Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கையில் கிடைத்த வைரம்...
கையில் கிடைத்த வைரம்...
கையில் கிடைத்த வைரம்...
Ebook147 pages57 minutes

கையில் கிடைத்த வைரம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"குட் மார்னிங் டாக்டர்"

அந்த அழகான இதமான டிசம்பர் மாத காலையில் அழகான நர்ஸ் பிரபாவின் காலை வணக்கத்தை தன் அழகிய பல் வரிசை தெரிய சிரித்து "குட்மார்னிங் பிரபா" என்று பதில் வணக்கம் கூறினான் நகரின் பிரபல சைக்யாரிஸ்ட் டாக்டர் ஜெகன், முழுப் பெயர் ஜெகன்நாதன். சுருட்டை முடி... அது கலைந்து நெற்றியில் புரள்வதே அவனுக்கு ஒரு அழகை கொடுத்தது. சற்று பருமன் இருந்தாலும் அவன் ஆறடி உயரத்திற்கு அந்தப் பருமன் ஒரு பொருட்டாய் இல்லை. கூடவே நடந்த பிரபாவை வினவினான்...

"பிரபா நான் இல்லாத ஒரு வாரம் எப்படிப் போச்சுது?"

"ஆஸ் யூஸ்வல் டாகடர்..."

"புது இன் பேஷண்ட் யாராவது அட்மிட் ஆயிருக்கறாங்களா?"

"எஸ் டாக்டர் அழகான ஒரு முப்பது வயசு பெண் ஒருத்தி அட்மிட் ஆயிருக்கறாங்க ஆனா பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி இருக்கறாங்க... உங்க செமினார் எப்படி இருந்துச்சு டாக்டர்?"

"ஃபைன்" பேசிக்கொண்டே வர அவன் வெளி நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும் அறை வந்து சேர்ந்திருந்தது... கதவைத் திறந்து சுழல் நாற்காலியில் அமர்ந்தான். பிரபா ஏசி சுவிட்சை ஆன் செய்து இதமான குளிரை அறைக்குள் பரவச் செய்தாள்...

"இன்னிக்கு எத்தனை அப்பாயின்மெண்ட் பிரபா?"

"காலையில நாலு, மதியம் அஞ்சு டாக்டர்"

"மொதல் பேஷண்ட் எத்தனை மணி?"

"பத்து மணிக்கு டாக்டர்"

"அப்ப அதுக்குள்ள ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திடுவோம்"

"ஓகே டாக்டர் நான் எல்லாம் பிரிப்பேர் பண்ணிட்டேன் கிளம்பலாம்" என்றவள் உள்நோயாளிகள் கேஸ் சார்ட் வார்டு வாரியாக பிரித்து கிளிப் பேர்டில் சொருகியிருந்தாள். ஜெகனும் பிரபாவும் அறைக்கு வெளியே வந்து உள்நோயாளிகள் வார்டை நோக்கி நடந்தனர்.

சினிமாவில் பார்ப்பது போல் விதவிதமான பைத்தியங்கள் எங்கும் தென்படவில்லை... மருத்துவமனை முழுவதும் ஒரு அமைதியே நிலவியது. முதல் அறையில் ஒரு இருபத்தைந்து வயது வாலிபன் படுக்கையில் அமர்ந்திருந்தான், அவன் அருகில் சென்று ...

"என்ன பாலு சௌக்கியமா?" என்ற அவன் தோளை சினேகமாய் தொட்டான் ஜெகன்.

அதுவரை கண் மூடி அமர்ந்திருந்தவன் ஜெகனின் தொடுகையில் கண் திறந்து அவனைப் பார்த்தான், அவன் முகத்தில் மகிழ்ச்சியின் சாயை...

"ஐயாம் ஃபைன் டாக்டர்" என்றான் பாலு என்று ஜெகனால் அழைக்கப்பட்ட பாலசுப்ரமணியன். அவனே தொடர்ந்து,

"தேங்க்யூ டாக்டர்...தேங்க்யூ..." என்றவன் கண்கள் நிறைந்திருந்தது...

"எதுக்கு இப்ப எனக்கு நன்றி எல்லாம் பாலு, நீ நல்லா கோவாப்ரேட் பண்ணுன சீக்கிரம் குணமாயிட்ட, மருந்து மாத்திரை எல்லாம் தவறாம எடுத்துக்கணும் ஓகேயா?"

"நீங்க சொன்னா தட்டுவேனா டாக்டர்" என்றவன் தோள் தட்டி வெளியே வந்தான் ஜெகன்.

அடுத்த நோயாளியின் அறையை நோக்கி நடந்தவன் காதுகளில் விழுந்தது 'வீல்...' என்ற அலறல் சத்தம், அந்த அலறல் அந்த காலை வேளையின் அமைதியை குலைத்துப் போட்டது. கேள்வியை முகத்தில் தேக்கி பிராபாவின் முகத்தைப் பார்த்தான், அவன் குறிப்பறிந்து பதில் கூறினாள் பிரபா...

