Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாழும் வரை போராடு...!
வாழும் வரை போராடு...!
வாழும் வரை போராடு...!
Ebook140 pages54 minutes

வாழும் வரை போராடு...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம். இளம் வக்கீல்கள் கேசுக்காக கோர்ட் வளாகத்தில் அடர்த்தியாக இருக்கும் வாகை மரங்களின் அடியில் காத்துக் கிடந்தனர். கைதிகளை ஏற்றி பாளையங்ககோட்டைச் சிறைக்குச் செல்ல போலீஸ் வாகனம் ஓரமாக நின்று கொண்டிருந்தது. அதில் இருந்த கைதிகள் தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்... நமக்கு இதெல்லாம் தேவை இல்லாத விஷயங்கள். மதிய நேரம் கோர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கறுப்புக் கோட் போட்ட வக்கீல்களின் பின்னாள் அவர்கள் கிளையண்டுகள் நடந்து கொண்டிருந்தனர். வளாகத்தின் ஒரு ஓரமாக இருந்த குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு விவாகரத்து கேஸ் தான் நமக்கு முக்கியம். நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பை வாசித்தார்....

"கேஸ் எண் 77/1 சம்பத் மகாலட்சுமி விவாகரத்து வழக்கில் அவர்கள் இருவரும் மனமொத்து பிரிந்து வாழ முடிவெடுத்து இந்த நீதிமன்றத்தை அணுகினர். கோர்ட் அவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து சேர்ந்து வாழ அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் இந்த கோர்ட் அவர்கள் விவாக பந்தத்தில் இருந்து விலக்களிக்க முன்வந்துள்ளது. இன்றைய தேதி முதல் இருவரும் அவர்களின் விவாக பந்தத்திலிருந்து விலகிக் கொள்கிறார்கள். அதற்கு இந்த நீதிமன்றம் அவர்கள் திருமண பந்தத்தை விலக்கி அவர் தாம் தனித் தனியே சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதியளிக்கிறது. இனிமேல் இவர்களின் திருமண பந்தம் இருவரையும் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பளிக்கிறேன்"

நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பைக் கூறி முடிக்கவும் சம்பத், மகாலட்சுமி இருவர் முகத்திலும் ஒரு திருப்தி வந்து அமர்ந்தது. மகாலட்சுமி முப்பத்தைந்து வயதில் சராசரிக்கும் அதிகமான அழகில் இருந்தாள். இன்னும் இளம் பெண்கள் போல் இருந்தது அவளது ஒப்பனை. சம்பத் நாற்பது வயதில் உயரமாய் ஒல்லியாய் பார்க்க நடிகர் ரகுவரன் போல் இருந்தான். இருவர் முகத்திலும் திருப்தி கோட்டடித்தது. ஒரு வருட சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்ததால் வந்த திருப்தி அது. இருவர் முகத்திலும் இப்பொழுது சந்தோஷத்தின் சாயை. அப்பாடா இனி தாங்கள் சுதந்திரப் பறவை என்ற நினைப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பின் மிச்சப் பகுதியை வாசித்தார்.

"சம்பத் மகாலட்சுமி இருவரது குழந்தைகளான பதினைந்து வயது சுப்புலட்சுமி.... பனிரெண்டு வயது ராம்நாத் இருவரது எதிர்கால நல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மகள் சுப்புலட்சுமி தாய் மகாலட்சுமியுடனும்.... மகன் ராம்நாத் தந்தையுடனும் செல்ல இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது...." மீனாகுமாரி வாசித்து நிறுத்தவும் இந்த வார்த்தைகளை சுப்புலட்சுமி ராம்நாத் என்ற அந்த இரண்டு ஜீவன்களும் நீதிமன்றத்தின் பெஞ்சில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது... அந்த பதினைந்து வயது சுப்லட்சுமியின் கண்கள் நீரை உதிர்த்துக் கொண்டே இருந்தது... விவரம் தெரியாத அருகில் இருந்த தம்பியின் கைகளை சுப்புலட்சுமியின் கைகள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தது.... கண்களைத் துடைத்துக் கொண்டு சுப்புலட்சுமி எழுந்து நீதிமன்றத்தின் மையத்திற்கு வந்தாள்.... கூடவே தம்பியையும் அழைத்து வந்திருந்தாள். நீதிமன்றத்தின் பார்வை அவர்கள் மேல் குவிந்தது. வந்த சுப்புலட்சுமி நீதிபதியைப் பார்த்துக் கூறினாள்....

