Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeppidiththa Thendral...
Theeppidiththa Thendral...
Theeppidiththa Thendral...
Ebook542 pages3 hours

Theeppidiththa Thendral...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Theeppidiththa Thendral...

Read more from Rajeshkumar

Related to Theeppidiththa Thendral...

Related ebooks

Related categories

Reviews for Theeppidiththa Thendral...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeppidiththa Thendral... - Rajeshkumar

    30

    அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான்.எப்.கென்னடி புகழின் உச்சியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது. 1963 நவம்பர் 22-ந் தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார் கென்னடி. மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடிநின்று, வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார் கென்னடி. திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6-வது மாடியிலிருந்து சீறி வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின் தலையிலும், கழுத்திலும் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்தார். கென்னடியை சுட்டுக் கொன்றவன் யார்? அவனுக்கு நேர்ந்த கதி என்ன? அடுத்த அத்தியாயத்திற்கு வாருங்கள்.

    1

    அம்மா...!

    மகள் இதயாவின் குரல் கேட்டு ஆள் உயரக் கண்ணாடி முன் நின்று நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொண்டிருந்த சிவகாமி திரும்பினாள். நெற்றிக் குங்குமம் கன்னியாகுமரியின் சூர்யோதயமாய் பளீரென்று பார்வைக்குக் கிடைத்தது. ஐம்பதை எட்டிப்பிடிக்கப் போகிற அந்த வயதிலும் உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு கட்டுக் கோப்பினைக் காட்டினாள் சிவகாமி. நரையோடிய கொண்டையில் மல்லிகைச்சரம் உட்கார்ந்து மூச்சை அடைக்கிற மாதிரி மணத்தது. மகளை முறைத்தாள் சிவகாமி.

    என்ன... இதயா...! காலையில ஆறு மணிக்கு டென்னீஸ் கோர்ட்டுக்கு கிளம்பிப்போனே! இப்போ மணி எட்டரை. இனி நீ எப்ப குளிச்சு ரெடியாகி காலேஜுக்குப் புறப்பட்டுப்போறது...?

    டென்னீஸ் மட்டையோடு சிவகாமியைக் கட்டிப் பிடித்து ஸாரி மம்மி...! என்று செல்லம் கொஞ்சிய இதயாவுக்கு இருபத்தியோரு வயது. கம்ப்யூட்டர் சயன்ஸில் மூன்றாம் ஆண்டு மாணவி. சென்ற வருடம் ‘மிஸ் - தேவதை 2000’ அழகுப் போட்டியில் வெற்றி பெற்றதின் விளைவாக எல்லா தமிழ் வார இதழ்களின் அட்டைகளிலும் இடம் பிடித்தவள். சினிமாவில் நடிக்க கூப்பிட்ட படத் தயாரிப்பாளர்களுக்கு இரண்டு கைகளையும் கூப்பி ‘நோ’ சொன்னவள். பிடித்தது பாரதியார் கவிதைகள். பிடிக்காதது பாலிடிக்ஸ்.

    மகளின் பாசப்பிடியைத் தளர்த்திக் கொண்ட சிவகாமி வார்த்தைகளில் லேசாய் கோபத்தைக் கலந்து கொண்டாள். இதோ பார் இதயா... நாளையிலிருந்து நீ டென்னீஸ் கோர்ட்டுக்குப் போகக் கூடாது. காலேஜுக்கு மட்டும் போய்ட்டு வந்தா போதும்.

    ஏன்...?

    போகக்கூடாதுன்னா போகக்கூடாதுதான்...

    எனக்கு காரணம் தெரியணும்... நீ சொல்ற காரணம் சரியாயிருந்தா நானே டென்னீஸுக்கு குட்பை சொல்விடுவேன்...

    உனக்கு கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டேன்...

    என்னது...! எனக்குக் கல்யாணமா...?

    ஆமா...!

    என்னம்மா இது... இன்னும் எனக்கு படிப்பே முடியலே...

