Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விடமாட்டான் விவேக்
விடமாட்டான் விவேக்
விடமாட்டான் விவேக்
Ebook172 pages44 minutes

விடமாட்டான் விவேக்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோழ வந்தான் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள் துரையரசனும், புனிதாவும். இருவர் கையிலும் இரண்டு பெரிய சூட்கேஸ்கள். கூண்டு வைத்த மாட்டு வண்டிக்கருகே நின்று - மல்லிச்சேரி பீடியை புகையாய் மாற்றிக் கொண்டிருந்த - அந்த முண்டாசு பேர்வழி - அவசர அவசரமாய் இரண்டு இழுப்பு இழுத்து - பீடியை எறிந்து விட்டு அவர்களை நோக்கி ஓடோடி வந்தான்.
 "அய்யா..."
 துரையரசனும் புனிதாவும் நின்றார்கள்.
 "என்னப்பா?"
 "நீங்க மெட்ராஸிலிருந்து தானே வர்றீங்க?"
 "ஆமா..."
 "உங்க பேரு துரையரசன்... இவங்க பேரு புனிதா..."
 "ஆமா..."
 "வண்டியில ஏறுங்க. ரமேஷ் அய்யா உங்களை கூட்டி வரச் சொல்லித்தான் என்னைய அனுப்பிச்சு வெச்சிருக்காரு.." சொல்லிக் கொண்டே துரையரசன் கையிலும் புனிதா கையிலும் இருந்த சூட்கேஸ்களை வாங்கியபடி வண்டியை நோக்கிப் போனான்.
 புனிதா துரையரசனை ஏறிட்டுப் பார்த்து சிரித்தாள்.
 "என்ன சிரிக்கிறே?"உங்க ஃப்ரெண்ட் ரமேஷ் அந்த அழகான புது மாடல் காரை எப்போ வாங்கினார்?"
 "ஏய்... கிண்டலடிக்காதே! வண்டிக்காரன் காதுல விழுந்துட போவுது..."
 "என் காதுல வுளுந்தாச்சுங்கய்யா... அம்மா சொன்னாலும் சொல்லாமே போனாலும் இது புது மாதிரி கார் தான்... ரொம்ப ஸ்ட்ராங்கான கார். எந்த ஜென்மத்திலும் பஞ்சர் ஆகாது. 'ஜல் ஜல்'ன்னு இது ஓடற சத்தமே... ஒரு சங்கீதம் மாதிரி தான். ஒரு கட்டு வைக்கோலுக்கு பத்து கிலோ மீட்டர் போகும். பெட்ரோல் செலவு கிடையவே கிடையாது. ஏதாச்சும் விபத்து ஏற்பட்டாலும் பத்தாயிரம் ரூபாய்க்குள்ளேதான் நஷ்டமாகும்."
 துரையரசன் சிரித்தான்.
 "உம்பேரென்னப்பா...?"
 "மருத முத்துங்க..."
 "நீ சொன்னதுதான் சரி... மருத முத்து... பவுடர் டப்பா மாதிரி இப்ப வர்ற கார்களை விட - கல்லுச் சட்டி மாதிரி இருக்கிற இந்த மாட்டு வண்டி ஆயிரம் மடங்கு மேல். எங்கேயும் ப்ரேக் டவுன் ஆகாத ஒரே வண்டி நம்ம மாட்டு வண்டிதான்..."
