Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorry Wrong Number
Sorry Wrong Number
Sorry Wrong Number
Ebook112 pages37 minutes

Sorry Wrong Number

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Sorry Wrong Number

Read more from Rajeshkumar

Related to Sorry Wrong Number

Related ebooks

Related categories

Reviews for Sorry Wrong Number

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorry Wrong Number - Rajeshkumar

    32

    1

    அந்த அழுக்கான அரசாங்க ஆஸ்பத்திரி பதினோரு மணி இருட்டில் கரைந்து போயிருக்க - இரண்டாவது மாடியில் மட்டும் சில ஜன்னல்கள் வெளிச்சம் சதுரங்களாய் தெரிந்தன. நைட் ட்யூட்டிக்கு வந்திருந்த நர்ஸ்கள் ஆங்காங்கே கண்ணில்பட்டார்கள். உடனே மறைந்தார்கள். அவ்வப்போது ஏதாவது ஒரு வார்டில் இருந்து இருமல் சத்தம். மற்றபடி நிசப்தம். ஆஸ்பத்திரிக்கு வெளியே ஒரு டாக்ஸக்காரனும் குதிரைக்காரனும் சாவுகிராக்கிகளுக்காக காத்திருந்தார்கள்.

    டாக்டர் கிருஷ்ணமணி டாய்லெட்டுக்குள் - அவசர அவசரமாய் சிகரெட்டைப் புகைத்துவிட்டு வெளியே வர - வராந்தாவில் நர்ஸ் சியாமளா எதிர்ப்பட்டாள்.

    டாக்டர்...!

    "என்னம்மா...?

    உங்களைப் பார்க்கிறதுக்காக... அஸிஸ்டெண்ட் கமிஷனர் வந்து உங்க ரூம்ல வெயிட் பண்ணிட்டிருக்கார்...

    வந்து எவ்வளவு நேரமாச்சு...?

    பத்து நிமிஷம் இருக்கும் டாக்டர்...

    கிருஷ்ணமணி தன் முன்பக்க வழுக்கையை - இடது கை ஆட்காட்டி விரலால் கீறிக்கொண்டே யோசனையாய் நடந்தார்.

    ‘ஏ.ஸி. இப்போ... எதுக்காக வந்திருப்பார்...?’

    ‘அதுவும் இந்த நேரத்துக்கு...?’ வேகமாய் நடைபோட்டு அந்த நீளமான கடப்பைக்கல் வராந்தாவை விழுங்கி - எதிர்ப்பட்ட தன்னுடைய அறைக்குள் நுழைந்தார்.

    அஸிஸ்டெண்ட் கமிஷனர் ராபர்ட் தன் பெரிய மீசையை நெருடிக் கொண்டு காத்திருந்தார்.

    வாங்க... மிஸ்டர் ராபர்ட்...

    ராபர்ட் கலைந்தார். மீசைக்குக் கீழே புன்னகைத்தார்.

    ஸாரி ஃபார் மிட்நைட் டிஸ்டர்பன்ஸ்...

    உங்களுக்கும் எனக்கும் நேரம் காலம் ஏது...? கிருஷ்ணமணி தன் நாற்காலிக்குப் போய் - சாய்ந்து கொண்டு கேட்டார்.

    எனிதிங்க்... இம்பார்டண்ட்...

    எஸ்... வெரி... வெரி... இம்பார்டண்ட்...

    ம்... சொல்லுங்க...

    ஹெல்த் மினிஸ்டர் ராஜலிங்கம் கொஞ்ச நேரத்துக்கு முந்தி தன்னோட பி.ஏவை ஸ்டேஷனுக்கு அனுப்பியிருந்தார். எதிர்க்கட்சித் தொண்டன் ஒருத்தன் பேரு... முத்துமணியன், விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கறதாவும் டெட்பாடி இப்போ உங்க மார்ச்சுவரில் இருக்கறதாவும் சொன்னார்.

    ஆமா... டெட்பாடி இப்போ... மார்ச்சுவரில்தான் இருக்கு.

    போஸ்ட்மார்ட்டம் எப்போ பண்ண போறீங்க...?

    நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு...

    போஸ்ட்மார்ட்டம் பண்ணப் போறது யாரு...?

    டாக்டர் ஜோதிபாண்டியன்...

    அவர் வேண்டாம்... போஸ்ட்மார்ட்டத்தை நீங்களே பண்ணி... ரிப்போர்ட் கொடுங்க...

    ஹெச்.ஓ... ஒத்துக்க மாட்டாரே. ஷெட்யூல்படி டாக்டர் ஜோதிபாண்டியன் பி.எம்மை அட்டெண்ட் பண்ணனும்...

    ஹெச்.ஒவை ஒத்துக்க வைக்க வேண்டியது மந்திரியோட பி.ஏ வேலை. போஸ்ட்மார்ட்டத்தை முடிச்சு ரிப்போர்ட் தரவேண்டியது உங்க வேலை... ஆனா ரிப்போர்ட் இப்படித்தான் இருக்கணும்... - சொன்ன அஸிஸ்டெண்ட் கமிஷனர் கையில் வைத்திருந்த காகிதத்தை நீட்ட, டாக்டர் வாங்கிப் பார்த்தார். முத்துமணியன் மூட்டைப்பூச்சி மருந்து சாப்பிட்டு - கடன்தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது போல் இருக்க வேண்டும் என்று சொன்னது அந்த காகிதம். டாக்டர் கிருஷ்ணமணி நெற்றியைக் கீறினார்.

