செங்குத்தாக இறங்கிய ஒற்றை ரோட்டில் பயணித்தது கார். அதற்கு அடுத்த பத்து நிமிடத்தில் நகரத்தின் பூச்சு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இயற்கை குத்தகை எடுத்த பெரும்செல்வவிளை கிராமத்தின் எல்லை வந்திருந்தது. இயற்கை அன்னை பசுமையை வாரி அளவில்லாமல் திரும்பும் இடமெல்லாம் வீசியிருந்தாள் பெரும்செல்வவிளை கிராமத்தில். சலசலத்து ஓடும் சிறிய ஓடை, பரந்து விரிந்த வயல்வெளி. சாலையின் இருபுறமும் வித விதமான நிழல் தரும் மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னந்தோப்பு என்று பெரும்செல்வவிளை ஊரில் பெயருக்கு ஏற்ப இயற்கைச் செல்வம் இறைந்து கிடந்தது.  இயற்கை அழகை கண்ணால் பருகியவண்ணம் காரில் அமர்ந்திருந்த பாண்டியன் தன் சாரதியிடம் கூறினான்..

"கணேசா காரை ஓரமா நிப்பாட்டு"

பாண்டியன் கூறவும் டிரைவர் கணேசன் அந்த ஒற்றையடி ரோட்டில் காரை ஒதுக்கி நிறுத்தினான். பாண்டியன் காரிலிருந்து இறங்கி கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். பயணக் களைப்பு அந்த இயறகைக் காற்றை சுவாசித்ததும் சற்று விலகியது. அவன் கண்களை ரேபான் குளிர் கண்ணாடி கவ்வியிருந்தது. அதைக் கழட்டிவிட்டு சுற்றிலும் தெரிந்த இயற்கையை இன்னும் ஆழ்ந்து ரசித்தான் பாண்டியன். டிரைவரைக் கேட்டான்..

"கணேசன் ஊரு ரொம்ப அழகா இருக்குல்ல?"

"ஆமாம் சார் கண்ணுக்கெட்டுன தூரம் வரை பச்சைப் பசேலுன்னுதான் இருக்குது. காத்தும் சில்லுன்னு இருக்குது. வெறும் மரங்கள் மட்டும்தான் தெரியுது இதுக்குள்ள மனுஷங்க இருக்கற வீடுகள் எதாவது இருக்குதா?"

"ஏன் கணேசன் சுற்றி இருக்கற பச்சைப் பசேல் மட்டும்தான் தெரியுதா? அழகான மேற்குத் தொடர்ச்சி மலை உன் கண்ணுக்குத் தெரியலையா?"

"அதுவும் தெரியுது சார்.. சரி சார் இந்த ஊர் பேரு என்ன?"

"நாம நிற்கிற ஊரு பேரு பெரும்செல்வவிளை" பாண்டியன் கூறவும் சிலாகித்த கணேசன் கூறினான்..

"சரியான பேருதான் சார் வச்சிருக்கறாங்க. கோடி குடுத்தாலும் இப்படிப்பட்ட இயற்கைச்  செல்வம் நம்ம சிட்டியில கிடைக்குமா?"

"பாருடா நம்ம கணேசன் ரசனையா பேசுறத? என்ன கணேசா எதாவது லவ் கிவ்வு பண்ணுறியா?"

"போங்க சார்" என்று வெட்கப்பட்டான் அந்த இளம் ஓட்டுனர் கணேசன். கணேசன் கேட்டான் ..

"சார் ஊரு இங்க இருந்து தொடங்குதா?"

"இங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர்னு கூகுள் மேப்பு காட்டுது"

"அப்ப ஏன் சார் இங்க இறங்கிட்டீங்க?"

"கணேசா இப்படி இயற்கையைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. காலாற நடந்து பல காலம் ஆகுது. நம்ம சென்னையில இப்படி இடத்தைப் பார்க்கமுடியுமா சொல்லு?  இந்த ரெண்டு கிலோ மீட்டரும் நான் நடந்து வரப்போறேன் நீ காரை இன்னும் ஓரமா ஒதுக்கிட்டு நான் போன் பண்ணினதும் வந்தாப் போதும்" பாண்டியன் கூறவும் அதிசயமாய் அவனைப் பார்த்த கணேசன் கேட்டான்..

