Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நவம்பர், நள்ளிரவு... நர்மதா!
நவம்பர், நள்ளிரவு... நர்மதா!
நவம்பர், நள்ளிரவு... நர்மதா!
Ebook106 pages36 minutes

நவம்பர், நள்ளிரவு... நர்மதா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"இந்த வீடுதான் ஸார்..!"
 வீட்டு புரோக்கர் சொல்ல, காரை வேகம் குறைத்து ரோட்டோரமாய் ஒதுக்கி நிறுத்தினான் செழியன். காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த செழியனின் மனைவி நர்மதா கண்ணாடியை இறக்கிவிட்டு கீழே குனிந்து வீட்டைப் பார்த்தாள்.
 புது குட்டி பங்களா ஒன்று மெலிதான ஆப்பிள் வண்ணக்ரீன் டிஸ்டம்பரில் குளித்து பளிச்சென்று சூரிய ஒளியில் மின்னியது. அக்கம்பக்கத்தில் இரண்டொரு செங்கல் உடம்பு கட்டிடங்கள் பாதி உருவான நிலையில் சிமெண்ட் பூச்சுக்காக காத்திருந்தன.
 நர்மதா காரினின்றும் இறங்கிக் கொண்டே கேட்டாள். "இது என்ன ஏரியா...?"
 புரோக்கர் சொன்னார். "இது கனகதுர்க்காகாலனி மேடம்... இப்படியே நேரா போனா ஒரு கிலோமீட்டர் தூரத்துல ஒரு அம்பாள் கோயில் வரும். அந்தக் கோயில்ல இருக்கிற தெய்வம்தான் கனகதுர்க்கா. அதனால்தான் இந்த காலனிக்கு கனகதுர்க்கா காலனின்னு பேர்..."
 "பக்கத்துல வீடுகளையே காணோமே...?"
 "இப்ப பார்க்கிறதுக்கு அப்படித்தாம்மா இருக்கும். அடுத்த வருஷம் இந்த ஏரியாவே மாறிப் போயிருக்கும். அதோ அந்த பொட்டல்வெளி தெரியுது பார்த்தீங்களா... அங்கே பொதுப்பணித்துறை சார்பா நூத்தி அம்பதுவீடுகளை கட்டப் போறாங்க. அதுக்கு வலது பக்கம் இருக்கிற காலியிடத்துல ஸ்டேட் பேங்க் ஸ்டாஃப்... அம்பது அறுபது வீடுகளைக் கட்டப் போறாங்க... இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல சாஃப்ட்வேர் பூங்கா ஒண்ணு வரப்போகுது..."
 செழியன் சிரித்தான். "இதெல்லாம் நிஜமா? உன்னோட கற்பனையா...?"
 "பேப்பர்ல போட்டிருந்தாங்க ஸார்..." புரோக்கர் சொல்லிக் கொண்டே அந்த குட்டி பங்களாவின் காம்பௌண்ட் கேட்டை நெருங்கி அதில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்தார்.
 உள்ளே போனார்கள்.
 பங்களாவின் போர்டிகோவுக்கு முன்னால் லான் ஒன்று பசுமையாய் கம்பளம் விரித்து இருந்தது. சிமெண்ட் தொட்டிகளில் குரோட்டன்ஸ் நிறம் நிறமாய் இலைகளைக் காட்டியது.
 புரோக்கர் போர்டிகோ படிகளில் ஏறி வீட்டின் கதவைத் திறக்க, உள்ளே பெரிய ஹால் மார்பிள் தரையோடு விரிந்தது.
