Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nigazhntha Kathaigal
Nigazhntha Kathaigal
Nigazhntha Kathaigal
Ebook177 pages1 hour

Nigazhntha Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசகர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுதுவதற்கும் அந்த பிரச்சனைகளை மையமாக வைத்து, பிரச்சினையை தீர்ப்பதற்கான அறிவுரையை தீர்வாக எழுதியுள்ளார். நிகழ்ந்த கதையில் லக்ஷ்மி...

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580155608892
Nigazhntha Kathaigal

Read more from Lakshmi

Related to Nigazhntha Kathaigal

Related ebooks

Reviews for Nigazhntha Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nigazhntha Kathaigal - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிகழ்ந்த கதைகள்

    (சிறுகதைகள்)

    Nigazhntha Kathaiga

    (Sirukadhaigal)

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    1. ஏன் இந்த வேகம்?

    2. அந்தக் கடிதம்

    3. அவளுக்கு மறுபடியும்

    4. பட்ட மரம்

    5. இருக்க ஓர் இடம்

    6. மீண்ட சொர்க்கம்

    7. மெல்ல மெல்ல மற!

    8. வாழ்க்கை வாழ்வதற்கே

    9. துணையின் நிழல்

    10. தம்பி எனும் கருநாகம்!

    11. குருவி சொன்னது

    12. கணவன் என்ற கல்

    13. பத்து மாத பந்தம்

    14. காதலுக்குக் கிடைத்த பரிசு

    15. ஜோதிடம் பலித்ததா?

    1. ஏன் இந்த வேகம்?

    ஒரு மூட்டைத்துணி. அப்பா, அம்மா, பெரிய அண்ணன், சின்ன அண்ணன், அண்ணி அத்தனை பேரும் காலைக் குளியலுக்குப் பின்னர் களைந்து போட்டுவிட்டுப் போன அழுக்குத்துணிகள்.

    சோப்புத்தூள் போட்டு இரும்பு வாளிகளில் நனைத்து வைத்துவிட்டு, வீட்டைப் பெருக்கி, துடைத்து, எல்லோருக்கும் மதிய உணவு தயாரித்துவிட்டு கிணற்றடியில் தோய்க்கப்போனவள்... அவைகளைத் தோட்டத்து வேப்ப மரங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொடியில் பிரித்து உலர்த்திவிட்டு உள்ளே வருவதற்குள் பொழுது உச்சியை எட்டிவிட்டிருந்தது. தாகம் நாக்கை வரட்டியது.

    கனமான வாளிகளைத் தூக்கியதாலோ என்னவோ அவளுக்கு வழக்கமாக வரும் நெஞ்சுவலி இன்று கொஞ்சம் அதிகமாகவே வந்துவிட்டது... வைத்தியர் வலிக்காக கொடுத்திருந்த மாத்திரைகளில் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். மூலையிலிருந்த மண்பானையிலிருந்து டம்ளரில் நீரை முகந்து... வாயில் ஊற்றிக்கொண்டு முதலில் மாத்திரையை விழுங்கினாள். பின்னர் தாகம் அடங்கும்வரை டம்ளர் தண்ணீர் பூராவையும் குடித்தாள்.

    சில்லென்று விளாமிச்சி வேர் மணத்துடன் தண்ணீர் அந்த வெய்யிலுக்குக் குடிக்க சுகமாகத்தானிருந்தது. ஒரு நொடிப்பொழுது சுகம்... அதை அவள் அனுபவிப்பதைக்கூட அண்ணியால் பொறுக்க முடியவில்லை. அதுவரை வாயிற்திண்ணையில் எதிர்வீட்டுப் பெண்ணுடன் பல்லாங்குழி விளையாடிக்கொண்டு பொழுதை வெட்டியாக கழித்துக்கொண்டிருந்தவள் இப்போது அதட்டிக் கூப்பிட்டாள்.

    தாரணி! மாமா, உங்கண்ணார் எல்லாரும் கடையிலிருந்து வராங்க. கோயிலுக்குப் போன அத்தைகூட திரும்பிட்டாப்பல தெரியுது. எல்லாரும் பசியா இருப்பாங்க... சீக்கிரமா தட்டுக்களைக் கழுவி மேசையில் வை... அப்படியே கால் கழுவ தண்ணீர் வாளியும் செம்பையும் எடுத்து வை...

    ராணிபோல வாயிலில் உட்கார்ந்தபடியே எட்டு வீடு கேட்கும் குரலில் மிடுக்காக உத்தரவிட்டாள் அண்ணி.