"சார் புதுசா ஒரு இன்பேஷண்ட் அட்மிட் ஆனதா சொன்னேனே அந்த பெண் ரூமுல இருந்துதான் அந்தச் சத்தம், பயங்கர வயலன்ஸ், டாக்டர் அசோகன் தான் அட்டண்ட் பண்ணுனாரு... செடக்டிவ் குடுத்து தான் கண்ட்ரோல் பண்ணுறோம், நீங்க வந்த பிறகு ஃபர்தரா ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னு அசோகன் சார் அபிப்ராயப்பட்டார்" பிரபா கூறி முடிக்கவும் மற்ற நோயாளிகள் தவிர்த்து கடைசியில் அமைந்த சிறைக் கைதிகளை அடைக்கும் செல் போல இருந்த அறையை நோக்கி நடந்தான் ஜெகன், கூடவே அவன் நடைக்கு ஈடு கொடுக்க பிரபா ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223772033
கையில் கிடைத்த வைரம்...

Read more from Sahitha Murugan

Related to கையில் கிடைத்த வைரம்...

Related ebooks

Reviews for கையில் கிடைத்த வைரம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கையில் கிடைத்த வைரம்... - Sahitha Murugan

    1

    "குட் மார்னிங் டாக்டர்"

    அந்த அழகான இதமான டிசம்பர் மாத காலையில் அழகான நர்ஸ் பிரபாவின் காலை வணக்கத்தை தன் அழகிய பல் வரிசை தெரிய சிரித்து குட்மார்னிங் பிரபா என்று பதில் வணக்கம் கூறினான் நகரின் பிரபல சைக்யாரிஸ்ட் டாக்டர் ஜெகன், முழுப் பெயர் ஜெகன்நாதன். சுருட்டை முடி... அது கலைந்து நெற்றியில் புரள்வதே அவனுக்கு ஒரு அழகை கொடுத்தது. சற்று பருமன் இருந்தாலும் அவன் ஆறடி உயரத்திற்கு அந்தப் பருமன் ஒரு பொருட்டாய் இல்லை. கூடவே நடந்த பிரபாவை வினவினான்...

    பிரபா நான் இல்லாத ஒரு வாரம் எப்படிப் போச்சுது?

    ஆஸ் யூஸ்வல் டாகடர்...

    புது இன் பேஷண்ட் யாராவது அட்மிட் ஆயிருக்கறாங்களா?

    எஸ் டாக்டர் அழகான ஒரு முப்பது வயசு பெண் ஒருத்தி அட்மிட் ஆயிருக்கறாங்க ஆனா பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி இருக்கறாங்க... உங்க செமினார் எப்படி இருந்துச்சு டாக்டர்?

    ஃபைன் பேசிக்கொண்டே வர அவன் வெளி நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும் அறை வந்து சேர்ந்திருந்தது... கதவைத் திறந்து சுழல் நாற்காலியில் அமர்ந்தான். பிரபா ஏசி சுவிட்சை ஆன் செய்து இதமான குளிரை அறைக்குள் பரவச் செய்தாள்...

    இன்னிக்கு எத்தனை அப்பாயின்மெண்ட் பிரபா?

    காலையில நாலு, மதியம் அஞ்சு டாக்டர்

    மொதல் பேஷண்ட் எத்தனை மணி?

    பத்து மணிக்கு டாக்டர்

    அப்ப அதுக்குள்ள ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திடுவோம்

    ஓகே டாக்டர் நான் எல்லாம் பிரிப்பேர் பண்ணிட்டேன் கிளம்பலாம் என்றவள் உள்நோயாளிகள் கேஸ் சார்ட் வார்டு வாரியாக பிரித்து கிளிப் பேர்டில் சொருகியிருந்தாள். ஜெகனும் பிரபாவும் அறைக்கு வெளியே வந்து உள்நோயாளிகள் வார்டை நோக்கி நடந்தனர்.

    சினிமாவில் பார்ப்பது போல் விதவிதமான பைத்தியங்கள் எங்கும் தென்படவில்லை... மருத்துவமனை முழுவதும் ஒரு அமைதியே நிலவியது. முதல் அறையில் ஒரு இருபத்தைந்து வயது வாலிபன் படுக்கையில் அமர்ந்திருந்தான், அவன் அருகில் சென்று ...

    என்ன பாலு சௌக்கியமா? என்ற அவன் தோளை சினேகமாய் தொட்டான் ஜெகன்.

    அதுவரை கண் மூடி அமர்ந்திருந்தவன் ஜெகனின் தொடுகையில் கண் திறந்து அவனைப் பார்த்தான், அவன் முகத்தில் மகிழ்ச்சியின் சாயை...