 மருத முத்து வாயெல்லாம் பல்லாக - வண்டியின் முன் பக்கமாய் போய் தார்க்குச்சியை உருவிக் கொண்டே சொன்னான்.
 "ஏறி உட்கார்ங்கய்யா..."
 துரையரசனும் புனிதாவும் ... வண்டிக்குள் ஏறி பச்சைப் புல் பரப்பப்பட்ட ஜமுக்காளத்தின் மேல் மெத்தென்று உட்கார்ந்தார்கள்.
 "கம்பி போட்டுக்குங்க..."
 கம்பி போட்டுக் கொண்டதும் வண்டி கிளம்பியது. காலை நேரக் காற்று சோளப் பயிரின் வாசனையோடு 'கும்' மென்று முகத்தில் மோதியது. மருத முத்து காளைகளை விரட்டிக் கொண்டே சொன்னான். "ரமேஷ் அய்யா... நேத்து ராத்திரியே என்கிட்டே ஸ்டேஷனுக்கு வண்டிய கட்டிட்டு போகணும்ன்னு சொல்லிட்டாருங்க..."ரமேஷ் இப்போ எங்கே? வீட்ல தானே?"
 "ஆமாங்க... வூட்லதாங்க இருக்காரு... ஸ்டேஷனுக்கு அவரும் வரத்தாங்க இருந்தாரு... அதுக்குள்ளே... ஒரு அவசர ஜோலி வந்துடுச்சுங்க..."
 "பரவாயில்ல..."
 காளை மாடுகள் இப்போது வேகம் கூட்டியிருக்க - செம்மண் பாதையின் இரண்டு பக்கங்களிலும் வாழைத் தோப்புகள் அடர்த்தியாய் ஓடி வந்தது.
 புனிதா வியந்தாள்.
 "எந்தப் பக்கம் பார்த்தாலும் பச்சைப் பசேல்ன்னு இருக்கே? வருஷம் பூராவும் இப்படித்தான் இருக்குமா?"
 "ஆமாங்கம்மா... எந்த ஊருக்கு பஞ்சம் வந்தாலும் சரி இந்த சோழவந்தான் கிராமத்துக்கு பஞ்சமே வராது... ஆடி மழைக்குப் பின்னாடி... ஒரு தடவை நம்ம கிராமத்துக்கு வந்து பாருங்க... நெல்லும் வாழையும் சமைஞ்ச பொண்ணுகளாட்டம் 'செழு செழு'ன்னு இருக்கும்... நீங்க சோழவந்தான் ரஸ்தாளி பழம் சாப்பிட்டிருக்கீங்களா?"
 "ஊ... ஹு... ம்..."
 "பழம் கனிஞ்சுட்டா வாசம் ஊரையே தூக்கும். பழம் நாக்குல பட்டுட்டா... தேன்தான்..."
 "நீ சொல்றதைக் கேட்டாலே பழம் சாப்பிட்ட மாதிரி இருக்கு மருதமுத்து! ஆமா ரமேஷ் வீட்ல உனக்கு என்ன வேலை?"
 "வண்டி கட்டிட்டு சந்தைக்கு போற வேலைதாங்க..."
 "உனக்கு கல்யாணமாயிடுச்சா?"
 மருதமுத்து தார்க்குச்சியால் முதுகை சொறிந்து கொண்டு வெட்கப்பட்டான்.
 "வ... வந்துங்க... வந்துங்க..."
 "அட... சொல்லு... மருதமுத்து... "
 "எ... எனக்கு... ரெண்டு பொஞ்சாதிங்க..."போச்சுடா... குழந்தைங்க?"
 "நாலு பொண்ணு... மூணு பசங்க..."
 "மை குட்னஸ்" புனிதா உதட்டைக் குவித்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798215473320
விடமாட்டான் விவேக்