    காலையிலிருந்து நிக்க நேரமில்லாமல் வேலை செஞ்சு ரொம்ப களைச்சுப் போயிட்டேன் அண்ணி! இன்னிக்கு நெஞ்சுவலி ரொம்ப அதிகமா இருக்கு... சொல்லத்தான் நினைத்தாள் அவள். ஆனால் துணிவிருக்கவில்லை. உள்ளமும் உணர்வுகளும் புழுங்கி உடைந்து ஓவென்று ஓலமிட்டன.

    அண்ணி! நீயும் ஒரு பெண். ஒரு நோயாளிப் பெண்ணை இப்படி வாட்டி வதைக்கிறது தர்மமா?

    நான் செய்தது தவறுதான். அதுக்காக வீடே கூடி எனக்குதானே சாவு வருமுன் மரண தண்டனை வழங்கிட்டீங்களே? மாசம் என் செலவுக்குன்னு கொஞ்சம் உதவி வந்த சம்பளத்தில் மண்ணைப்போட்டு அந்த பள்ளிக்கூடத்து வேலையிலிருந்து என்னை நிறுத்தி... இப்ப வீட்டில் அடைச்சு வச்சிருக்கீங்களே...? நான் யார்கிட்டபோய் முறையிட முடியும்...?

    அப்பா...! பெரிய அண்ணா! சின்ன அண்ணா உங்களுக்கெல்லாம் என் மனசு ஓலமிடறது கேட்கலையா... துயரம் கப்பிய என் கண்களைப் பார்த்து கொஞ்சம்கூட உங்கள் மனம் இரங்கலையா? நான் யார் அப்பா...? நீங்க பெத்த மகள். அண்ணா நான் உங்கள் ரத்தத்தின் ஒரு பகுதிங்கிறதை மறந்துட்டீங்களே! உங்க உயிர் துடிப்பின் ஒரு துளி நான் என்பது புரியலையா...? உறவுங்கிற சங்கிலியில் நானும் ஒரு பிணைப்புங்கிறத மறந்து ஊராருக்கு மதிப்புக் கொடுத்து... என்னை இப்படி கொடுமைப்படுத்திட்டீங்களே... நியாயமா...?

    பாவம் அம்மா...! ஜாதகம் பார்த்தவர் சொல்லிவிட்டதை நம்பிக்கொண்டு விட்டாங்க.

    சீக்கிரம் கல்யாணம் பண்ணினால் உடம்பு குணமாகிவிடும் என்று சொல்லிவிட்டார் ஜோசியர்.

    பரிசோதித்துப் பார்த்த டாக்டர் சொன்னார்... அறுவை சிகிச்சை உடனடியாக செய்தாகணும். தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தால் நல்லதல்ல.

    சிகிச்சையில் மகள் செத்துவிடுவாளோன்னு பயம்... அம்மா ஜோசியரைத்தான் நம்பினாங்க... அறுவை பகவதி அம்மன் கோயிலுக்குப்போய் நித்தமும்... பிரார்த்தனை செய்துகொண்டு... கோயிலைப் பலமுறை வலம் வந்துவிட்டு... வேகாத வெய்யிலில்... தாயே என் மகளுக்குத் தாலி பாக்கியம் தா... உனக்குத் தங்கத்திலே தாலி செய்து போடறேன்... என்று லஞ்சம்பேசி கெஞ்சிவிட்டு வராங்க...

    அறுவை சிகிச்சையைப்பற்றி தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்க ஒருவாரம் சென்னைக்கு அம்மாவோட பெரிய டாக்டரைப் பார்க்கப் போயிருந்தாள் தாரணி.

    அப்பா ஊரில் இல்லை. அம்மாதான் துணையாகப் போக வேண்டியிருந்தது. அதற்குள் கிராமத்தில் அவர்கள் வசித்த தெருவில் வேறு ஒரு விபரீதமான கதை பரவிவிட்டிருந்தது.

    தாரணி எதுக்கு சென்னைக்குப் போயிருக்கா தெரியுமா? அவளுக்கு மூணு மாதம் கர்ப்பம். அதைக் கலைக்கத்தான் தாய் மகளை இழுத்துக்கொண்டு போயிருக்காள். காரணம் யார் தெரியுமா...? அவள் வேலை செய்கிற பள்ளிக்கூடத்திற்கு அருகே... இருக்கிற பெரிய தெருமுனை வீட்டிலே குடியிருக்கிறானே... கேசவன்... அவன்தான்... வியப்பா இருக்கா? கேசவன் பெண்ஜாதி மல்லிகாதான் சொன்னாள்...