    ஐயாம் ஃபைன் டாக்டர் என்றான் பாலு என்று ஜெகனால் அழைக்கப்பட்ட பாலசுப்ரமணியன். அவனே தொடர்ந்து,

    தேங்க்யூ டாக்டர்...தேங்க்யூ... என்றவன் கண்கள் நிறைந்திருந்தது...

    எதுக்கு இப்ப எனக்கு நன்றி எல்லாம் பாலு, நீ நல்லா கோவாப்ரேட் பண்ணுன சீக்கிரம் குணமாயிட்ட, மருந்து மாத்திரை எல்லாம் தவறாம எடுத்துக்கணும் ஓகேயா?

    நீங்க சொன்னா தட்டுவேனா டாக்டர் என்றவன் தோள் தட்டி வெளியே வந்தான் ஜெகன்.

    அடுத்த நோயாளியின் அறையை நோக்கி நடந்தவன் காதுகளில் விழுந்தது ‘வீல்...’ என்ற அலறல் சத்தம், அந்த அலறல் அந்த காலை வேளையின் அமைதியை குலைத்துப் போட்டது. கேள்வியை முகத்தில் தேக்கி பிராபாவின் முகத்தைப் பார்த்தான், அவன் குறிப்பறிந்து பதில் கூறினாள் பிரபா...

    சார் புதுசா ஒரு இன்பேஷண்ட் அட்மிட் ஆனதா சொன்னேனே அந்த பெண் ரூமுல இருந்துதான் அந்தச் சத்தம், பயங்கர வயலன்ஸ், டாக்டர் அசோகன் தான் அட்டண்ட் பண்ணுனாரு... செடக்டிவ் குடுத்து தான் கண்ட்ரோல் பண்ணுறோம், நீங்க வந்த பிறகு ஃபர்தரா ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னு அசோகன் சார் அபிப்ராயப்பட்டார் பிரபா கூறி முடிக்கவும் மற்ற நோயாளிகள் தவிர்த்து கடைசியில் அமைந்த சிறைக் கைதிகளை அடைக்கும் செல் போல இருந்த அறையை நோக்கி நடந்தான் ஜெகன், கூடவே அவன் நடைக்கு ஈடு கொடுக்க பிரபா ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

    சில நொடிகளில் அந்த செல்லை அடைந்தனர் இருவரும், கம்பி கதவுக்கு முன்னால் நின்றவன் அறைக்குள் பார்வையை செலுத்தினான், தலை முடி பிரிந்து பிரிபிரியாய் தொங்க முகம் முழுவதும் அடர்த்தியான முடி மூடியிருந்தது, ஆக்ரோஷமாய் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். காலில் சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது. தன் முன் நிழலாடுவது கண்டு தலைநிமிர்த்தி வெளியில் நிற்பவர்களை காண எத்தனித்தாள் அவள்... மேகம் விலகி நிலவு முகம் காட்டுவது போல் முகத்தில் விழுந்த குழல்கள் விலக சந்திர பிம்பமாய் அந்த முகம் ஜெகனுக்கு தெரிந்தது... அந்த முகத்தைப் பார்த்த அடுத்த நொடி ஜெகனின் வாயிலிருது நடுக்கமாய் உதிர்ந்தது அந்தப் பெயர்…

    ஆ...திரா.

    2

    சற்று நேரம் அவன் மூளையில் எதுவும் உறைக்கவில்லை... அறையில் கட்டப்பட்டு கிடந்தவளையே பார்த்து நின்றான்… அவன் கண்கள் அவனை அறியாமல் நீர் முத்துக்களை உதிர்த்தது. விதவிதமான மனநோயாளிகளை பார்த்து அவர்களுக்கு சிகிட்சை அளித்த திடமான ஒரு பிரபல சைக்யாரிஸ்ட்டின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதைக் கண்ட நர்ஸ் பிரபா அதிசயமாகவும் அனுதாபத்துடனும் அவனைப் பார்த்தாள். ஜெகனை வினவினாள்.

    ஏன் டாக்டர் பேஷண்ட் உங்களுக்கு தெரிஞ்சவங்களா? அவள் கேள்விக்கு பதில் கூறும் நிலையில் அப்பொழுது அவன் இல்லை... ஒரு சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருந்தது அவனுள்ளே. பிரபாவிற்கு பதில் கூறாமல் விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்று சுழல் நாற்காலியில் பொத்தென்று விழுந்தான்,

    அவன் வாய் ஆதிரா... ஆதிரா உனக்கு ஏன் இந்த நிலமை? உன்னை நான் இந்த நிலமையிலா பார்க்கணும்? என்று புலம்பியது... கண்ணில் நீர்வழிந்து கொண்டே இருந்தது... ஜெகனின் கொந்தளித்த நிலைகண்டு அறைக்குள் வராமல் வெளியவே நின்றிருந்தாள் பிரபா. மணித்துளிகள் சில இறந்திருக்க அழைப்பு மணி ஒரு முறை சப்தித்தது. அது அவளுக்கான அழைப்பு, இரு முறை அடித்தால் அட்டெண்டருக்கானது, மெதுவாக அறைக்குள் பிரவேசித்தாள் பிரபா.