"சார் ரெண்டு கிலோ மீட்டர் நடக்கப்போறீங்களா?"

கேட்ட டிரைவரை ஒரு புன்னகையுடன் எதிர்கொண்ட பாண்டியன் கூறினான்..

"கணேசா முப்பது ரூபா சம்பளத்துக்கு பத்து மைல் தினமும் நடந்து சிமென்ட் பேக்ட்டரிக்கு வேலைக்குப் போயிருக்கறேன். அந்த முப்பது ரூபா சம்பளத்தை காண்டாக்டருட்ட வாங்க நடையா நடந்திருக்கேன். இந்த ரெண்டு கிலோமீட்டர் எல்லாம் எனக்குச் சாதாரணம். சிமெண்ட் காடா மாறுன சிட்டியைப் பார்த்துப் பார்த்து இந்த மாதிரி இயற்கையைப் பார்த்தா இறங்கி காலாற நடக்கணும்னு தோணுது" கூறிய முதலாளியை அதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை அந்த விஸ்வாச ஊழியன். நடக்க ஆரம்பித்தான் பாண்டியன். மாலை நேரம் இளம் வெயில் அவன் முகத்தில் பட்டுத் தெறித்தது.

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223056355
தேடிவந்த உறவுகள்...

Read more from Sahitha Murugan

Related to தேடிவந்த உறவுகள்...

Related ebooks

Related categories

Reviews for தேடிவந்த உறவுகள்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தேடிவந்த உறவுகள்... - Sahitha Murugan

    1

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அந்த பென்ஸ் கார் ட்ராஃபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. காலை நேர நாகர்கோவில் நகரம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. நகர்ந்து சென்ற பென்சின் எண் சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் என்று கூறியது. காரினுள் இனிய இளையராஜா சங்கீதம் கசிந்தது. கூகுள் மேப்பை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தான் காருக்குள் அமர்ந்திருந்த பாண்டியன். கார் அனந்தன்நகர் கடந்து அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் வேகமெடுத்தது. அடுத்த பத்து நிமிடத்தில் ஆசாரிபள்ளத்தை அடைந்தது பென்ஸ். அங்கிருந்து செங்குத்தாக இறங்கிய ஒற்றை ரோட்டில் பயணித்தது கார். அதற்கு அடுத்த பத்து நிமிடத்தில் நகரத்தின் பூச்சு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இயற்கை குத்தகை எடுத்த பெரும்செல்வவிளை கிராமத்தின் எல்லை வந்திருந்தது. இயற்கை அன்னை பசுமையை வாரி அளவில்லாமல் திரும்பும் இடமெல்லாம் வீசியிருந்தாள் பெரும்செல்வவிளை கிராமத்தில். சலசலத்து ஓடும் சிறிய ஓடை, பரந்து விரிந்த வயல்வெளி. சாலையின் இருபுறமும் வித விதமான நிழல் தரும் மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னந்தோப்பு என்று பெரும்செல்வவிளை ஊரில் பெயருக்கு ஏற்ப இயற்கைச் செல்வம் இறைந்து கிடந்தது. இயற்கை அழகை கண்ணால் பருகியவண்ணம் காரில் அமர்ந்திருந்த பாண்டியன் தன் சாரதியிடம் கூறினான்..

    கணேசா காரை ஓரமா நிப்பாட்டு

    பாண்டியன் கூறவும் டிரைவர் கணேசன் அந்த ஒற்றையடி ரோட்டில் காரை ஒதுக்கி நிறுத்தினான். பாண்டியன் காரிலிருந்து இறங்கி கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். பயணக் களைப்பு அந்த இயறகைக் காற்றை சுவாசித்ததும் சற்று விலகியது. அவன் கண்களை ரேபான் குளிர் கண்ணாடி கவ்வியிருந்தது. அதைக் கழட்டிவிட்டு சுற்றிலும் தெரிந்த இயற்கையை இன்னும் ஆழ்ந்து ரசித்தான் பாண்டியன். டிரைவரைக் கேட்டான்..

    கணேசன் ஊரு ரொம்ப அழகா இருக்குல்ல?

    ஆமாம் சார் கண்ணுக்கெட்டுன தூரம் வரை பச்சைப் பசேலுன்னுதான் இருக்குது. காத்தும் சில்லுன்னு இருக்குது. வெறும் மரங்கள் மட்டும்தான் தெரியுது இதுக்குள்ள மனுஷங்க இருக்கற வீடுகள் எதாவது இருக்குதா?

