Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravu Solli Kondu...
Uravu Solli Kondu...
Uravu Solli Kondu...
Ebook87 pages42 minutes

Uravu Solli Kondu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மோகனசுந்தரம் என்பவன் ஒரு வக்கீல். மனைவி இறந்து விட்டால். இவரின் மகளான அருணாவின் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். பேரனான நிகலனுடன் வாழ்க்கையை மிருதுவாக கொண்டு செல்கிறார். ஒருநாள் அவர் வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்து அப்பா என்று உறவு சொல்லிக் கொள்கிறாள். இவள் பெயர் சோபனா. உறவு சொல்லிக் கொண்டு வரும் இந்த சோபனா யார்? ஷோபனாவால் வீட்டில் ஏற்படும் கலவரங்கள் என்னென்ன? வாசித்து அறியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580155610876
Uravu Solli Kondu...

Read more from Lakshmi

Related to Uravu Solli Kondu...

Related ebooks

Reviews for Uravu Solli Kondu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravu Solli Kondu... - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறவு சொல்லிக் கொண்டு...

    Uravu Solli Kondu...

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஸ்நானம் செய்த கூந்தலைத் துவட்டியபடியே முன்னறைப் பக்கம் வந்தாள் அருணா.

    அவள் மகன் நிகில், தாத்தாவின் கிராப்புத் தலையைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

    அருணா தனக்குள்ளே மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

    அவள் அப்பா மோகனசுந்தரம் பெயருக்கேற்ப தோற்றம் கொண்டவர். படிய வாரிய கிராப்பு செக்கச் சிவந்த நிறம், உயரமும் கம்பீரமும் கொண்ட எடுப்பான உருவம் கலகலப்பான பேச்சு.

    வியப்பென்ன? சென்னையில் அட்வகேட் மோகனசுந்தரம் என்றாலே தனிக்கவர்ச்சி என்னும் அளவிற்கு அவர் பிரசித்தமானவர்.

    என்ன சிரிக்கிறேம்மா அப்பா கேட்டபடி பேரனை மார்புடன் அணைத்துக் கொண்டார்.

    போக்கிரிப் பயலே என்ன செய்றே? ஒரு காலத்தில் உன் தாத்தாவோட தலைமுடியில் ஒரு இழைகூட யாரும் தொட முடியாதே…! தப்பித் தவறி யாராவது கையால் இடிச்சுட்டாக்கூட கடுமையா கோவிச்சுப்பார். இப்ப என்னடான்னா நீ அவர் தலைமுடியை இழுத்து விளையாடுகிறாயே! சிரித்தாள் அருணா.

    அது அந்தக் காலம்... இப்போ நான் தாத்தாவாயிட்டேனே! எல்லாம் நரைச்சு. பெரிதாகச் சிரித்தார்.

    தாத்தாவாகி விட்டதாலே அப்பாதனது அலங்காரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லையே!

    அந்த நாள் போலவே வெளியே கிளம்பும்போது சில்க் ஜிப்பா பட்டுவேட்டியில் லேசான செண்ட் மணம் கமழ ‘ஜம்’ என்றுதானே புறப்படுகிறார்.

    பார்க்கிறவர்களுக்கு ஆசாமி சின்ன வயசிலே மைனராத் திரிஞ்சிருப்பான் போலிருக்கே! என்ற நினைப்பை தானே ஏற்படுத்துகிறார்.

    ஆமாம், அப்பா எப்பொழுதுமே தடபுடல் அலங்காரத்தில் தான் வாழ்ந்தவர். இப்போது பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியுமா?

    நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் வெள்ளை வெளேரென்ற சுற்றுச் சுவருடன் பெரிய தோட்டத்திற்குள் பொதிந்து கிடந்த அப்பாவின் பங்களா மிகவும் அழகானது. அமர்க்களமானதும் கூட.