    நீ படிச்சு வேலைக்கா போகப்போறே! பத்து கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரி நீ...! வீட்ல சும்மா உட்கார்ந்துட்டிருந்தா.. போரடிக்குமேங்கிறதுக்காக உன்னை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச் சொன்னேன்... உத்யோகம் பார்க்கிறதுக்காக இல்லை...

    எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்.

    ஏன்...?

    ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்...

    நீ சொல்ற அந்த ரெண்டு வருஷத்துக்குள்ளே ஒரு பேரனும் ஒரு பேத்தியும் வந்தாகணும்.

    அம்மா... ஐ... காண்ட்...

    நான் முடிவு பண்ணி ஒரு வாரமாச்சு. கடந்த மூணு நாளா மாப்பிள்ளை வேட்டை. நீ வீட்டுக்குள்ளே வரும்போது ஹால் சோபாவில் ஒருத்தர் டைகட்டிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருந்தாரே பார்த்தியா...?

    ம்... பார்த்தேன். வயசான ஒருத்தர்...

    அவர் பேர் ரங்கபாஷ்யம்... இண்ட்டர் நேஷனல் லெவல்ல ‘மேரேஜ் பீரோ செல்’ என்கிற அமைப்பை நடத்திகிட்டு வர்றார். உன்னோட க்வாலிஃபிகேஷன்ஸையெல்லாம் எழுதிக்கொடுத்து உனக்கேத்த மாப்பிள்ளை வேணும்ன்னு சொன்னேன். முத்து முத்தா ஏழெட்டு வரனைக் கொண்டு வந்துட்டார். எல்லாமே வெளிநாட்டு வரன்கள். அதுல மூணு டாக்டர்ஸ்... மத்தவங்க கம்ப்யூட்டர் டெக்னாலஜியில்...

    அம்மா... குறுக்கிட்டாள் இதயா.

    என்ன...! எவனையாவது லவ் பண்றியா...?

    சேச்சே...! உன் பொண்ணு என்னிக்குமே அந்த தப்பை பண்ணமாட்டா...

    பின்னே என்ன...?

    எனக்கு கல்யாணம் நடந்தா உன்னை விட்டு நான் பிரிய வேண்டியிருக்கும்...

    அதைப் பார்த்தா முடியுமா...! இதோ பார் இதயா. உன் கல்யாணத்துக்கு நான் இவ்வளவு அவசரம் காட்டறதுக்குக் காரணமே உன்னோட ஜாதகம்தான். இந்த இருபத்தியொரு வயசுக்குள்ளே உனக்கு கல்யாணம் நடந்தாத்தான் அது நல்லவிதமா இருக்குமாம்... அதுக்கப்புறம் கல்யாணம் நடந்தா மாங்கல்ய தோஷமாம்...

    அம்மா...! ஒரு ரோபோட் ஹார்ட் ஆப்ரேஷனை பண்ற காலம் இது. ஜாதகத்துக்குப் போய் முக்கியத்துவம் தர்றியே...?

    என்னோட பேச்சை நீ கேட்பியா மாட்டியா?

    நான் என்னிக்கு உன்னோட பேச்சை கேட்காமே இருந்திருக்கேன்மா?

    அப்படீன்னா... கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லு... ரங்கபாஷ்யம் கொண்டு வந்திருக்கிற மாப்பிள்ளைகளோட போட்டோக்களைப்பாரு... செலக்ட் பண்ணு...

    நான் பார்க்கலே... நீ யாரைப் பார்த்து செலக்ட் பண்ணினாலும் எனக்கு ஓ.கே தான்...!

    அதெல்லாம் முடியாது. நீ குளிச்சுட்டு ஹாலுக்கு வா. ஒரு பத்து நிமிஷம் செலவு பண்ணி போட்டோக்களைப் பார்த்து செலக்ட் பண்ணி கொடுத்துட்டு காலேஜுக்குப் போயிடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்...!

    அம்மா...! எனக்கு வரப்போகிறவர் எப்படியிருந்தா என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கும்னு என்னைக் காட்டிலும் உனக்குத்தான் தெரியும்...

    இருந்தாலும்...