"நீதிபதியம்மா வணக்கம்... நான் சின்னப் பொண்ணு நான் பேசுறது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்க" நிதானமாக புறப்பட்டது அவள் வாயிலிருந்து வார்த்தைகள்...

"நீ தைரியமா சொல்ல வந்ததை இந்தக் கோட்டுல சொல்லலாம். கோர்ட் எல்லார் தரப்பு வாதங்களையும் செவிமடுக்கும்" நீதிபதி மினாகுமாரி தைரியமளித்தாள் அவளுக்கு.

"மேடம் நீங்க சொல்லிட்டா நான் என் தம்பியை விட்டுட்டு தனியாப் போயிடணுமா?"

நீதிபதி ஒருகணம் ஸ்தம்பித்தார்...

"நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலைமா"

"என் தம்பி ஒரு இடத்துல நான் ஒரு இடத்துல தனித் தனியா வாழுறது சாத்தியமே இல்லை மேடம்"

பெரிய மனுஷித் தோரணையில் அத்தனை மக்கள் கூட்டத்தில் தைரியமாக வந்து நின்று பேசும் சுப்புலட்சுமியை ஆச்சரியமாகப் பார்த்த நீதிபதி மீனாகுமாரி கேட்டார்...

"நீங்க வேற எங்கயும் போகப் போறதில்லையே உங்க அம்மா அப்பா வீட்டுக்குத் தானே போகப் போறீங்க?"

"இருக்கலாம் மேடம் ஆனா நான் இங்க என் தம்பி அங்கன்னு என்னால தனியா வாழ முடியாது.... அவங்க அவங்க சௌகரியத்துக்கு முடிவெடுத்துப் பிரியறாங்க அதுக்கு நாங்க பலிகடா ஆக முடியாது. நான் என் தம்பியை பிரிய முடியாது" திடமாய் வந்தது சுப்புலட்சுமியின் வாயிலிருந்து வார்த்தைகள்... நீதிபதி திகைத்தார்...

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798215035238
வாழும் வரை போராடு...!

Read more from Sahitha Murugan

Related to வாழும் வரை போராடு...!

Related ebooks

Related categories

Reviews for வாழும் வரை போராடு...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாழும் வரை போராடு...! - Sahitha Murugan

    1

    பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம். இளம் வக்கீல்கள் கேசுக்காக கோர்ட் வளாகத்தில் அடர்த்தியாக இருக்கும் வாகை மரங்களின் அடியில் காத்துக் கிடந்தனர். கைதிகளை ஏற்றி பாளையங்ககோட்டைச் சிறைக்குச் செல்ல போலீஸ் வாகனம் ஓரமாக நின்று கொண்டிருந்தது. அதில் இருந்த கைதிகள் தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்... நமக்கு இதெல்லாம் தேவை இல்லாத விஷயங்கள். மதிய நேரம் கோர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கறுப்புக் கோட் போட்ட வக்கீல்களின் பின்னாள் அவர்கள் கிளையண்டுகள் நடந்து கொண்டிருந்தனர். வளாகத்தின் ஒரு ஓரமாக இருந்த குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு விவாகரத்து கேஸ் தான் நமக்கு முக்கியம். நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பை வாசித்தார்....

    கேஸ் எண் 77/1 சம்பத் மகாலட்சுமி விவாகரத்து வழக்கில் அவர்கள் இருவரும் மனமொத்து பிரிந்து வாழ முடிவெடுத்து இந்த நீதிமன்றத்தை அணுகினர். கோர்ட் அவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து சேர்ந்து வாழ அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் இந்த கோர்ட் அவர்கள் விவாக பந்தத்தில் இருந்து விலக்களிக்க முன்வந்துள்ளது. இன்றைய தேதி முதல் இருவரும் அவர்களின் விவாக பந்தத்திலிருந்து விலகிக் கொள்கிறார்கள். அதற்கு இந்த நீதிமன்றம் அவர்கள் திருமண பந்தத்தை விலக்கி அவர் தாம் தனித் தனியே சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதியளிக்கிறது. இனிமேல் இவர்களின் திருமண பந்தம் இருவரையும் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பளிக்கிறேன்

    நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பைக் கூறி முடிக்கவும் சம்பத், மகாலட்சுமி இருவர் முகத்திலும் ஒரு திருப்தி வந்து அமர்ந்தது. மகாலட்சுமி முப்பத்தைந்து வயதில் சராசரிக்கும் அதிகமான அழகில் இருந்தாள். இன்னும் இளம் பெண்கள் போல் இருந்தது அவளது ஒப்பனை. சம்பத் நாற்பது வயதில் உயரமாய் ஒல்லியாய் பார்க்க நடிகர் ரகுவரன் போல் இருந்தான். இருவர் முகத்திலும் திருப்தி கோட்டடித்தது. ஒரு வருட சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்ததால் வந்த திருப்தி அது. இருவர் முகத்திலும் இப்பொழுது சந்தோஷத்தின் சாயை. அப்பாடா இனி தாங்கள் சுதந்திரப் பறவை என்ற நினைப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பின் மிச்சப் பகுதியை வாசித்தார்.