 நர்மதா உள்ளே நுழைந்து எல்லா அறைகளையும் பார்வையிட்டாள். செழியனிடம் வந்தாள்.
 "என்னங்க... வீடு... எனக்கு ஓ.கே...! பார்த்துப் பார்த்து கட்டியிருக்காங்க... நாமே ப்ளான் பண்ணினாலும்கூட இப்படியொரு வீட்டைக் கட்ட முடியாது. புரோக்கர் கிட்டே விலையைப் பேசி முடிங்க... இந்த நவம்பர் மாசத்திலேயே ஒரு கணபதி ஹோமம் பண்ணி வீட்டுக்கு குடி வந்துடலாம்..."
 செழியன் தன் மோவாயைத் தேய்த்தான். "வீடு எல்லாம் ஓ.கே... தான்...! பட்... அக்கம்பக்கத்துல வீடுகள் அதிகம் இல்லையே... இந்த காலனியோட அடுத்த தெருவுல ரெண்டு மூணு பங்களா இருக்கு... ஆனா இந்த வீட்டுக்குப் பக்கத்துல வீடுகளே இல்லையே...? நான் ஆபீஸுக்குப் போயிட்டா, உனக்கு பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லையே நர்மதா...?"
 "இதோ பாருங்க... எனக்கு தனிமைதான் பிடிக்கும்ன்னு உங்களுக்குத் தெரியாதா...? நீங்க ஆபீஸுக்குப் போயிட்டா நான் கம்ப்யூட்டர்க்கு முன்னாடி போய் உட்கார்ந்துக்குவேன். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவெப்சைட் பார்த்தாக்கூட ஆயுசு போதாது. பக்கத்து வீடுகளுக்குப் போறது... அங்கே இருக்கிற பெண்கள் கிட்டே தேவையில்லாமே பேசறது... இதெல்லாம் எனக்கு அலர்ஜி. நீங்க ஆபீஸுக்குப் போயிட்டா நான் என்ன இந்த வீட்ல தனியாவா இருக்கப் போறேன். நம்ம பழைய வேலைக்காரங்க மூணு பேரையும் இங்கே கூட்டிட்டு வந்துடப் போறோம்... அப்புறம் என்ன... பயம்...?"
 "பயம் ஒண்ணும் இல்லை நர்மதா... ஏரியா சிட்டியை விட்டு ரொம்பவும் தள்ளியிருக்கேன்னு பார்த்தேன்... ஓ.கே! உனக்கு இந்த வீடு பிடிச்சிருந்தா பேசி முடிச்சுடலாம். அதுக்கு முன்னாடி நாம் ஒரு காரியம் பண்ணணும்..."
 "என்ன...?"
 "இந்த காலனியோட பக்கத்து தெருவில் ரெண்டு மூணு பங்களாக்கள் இருக்கு... அவங்க கிட்டே போய் இந்த ஏரியா எப்படி...? வாட்டர் ஸ்கார்ஸிடி, தெஃப்ட் ப்ராப்ளம் ஏதாவது உண்டான்னு கேட்கணும்...! முக்கியமா இந்த வீட்டைக் கட்டின ஓனர் 'மஸ்கட்'டில் இருக்கார். அவர் நல்லவர்ன்னு புரோக்கர் சொல்றார். அது உண்மையா, இல்லையான்னு நாம க்ராஸ் செக் பண்ணணும். அப்புறம் இந்த ஏரியாவில் விலை நிலவரம் எப்படின்னு கேக்கணும்..."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224366507
நவம்பர், நள்ளிரவு... நர்மதா!