Read more from Rajeshkumar

Related to விடமாட்டான் விவேக்

Related ebooks

Related categories

Reviews for விடமாட்டான் விவேக்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விடமாட்டான் விவேக் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    முன்னொரு காலத்தில் தமிழ் வளர்த்த சங்கத்துக்கும், இந்த இருபதாம் நூற்றாண்டில் சல்பேட்டா கள்ளச் சாராயத்துக்கும் பெயர் போன மதுரையில் ஒரு, ஞாயிற்றுக் கிழமை.

    நேரம்: மாலை ஆறு மணி.

    இடம்: ஹோட்டல் அசோகாவின் ஏர்கண்டிஷன் கசியும் கான்பரன்ஸ் ஹால். ஹால் ஜனங்களால் நிரம்பியிருக்க - ஏர்கண்டிஷன் காற்று சூடேறிக் கொண்டிருந்தது. ஹாலின் குறுக்கேயும் நெடுக்கேயும் - முக்கோண கலர் தோரணங்கள். துணி பேனர்கள். பேனர்களில் விதவித வாசகங்கள்.

    சட்டத்தை காக்கும் கூர்வாளாம்

    விவேக் அவர்களே! வருக! வருக!

    மாவீரன் விவேக்கை மதுரை மண்

    வரவேற்கிறது

    காவல்துறையின் கலங்கரை விளக்கமே!

    வருக! வருக!

    ஹால் முழுக்க பத்து தீபாவளிகளின் உற்சாகம். நிமிஷத்திற்கொருதரம் கைத்தட்டல் ஒரு சின்ன பூகம்பமாய் ஹாலை நடுக்கிக் கொண்டிருந்தது. விவேக் மேடையில் - மைக்கை கையில் ஏந்தி நடு நாயகமாய் நின்றிருந்தான். இள நீல வர்ண ஷபாரி ட்ரஸ். கண்களை இறுக்கமாய் அணைத்த குளிர் கண்ணாடி - மணிக்கட்டில் மின்னும் பொன்னிற ரோலக்ஸ் வாட்ச்.

    மேடையின் பின்னணியில் - சிவப்பு வெல்வெட் துணியில் மஞ்சள் பட்டு நூல் 'சிட்டி லைட் ஆர்ட்ஸ் கல்சுரல் அகாடமி' என்னும் எழுத்துக்களை சீராய் எம்பிராய்டரி செய்திருந்தது.

    விவேக்கின் கணீர் குரல் மைக்கின் உடம்பில் பட்டு சதுர ஸ்பீக்கர் பெட்டிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

    நம் சமூக அமைப்பு ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் அலைகளை தடுத்து நிறுத்துவது எவ்வளவு சிரமமோ... அதைவிட அதிக சிரமம் நம் சமூக அமைப்பில் நிகழும் குற்றங்களை தடுத்து நிறுத்துவது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க போலீஸ் துறை எவ்வளவு நவீனமான முயற்சிகளை கடைபிடித்தாலும் - சில குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள். நான் இந்த துறையில் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதலாய் - எத்தனையோ வழக்குகளை கையாண்டிருக்கிறேன். இந்தத் துறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு குற்றவாளிகளைக் கண்டு பிடித்திருக்கிறேன். என்னுடைய மனதில் இருக்கும் ஆசையெல்லாம் இதுதான். குற்றம் செய்யப் போகிறவர்களின் மனதில் என்னுடைய பெயர் உறுத்தலாய் இருக்க வேண்டும். குற்றத்தைச் செய்தால் 'விட மாட்டான் இந்த விவேக்!' என்கிற ஒரு சின்ன பயம் அவர்களுடைய மனதில் நிரந்தரமாய் இருக்க வேண்டும்...

    ஹாலில் ஒரு பூகம்பம் உண்டான மாதிரி கைத்தட்டல் எழுந்தது. கைத்தட்டல் அடங்கியதும் விவேக் தொடர்ந்தான்.

    சிட்டி லைட் ஆர்ட்ஸ் கல்சுரல் அகாடமியின் சார்பாக எனக்கு அளிக்கப்படும் இந்த பாராட்டு - போலீஸ் துறைக்கே அளிக்கப்படும் பாராட்டாக நான் எண்ணுகிறேன். இந்த அளவில் என்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டு - அகாடமி ஏற்பாடு செய்துள்ள - 'நேர்க்கு நேர்' நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளை சந்திக்கவும் - அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ஆர்வமாயுள்ளேன். இப்போது கேள்வி நேரம...