    படாப் பழிகளைக் கேட்டு ஒரு இளம்பெண் மனம் நொறுங்கிப்போவதைப் போன்ற கொடுமையானதொரு விஷயம் உலகில் வேறு ஒன்றுமே கிடையாது. முதலில் அந்தத் தெருவில் ஆரம்பித்த கதை இப்போது ஊரே பரவிவிட்டிருந்தது.

    கேடு கெட்டவளே! உன்னாலே எங்களுக்கு கடைத்தெருவில் தலைகாட்ட முடியலை. நீ செத்து ஒழிஞ்சு போயிருந்தாலும் நிம்மதியாக இருப்போம் அண்ணன்கள் இருவரும்... அவளைப் போட்டு அடித்தபோது சுருண்டு மயங்கி விழுந்துவிட்டாள்... அப்பப்பா! அந்த நாளை நினைத்தாலும்... உள்ளமும் உடலும் ஒருங்கே நடுங்குகிறதே?

    பாவம் அம்மா! பெற்றவள் அல்லவா? ஓடிவந்து மகளை வாரி அணைத்துக்கொண்டாள். அதைக்கண்டு ஆத்திரப்பட்ட அப்பா.... கீழ்ப்பல் உதட்டைக் கிழித்து ரத்தம் முகவாயில் பெருகும்வரை... அம்மாவை எப்படி ஓங்கி பேயாக அறைந்துவிட்டிருந்தார்.

    அன்று வீடே அமர்க்களப்பட்டு விட்டதை அவள் இந்த அல்ப உயிர் துடிக்கும்வரை மறக்கமுடியுமா...?

    மனிதாபிமானமே இல்லாது இருதய நோயாளிப் பெண்ணை மிருகம்போல தாக்கிய அவர்களது அரக்கச் செயலைத்தான் அவள் மன்னிக்க முடியுமா?

    நடையில் காலடி சப்தம் கேட்டது... நினைப்பினின்று தாரணி விழித்துக்கொண்டாள். பரபரப்பாக தண்ணீர் வாளியைத் தூக்கி முற்றத்து ஓரத்தில் வைத்தாள்.

    தட்டுக்களைக் கழுவித் துடைத்து கூடத்தில் கிடந்த மேஜைமீது வைத்துவிட்டு சமையலறைக்குள் ஓடினாள்.

    ‘அன்பில்லாத மனிதர்கள்’ என்ற நினைப்பு அவள் நெஞ்சை இன்னும் வலிக்கச் செய்தது. வாளியைத் தூக்கிய சிரமம் மூச்சை அடைத்தது.

    எதிரே சுவற்றில் தொங்கிய கண்ணாடியில் பார்வை பட்டபோது உதடுகள் லேசாக நீலமாகிவிட்டதை உணர்ந்தாள். மூச்சு முட்டல் ஏற்பட்டு உதடுகள் நீலமாகினால் இதயம் தேவையான பிராணவாயு இல்லாது கஷ்டப்படுகிறது என்று அர்த்தம்... அந்த நிலையை நீடிக்கவிடுவது அபாயம் டாக்டர் கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தன. டாக்டர் சொன்னதையெல்லாம் அம்மா திரும்ப வந்து வீட்டிலிருந்தவர்களிடம் சொன்னாள்.

    ஆனால் யாருமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. ‘குடும்ப கவுரவத்தைக் குழிதோண்டி புதைத்த பாவி சாகட்டும்’ என்ற அசட்டை போலும்.

    அடுப்பைப் பற்றவைத்துக் குழம்பைச் சூடுசெய்து கொண்டிருந்தாள் தாரணி. முற்றத்தில் அவர்கள் கை கால்களைக் கழுவும் சப்தம் கேட்டது. அடுத்த வீட்டுப்பெண் தன் அண்ணன் பரிசாக அனுப்பியிருந்த டேப் ரிகார்டரில் சினிமாப் பாட்டுக்களைப் போட்டுவிட்டிருந்தாள்.

    ஜன்னல் வழியே பளிச்சென்று பாடல் கேட்டது.

    வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே... ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!

    குபீரென்று தாரணியின் கண்களில் நீர் பொங்கிக் கன்னங்களைக் கோடிட்டது.