    கேட்டருகே காக்கிச்சட்டை காவலாளி. வழுவழுப்பான நடைபாதை. இரு மருங்கிலும் பூஞ்செடிகள். அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்த கேட்டின் வழியாக சதாகார்கள் வந்த வண்ணம் இருக்கும். வாயிலின் முன்னாலிருந்த வராந்தாவில் ஓயாது ஒழியாது பார்க்க வரும் கும்பல். காலை வேளை. பலகாரம் முடிந்ததும் முன்பக்கத்து ஆபீஸ் அறைக்குள் அப்பா நுழைந்து விட்டால் டைப் யந்திரத்தில் டபடப சப்தம் ஓயாது தொடர்ந்து கொண்டிருக்கும்.

    மோகனசுந்தரம், அவனுக்கு என்னப்பா? ரெண்டு பக்கத்து சட்டைப் பையிலும் பணத்தை அள்ளி அள்ளித் திணிக்கக்கறான், என்று இதர வக்கீல்கள் பொருமும் அளவிற்கு மிகச் சிறந்த வழக்கறிஞராக விளங்கியவர்.

    அருணாவுக்கு அப்போதெல்லாம் அப்பாவைப் பற்றிப் பெருமை. சாயலில் அவள் அப்பாவைப் போலிருப்பதைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்டுப் பூரித்துப் போவாள்.

    அம்மா தோற்றத்தில் மிகவும் சாதாரணமாகத்தானிருந்தாள். அம்மாவழி பாட்டன் பிரபல வழக்கறிஞராக விளங்கிய காலத்தில் அப்பா அவரது ஜூனியராக அமர்ந்திருந்தார்.

    ஏழைப்பையன், சொந்த பந்தம் இல்லாத தனிக்கட்டை. நம் ஒரே பெண்ணைக் கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொண்டால்...? என்ற கணிப்பில் மோகன சுந்தரத்தை அவர் தமது மாப்பிள்ளையாக்கிக் கொண்டு விட்டிருந்தார்.

    இதை அப்பாவே வேடிக்கையாக அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். உன் தாத்தா உன் அம்மாவை என் தலையில் கட்ட எப்படிக் காக்காய் பிடித்தார் தெரியுமா?

    அப்பாவுக்கு சங்கீதம், நடனம் என்றால் உயிர். அந்தக் காலத்தில் அமெச்சூர் நாடகக்குழு ஒன்றில் நடித்துப் பெயர் வாங்கியவர். தொழிலிலும் ரொம்பப் பிரசித்தி பெற்றவர். வெளி உலகில்... அவனா... பெரிய லேடீஸ் மேனாச்சே! நீர் கவனித்துப் பாரும். அவன் கிட்ட வர்ற கட்சிக்காரர்களே பாதிப்பேர் பெண்கள்தான். ஒரு கிசுகிசுப்பு பரவலாக இருந்தது உண்மை.

    அருணா தன் குழந்தைப் பருவத்தில் அப்பாவுடன் தான் அதிக நெருக்கம் கொண்டிருந்தாள்.

    கம்பீரமான அப்பா அழகாக ஆங்கிலம் பேசக்கூடிய அப்பா. காந்தம்போலப் பிறரைக் கவரக்கூடிய அப்பா என்று அவரைப் பற்றி ரொம்பவே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    அம்மா, அவளைப் பொறுத்தவரை சமையலறையில் சதா இரண்டு சமையல் உதவி ஆட்களுடன் விருந்து படைப்பவள் என்ற கருத்தில் ஊறிப்போய் விட்டிருந்தாள்.

    கல்லூரிப் படிப்பு முடிந்து வீட்டோடு அவள் ஒரு சில மாதங்கள் தங்க நேர்ந்தபோதுதான் அம்மா என்ற பொறுமையின் சிகரத்தைத் தொட்டுப் பார்க்க முடிந்தது.

    அப்பாவின் நடத்தையைப் பற்றி அப்போதுதான் லேசாக அவளுக்குத் தெரிய வந்தது.

    ஒரு நாடக நடிகையுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அதனால் தான் அம்மா அடிக்கடி அழுது வீங்கிய கண்களுடன் காணப்பட்டாள் என்ற விவரம் புரிந்தது.

    என்னென்னவோ

    Enjoying the preview?
    Page 1 of 1