    ஏன் கணேசன் சுற்றி இருக்கற பச்சைப் பசேல் மட்டும்தான் தெரியுதா? அழகான மேற்குத் தொடர்ச்சி மலை உன் கண்ணுக்குத் தெரியலையா?

    அதுவும் தெரியுது சார்.. சரி சார் இந்த ஊர் பேரு என்ன?

    நாம நிற்கிற ஊரு பேரு பெரும்செல்வவிளை பாண்டியன் கூறவும் சிலாகித்த கணேசன் கூறினான்..

    சரியான பேருதான் சார் வச்சிருக்கறாங்க. கோடி குடுத்தாலும் இப்படிப்பட்ட இயற்கைச் செல்வம் நம்ம சிட்டியில கிடைக்குமா?

    பாருடா நம்ம கணேசன் ரசனையா பேசுறத? என்ன கணேசா எதாவது லவ் கிவ்வு பண்ணுறியா?

    போங்க சார் என்று வெட்கப்பட்டான் அந்த இளம் ஓட்டுனர் கணேசன். கணேசன் கேட்டான் ..

    சார் ஊரு இங்க இருந்து தொடங்குதா?

    இங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர்னு கூகுள் மேப்பு காட்டுது

    அப்ப ஏன் சார் இங்க இறங்கிட்டீங்க?

    கணேசா இப்படி இயற்கையைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. காலாற நடந்து பல காலம் ஆகுது. நம்ம சென்னையில இப்படி இடத்தைப் பார்க்கமுடியுமா சொல்லு? இந்த ரெண்டு கிலோ மீட்டரும் நான் நடந்து வரப்போறேன் நீ காரை இன்னும் ஓரமா ஒதுக்கிட்டு நான் போன் பண்ணினதும் வந்தாப் போதும் பாண்டியன் கூறவும் அதிசயமாய் அவனைப் பார்த்த கணேசன் கேட்டான்..

    சார் ரெண்டு கிலோ மீட்டர் நடக்கப்போறீங்களா?

    கேட்ட டிரைவரை ஒரு புன்னகையுடன் எதிர்கொண்ட பாண்டியன் கூறினான்..

    கணேசா முப்பது ரூபா சம்பளத்துக்கு பத்து மைல் தினமும் நடந்து சிமென்ட் பேக்ட்டரிக்கு வேலைக்குப் போயிருக்கறேன். அந்த முப்பது ரூபா சம்பளத்தை காண்டாக்டருட்ட வாங்க நடையா நடந்திருக்கேன். இந்த ரெண்டு கிலோமீட்டர் எல்லாம் எனக்குச் சாதாரணம். சிமெண்ட் காடா மாறுன சிட்டியைப் பார்த்துப் பார்த்து இந்த மாதிரி இயற்கையைப் பார்த்தா இறங்கி காலாற நடக்கணும்னு தோணுது கூறிய முதலாளியை அதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை அந்த விஸ்வாச ஊழியன். நடக்க ஆரம்பித்தான் பாண்டியன். மாலை நேரம் இளம் வெயில் அவன் முகத்தில் பட்டுத் தெறித்தது.