Read more from Rajeshkumar

Related to நவம்பர், நள்ளிரவு... நர்மதா!

Related ebooks

Related categories

Reviews for நவம்பர், நள்ளிரவு... நர்மதா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நவம்பர், நள்ளிரவு... நர்மதா! - Rajeshkumar

    1

    குழந்தை பெற சரியான வயது 21 முதல் 35 வரை. நேரடி சொந்தங்களில் - திருமணம் செய்வதைத் தவிர்த்தால் பல பரம்பரை நோய்கள் அடுத்த தலைமுறைக்கு வருவதைத் தடுக்கலாம். சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக உறவில் கல்யாணம் செய்வது எவரெஸ்ட் தவறு.

    கற்பகம்...

    ம்...

    எனக்கு டென்ஷனாயிருக்கு...

    எதுக்கு டென்ஷன்...?

    டாக்டரம்மா என்ன சொல்வாங்களோன்னுதான்...

    இதோ பாருங்க...! இதுல டென்ஷன்பட ஒண்ணுமேயில்லை. டாக்டரம்மா எல்லா ரிப்போர்ட்டையும் படிச்சுப் பார்த்துட்டு உண்டா... இல்லையான்னு ரெண்டுல ஒரு பதிலைச் சொல்லப் போறாங்க. அவங்க என்ன பதிலைச் சொன்னாலும் சரி... எனக்கு சந்தோஷமே...!

    என்ன கற்பகம் இப்படிச் சொல்றே...? உன்னால கர்ப்பம் தரிக்க முடியாது. நீ ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாது’ன்னு டாக்டரம்மா சொன்னா. அது உனக்கு சந்தோஷமான செய்தியா...?

    கற்பகம் தன் கணவன் விஷ்வாவை பார்த்து புன்னகைத்தாள்.

    ம்... சந்தோஷமான செய்திதான்...

    எப்படி சந்தோஷமான செய்தியாகும்...?

    என்னங்க இது...! என்னால் கர்ப்பம் தரிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டா என்ன...? எனக்குத்தான் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கே...?

    என்னது...! குழந்தை இருக்கா...?

    ம்... அந்தக்குழந்தைக்கு இப்போ வயசு என்ன தெரியுமா...? முப்பத்திரண்டு... பேரு... விஷ்வா!

    கற்பகத்தையே இமைக்காமல் பார்த்தான் விஷ்வா… அவள் அவனுடைய தோளில் செல்லமாய் குத்தினாள்.

    என்ன... அப்படிப் பார்க்கறீங்க...?

    கற்பகம்! உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே இந்த பாலிஸிதான்...

    என்ன பாலிஸி...?

    எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாய் எடுத்துக்காமே ஈஸியா எடுத்துக்கறதுதான்...! பட், என்னால அப்படி இருக்க முடியலை. டாக்டரம்மா வாயிலிருந்து என்ன பதில் வரப்போகுதுன்னே அடிவயிறு கலங்கிட்டிருக்கு... ஹார்ட்டைத் தொட்டுப் பாரு... அது ரேஸ் குதிரையாட்டம் ஓடிக்கிட்டு இருக்கு...

    கற்பகம் சிரித்தாள்.

    இதோ பாருங்க... எதுவுமே நம்ம கையில் இல்லை. நீங்க நினைச்சா தும்மல் போட்டுட முடியாது. அது எப்போ வருதோ அப்பத்தான் நீங்க தும்ம முடியும்...! நாம ரெண்டு பேருமே ஒரு குழந்தைக்காக அஞ்சு வருஷமா முயற்சி பண்ணினோம். முடியலை. போன வாரம் இந்த டாக்டரம்மாகிட்டே வந்தோம். டெஸ்ட்டெல்லாம் எடுத்துக்கிட்டோம். இன்னிக்கு ரிசல்ட் டே. டாக்டர் சொல்லப் போகிற பதில் எதுவாக இருந்தாலும் அதை நாம ஏத்துக்கத்தான் வேணும். என்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டா சந்தோஷம்தான். அப்படி டாக்டர் சொல்லாத பட்சத்தில் நாம் இடிஞ்சு போயிடவும் கூடாது. ‘நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி’ன்னு பாடிகிட்டு - வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்...!

    கற்பகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே –

    டாக்டரின் அறையிலிருந்து வெளிப்பட்ட அந்த நர்ஸ் மெல்ல குரல் கொடுத்தாள். மிஸஸ் கற்பகம்.

    இருவரும் எழுந்து போனார்கள். ஏ.ஸி.யின் குளிரில் உறைந்து போயிருந்த டாக்டரம்மாள் மனோரஞ்சிதத்தின் அறைக்குள் நுழைந்தார்கள். ஐம்பது வயது மனோரஞ்சிதம் சுழல் நாற்காலியில் சாய்ந்து கையில் ஒரு ஃபைலை வைத்து இருந்தாள். உயர்த்திப்போட்ட நரைக் கொண்டையும் அணிந்து இருந்த வெள்ளை நிற கோட்டும் ஒரு டாக்டர்க்குரிய ‘கெட்-அப்’பை உயர்த்திக் காட்டியது.