    நோ... எனக்கு கணவரா வரப்போகிறவரை நீ தான் செலக்ட் பண்ணணும். போட்டோவைக்கூட என்கிட்ட காட்டவேண்டாம். அவரை மணவறையில்தான் முதல் முதலாக பார்க்கப் போகிறேன்...

    இதயா...! எதுக்கும்... ஒரு தடவை... நீ.

    நோ மம்மி...! இதுல ஒரு த்ரில் இருக்கு. அந்த த்ரில்லை நான் அனுபவிக்கணும்...!

    கல்யாணம்ங்கிறது விளையாட்டில்லை. ஒரு நாளோடு அது முடிஞ்சு போறது இல்லை... காலம் பூராவும் வாழ வேண்டிய வாழ்க்கை... எதுக்கும் போட்டோக்களை ஒரு தடவை பார்த்துரு...!

    வெரி... வெரி ஸாரி மம்மி... உன்னோட செலக்ஷன் என்னிக்குமே வீண் போகாது. நீ யாரைப் பார்த்து செலக்ட் பண்ணினாலும் சரி... எனக்கு டபுள் ஓ.கே. தான்...

    இதயாவின் முகத்தை இரண்டு கைகளாலும் வருடி செல்லமாய் வழித்தாள் சிவகாமி.

    நான் பயந்துட்டேயிருந்தேன் இதயா...

    எதுக்கு பயம்...?

    நீ யாரையாவது காதலிச்சிட்டிருப்பியோ என்கிற பயம்தான்.

    அய்யோ அம்மா...! இப்போ அரசியல் எவ்வளவுக்கு எவ்வளவு கெட்டுக்கிடக்கோ அதைவிட ஒரு படி மேலே போய் காதலும் கெட்டுக் கிடக்குது... உண்மையான காதல் எல்லாம் அகநானூறு புறநானூறு காலத்தோடு முடிஞ்சுது. இன்னிக்கு காதல்ங்கிறது வெறும் வார்த்தை மட்டுமே... புதர் மறைவுகளிலும், கடற்கரை இருட்டிலும், லாட்ஜ் அறையிலும் வளர்கிற உறவுக்குப் பேர் காதல் இல்லே...

    சிவகாமி சந்தோஷ திகைப்போடு மகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - பக்கத்து டீபாயின் மேல் உட்கார்ந்திருந்த டெலிபோன் தன் தொண்டையைத் திறந்தது.

    சிவகாமி எடுத்தாள்.

    ஹலோ...

    ஆன்டி...! நான் திவ்யா பேசறேன்...!

    ஓ... திவ்யாவா...! என்ன விஷயம்?

    இதயா டென்னீஸ் கோர்ட்டிலிருந்து வந்துட்டாளா...?

    இப்பத்தான் வந்தா...! பேசணுமா...?

    ஆமா... ஆன்டி...

    சிவகாமி இதயாவிடம் டெலிபோன் ரிஸீவரை நீட்டினாள். உன்னோட ஃப்ரண்ட் திவ்யா பேசறா...

    இதயா ரிஸீவரை வாங்கி காதுக்குக் கொடுத்தாள். என்ன திவ்யா?

    உன்னோட ஆள் தினேஷ் டெல்லியிலிருந்து திரும்பியாச்சு...

    எ... எப்போ...? சந்தோஷத்தில் இதயாவுக்கு மூச்சு திணறியபோதும் அதைக் காட்டிக்கொள்ளாமல் சிவகாமியை மட்டும் ஒரு ஜாக்கிரதை பார்வை பார்த்துவிட்டு ரிஸீவரை காதோடு இறுக்கமாய் பொத்திக் கொண்டாள்.

    மறுமுனையில் திவ்யா பேச்சைத் தொடர்ந்தாள். தினேஷ் பக்கத்திலதான் இருக்கார். பேசறியா...?

    வேண்டாம்... நான் இப்போ காலேஜுக்குத்தான் வந்துட்டிருக்கேன்... எல்லாத்தையும் அங்கேயே பேசிக்கலாம். போன்ல பேசிட்டிருந்தா லேட்டாயிடும்... இதயா படபடப்பாய் பேசிவிட்டு ரிஸீவரை வைப்பதற்குள் வியர்த்துப் போனாள்.