    சம்பத் மகாலட்சுமி இருவரது குழந்தைகளான பதினைந்து வயது சுப்புலட்சுமி.... பனிரெண்டு வயது ராம்நாத் இருவரது எதிர்கால நல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மகள் சுப்புலட்சுமி தாய் மகாலட்சுமியுடனும்.... மகன் ராம்நாத் தந்தையுடனும் செல்ல இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.... மீனாகுமாரி வாசித்து நிறுத்தவும் இந்த வார்த்தைகளை சுப்புலட்சுமி ராம்நாத் என்ற அந்த இரண்டு ஜீவன்களும் நீதிமன்றத்தின் பெஞ்சில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது... அந்த பதினைந்து வயது சுப்லட்சுமியின் கண்கள் நீரை உதிர்த்துக் கொண்டே இருந்தது... விவரம் தெரியாத அருகில் இருந்த தம்பியின் கைகளை சுப்புலட்சுமியின் கைகள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தது.... கண்களைத் துடைத்துக் கொண்டு சுப்புலட்சுமி எழுந்து நீதிமன்றத்தின் மையத்திற்கு வந்தாள்.... கூடவே தம்பியையும் அழைத்து வந்திருந்தாள். நீதிமன்றத்தின் பார்வை அவர்கள் மேல் குவிந்தது. வந்த சுப்புலட்சுமி நீதிபதியைப் பார்த்துக் கூறினாள்....

    நீதிபதியம்மா வணக்கம்... நான் சின்னப் பொண்ணு நான் பேசுறது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்க நிதானமாக புறப்பட்டது அவள் வாயிலிருந்து வார்த்தைகள்...

    நீ தைரியமா சொல்ல வந்ததை இந்தக் கோட்டுல சொல்லலாம். கோர்ட் எல்லார் தரப்பு வாதங்களையும் செவிமடுக்கும் நீதிபதி மினாகுமாரி தைரியமளித்தாள் அவளுக்கு.

    மேடம் நீங்க சொல்லிட்டா நான் என் தம்பியை விட்டுட்டு தனியாப் போயிடணுமா?

    நீதிபதி ஒருகணம் ஸ்தம்பித்தார்...

    நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலைமா

    என் தம்பி ஒரு இடத்துல நான் ஒரு இடத்துல தனித் தனியா வாழுறது சாத்தியமே இல்லை மேடம்

    பெரிய மனுஷித் தோரணையில் அத்தனை மக்கள் கூட்டத்தில் தைரியமாக வந்து நின்று பேசும் சுப்புலட்சுமியை ஆச்சரியமாகப் பார்த்த நீதிபதி மீனாகுமாரி கேட்டார்...

    நீங்க வேற எங்கயும் போகப் போறதில்லையே உங்க அம்மா அப்பா வீட்டுக்குத் தானே போகப் போறீங்க?

    இருக்கலாம் மேடம் ஆனா நான் இங்க என் தம்பி அங்கன்னு என்னால தனியா வாழ முடியாது.... அவங்க அவங்க சௌகரியத்துக்கு முடிவெடுத்துப் பிரியறாங்க அதுக்கு நாங்க பலிகடா ஆக முடியாது. நான் என் தம்பியை பிரிய முடியாது திடமாய் வந்தது சுப்புலட்சுமியின் வாயிலிருந்து வார்த்தைகள்... நீதிபதி திகைத்தார்...

    இப்பொழுது மீனாகுமாரி சம்பத், மகாலட்சுமியை வினவினார்...

    சம்பத்...மகாலட்சுமி இதுக்கு நீங்க என்ன சொல்லுறீங்க?

    சம்பத் பதில் கூறினான்....

    இல்லை மேடம் இரண்டு பேரையும் என்னால வச்சுக்க முடியாது

    மகாலட்சுமி நீங்க?

    என்னாலயும் ரெண்டு பேரையும் வச்சுக்க முடியாது அந்த அளவுக்கு வருமானம் எனக்கு இல்லை மேடம்

    தங்களை ஏலம் விடும் தாய் தந்தையரை இப்பொழுது ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள் சுப்புலட்சுமி... இப்பொழுது சுப்புலட்சுமி வாய் திறந்தாள்...