    இப்படி ரிப்போர்ட் தர்றது கஷ்டமாச்சே...?

    "ஏன்...?’

    முத்துமணியோட ரத்தத்தில் கலந்து உயிரைப் பறிச்சிருக்கறது ஹைலி பாய்சண்ட் ஒன். அந்த பாய்ஸனின் ஜாதியைக் கண்டுபிடிக்க - பாடியோட உள் உறுப்புக்களை அறுத்து ஃபாரன்சிக் லாப்புக்கு அனுப்பணும்... அப்படி அனுப்பும் போது அவங்க தர்ற ரிப்போர்ட் வேற மாதிரி இருக்குமே...

    ஏ.ஸி. சிரித்தார்.

    அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க டாக்டர்... உங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுமோ... அதையேதான் ஃபாரன்சிக் லாப் ரிசல்டும் சொல்லும்...

    கிருஷ்ணமணி தன் பின்னந்தலையைக் கீறிக் கொண்டு அரை நிமிஷ நேரம் மெளனிக்க - ஏஸி கேட்டார்.

    என்ன டாக்டர்... யோசிக்கறீங்க...?

    எனக்கு பயமாயிருக்கு... வேற எந்த டாக்டரையாவது அப்ரோச் பண்ணுங்களேன்...

    நீங்க இருக்கும் போது இன்னொரு டாக்டரா...? மந்திரி கேட்கிறபடி நீங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைக் கொடுத்தா உங்க கைக்கு ஒரு லட்சம் கிடைக்கும்... இதுல பயப்பட என்ன இருக்கு...?

    எதிர்க்கட்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா...? ஒரு கொலையை தற்கொலைன்னு சொன்னா... கொந்தளிச்சுப் போயிடுவாங்களே...?

    அதைப் பத்தின கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம் டாக்டர்... எதிர்க்கட்சிக்காரங்களை அடக்கற வித்தை போலீஸ்காரங்களுக்கு தெரியும். உங்க பி.எம். ரிப்போர்ட் ஸ்ட்ராங்கா அதை தற்கொலைன்னு சொன்னா போதும்...

    அப்படீன்னா... உடனடியா ஒரு காரியம் பண்ணனும்.

    என்ன...?

    மூட்டைப்பூச்சி மருந்துக் கரைசலை டெட்பாடியின் வயித்துக்குள்ளே செலுத்தணும்...

    இப்பவே... செலுத்திட்டாப் போச்சு...

    மூட்டைப்பூச்சி மருந்து வேணுமே...

    "வெளியே கான்ஸ்டபிள் இருக்கார்... வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா டாக்டர்...?’

    ம்... யார்க்கும் தெரியாமே...

    ஏ.ஸி. எழுந்து வெளியே போன வினாடி - டாக்டரின் மேசை மேலிருந்த டெலிபோன் கூப்பிட்டது. கிருஷ்ணமணி ரிஸீவரை எடுத்தார்.

    ஹலோ... ஜி.ஹெச்... ஹியர்...

    ஒரு ஆண் குரல் கேட்டது.

    "டாக்டர் பாமா இல்லையா...?’

    டாக்டர் பாமா எட்டு மணிக்கே ட்யூட்டி முடிஞ்சு போயிட்டாங்களே...? நீங்க யார் பேசறது...?

    நான் பாமாவோட ஹஸ்பண்ட் கேசவ்.

    மிஸ்டர் கேசவ் நீங்களா...? நான் டாக்டர் கிருஷ்ணமணி பேசறேன்...

    ஓ... நீங்களா... டாக்டர்... எப்படியிருக்கீங்க...? எங்க கல்யாணத்தன்னிக்கு உங்களைப் பார்த்தது... அப்புறம் உங்களைப் பார்க்கவே முடியலை...

    கிருஷ்ணமணி சிரித்தார்.

    மேரீட் லைப் எப்படியிருக்கு...?

    ஃபைன்... வெரி ஃபைன்...! பாமாவுக்கு ராத்திரி ட்யூட்டி இருக்கும் போது மட்டும் தான்... கொஞ்சம் கஷ்டம்... மறுமுனையில் சொல்லிச் சிரித்த கேசவ் கேட்டான்.

    பாமா... எத்தனை மணிக்கு ட்யூட்டி முடிஞ்சு கிளம்பினதா சொன்னீங்க டாக்டர்...?

    எட்டு மணிக்கு...

    இப்ப மணி 11.15 இன்னும் வீடு வந்து சேரலையே...?

    ஏதாவது ப்ரைவேட் ஹாஸ்பிடலில் கேஸ்களை அட்டெண்ட் பண்ண போய் லேட்டாயிருக்கலாம்...

    "அப்படி லேட்டானா... போன்

    Enjoying the preview?
    Page 1 of 1