    சிவகாமி வியப்பாய் மகளைப் பார்த்தாள்.

    என்ன இதயா... அதுக்குள்ள திவ்யாகிட்டே பேசிட்டியா?

    காலேஜ்ல இலக்கிய மன்ற ஆண்டு விழாவாம். அதை எப்படி நடத்தலாம்னு கேட்டா. டெலிபோன்ல அவளை பேசவிட்டா இன்னிக்குப் பூராவும் நான் வீட்ல இருந்துக்க வேண்டியதுதான். காலேஜுக்கு கிளம்ப முடியாது...

    இதயா சொல்லிக் கொண்டே குளிக்கக் கிளம்ப - சிவகாமி கையமர்த்தி குறுக்கிட்டாள்.

    இதயா...!

    என்னம்மா...?

    மாப்பிள்ளைகளோட போட்டோக்களை நீ ஒரு தடவை பார்த்துட்டா எனக்கு சந்தோஷமாயிருக்கும்...! இதயா தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சிவகாமியை போலி கோபத்தோடு பார்த்தாள்.

    அம்மா...! எனக்கு பொருத்தமான ஒரு மாப்பிள்ளையை உன்னைத் தவிர வேற யாராலும் தேர்ந்து எடுக்க முடியாது. நீ யாரைப் பார்த்து தேர்ந்து எடுத்தாலும் சரி... நான் அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழத் தயார்...

    இதயா சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்துவிட, சிவகாமி ஒரு பெரிய புன்னகையோடு ஹாலுக்கு வந்தாள். ‘மேரேஜ் பீரோ செல்’ அமைப்பைச் சேர்ந்த ரங்கபாஷ்யம் பவ்யமாய் எழுந்து நின்றார்.

    உட்காருங்க...! பொண்ணு கூட கொஞ்சம் பேசிட்டிருந்ததுல லேட்டாயிருச்சு...

    அவர் உட்கார்ந்தார். சிவகாமியும் அவருக்கு எதிராக உட்கார்ந்து கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

    மாப்பிள்ளையைப் பார்த்து செலக்ட் பண்ண வேண்டிய பொறுப்பை எம் பொண்ணு எனக்குக் கொடுத்துட்டா. அவ பையனைப் பார்க்கமாட்டாளாம்...

    ரங்கபாஷ்யம் வியந்தார். இந்தக் காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா...?

    எல்லாமே நாம வளர்க்கிற வளர்ப்புலதான் இருக்கு...! ஒவ்வொரு போட்டோவாய்க் காட்டி வரனைப் பத்தி சொல்றீங்களா...?

    அவர் ஒரு பெரிய ஃபைலைப் பிரித்து வைத்துக் கொண்டார். ப்ரௌன் நிற கவர்களிலிருந்து வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் கலர் போட்டோக்கள் வெளிப்பட்டன.

    ரங்கபாஷ்யம் பொறுமையாய் ஒவ்வொரு போட்டோவையும் காட்டி மாப்பிள்ளை பார்க்கும் வேலை, குடும்பப் பின்னணி பற்றி சொல்லி முடித்து இருந்தபோது இதயா கல்லூரி புறப்பட்டுப் போகத் தயாராகி சிவகாமிக்கு முன்பாய் வந்தாள்.

    அம்மா...! நான் காலேஜுக்கு கிளம்பறேன். ஜென் எடுத்துட்டுப் போகட்டுமா... இல்ல மேட்டீஸா...?

    நீ மேட்டீஸ் எடுத்துக்கோ... ‘ஜென்’ல ஹார்ன் சரியா ஒர்க் பண்ணல...

    சரி... வரட்டுமா...?

    நில்லு இதயா...!

    நிக்கமாட்டேன்... நின்னா நீ போட்டோ காட்டி பார்க்கச் சொல்லுவே... நீ யாரைப் பார்த்து செலக்ட் பண்ணினாலும் சரின்னு அரைமணி நேரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த நிமிஷமும் அதையேதான் சொல்றேன்...

