Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மரணத்தை வரைந்தவன்
மரணத்தை வரைந்தவன்
மரணத்தை வரைந்தவன்
Ebook180 pages44 minutes

மரணத்தை வரைந்தவன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையின் கிழக்கு  கடற்கரைச்சாலை அந்த முன்னிரவு நேரத்தில் ஒரு நீளமான கறுப்பு ரிப்பன் மாதிரி தெரிய, சாலையை ஒட்டியிருந்த சவுக்குமரத்தோப்புக்குள் அந்த நிழல் உருவங்கள் உட்கார்ந்த நிலையில் அசைந்தன. கைகளில் பீர்பாட்டில்கள் மின்னியது. மெலிதாய் - தீர்க்கமாய் ஹிந்தியில் பேசப்படும் வார்த்தைகள் காற்றில் மிதந்தன.
 "விகாஷ்..! இந்திய உளவுத்துறை நம்மை மோப்பம் பிடித்துவிட்டது. 'தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்திய நகரங்களுக்குள் புகுந்து விட்டார்கள்.' என்கிற செய்தியை எல்லா நியூஸ் சேனல்களும் ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றன. நீ பார்த்தாயா?"
 "பார்க்காமல் இருப்பேனா சாஜன்..? பாண்டி பஜாரில் பட்டாணிக்கடலை சாப்பிட்டுக் கொண்டே பிளாட்பாரத்தில் நின்றபடி ஒரு டி.வி. ஷோரூமில் பார்த்தேன்... செய்தி வாசித்த அந்தப் பெண் ரொம்பவும் அழகாய் இருந்தாள். அவளுடைய கண்களையும் உதடுகளையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது."
 சவுக்குத் தோப்பின் இருட்டில் இன்னொரு குரல் சிரித்தது. "விகாஷ்! அவளை உனக்குப் பிடித்து இருந்தால் சொல். ஒரு கெட்ட நாள் பார்த்து கடத்திக் கொண்டு வந்துவிடலாம்... பக்கத்திலேயே பார்த்து ரசிக்கலாம்."
 "வேண்டாம் போபட்...!  நாம் இந்த சென்னைக்கு வந்தது பெண்ணைக் கடத்த அல்ல. மகத்தான காரியங்களைச் செய்வதற்கு. நம் மூன்று பேர்களில் யாரும் எந்தப் பெண்ணையும் பார்த்து சபலப்பட்டுவிடக்கூடாது. சென்ற வருடம் மும்பையில் நாம் நடத்திக் காட்டிய கோரக் காட்சிகளை இந்திய மக்களில் யாரும் மறந்துஇருக்கமாட்டார்கள். அந்தக் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் சென்னையிலும் நாம் நடத்திக் காட்ட வேண்டும். அதற்காகத்தான் நாம் வந்து இருக்கிறோம். நாம் செய்யப் போவது யுத்தம்! காதல் அல்ல..." ஆத்திரம் பொங்கப் பேசிய விகாஷ்  தன் கையில் இருந்த காலி பாட்டிலை வீசிவிட்டு அட்டைப் பெட்டியிலிருந்து ஒரு புதிய பீர்பாட்டிலை எடுத்துக் கொண்டான். பேச்சைத் தொடர்ந்தான்.
 "மும்பையில் நடந்த அந்த குண்டு வெடிப்புகளையும் அதன் விளைவாய் உருவான கோரக் காட்சிகளையும் இந்தியமக்கள் மறந்துவிட்டு இப்போது சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பி சந்தோஷமாக நாட்களைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சந்தோஷம் அவர்களுக்கு இருக்கக்கூடாது. சென்ற வருடம் மும்பை சிவந்தது போல் இந்த வருடம் சென்னை சிவக்க வேண்டும். அடுத்த வாரம் இந்நேரம் சென்னையின் பல பகுதிகள் மயான பூமியாக மாறியிருக்க வேண்டும். இந்தியா திகைத்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க வேண்டும். அதைப் பார்த்து 24 மணி நேரமும் நாம் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும்."
 விகாஷின் செல்போன் சிணுங்கியது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு தன் சகாக்களை ஏறிட்டான்.
 "மேலிடம்."
 "பேசு..."
 விகாஷ் செல்போனை காதுக்கு ஒற்றினான். பவ்யமாகக் குரல் கொடுத்தான். பாஸ்வேர்டாக அந்த வார்த்தையை உபயோகித்தான்."
 "I HATE INDIA" 
 "ME TOO" மறுமுனை குரல் கொடுத்தது.
 "நான் விகாஷ்"
 "பேசலாமா?"பேசலாம்... நான், சாஜன், போபட் மூன்று பேரும் இப்போது ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு ஒதுக்குப் புறமான சவுக்குத் தோப்புக்குள் இருக்கிறோம்."
 "அங்கே நிலைமை எப்படி...?"
 "மேகங்கள் இல்லாத வானம் போல் நமக்குச் சாதகமாய் இருக்கிறது. ஆனால் நம் ஊடுருவலை இந்திய உளவுத்துறை மோப்பம் பிடித்துவிட்டது. இந்திய அரசு பயந்து போய் எல்லா டி.வி. சானல்களிலும் நம் ஊடுருவலை நினைத்துப் புலம்ப ஆரம்பித்துவிட்டது. நம்முடைய இயக்கத்தை வேரோடு அழிக்கப் போகிறார்களாம். வயதான உள்துறை மந்திரி வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்."
 "விகாஷ்..! யாரையும் 'அண்டர் எஸ்டிமேட்' செய்ய வேண்டாம். சென்னை போலீஸ் புத்திசாலிகள்; திறமையானவர்கள். பூனைகளாய் இருப்பார்கள். பாயும் போது புலிகளாய் மாறியிருப்பார்கள். நாம் எச்சரிக்கையோடு இல்லாவிட்டால் போட்ட திட்டமெல்லாம் புஸ்வாணமாகிவிடும்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224533411
மரணத்தை வரைந்தவன்

