Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இன்றே காதலி!
இன்றே காதலி!
இன்றே காதலி!
Ebook85 pages26 minutes

இன்றே காதலி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டெலிபோன் அடித்தது.
 குளிர்க்கு கதகதப்பாய் போர்வைக்குள் இருந்த கபிலா தூக்கம் கலைந்த எரிச்சலோடு போர்வையை கொஞ்சமாய் விலக்கி தன் தந்த நிற வலதுகையை மட்டும் நீட்டி - கத்திக் கொண்டிருந்த ரிஸீவரை எடுத்தாள்.
 "ஹலோ..."
 "குட்மார்னிங் கபிலா... நான் ஈஸ்வர்..."
 "ஓ! ஈஸ்வரா...? வெரி குட்மார்னிங்...! என்ன இவ்வளவு காலையில் போன்...?"
 "இன்னிக்கு எடுக்கப் போகிற 'ஸேஃப்டி குக்கர் விளம்பரத்துல நீதான் மாடலிங்..."
 "ஏன்? நீரஜாவுக்கு என்னாச்சு...?"
 "கம்பெனிக்காரங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க! உன்னை மாடலிங்கா போடணும்ன்னு சொல்லிட்டாங்க..."
 "எத்தனை மணிக்கு சூட்டிங்...?"
 "பத்து மணிக்கு..."
 "எங்கே...?"
 "வேளச்சேரி விஜயா பங்களா..."
 "அட்வர்டைஸ்மெண்ட் எத்தனை சார்ட்...?"
 "அஞ்சு..."
 "என்னோட ரேட் சொல்லிட்டீங்களா...?"சொல்லியாச்சு... சூட்டிங் முடிஞ்சதும் செக் குடுத்துடுவாங்க..."
 "லேட் பண்ணிடாதீங்க... ஈஸ்வர்... சாயந்தரம் வேற இடத்துல எனக்கு ஷெட்யூல் இருக்கு..."
 "எங்கே...?"
 "சக்ரா எக்யூப்மெண்ட்ஸ்"
 "இன்னிக்கு... உன் காட்லதான் மழை..."
 "அந்த மழைக்கு காரணம் நீங்கதான்... ஒன்பது மணிக்கெல்லாம் காரை அனுப்பிடுங்க... வந்துடறேன்..."
 "அப்புறம்... கபிலா... ஒரு விஷயம்..."
 "சொல்லுங்க..."
 "எடுக்கப்போறது குக்கர் விளம்பரம்ன்னாலும்... ட்ரஸ், விஷயத்துல நீ கொஞ்சம் தாராளமா இருக்கணும்..."
 "இருந்துட்டா போவுது..."
 "என்னோட தாராளத்துக்கு தகுந்த மாதிரி செக்ல அமௌண்ட் இருந்தா போதும்..." சிரித்துக் கொண்டே ரிஸீவரை சாத்திய கபிலா போர்வையை உதறிவிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.
 தலைக்கு மேல் கைகளை உயர்த்தி - அழகாய் சோம்பல் முறித்த கபிலாவுக்கு இருபத்தியொரு வயது. பாலால் செய்த மாதிரியான உடம்பில் தேவைப்பட்ட இடத்தில் சதை திரட்சிகள்.
 கபிலா, சுவரில் மாட்டியிருந்த வால் க்ளாக்கை ஏறிட்டாள். மணி 6.45.
 "பொன்னம்மா..."
 குரல் கொடுக்க –
 "இதோ வந்துட்டேம்மா..." குரலைத் தொடர்ந்து அந்த வேலைக்காரப் பெண் எட்டிப் பார்த்தாள்.
 "காப்பி ரெடியா...?"
 "இதோ... ஆச்சம்மா..."இன்னிக்கு சூட்டிங் இருக்கு. போகணும். எட்டு மணிக்குள்ளே டிஃபன் ரெடியாயிடுமா...?"
 "ஆயிடும்மா..."
 "லேட் பண்ணிடாதே... போய் மொதல்ல காப்பி கொண்டா..."
 "சரிங்கம்மா..."
 வேலைக்காரியின் தலை மறைந்ததும் கபிலா கட்டிலை விட்டு இறங்கி - வாயை கொப்பளிப்பதற்காக வாஷ் பேசினை நோக்கிப் போனாள்.
 தலை லேசாய் கழல்வது போன்ற உணர்ச்சி. அடிவயிற்றில் உற்பத்தியான ஒரு அவஸ்தை சிறு குடலில் உலா வந்து உணவுப் பாதையைப் பிடித்துக் கொண்டு தொண்டைக்கு ஏறியது.
 "உ... உவ்வே..."
 இரண்டு நிமிஷ நேர வாந்தியில் வயிற்றை சுத்தம் செய்துவிட்டு - மறுபடியும் கட்டிலுக்கு வந்து சாய்ந்தாள். வேலைக்கார பொன்னம்மா காப்பி டம்ளரோடு உள்ளே வந்தாள்.
 "என்னம்மா... வாந்தி எடுத்தீங்க போலிருக்கு?"
 "ஆமா..."
 "ரெண்டு நாளைக்கு முன்னாடி சாப்பிட்ட மாத்திரைக்கு 'அது' அசைஞ்சு கொடுக்கலை போலிருக்கு..."
 "ஆமா... இப்ப... என்ன பண்றது...?"
 "என்ன பண்றது...? மறுபடியும், ஆஸ்பத்திரிக்கு போய் கலைச்சுக்க வேண்டியதுதான்... கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துட்டா இந்தப் பிரச்சனையெல்லாம் வருமா...?"
 "சரி... சரி... காப்பியை வெச்சுட்டு போ... உன்னை பேசவிட்டா போதும் கதாகாலட்சேபமே பண்ணிடுவே..."
 பொன்னம்மா ஏதோ முணுமுணுத்துக் கொண்டு போனதும் - டெலிபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக் கொண்டாள் கபிலா. டயலில் எண்களைத் தட்ட மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223507246
இன்றே காதலி!