    கார் சாவியோடு இதயா புறப்பட்டுப் போய்விட சிவகாமி பெருமையாய் சிரித்தாள்.

    பார்த்தீங்களா ரங்கபாஷ்யம்...?

    இப்படியொரு பெண்ணைப் பெத்ததுக்காக நீங்க தாராளமா கர்வப்பட்டுக் கொள்ளலாம்... உங்க பெண்ணோட நல்ல மனசுக்கு ஏத்த மாதிரியே நல்ல வரன் அமையும். மூணு டாக்டர் வரன், ரெண்டு என்ஜினியர் வரன் போட்டோக்கள், ஜாதகக் குறிப்பு எல்லாமே இருக்கு. பொறுமையா பார்த்து செலக்ட் பண்ணுங்க. ரெண்டு நாள் கழிச்ச வர்றேன். எந்த வரன் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க... ஒரே வாரத்துல பேசி முடிச்சுடலாம்...

    ரங்கபாஷ்யம் எழுந்து கொண்டார். அவர் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களோடு விடைபெற்றுக் கொண்டு போனதும் சிவகாமி அந்த போட்டோக்களோடு எழுந்தாள். ஹால் கதவைச் சாத்தி தாழிட்டுவிட்டு மாடிப்படிகளில் ஏறி அரையிருட்டான மாடி வராந்தாவுக்கு வந்தாள். வராந்தாவின் கடைசி அறைக்கு முன்பாய் நின்றவள் இடுப்பில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து - ஒரு சாவியை தேடிப்பிடித்து அறைக் கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டின் வாய்க்கு கொடுத்து நெம்பினாள். பூட்டு சற்று சிரமமாய் திறந்து கொள்ள கதவைத் தள்ளினாள். அது ‘கர்ர்ர்’ என்ற சத்தத்தோடு பின்வாங்கி உள்ளே போக - சிவகாமி நுழைந்தாள்.

    அறையிருட்டில் நூலாம்படை முகத்தில் மோதியது. சுவர்க்கு இடது பக்கமாய் கையைக் கொண்டு போய் சுவிட்ச்சைத் தேய்க்க அறையின் சீலிங்கில் இருந்த அந்த அழுக்கான நாற்பது வாட்ஸ் பல்ப் சோகையான வெளிச்சத்தைக் கொடுத்தது.

    சிவகாமி கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்ட பின் நூலாம் படைகளை விலக்கிக் கொண்டு மெதுவாய் உள்ளே போனாள். அறை முழுவதும் தூசி மண்டிப் போய் ஏராளமான தட்டு முட்டு சாமான்கள்.

    சிவகாமி ஜாக்கிரதையாய் நடந்து அறையின் மூலையில் இருந்த அந்த பழங்கால தேக்குமர பீரோவுக்கு முன்பாய் வந்து நின்று மறுபடியும் இடுப்பில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து ஒரு சாவியைத் தேடிப்பிடித்து பீரோவின் சாவித் துவாரத்துக்கு கொடுத்து திருகினாள்.

    பீரோ சத்தமில்லாமல் திறந்து கொள்ள -

    உள்ளே பீரோவின் இரண்டாவது அறையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி தெரிய, ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் பார்மாலிக் அமிலம்.

    அமிலத்தின் நடுவே -

    இரண்டு மனித விழிகள் மிதந்து கொண்டிருக்க சிவகாமி ஜாடியைத் தொட்டபடி - என்னங்க! என்று குரல் கொடுத்தாள்.

    சுந்தரி...!

    வந்துட்டேன்...!

    சூட்கேஸ்ல லுங்கி, பனியன் எடுத்து வெச்சியா?

    வெச்சிருக்கேன்.. பேண்ட் ஷர்ட்டுக்கு கீழே பாருங்க.

    டவல்...?

    கொண்டு வர்றேன்... ஒரு டவல் போதுமா... ரெண்டு வேணுமா...?