Read more from Rajeshkumar

Related to மரணத்தை வரைந்தவன்

Related ebooks

Related categories

Reviews for மரணத்தை வரைந்தவன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மரணத்தை வரைந்தவன் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அன்புடன் ராஜேஷ்குமார்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    கோயமுத்தூரிலிருந்து செல்போன் சிணுங்குகிறது!

    அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

    வணக்கம். 2010 - ம் ஆண்டு இனிதாக ஆரம்பித்து உங்களுக்கெல்லாம் இனிப்பான சம்பவங்களாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு இறையருள் உங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கட்டும். விஞ்ஞானம் வேகமாய் வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அதன் மூலம் மக்கள் நன்மைகளைப் பெற்று வந்தாலும் அதனின் இன்னொரு பக்கம் தீமையாக அமைந்துவிடுகிறது. தகவல் தொடர்பிற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட செல்போன்கள் இன்று பிரச்னைக்குரிய கருவியாக மாறிவிட்டது. குறுக்குப் புத்தி கொண்ட மனிதர் ஒருவர் கையில், சில ஆயிரங்களில் வாங்கிவிடக்கூடிய ஒரு செல்போன் இருந்தால் போதும்; அடுத்தவர்களுடைய அந்தரங்கங்களைப் படம் பிடித்து விடுகிறார்கள். அடுத்தவர்களின் அந்தரங்கங்களைப் பார்த்து ரசிப்பதில் ஆர்வம் காட்டினால், அது ஒரு நோயாகவே மாறி விடுகிறது. அதற்கு மனோதத்துவ டாக்டர்கள் பீபிங் டோம் (‘PEEPING TOM’) என்று அழைக்கிறார்கள். பொதுவாக இன்றைக்கு இளைஞர்களுக்கு இடையே போதைப் பொருள் பழக்கம், இன்டர்நெட் க்ரைம், டீன் ஏஜ் கர்ப்பம் போன்றவை அனைத்தும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு சுற்றுப்புறச் சூழல் சீர்கேடும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. மனோதத்துவ நிபுணர் ‘ப்ரீத்திராவ்’ அவர்கள் அண்மையில் தெரிவித்து இருந்த ஒரு கருத்து இது. காற்றில் அதிக மாசு உள்ளது. அதில் ‘லெட்’ எனப்படும் ரசாயனம் மிக அதிகமாகக் கலந்து இருக்கிறது. அது மனிதர்களின் மூளையைத் தாக்கி கோபம், ஆவேசம், எதிர்மறையான சிந்தனை போன்றவைகளில் அக்கறை கொள்ள வைக்கிறது. எதையும் வேகமாய் அனுபவித்து விடவேண்டும் என்ற எண்ணம் இளம் வயதிலேயே தலைதூக்கி விடுகிறது. அது அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க பலர் தயாராக இல்லை. முன்பெல்லாம் ஒருவர் உழைத்து சம்பாதித்து வீடு கார் வாங்க வேண்டுமென்றால் அவர்க்கு 50 வயதாகிவிடும். இப்போது நிலைமை அப்படியே இல்லை. படித்து முடிக்கும் முன்பே வேலை கிடைத்து விடுகிறது. எதிர்பார்க்காத அளவுக்கு சம்பளம் கிடைக்கிறது. வேலைபளுவாலும் அது தொடர்பான போட்டி பொறாமையாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த மன அழுத்தத்திற்குத் தீர்வு காண போதைப் பொருள்களை நாடுகிறார்கள். உடன் பழகும் பெண்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு தவறான வழிக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு பெண்ணை மிரட்டிப் பணிய வைக்க வேண்டுமானால் அவளை ஆபாசப்படம் எடுக்கிறார்கள். இது ஒரு ‘சைபர் க்ரைம்’ குற்றம். நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றம் புரிபவர்களைக் கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கை எடுக்கும் பணியில் சென்னை போலீஸின் ‘சைபர் க்ரைம்’ பிரிவு செயல்பட்டு வருகிறது.