    மேடம் இந்த மாதிரி அம்மா அப்பா கூட நாங்க போறதா இல்ல

    நீதிபதி உட்பட அனைவரும் அதிர்ந்தனர்...

    அப்ப என்ன செய்யப்போறம்மா? கரிசனமாய் கேட்டார் நீதிபதி...

    மேடம் எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அவங்க வேற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துட்டாங்க... இனி அவங்களுக்கு நாங்க வேண்டாத புள்ளைங்க ஆயிட்டோம், அதால என் தம்பியை நான் பார்த்துக்கறேன். என்னால அவனைப் பிரிஞ்சு தனியே வாழ முடியாது. நாங்க எங்க வழியைப் பார்த்துக்கறோம் கோர்ட் ஒரு கணம் ஸ்தம்பித்தது...

    அதெப்படியம்மா ரெண்டு பேரும் அப்பா அம்மா துணை இல்லாம தனியா வாழ முடியும்? நீதிபதி கேட்கவும் அவருக்கு நெற்றியில் அடித்தது போல் பதில் கூறினாள் சுப்பு லட்சுமி...

    ஒரு விபத்துல என் அம்மா அப்பா செத்துப் போயிட்டா என் தம்பியை நான்தானே கவனிச்சுக்கணும் அந்த மாதிரி நெனச்சுக்கிறேன்...வாடா தம்பி கிளம்புவோம்

    என்றவள் தம்பியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே நடந்தாள்! கோர்ட்டில் அனைவரும் திகைத்து நின்றனர். அந்தத் திகைப்பு சம்பத் மகாலட்சுமி முகத்தில் இல்லாதிருந்தது!

    2

    தம்பியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு கோர்ட் வளாகத்திலிருந்து நடந்த சுப்புலட்சுமி சிறிது நேர நடையில் ரோட்டிற்கு வந்திருந்தாள்... வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தன்னைக் கடந்து சென்ற ஆட்டேவை கைத்தட்டி நிறுத்தினாள். நின்ற ஆட்டோவில் தம்பியை ஏற்றி விட்டு பின்னே தானும் ஏறிக் கொண்டாள். ஆட்டோ டிரைவர் கேட்டார்...

    எங்கம்மா போகணும்?

    அண்ணா நகர் போங்கண்ணே

    ஆட்டோ விவிடி சிக்னல் வழியாக அண்ணா நகர் நோக்கி விரைந்தது.

    ராம்நாத் தமக்கையைக் கேட்டான்...

    அக்கா நாம எங்க போறோம்?

    ஏன்டா தம்பி பயமா இருக்குதா? அப்பா கூட போயிருக்கலாம்னு தோணுதாடா?

    அக்கா நீ இல்லாத இடத்துல நான் எப்படிக்கா இருப்பேன்? நீ எங்க போறியோ நானும் கூட வருவேன்

    தன் தம்பியை இறுக அணைத்துக் கொண்டாள் சுப்புலட்சுமி. மேலும் ஐந்து நிமிடங்கள் தொலைந்திருக்க ஆட்டோ அண்ணா நகரை அடைந்தது.

    ஆட்டோ டிரைவர் கேட்டார்...

    அண்ணா நகர் எத்தனாவது தெரும்மா?

    ஆறாவது தெருண்ணா

    டிரைவர் ஆறவது தெருவை நோக்கி ஆட்டோவை செலுத்தினார். சில நிமிடத்தில் ஆறாவது தெருவை அடைந்தது...

    எந்த வீடும்மா?

    அண்ணா அந்த நாலாவது வீடு

    அவள் சொல்லி முடிக்கவும் அந்த நாலாவது வீட்டின் முன் ஆட்டோ நின்றது.

    பழங்காலத்து காரைக் கட்டிடம். வீட்டின் முன்னே அடர்த்தியாய் வேப்பமரம். ஆட்டோவிலிருந்து இறங்கியவள் கேட்டாள்...

    எவ்ளவுண்ணே?

    நூறு ரூபாம்மா என்றார் ஆட்டோ டிரைவர்.

    அண்ணே ஒரு நிமிஷம் உள்ளே போய் காசு வாங்கிட்டு வர்றேன் என்றவள் தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள். உள்ளே நுழைந்தவள் குரல் கொடுத்தாள் மாமா மாமா என்று. சில வினாடி இடைவெளியில் அந்த நாற்பத்தைந்து வயது மதிக்கத் தக்க மனிதன் உள்ளறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் கண்ணில் ஆச்சர்யம்... அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1