    மெட்ராஸைக் காட்டிலும் ஹைதராபாத்ல வெயில் அதிகம். ஒரு நாளைக்கு ரெண்டு தடவை குளிக்கணும். ரெண்டு டவல் எடுத்து வை...

    பக்கத்து அறையிலிருந்து இரண்டு டவல்களோடு வெளிப்பட்ட அந்த இருபத்தைந்து வயசு சுந்தரி பார்க்க அழகாக இருந்தாள். கண்களில் ஒரு மின்சார யூனிட் இலவசமாய் இயங்கிக் கொண்டிருந்தது.

    சூட்கேஸை திறந்து வைத்துக் கொண்டு உள்ளே இருந்த பொருட்களை சரிபார்த்துக் கொண்டிருந்த கணவன் ஜெயச்சந்திரனை நெருங்கினாள். இந்தாங்க ரெண்டு டவல்...

    ஷேவிங் செட்...?

    அதோ... வெச்சிருக்கேனே..!

    சமையலறையிலிருந்து ஜெயச்சந்திரனின் தங்கை இந்திரா ஒரு சிறிய டிஃபன் பாக்ஸோடு வெளிப்பட்டாள். தாவணி அணிந்த தங்கச்சிலை.

    அண்ணா! உனக்கு டிஃபன் ரெடி...!

    என்ன வெச்சிருக்கே...?

    சப்பாத்தியும் தக்காளி சட்னியும்...

    டிஃபன் பாக்ஸை வாங்கி கேரி பேக்கில் போட்டுக் கொண்ட ஜெயச்சந்திரன் சூட்கேஸை அடைத்து லாக் செய்தான்.

    நான் கிளம்பட்டுமா...?

    ரயில் பத்தரை மணிக்குத் தானே..! மணி இப்ப ஒன்பதுதானே ஆச்சு...? சுந்தரி கடிகாரம் பார்த்தாள்.

    ஆட்டோ கிடைச்சு ரயில்வே ஸ்டேஷன் போய்ச்சேர எப்படியும் ஒரு மணி நேரமாயிடும்...

    என்னங்க... ஹைதராபாத்திலிருந்து ஒரு வாரத்துக்குள்ளே திரும்பிடுவீங்கள்ள...?

    திரும்பாம வேற என்ன வேலை...! கம்பெனி வேலை முடிஞ்ச மறு நிமிஷமே ரயில்ல ஏறி உட்கார்ந்திருப்பேன்.

    அண்ணா...!

    சொல்லு...

    ஹைதராபாத்திலிருந்து வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு வர்றே...?

    சுடிதார் எடுத்துட்டு வரட்டுமா?

    வேண்டாம்..!

    பின்னே...?

    ஹைதராபாத்ல முத்து ரொம்பவும் ஃபேமஸ். வாங்கிட்டு வர்றியாண்ணா?

    ஓ.கே...! உனக்கு என்ன வேணும் சுந்தரி...?

    உலர்ந்த திராட்சை ஒரு கிலோ வாங்கிட்டு வாங்க...

    அப்புறம்...?

    நீங்க சீக்கிரமா வரணும்...! எனக்கும் இந்திராவுக்கும் நீங்க வெளியூர் போய்ட்டா இந்த மெட்ராஸ் ஒரு பாலைவனம் மாதிரி தெரியும்...

    உள்ளறையில் டெலிபோன் அடித்தது.

    நீ இருண்ணா...! நான் போய்ப் பார்க்கிறேன்.

    சொன்ன இந்திரா வேக வேகமாய் உள்ளறைக்குப் போய் ரிஸீவரை எடுத்து பேசிவிட்டு அதே வேகத்தோடு வெளியே வந்தாள்.

    அண்ணா! போன் உனக்குத்தான். யாரோ... ஃப்ரண்டாம்...

    பேரைக் கேட்டியா...?

    இல்ல...!

    ஜெயச்சந்திரன் உள்ளறைக்குப் போய் டேபிளின் மேல் மல்லாந்து கிடந்த ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ...

    யாரு ஜெயச்சந்திரனா...? ஒரு ஆண் குரல் கேட்டது. மணலை மெல்லுகிற தினுசில் குரல்.