    மறுபடியும் கைத்தட்டல் எழுந்து அடங்கியது.

    விவேக் உருண்டை மைக்கோடு - மேடையின் முன்புறம் வந்தான். ஒவ்வொருவராய் எழுந்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள்.

    விவேக்! எங்கள் ஊரான மதுரையைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

    எனக்கு பிடிச்ச ஊர்கள்ல மதுரையும் ஒண்ணு. வயித்துக்கு வஞ்சனை செய்யாத ஊர். ராத்திரி பனிரெண்டு மணியானாலும், நாலு வகை சட்னி, மிளகாய் பொடி நல்லெண்ணையோடு மல்லிகைப்பூ மாதிரி இட்லி எந்த ஊர்ல கிடைக்கும்?

    உங்க முழுப் பேரென்ன?

    விவேக்தான்! அப்பா அம்மா வெச்ச பேரே அவ்வளவு தான்.

    கொலையாளிகளைப் பிடிக்கப் போகும் போது உங்களுக்குப் பயமாய் இருக்காதா?

    யூனிபார்மை மாட்டும் போதே... பயத்தை கழட்டி வெச்சுடற ஒரே டிபார்ட்மெண்ட்... போலீஸ் டிபார்ட் மெண்ட்தான். அதையும் மீறி எனக்கு பயமா இருந்தா உங்களுக்கு தகவல் தர்றேன். வாங்க. உங்க கையை இறுக்கமா பிடிச்சுகிட்டு போய் - கொலையாளியை பிடிக்கிறேன்...

    விவேக்! ரூபலாவையும் மதுரைக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்களா?

    இதோ! முதல் வரிசையில் என் இல்லாள் - விவேக் சொன்னதும் ரூபலா எழுந்து - கூட்டத்தைப் பார்த்து வணக்கம் சொல்ல - கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

    க்ரைம் எழுத்தாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

    வடுவூர் துரைசாமி அய்யங்காரை...

    பெண் எழுத்தாளர்களில் யாரைப் பிடிக்கும்?

    வை.மு கோதை நாயகி அம்மாளை...

    நடிகர் கமலைப் பற்றி உங்கள் கருத்து?

    ஒரு அபூர்வ நடிகர்...

    ரஜினியைப் பற்றி?

    ராஜாதி ராஜா...!

    ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ் பற்றி உங்களுடைய உண்மையான கணிப்பு என்ன?

    'மெட்ராஸ் போலீஸைக் காட்டிலும் ஒரு பர்செண்ட் புத்திசாலித்தனமானவர்கள். ஆனால் கல்ப்யூட்டர்களின் அடிமைகள்..."

    உங்களுக்கு பகைவர்கள் இருக்கிறார்களா?

    பகை எனக்குப் பகை...

    போன தேர்தலில் நீங்கள் யார்க்கு ஓட்டு போட்டீர்கள்?

    ஓட்டுப் போட பணம் கொடுப்பதும், ஒருவர் யார்க்கு ஓட்டு போட்டார்ன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்றதும் சட்டப்படி குற்றம்.

    நீங்கள் போன நாடுகளில் உங்களுக்குப் பிடித்தமான நாடு எதுன்னு சொல்ல முடியுமா?

    "வெளிநாடுகள் சுத்தமாக இருக்கலாம். ஜனங்கள் சிவப்பாக இருக்கலாம். வானளாவிய கட்டிடங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு பிடித்தது இந்த அழுக்கான இந்தியாதான். இங்கே - காரில் ஒரு நாய் அடிபட்டால் 'த்ஸொ ... த்ஸொ' சொல்லி ஒரு சில விநாடிகளாவது அனுதாபப்படுகிறோம். ஆனால் வெளிநாடுகளில் காரில் ஒரு மனிதன் அடிபட்டால் கூட - ஒரு குப்பையை பார்க்கிற மாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1