Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek Irukka Payamen-II
Vivek Irukka Payamen-II
Vivek Irukka Payamen-II
Ebook133 pages47 minutes

Vivek Irukka Payamen-II

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek Irukka Payamen-II

Read more from Rajeshkumar

Related to Vivek Irukka Payamen-II

Related ebooks

Related categories

Reviews for Vivek Irukka Payamen-II

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek Irukka Payamen-II - Rajeshkumar

    விட்டீர்களா...?

    1

    விவேக்கின் முகத்தில் கொத்தாய் ஒரு வியப்பு. புருவங்கள் நெரிபட்டு நெற்றி சுருங்கி இரண்டு வரிகளைக் காட்டியது.

    கொலையுண்டது ஆணா...?

    எஸ்... உடம்பின் சதைக் கூறுகள், எலும்பின் ஸ்ட்ரக்ச்சர் அது ஆணின் பிணம்தான் என்பதை துல்லியமாய் சொல்லி விட்டது...

    கொலையுண்ட நபர்க்கு என்ன வயசு இருக்கும்...?

    திட்டவட்டமா அனுமானிக்க முடியலை... பாடியிலிருந்து கலெக்ட் பண்ணின எலும்புகளை ஃபர்தர் டெஸ்ட்களுக்காக - மெட்ராஸ் ஃபாரென்ஸிக்குக்கு அனுப்பியிருக்கோம்... ரிப்போர்ட் இன்னும் ரெண்டு மூணு நாள்ல கைக்கு கிடைச்சுடும்...

    பாடியைப் பத்தி எனி மோர் டீ டெய்ல்ஸ்...?

    கொலையுண்ட ஆசாமி கத்தியால் குத்தப்பட்டிருக்கணும். அதுவும் சரமாரியாய் ஏழெட்டு குத்துக்கள்.

    எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்க...? பாடியில்தான் சதையையே காணோமே...?

    சில கத்திக் குத்துக்கள் விலா எலும்புகளை பதம் பார்த்திருக்கு... அதே மாதிரி மார்புக் கூட்டையும் கத்திக் குத்து நொறுக்கியிருக்கு...

    சம்பவம் நடந்து சுமார் எவ்வளவு நாட்கள் இருக்கும்?

    "பாடி டீகம்போஸ் ஆகியிருக்கிற ஸ்டேஜை வெச்சுப் பார்க்கும்போது சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாச காலம் ஆகியிருக்கலாம்...'

    விவேக் மேஜையின் மேலிருந்த பேப்பர் வெயிட்டர் கண்ணாடிக் கூண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே ஃபாரன்ஸிக் ஆபீஸரை ஏறிட்டான்.

    கொலையுண்ட இந்த ஆணோட உடம்புல... ரோஸ் நிற சேலை எப்படி வந்ததுன்னு தெரியலையே...?

    தேர் ஈஸ்... ஏ... சான்ஸ்...?

    எப்படி...?

    அந்த மரத்துல ஏற்கனவே சேலை மாட்டியிருந்திருக்கலாம்.

    எனக்கு அப்படி தோணலை...

    வாட்... ஈஸ்... யுவர் அஸ்ஸெம்ப்ஷன் மிஸ்டர் விவேக்...?

    இந்தக் கொலையில் ஒரு பெண்ணுக்கும் பங்கு இருக்கணும். கத்திக் குத்துப்பட்ட நபர் தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிற முயற்சியில் - அந்தப் பெண்ணோடு போராடியிருக்கணும்... அந்த விநாடிகளில் அவளுடைய உடம்பிலிருந்து சேலை உரிந்து வந்திருக்கலாம். ரத்தக் கறை பட்டு கிழிந்து போன அந்தச் சேலையைக் கட்டிக்கப் பிரியப்படாத அந்தப் பெண் சேலையோடு பாடியை வீசிட்டு போயிருக்கலாம்...

    அந்தச் சேலையை அப்ஸர்வ் பண்ணீங்களா விவேக்?

    "ம்... பண்ணினேன். அது டிஷ்யூ டைப் ஸாரி. விலை உயர்ந்த ஜாதி. சேலையோட எழுபது சதவீத பரப்பில்... திட்டு திட்டாய் ரத்தக் கறைகள்... புது சேலை... ஐந்தரை கெஜம்...! பை... த... பை... சேலையில் இருந்த ரத்தக் கறைகளை டைலூட் செய்து பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ப்ளட் க்ரூப் தெரிஞ்சதா

    Enjoying the preview?
    Page 1 of 1