    ஆமா...! நீங்க... யாரு...?

    சொல்றேன். அதுக்கு முன்னாடி உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?

    எ... என்ன...?

    ஒரு கொலையைப் பண்ணிட்டு உன்னால எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுது..?

    கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு (வயது 24) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் முன்பு கடற்படையில் பணியாற்றியவன். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக 24-ந் தேதியன்று போலீஸார் வெளியே அழைத்து வந்தனர். ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக்ரூபி (வயது 42) என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான். குண்டு குறிதவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு, அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், கென்னடியை அவன் எதற்காகச் சுட்டுக் கொன்றான், அதன் பின்னணி என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. ஆஸ்வால்டை சுட்டுக் கொன்ற ஜாக்ரூபி யார்? அவனுக்கு என்ன தண்டனை? அடுத்த அத்தியாயத்தில் பாருங்கள்.

    2

    ஜெயச்சந்திரன் இருதயம் மல்லாந்து விழுந்துவிட்ட கரப்பான் பூச்சி தினுசில் துடிக்க ஆரம்பித்தது.

    என்னது... கொ... கொலையா..? நான் பண்ணினேனா...? நீங்க வேற யார்க்கோ போன் பண்ணி பேச வேண்டியதை என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க... ஸாரி... ராங் நம்பர்.

    மறுமுனையில் குரல் சிரித்தது. இது வரைக்கும் நான் ஒரு ராங்க் நம்பர்க்குக்கூட போன் பண்ணினது கிடையாது... ஜெயச்சந்திரன். நான் தப்பான தகவல்களோடு டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுக்க மாட்டேன்.

    இந்த தடவை எடுத்திட்டீங்க...! நீங்க போன் பண்ணி பேச வேண்டிய ஜெயச்சந்திரன் நான் கிடையாது. என் மேல வந்து உட்கார்ற கொசுவைக் கூட வாயால ஊதித்தான் துரத்தி விடுவேன். அதை அடிக்க மாட்டேன். கொலையாவது...! நானாவது...! பண்றதாவது..!

    பண்ணிட்டியே...!

    ஸாரி...! ராங் நம்பர்... கோபமாய்க் கத்தி ரிஸீவரை வைத்தான் ஜெயச்சந்திரன். நெற்றியும் பிடரியும் சொத சொதப்பாய் வியர்த்துப் போயிருக்க - அறையினின்றும் வெளிப்பட்ட கணவனை வியப்பாய்ப் பார்த்தாள் சுந்தரி.

    போன்ல... யார்ங்க...? ஏன் என்னவோ மாதிரி ஆயிட்டீங்க...?

    ஒண்ணுமில்லை... ராங் நம்பர்...!

    தங்கை இந்திரா குறுக்கே குரல் கொடுத்தாள்.

    ஒரு ராங் நம்பர் கால் வந்தா... இப்படியா வேர்த்து வழிவாங்க...? என்னவோ விஷயம் இருக்கு... உண்மையைச் சொல்லண்ணா...!

    ஜெயச்சந்திரன் தன் உதட்டுக்கு ஒரு கட்டாயப் புன்னகை கொடுத்தான். அது... ராங் நம்பர்தான் இந்திரா. மறுமுனையில் பேசியவன் கொஞ்சம் மரியாதைக் குறைவா பேசிட்டான். நானும் பதிலுக்கு பேச... ஒரே டென்ஷன்...

    அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் டெலிபோன் கூப்பிட்டது. எழ முயன்ற ஜெயச்சந்திரனை கையமர்த்தினாள் சுந்தரி. திரும்பவும் அந்த ராங் நம்பர்தான்னு நினைக்கிறேன். நீங்க பேசாதீங்க. நான் பேசிக்கிறேன்.

    சுந்தரி போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...!

    ஜெயச்சந்திரன் இருக்காரா..?

    நீங்க...?

    அவர் வேலை பார்க்கிற கம்பெனியோட ஜி.எம். பரசுராமன் பேசறேன்மா...