Read more from Rajeshkumar

Related to இன்றே காதலி!

Related ebooks

Related categories

Reviews for இன்றே காதலி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இன்றே காதலி! - Rajeshkumar

    1

    பரிதி ஃபைல்களில் கையெழுத்திட்டுவிட்டு - சோம்பல் முறிப்பதற்காக கைகளை உயர்த்தியபோது - மேஜையின் மேலிருந்த ஊதா வண்ண டெலிபோன் சிணுங்கியது.

    ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    ஆபீஸ் ரிசப்ஷனிலிருந்து ஜெயந்தி பேசினாள்.

    குட்மார்னிங் ஸார்...

    சொல்லு...

    உங்களைப் பார்க்க உங்க ஃபேமிலி டாக்டர் ராவ் வந்திருக்கார் ஸார்...

    எப்போ வந்தார்?

    இப்பத்தான் ஸார்...

    உள்ளே அனுப்பு... டாக்டர். கிட்டே பேசிட்டிருக்கும் போது வெளியிலிருந்து எனக்கு ஏதாவது போன் கால் வந்தா நோட் பண்ணிக்க. எனக்கு எல்லன் கொடுத்துடாதே...

    எஸ்... ஸார்...

    டாக்டரை உள்ளே அனுப்பு. அப்படியே, கேடரிங் செக்சனுக்கு பேசி என்னோட ரூமுக்கு ரெண்டு காஃபி கொண்டு வர சொல்லிடு

    ரிஸீவரை வைத்தான் பரிதி. இருபத்தேழு வயது. சராசரி உயரம். மாநிறத்துக்கும் ஒருபடி தூக்கலான நிறம். ஒரு கம்பெனியின் ஜி.எம்.முக்கே உரித்த தோரணை. இப்போதைக்கு பரிதியைப் பற்றி இவ்வளவு போதும். பின்னால் வரும் பக்கங்களில் அவனைப் பற்றி நிறையவே தெரிந்து கொள்வீர்கள்.

    டொக்... டொக்...

    ப்ளீஸ்... கம்... இன்...

    கதவைத் தள்ளிக் கொண்டு - டாக்டர் ராவ் உள்ளே வந்தார். ஐம்பது வயது ராவ் பூர்ண வழுக்கையோடு ஷஃபாரியில் இருந்தார்.

    குட் மார்னிங் டாக்டர்...

