Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இந்தியன் என்று சொல்லடா!
இந்தியன் என்று சொல்லடா!
இந்தியன் என்று சொல்லடா!
Ebook150 pages37 minutes

இந்தியன் என்று சொல்லடா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முதுகில் கை விழுந்ததும் சட்டென்று திரும்பிப் பார்த்தான் பரிதி.
 விங் கமாண்டர் குருபால் சிங் பைஜாமா அணிந்து ஒரு பெரிய புன்னகையோடு நின்றிருந்தார். சல்யூட் அடிக்க முயன்ற பரிதியின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஆங்கிலத்தில் சொன்னார்.
 "இந்த சம்பிரதாயமெல்லாம் வேண்டாம்."
 "ஸார்... நீங்க என்னை கூப்பிட்டதா... மெஸேஜ் வந்தது. எனிதிங்க் இம்பார்ட்டென்ட் சார்..."
 "வெரி... வெரி... இம்பார்ட்டென்ட்... உள்ளே போய் என் அறையில் உட்காருங்கள். இப்போது வந்துவிடுகிறேன்...குருபால் சிங் பரிதியின் தோளைத் தட்டிவிட்டு வராந்தா வின் எதிர் திசையை நோக்கி வேகமாய் நடந்து போக - பரிதி அவருடைய அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
 ஹீட்டர் வைத்திருந்த வெது வெதுப்பான பெரிய அறை. சுவர்களில் விமானப்படையின் முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல்கள் தோள் பட்டைகளிலும், மார்பிலும் மின்னும் மெடல்களோடு தேசபக்தி பார்வை பார்த்தார்கள். மேஜையின் மேல் பித்தனை உலோகக் கழுகு உட்கார்ந்திருக்க அதன் மேல் சிறிய தேசியக் கொடி நின்றிருந்தது.
 பரிதி ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.
 மனசுக்குள் கேள்வி ஒரு மின்னலைப்போல் வெட்டிக் கொண்டேயிருந்தது. 'விஷயம் வெரி வெரி இம்பார்ட்டென்ட் என்று சொன்னாரே...! என்னவாக இருக்கும்...?'
 யோசனையில் நிமிடங்கள் கரைத்து கொண்டிருக்கும் போதே விங் கமாண்டர் குருபால்சிங் உள்ளே வந்தார்.
 "ஸாரி மிஸ்டர் பரிதி... வயர்லெஸ்ஸில் ஏர் மார்ஷலிடமிருந்து ஒரு அவசர செய்தி. செய்தியை வாங்கிக் கொண்டு வர இவ்வளவு நேரமாகிவிட்டது... உங்களை காக்க வைத்துவிட் டேன்..."
 "பரவாயில்லை சார்..." எழுந்து நின்றவனை தோளில் கை வைத்து மறுபடியும் உட்கார்த்தி வைத்து தானும் எதிர் சீட்டில் உட்கார்ந்தார்.
 "மிஸ்டர்... பரிதி... நான் இந்தக் காலை வேளையில் இங்கே உங்களை அழைத்தது பற்றி நீங்கள் ஆச்சர்யப்படலாம். இது என்னைப் பொறுத்தவரையிலும் உங்களைப் பொறுத்தவரையிலும் மிக மிக முக்கியமான விஷயம்... விஷயம் என்னவாக, இருக்கும் என்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா...?"
 "இல்லை சார்..."
 "கொஞ்சம் கூட...?"
 "இல்லை சார்..."
 "பரிதி! சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பின்னிரவு நேரத்தில் நீங்கள் மட்டும் தனியாய் ஃப்ளைட்டை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானிய ஆகாயத்தில் பல மணி நேரம் பறந்து அவர்களுடைய ராணுவமறைவிடங்களையும், தளவாடங்களையும் புகைப்படங்கள் எடுத்து வந்தீர்கள். அதன் மூலம் அந்த நாட்டு ராணுவ உண்மைகள் ஓரளவு வெளிச்சத்துக்கு வந்தது... ஞாபகமிருக்கிறதா...?"
 "அது என் கடமை ஸார்..."
 "அந்தக் கடமைக்குத்தான் விருது கிடைக்கப் போகிறது."
 "விருதா...?"
 "ஆமாம்... இந்த வருஷம் விமானப் படையில் சாகசம் செய்ததற்கான விருது அதாவது பெருமைக்குரிய 'அசோக சக்ரா' விருது உங்களுக்கு கொடுப்பது என்று ராணுவக் கவுன்சில் முடிவு செய்திருக்கிறது."
 பரிதி சந்தோஷம் தாங்காமல் குபீரென்று எழுந்தான். உடம்பு முழுக்க ஆனந்த மின்சாரம் பாய்ந்ததால் கண்களில் நீர் கட்டிக் கொண்டது.
 "ஸா... ஸார்..."
 "நீங்க... இதை எதிர்பார்க்கலை... இல்லையா?"
 "நிச்சயமாக எதிர்பார்க்கலை ஸார்... என்னைவிட இந்த விமானப்படையில் எத்தனையோ சாகசம் புரிந்தவர்கள் இருக்கும்போது எனக்கு அசோக சக்ரா விருதா...? நம்ப முடியவில்லை ஸார்."
 "நம்புங்கள் பரிதி... மற்றவர்கள் செய்த சாகசங்களோடு நீங்கள் செய்த சாகசத்தை ஒப்பிடும்போது நிச்சயம் உங்களுடையது அரிய சாதனைதான்... இந்த விருது உங்களுக்கு கொடுக்கப்படுவதில் எனக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி..."
 "இது என்னுடைய பெரிய பேறு ஸார்."
 "இந்த விருது கொடுப்பது பற்றி இன்னும் அதிகார பூர்வமாய் அரசாங்க கெஜட்டிலும், ராணுவ கெஜட்டிலும் செய்தி வரவில்லை. அந்த செய்தி வரும் வரைக்கும் நீங்கள் இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது. சொல்வது முறையும் அல்ல..."அது எனக்குத் தெரியும் சார்... முறைப்படி அறிவிப்பு வெளியாகிற வரைக்கும் நான் இதை வெளியிட மாட்டேன் ஸார்."
 விங் கமாண்டர் சிரித்தார்.
 "ஒரே ஒரு நபரிடம் மட்டும் சொல்லலாம்."
 "யாரிடம் ஸார்...?"
 "உங்கள் மனைவியிடம்..."
 "அதுகூட வேண்டாம் ஸார்..."
 "சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு நிம்மதியாய் தூங்க முடியாது மிஸ்டர் பரிதி. உங்கள் மனைவியிடம் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் மனைவி மூலமாய் அது வெளியே வந்துவிடக் கூடாது..."
 பரிதி சிரித்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223852278
இந்தியன் என்று சொல்லடா!