    ஒரு நிமிஷம் ஸார்... ரிஸீவரின் வாயை இடது கை விரல்களால் மூடிக்கொண்ட சுந்தரி பதட்டமாய்க் குரல் கொடுத்தாள்.

    என்னங்க... உங்க ஜி.எம்.பரசுராமன்.

    ஜெயச்சந்திரன் வேகவேகமாய் வந்து ரிஸீவரை வாங்கி காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ... குட்... ஈவினிங் ஸார்...

    என்ன... ஜெயச்சந்திரன்...! பயண ஏற்பாடு எப்படியிருக்கு?

    புறப்பட தயாராயிருக்கேன் ஸார்...

    டாக்குமெண்ட்ஸையெல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சு பார்த்துகிட்டு பார்ட்டிகிட்ட பேசு...!

    டாக்குமெண்ட்ஸோட ஒவ்வொரு வரியும் ‘பைஹார்ட்’ பண்ணியிருக்கேன் ஸார்... பார்ட்டிகிட்டே பேசும்போது தப்பு நடக்க வாய்ப்பே இல்லை...!

    உன்னைப்பத்தி எனக்குத் தெரியும் ஜெயச்சந்திரன். ஆனா எம்.டி., கொஞ்சம் பயப்படறார். ஹைதராபாத் பார்ட்டி எப்பவுமே ரஃப் அண்ட் டஃப்தான். நாம தப்பாய் பேசப்போகிற வார்த்தைக்காகவே காத்துகிட்டு இருப்பாங்க...

    ஐ... நோ... வெரி வெல் ஸார்... பார்ட்டியை எப்படி டீல் பண்ணணுமோ... அப்படி பண்ணிக்கறேன்...!

    டெய்லி... ரெண்டு தடவையாவது ஹைதராபாத்திலிருந்து எனக்கு போன் பண்ணிப் பேசு ஜெயச்சந்திரன்.

    எஸ்... ஸார்...

    ட்ரெய்ன் எத்தனை மணிக்கு...?

    பத்தரைக்கு ஸார்...

    பத்திரமா போய்ட்டு வா... விஷ் யூ ஏ ஹேப்பி ஜர்ணி...

    தேங்க்யூ... ஸார்... ஜெயச்சந்திரன் பேசிவிட்டு ரிஸீவரை வைத்ததும் அதுவரைக்கும் தள்ளி நின்றிருந்த கலக்கம் மறுபடியும் வந்து முகத்தில் ஒட்டிக் கொண்டது.

    இதற்கு முன்னால் டெலிபோன் செய்து பேசியவனின் குரல் மூளைப் பிரதேசத்துக்குள் எதிரொலித்தது.

    ‘ஒரு கொலையைப் பண்ணிட்டு உன்னால எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுது...?’

    ‘பேசியது யாராக இருக்கும்...? வேண்டுமென்றே யாராவது பயமுறுத்துவதற்காக இப்படி செய்கிறார்களா...?’

    என்னங்க...! சுந்தரி தோளைத் தொட்டு உசுப்பியதும் சுய உணர்வுக்கு வந்தான் ஜெயச்சந்திரன்.

    ம்...

    பால் கொண்டு வரட்டுமா...?

    வேண்டாம்...

    ஏன்...?

    டிஃபன் சாப்பிட்டதே வயிறு ‘திம்’ன்னு இருக்கு.

    "ரெண்டு தோசைதானே சாப்பிட்டீங்க...

    ஒரு அரை டம்ளர் பாலாவது கொண்டு வர்றேன்..."

    வேண்டாம்னா விடு சுந்தரி.

    மாட்டேன்...! உங்க வயித்தைப்பத்தி எனக்குத் தெரியும்... சுந்தரி சொல்லிக் கொண்டே சமையலறையை நோக்கிப் போய்விட, இந்திரா ஜெயச்சந்திரனுக்கு முன்பாய் வந்து நின்று குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.

    அண்ணா...!

    என்ன...?

    "அந்த ராங் நம்பர்

    Enjoying the preview?
    Page 1 of 1