    பாண்டியன் சராசரிக்கு மேல் உயரம், துளியும் எக்ஸ்ட்ரா சதை இல்லாத உடல், கூர் மூக்கு, நிக்கோடின் கறை படியாத அழகிய உதடுகள், மேலுதட்டில் அதில் அடர்த்தியாய் மீசை. தினமும் எலக்ட்ரிக் ரேசரால் தாடையை உழுததில் கன்னம் நீலம் பாய்ந்திருந்தது. வயது இருபத்திஆறு. நீல நிற கில்லர் ஜீன்சில் கறுப்பில் வெள்ளைக்கோடு போட்ட பீட்டர் இங்கிலாண்டு சட்டையை இன் செய்திருந்தான்.. காலில் கிடந்த ஷூ நான் ரீபோக் என்றது. குண்டும் குழியுமான தார் ரோட்டில் நிதானமாய் நடந்தான் பாண்டியன். சிறிய ஓடை அவன் நடக்க நடக்க அவன் கூடவே வந்தது. அதில் கொக்குகள் இன்னும் தன் வேலை நேரம் தாண்டியும் மீனுக்காக காத்திருந்தது. அந்த ஓடையின் சலசலப்பு ஒரு அழகான சங்கீதமாய் அவன் காதில் ஒலித்து. நடக்க நடக்கவே கண்ணில் விரிந்தது அந்த பரந்த ஏரி. பெரும் செல்வவிளை செல்வம் கொழிக்கும் நெற் களஞ்சியமாய் இருக்க வருடம் முழுவதும் வற்றாமல் இருக்கும் ஏரி அது. ஏரியை முழுவதும் சிவப்பு வெள்ளை என்று தாமரை மலர்கள் அலங்கரித்திருந்தது. இப்பொழுது பறவைகள் கூட்டம் கூட்டமாய் கூடடைய விரைந்து கொண்டிருந்தது. நின்று மாலை தந்த மயக்கத்தை சற்று அனுபவித்தான் பாண்டியன். குளத்தை ஒட்டியே சாலை பயணித்தது அவன் தொடர்ந்து நடந்தான். அடுத்த பதினைந்து நிமிட நடையில் குளத்தின் மறுகரை வந்து சேர்ந்திருந்தது. குளம் முடியும் இடத்தில் குளக்கரையில் அந்த அழகிய சாஸ்தா கோவில் இருந்தது. கோவில் புதிய பெயிண்டில் குளித்து மின்னியது. நின்று கண்களை மூடி சேவித்தான் பாண்டியன். சேவித்து முடித்து கண்களைத் திறந்தவன் முன் ஒரு பெரியவர் நின்றிருந்தார். இடையில் ஒரு நாலு முழம் காவி வேஷ்டி தோளில் துண்டு. நெற்றியில் விபூதி. கிராமத்திற்கு அன்னியமாய் தெரிந்த அவனை மேலும் கீழும் பார்த்தவர் அவனை வினவினார்..

    தம்பியை பார்த்தா வெளியூரு மாதிரி தெரியுது?

    ஆமாம் பெரியவரே நான் சென்னையில இருந்து வர்றேன்

    என்ன விஷயமா பெரிஞ்சவிளைக்கு வந்தீங்க? இங்க யாரைப் பார்க்கணும்?

    பெரும்செல்வவிளை என்ற அழகிய பெயர் பேச்சு வழக்கில் பெரிஞ்சவிளை ஆகியிருந்தது.

    கிராமத்து மக்களுக்கே உரித்தான அக்கறையுடன் கேட்ட அந்த மனிதருக்குப் பதில் கூறினான் பாண்டியன்..

    இங்க நாகர்கோவில் கோர்ட்டுல குமஸ்தாவா வேலை பார்க்கறாரே சிவசாமி அவரைப் பார்க்கணும்

    யாரு சுடலைமுத்து பையனா?

    அவங்க அப்பா பேரெல்லாம் தெரியாது அவர் பேரு சிவசாமி அவ்வளவுதான் தெரியும்

    இங்க சிவசாமின்னா சுடலைமுத்து மவன் மட்டும்தான். இப்படியே நடங்க. ஒரு நாலு முக்கு ரோடு வரும் இடது பக்கம் ரோட்டுல திரும்புங்க தம்பி அங்க ஒரு பிள்ளையார் கோயில் வரும் அதுக்கு எதுத்த வீடுதான் சிவசாமி வீடு

    நன்றி பெரியவரே என்ற பாண்டியன் தன் பர்சைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவர் கையில் திணித்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். அந்தப் பெரியவர் தன் கண்ணை நம்பாமல் ரூபாய் நோட்டை கண்கள் விரிய பார்த்துக் கொண்டு நின்றார். பத்து நிமிட நடையில் பெரியவர் சொன்ன இடத்தை அடைந்த பாண்டியன் அந்த சிவசாமியின் வீட்டின் முன் நின்றான். கதவு திறந்தே இருந்தது வீட்டின் முன் நிழலாட்டம் கண்ட சிவசாமி வெளியே வந்தான்.. கறுப்பாய் உயரமாய் இருந்தான் சிவசாமி. பல்வரிசை பளீரென்றது. இவனை அடையாளம் கண்டதும் வீட்டினுள் அழைத்தான்.

    "வாங்க பாண்டியன்

    Enjoying the preview?
    Page 1 of 1