    வெரி குட்மார்னிங் பரிதி

    பீ... ஸீட்டட்... டாக்டர்...

    டாக்டர் ராவ் உட்கார்ந்து கொண்டே சொன்னார்.

    ஸாரி... உன்னோட ஆபீஸ் வேலையில் நீ பிஸியா இருக்கிற இந்த நேரத்துல உன்னை தொந்தரவு படுத்தறேன்...

    நோ... ப்ராப்ளம் டாக்டர்...

    உன்கிட்ட. ஒரு பத்து நிமிஷம் பேசணும்... உனக்கு ஏதும் அவசர வேலை இல்லையே...?

    பரிதி புன்னகைத்தான். பத்து நிமிஷம் இல்லை. நீங்க எவ்வளவு நிமிஷம் வேணுமின்னாலும் பேசலாம். எனிதிங்க் இம்பார்ட்மென்ட் டாக்டர்...?

    ‘எஸ்...

    என்ன விஷயம்...?

    உன் கல்யாணத்தைப் பத்தி பேசணும்.

    அம்மா... அனுப்பி வெச்சாங்களா டாக்டர்?

    இல்லை... நானாத்தான் வந்தேன்... வாட் ஈஸ் ராங் வித் யூ? ஏன் கல்யாணப் பேச்சை எடுத்தா ஒதுங்கி ஒதுங்கிப் போறியாம்...?

    எனக்கு. கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை டாக்டர்.

    அதுதான் ஏன்னு கேட்கிறேன்... நீ யாரையாவது லவ் பண்ணி அதுல கசப்பான அனுபவம் ஏதாவது கிடைச்சதா?

    அப்படியெல்லாம் இல்லை டாக்டர்.

    பின்னே என்னதான் காரணம்... நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லி தட்டிக் கழிக்கறதுனால உங்கம்மாவுக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா...?

    டாக்டர்... வந்து...

    இதோ பார்... பரிதி... நீ எந்த காரணத்தையாவது சொல்லி - கல்யாணத்தை தள்ளிப் போடறது கொஞ்சம் கூட சரியில்லை...

    சரி டாக்டர்... நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா ரெண்டு வருஷம் போகட்டும்...

    எதுக்கு ரெண்டு வருஷம்...?

    பிசினஸை கொஞ்சம் டெவலப் பண்ண வேண்டியிருக்கு.

    கல்யாணத்தை பண்ணிகிட்டு பிசினஸை டெவலப் பண்ணு. யார் வேண்டாம்ன்னு சொன்னது...?

    அது – சாத்தியமில்லை டாக்டர்... கல்யாணம் முடிந்ததும் ஹனிமூன் ட்ரிப் அடிக்க வேண்டியிருக்கும்... புதுப் பெண்டாட்டியோட தேவைகளை அலட்சியம் பண்ண முடியாது... ஆபீஸ் வேலைகளை தள்ளி வெச்சுட்டு அவளை கவனிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும்...

    பரிதி! நீ சொல்றது எனக்கு சரியா படலை. ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னாலும் அவனுடைய மனைவி இருக்கிறாள் என்பது - பொதுவா சொல்லப்படுகிற வாக்கியம்...

    டாக்டர்...!

    பரிதி... கல்யாணம்ங்கிறது பண்ணிக்கிற நபர்க்கு மட்டும் மகிழ்ச்சியைத் தர்றதில்லை... அவனை பெத்தவங்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்... உன்னோட கல்யாணத்தை பார்க்கணும்ன்னு உங்கம்மா எவ்வளவு ஆசைப்பட்டுகிட்டு இருக்காங்க தெரியுமா...? உங்கப்பா உயிரோடு இருந்திருந்தா இத்தனை நாள் உன்னை விட்டு வெச்சிருக்கமாட்டார். எப்பவோ உன்னோட கல்யாணத்தை முடிச்சிருப்பார்...

    டாக்டர்! அம்மாவை ஒரு ரெண்டு வருஷம் பொறுத்துக்கச் சொல்லுங்க...

    ஸாரி பரிதி... உன்னோட அம்மா ரெண்டு வருஷம் வரைக்கும் உயிரோடு இருக்கப் போறதில்லை...

    பரிதி

    Enjoying the preview?
    Page 1 of 1