    வணக்கம்... டாக்டர்...

    உட்கார்ங்க...

    மனோரஞ்சிதம் தனக்கு எதிரே இருந்த நாற்காலிகளைக் காட்டி அவர்கள் உட்கார்ந்ததும் கற்பகத்திடம் கேட்டாள்.

    வீட்லயிருந்து பெரியவங்க யாராவது வந்து இருக்காங்களா?

    இல்ல டாக்டர்...

    ஓ.கே...! நீங்க ரெண்டு பேருமே படிச்சவங்க. உங்ககிட்டே ஒளிவு மறைவு இல்லாமே பேசலாம்ன்னு நினைக்கிறேன்...

    பை... ஆல்... மீன்ஸ் டாக்டர்...

    டாக்டர் மனோரஞ்சிதம் ஃபைலை பார்த்துக் கொண்டே பேசினாள். நீங்க ரெண்டு பேருமே நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கீங்க. எடுத்த எல்லா டெஸ்ட்டும் நார்மலாயிருக்கு... இருந்தாலும் கற்பகத்துகிட்டே ஒரு சின்ன குறைபாடு இருக்கிறதால...

    இருவரும் டாக்டரையே பார்க்க, அவர் தொடர்ந்தார். கர்ப்பம் தரிக்கும் போது ஒரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கு...

    எ... எ... என்ன பிரச்சனை விஷ்வா தவிப்போடு கேட்க, மனோரஞ்சிதம் டாக்டர்...? சொன்னார்.

    கற்பகத்தோட கர்ப்பப்பை ரொம்பவும் வீக்காயிருக்கு. ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து பெறக்கூடிய வகையில் கர்ப்பப்பை வலுவாக இல்லை...

    டா... டாக்டர்...

    இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான்...! இருந்தாலும் இந்தப் பிரச்சனையை நீங்க ஃபேஸ் பண்ணித்தான் தீரணும்...

    கற்பகம் டாக்டரிடம் நிமிர்ந்தாள். டாக்டர் மருந்து, மாத்திரைகள் மூலமாய் கர்ப்பப்பையை வலுப்படுத்திக் கொள்ள முடியுமா?

    அதுக்கு இனி வாய்ப்பு இல்லை... இது ஜீன் சம்பந்தப்பட்ட பிரச்சனை... உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சுன்னு சொன்னேம்மா...?

    அஞ்சு வருஷம்...

    அதாவது... உன்னோட இருபதாவது வயசுல கல்யாணம் நடந்தது. இல்லையா...?

    ஆமா...!

    இப்போ உனக்கு இருபத்தஞ்சு வயசு... இந்த அஞ்சு வருஷம் முயற்சி பண்ணிப் பார்த்துட்டு இப்பத்தான் ஒரு டாக்டரைப் பார்க்கணும் என்கிற எண்ணம் வந்து இருக்கு... இல்லையா...?

    அப்படியில்லை டாக்டர்... கல்யாணமான முதல் மூணு வருஷம் குழந்தை வேண்டாம் என்கிற எண்ணத்தில் நானும் என்னோட கணவரும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினோம். மூணு வருஷத்துக்கப்புறம்தான் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டோம். பட், இந்த ரெண்டு வருஷ காலமாய் எங்க ஆசை நிறைவேறலை. என்ன பிரச்சினைன்னு தெரியாமத்தான் உங்ககிட்டே வந்தோம்...

    இப்போ பிரச்சனை என்னான்னு தெரிஞ்சு போச்சு. இதுக்கு ஏற்ற மாதிரி நாம செயல்பட வேண்டியிருக்கும்...

    டாக்டர்...! எங்களுக்கு குழந்தை கிடைக்க என்னதான் வழி...?

    "ஒரே ஒரு வழிதான்

    Enjoying the preview?
    Page 1 of 1