    பிரபா அந்தப் பேஷண்ட் என்னிக்கு அட்மிட் ஆனாங்க?

    ரெண்டு நாளாச்சு டாக்டர்...

    "கூட யாரும் இல்லையா?’

    கொண்டு வரும்போதே ரொம்ப வயலண்டா இருந்தாங்க, நாம நம்ம ஆர்டர்லிகளை வச்சு நம்ம ஆம்புலன்சுல வலுக்கட்டாயமா கொண்டு வந்தோம். அவங்களோட அப்பாதான் கொண்டு வந்து சேர்த்தார், செல்லுல அடைக்க வேண்டியிருந்தால கூட யாரும் இருக்கலை, ராத்திரி பூரா ஒரு அம்மாள் வெளிய ரிஸப்ஷனுல இருந்தாங்க அவங்க காலையில தான் போனாங்க, அவங்க வீட்டு வேலைக்காரப் பொம்பளை இருந்துச்சு கேட்க கேட்க உதடுகள் துடித்தது அவனுக்கு.

    இதுவரை தன் டாக்டரை இப்படி உணர்ச்சிக் கொந்தளிப்பில் பார்த்ததில்லை பிரபா. பெரிதாக எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டிக்கொள்ளமாட்டான் ஜெகன், அது சைக்யாரிஸ்ட்களின் குணம் என்று உணர்ந்திருந்தாள் அந்த அனுபவம் வாய்ந்த நர்ஸ், ஆனால் அப்படி ஒரு திடமனசுக்காரன் இப்படி உடைந்து போய் கண்ணில் நீர் வார்த்தது கண்டு அவளும் ஒரு கணம் கலங்கி நின்றாள்.

    பிரபா ஆதிராவோட கேஸ் சம்மரி எடுத்திட்டு வா தான் சொல்லாமலே நோயாளியின் பெயர் தெரிந்திருப்பதால் புரிந்துகொண்டாள் பிரபா நோயாளி டாக்டருக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவள் என்று. ஜெகன் கூறவும் ஆதிராவிற்கு இரண்டு நாட்களாக வழங்கிய ட்ரீட்மெண்ட் பற்றிய குறிப்புகளை கொண்டு வந்து கொடுத்தாள் பிரபா. வாங்கிப் படித்தவன் நெற்றி சுருங்கி ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது... மிக மோசமான மனச்சிதைவுக்கு உண்டான மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருந்தது அவளுக்கு.

    அவன் மனம் கேட்டது ‘ஏன் ஆதிரா?’ ‘என்னவாயிற்று உனக்கு?’ ஒரு பூ போன்ற மனம் படைத்த உனக்கு ஏன் இந்த நிலமை? இறைவா பரந்து விரிந்த இந்த சென்னையில் எத்தனையோ மனநல மருத்துவமனைகள், அதில் இந்த மருத்துவமனையில் தானா உன்னைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்?

    ஏன் ஆதிரா மீண்டும் என் வாழ்க்கையில் வந்து சேர்ந்தாய்?’ மனம் கேள்வி கேட்க கண்கள் நீரை வாரி இறைத்துக் கொண்டே இருந்தது. எதிரில் பிரேமா நிற்பதை உணர்ந்த ஜெகன், நிலமையை சமாளித்துக் கேட்டான்.

    இந்த ரெண்டு நாளா பேஷண்டோட ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு?

    சார் வந்ததுல இருந்து முரட்டுத்தனமாத்தான் நடந்துக்கிட்டாங்க

    மனதில் வினவினான், ‘ஏன் ஆதிரா உனக்கு முரட்டுத்தனமாகக் கூட நடந்துக்கத் தெரியுமா?’

    பிரபா தொடர்ந்தாள்... ஆர்டர்லிங்க வேனுல இருந்து செல்லுக்கு கொண்டு வர படாத பாடு பட்டாங்க, ஒரு ஆர்டர்லியை கடிச்சு வேற வச்சுட்டாங்க, அந்த ஆளுக்கு டிடி போட வேண்டியதாயிட்டுது. முழிச்சா ஆங்காரமான கூச்சல், வேற வழியில்லாம செடக்டிவ் குடுத்து தூக்கத்துலயே வைக்க வேண்டியதாயிட்டுது!

    சாப்பாடு?

    "வாய் வழி

    Enjoying the preview?
    Page 1 of 1