    எத்தனை பொருத்தமான பாட்டு. சின்னஞ்சிறு வயதிலேயே அவளை அழைத்துக்கொள்ள வானுலகத்திற்கு ஏன் இந்த வேகம்?

    ஜன்னல் வழியே தெரிந்த வேப்பமரத்துக் கிளையில் ஒரு குருவி உட்கார்ந்திருந்தது.

    காற்றில் தலை அசைத்து கிளைகள் சலசலத்ததும்... சிறகை விரித்துக்கொண்டு கிரீச்சிட்டபடி அது எத்தனை சிங்காரமாக நீலவானை நோக்கிப் பறந்தது...

    அந்த வீட்டு மதில் சுவரைத் தாண்டி காற்றிலே ஆடிய போகன் வில்லாவின் சிவப்பு பூக்கள் எத்தனை அழகாக இருந்தன?

    அம்மா பிரசாத தட்டுடன் உள்ளே வந்தபோது தட்டிலிருந்த மல்லிகைப் பூவின் மணம்... அப்பப்பா எத்தனை இனிமையாக இருந்தது... ஜன்னல் வழியே லேசாகப் புகுந்து அவளது கன்னங்களைத் தடவிவிட்டு... முன்நெற்றி கூந்தலைப் புரட்டிய காற்றுகூட எத்தனை சுகமாக இருந்தது...

    சிட்டுக் குருவிக்கும் காற்றில் தலையசைக்கும் போகன் வில்லாவுக்கும்கூட நீண்டகாலம் வாழ உரிமை இருந்தது. அவளுக்கு?

    மேலே பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உணவுப் பாத்திரங்களை மேசைமீது வைத்துவிட்டு உள்ளே வந்து ஒதுங்கிக்கொண்டாள்.

    அவள் சமைக்கலாம் ஆனால் சாப்பிடும்போது அவளைப் பார்க்க அந்த வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு அருவருப்பாக இருந்தது. தலைநிமிர முடியாதபடி பயங்கரமானதொரு தவறைச் செய்துவிட்ட பாவப்பட்டவள் அவள்... குடும்பத்தை கெடுக்க வந்த கோடாரிப் காம்பு...

    ஆறு மாதங்களுக்கு முன்னர் கணவனுடன் புக்ககம் போய்விட்டிருந்த தங்கை லீலாவைப்பற்றி அவர்கள் பேசுவது காதில் விழுந்தது.

    அவங்க வீட்டிலே லீலாவை ரொம்ப கொண்டாடிக்கிறாங்க... என்ன இருந்தாலும் அவ பதவிசான பெண்... இங்கேயும் ஒண்ணு இருக்கே...

    அண்ணியின் ஏளனமான சொல்... அவளை நிலைகுலையச் செய்துவிட்டது... நெஞ்சு படபடப்பு அதிகரித்து மூச்சுத் திணறியது... துக்கம் நெஞ்சை இறுக்க... அவளால் நிற்க முடியாது... கதவை ஆதரவுக்காகப் பிடித்துக்கொண்டாள்.

    நாலு சுவருக்குள் அவளை சமாதி கட்டிவிட்டு உறவினர்கள் வார்த்தைகளாலும் செயலாலும் சித்திரவதை செய்யும்படி தவிக்கவிட்டு கேசவன் ஒரு மனிதனாக சிறிதும் கவலை கொள்ளாது சமூகத்திலே எந்தவித பயமுமின்றி உலவிக் கொண்டிருக்கிறான்...?

    ஆணுக்கொரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் வழங்கும் அக்கிரமமான சமுதாயப் பார்வையிலே அவள் அழிந்து போனவள், தவறு செய்தவள் துரோகி.

    ஒரு வருஷத்திற்கு முன்னர்தான் கேசவன் அறிமுகம் ஏற்பட்டது. அதுவும் எதிர்பாராத நிலையில்.

    அப்போது தாரணி அந்த தனியார் பெண்கள் பள்ளிக்கூடத்தில் டைப்பிஸ்ட்டாக வேலைக்கமர்ந்திருந்தாள். அடிக்கடி இருமலும் சளியும் காய்ச்சலும் வந்து கொண்டிருந்தன. காய்ச்சலுக்கு என டாக்டரிடம் மருந்து வாங்கப் போனபோதுதான் முதல் முதலாக அவளுக்கு தன் நோயைப்பற்றி தெரியவந்தது. சின்ன வயதில் எந்தவிதமான

    Enjoying the preview?
    Page 1 of 1