    மனிதனுக்குக் காதலுடன் கூடிய காமம் என்பது அடிப்படைத் தேவை. திருமணம் என்ற பந்தத்திற்கு அது மையப் பொருளாக உள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும்போது அந்தக் காதல் அவர்களுக்குப் புனிதமாகவும் தெய்வீகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால் அதே காதலர்கள் திருமணம் செய்து கொண்டதும் நிலைமை நேர்மாறாக அமைந்து விடுகிறது. இன்று பல வீடுகளில் கணவனும் மனைவியும் எலியும் பூனையுமாக எதிரிகள் போல் சண்டை சச்சரவோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவியைப் பார்த்து ‘நீ எனக்கு சமைத்துப் போடு. குழந்தைகளையும் பார்த்துக் கொள். அதற்குத் தேவையான பணத்தை மாதா மாதம் உனக்குக் கொடுத்துவிடுகிறேன். இதைத் தவிர்த்து உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.’ என்று ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வாழ்வில் எந்த ரசனையும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மா - அப்பா இப்படி இருப்பதைப் பார்த்துக் குழந்தைகளும் வாழ்க்கையில் விரக்தியடைந்து வடிகால்களைத் தேடும் போது மேற்சொன்ன குற்றங்களில் போய் மாட்டிக் கொள்கிறார்கள். இளைஞர்கள் கெட்டுப் போவதற்குப் பெரியவர்கள் முன்னுதாரணமாய் இருக்கக்கூடாது.

    14 வயது முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள்தான் வெகு சீக்கிரத்தில் கெட்டுப் போகிறார்கள். அவர்கள் அப்படி கெட்டுப்போக வீட்டு கட்டமைப்புகளும் ஒரு காரணம். அந்த வயது இளைஞர்களையும், பெண்களையும் பெற்றோர் தங்களுடைய கண்பார்வையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு தனியறை கொடுப்பது, அந்த தனியறையில் டி.வி. மற்றும் இன்டர்நெட் வைத்துக் கொள்ள அனுமதிப்பது, நண்பர்களை அழைத்துவந்து கும்மாளம் போட தனியறையைப் பயன்படுத்துவது போன்றவைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது. பெற்றோர்கள் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்ற பயம் இருந்தாலே போதும் - குழந்தைகள் தவறான வழிக்குப் போகமாட்டார்கள்.

    சரியா சொன்னீங்க ஸார்!

    யார்... க்ராஸ்டாக்ல வர்றது..?

    குருவாயூரப்பன்...ஸார்.

    எந்த குருவாயூரப்பன்..? ஓ... புரியுது... புரியுது...! நாமக்கல் க்ரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியின் டைரக்டராய் இருக்கும் குருவாயூரப்பன் தானே..?

    கரெக்ட்..! ஸார்... நானும் எழுத்தாளர் ஆர்னிகா நாசரும் உங்க வீட்டுக்கு வந்து உங்களோடு உட்கார்ந்து ஒன்றைரை மணி நேரம் பேசிகிட்டு இருந்தது இன்னமும் மனசுக்குள்ள பச்சைப் பசேல்ன்னு இருக்கு... இப்போ மறுபடியும் க்ராஸ்டாக்ல மீட் பண்றோம். அடுத்த மாத க்ரைம் நாவலோட டைட்டிலை மொதல்ல சொல்லிருங்க ஸார்... அப்புறமா கொஞ்ச நேரம் பேசுவோம்...!

    ஓ.கே... குரு...! இதோ அடுத்த மாச க்ரைம் நாவல் டைட்டில்...

    சொல்லுங்க.... சொல்லுங்க....

    கறுப்பு ஞாயிறும்

    சிவப்பு திங்களும்

    டைட்டில் சூப்பர் ஸார்

    நாவலும் சூப்பராய் இருக்கும். நான் கியாரண்டி.

    மிக்க அன்புடன்

    ராஜேஷ்குமார்

    1

    உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.

    - கீதை.

    டி.வி.யின் நியூஸ் சேனலில் அந்த நியூஸ் ரீடர் பெண் தன் உதட்டுச்சாயம் அழிந்து விடக் கூடாது என்கிற கவலையோடு செய்தி படித்துக் கொண்டு இருந்தாள்.

    "மத்திய அரசின் புலனாய்வுத்துறை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை

    Enjoying the preview?
    Page 1 of 1