Read more from Rajeshkumar

Related to இந்தியன் என்று சொல்லடா!

Related ebooks

Related categories

Reviews for இந்தியன் என்று சொல்லடா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இந்தியன் என்று சொல்லடா! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    இந்திய ராணுவம் உலகத்தின் ஐந்தாவது பெரிய ராணுவம். முதல் நான்கு இடங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உரிமையோடு எடுத்துக்கொள்ள பாரத ராணுவத்துக்கு ஐந்தாவது இடம். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க பாரதத்தால் இயலாது போனாலும் மூன்றாவது இடத்தையாவது பிடிக்க முயற்சி செய்கிறது பாரதம். இந்த முயற்சியில் ஈடுபடுவதால் வல்லரசு நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்காவுக்கு கோபம். அந்த கோபத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு ஆயுத சப்ளை செய்து வருகிறது. பாரத ராணுவம் இதற்கெல்லாம் பயந்துவிடுமா என்ன...?

    அமிர்தசரஸ் அழகாய் அந்த ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக் கிழமையில் விடிந்து கொண்டிருந்தது.

    குருத்வாரா பகுதியை ஒட்டியிருந்த ராணுவக் கேந்திரத்தின் மையப் பகுதியில் சதுரம் சதுரமாய் மேரீட் க்வார்ட்டர்ஸ் சூரியக் குழந்தையின் ஆரஞ்சு நிற வெளிச்சத்தில் தோய்ந்து போயிருக்க பறவைகள் கூச்சல், சட்டசபையையும், பாராளுமன்றத்தையும் நினைவுக்கு கொண்டு வந்தது.

    எம்.க்யூ.178 க்வார்ட்டர்ஸ் வாசலில் ஒரு பெரிய பன்னீர் செம்பு கோலத்தை சிரத்தையாய் போட்டு முடித்த வீணா சற்றே நகர்ந்து நின்று அழகு பார்த்தாள்.

    ஒரு புள்ளி தவறியிருந்தது.

    குனிந்து அதை சரியாக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வீணாவுக்கு லேசாய் சிவப்பு மாய்த்த பொன்னிறம். சொந்த ஊர் காவிரி பாயும் திருப்பராய்த்துறை. போன ஆறு மாதத்துக்கு முன்பு வரை தமிழ்நாட்டு காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தவள் இப்போது அமிர்தசரஸின் குளிர் காற்றை சுவாசிப்பதற்கு காரணம் கழுத்தில் தொங்கும் அந்த தாலி. தாலிக்கு சொந்தக்காரன் பரிதி. இருபத்தேழு வயதில் ஃப்ளைட் லெப்டினென்ட். ஆகாயத்தில் நிறைய சாகசங்கள் புரிந்தவன். தரையில் இருந்த நாட்களைக் காட்டிலும் வானத்தில் இருந்த நாட்கள் அதிகம்.

    வீணா வீட்டுக்குள் நுழைந்து - கட்டிலில் கம்பளிப் போர்வைக்குள் இருந்த பரிதியின் தலைமாட்டில் நின்றாள்.

    என்னங்க...?

    ம்…

    முழிச்சுட்டுத்தான் இருக்கீங்களா?

    "ம்...

    மணி எவ்வளவு தெரியுமா?

    தெரியும்...

    எவ்வளவு...? கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாள்.

    இதை... நான் சொல்லணுமா என்ன...? நீ படுக்கையிருந்து எந்திரிச்சா... மணி அஞ்சு... குளிச்சுட்டு கோலம் போடப் போனா... அஞ்சரை. கோலம் போட உனக்கு பதினைஞ்சு நிமிஷமாவது வேணும். கோலம் போட்டுட்டு நீ உள்ளே வந்தா மணி அஞ்சே முக்கால். கடந்த ஆறு மாசமா இதைத்தானே பார்த்துட்டிருக்கேன்.

    பரவாயில்லையே... மனப்பாடம் பண்ணியிருக்கீங்க... சரி... எந்திரிங்க...

    இன்னிக்கு சண்டே. ஒரு அரை மணி நேரம் ஓவர் டைம் எடுத்துக்கிறேன் தூங்கறதுக்காக.

    நோ... நோ... லேசா தொப்பை போட்டுட்டீங்க. ஒரு ஃப்ளைட் லெப்டினென்ட்டுக்கு தொப்பை இருக்கக் கூடாது. எந்திரிச்சு ஜாக்கிங் போய்ட்டு வாங்க... குவார்ட்டர்ஸ்ல இருக்கிற உங்க மத்த கொலீக்ஸெல்லாம்... அஞ்சு மணிக்கே கான்வாஸ் ஷூவை போட்டுகிட்டு ஓட ஆரம்பிச்சுட்டாங்க...

    கம்பளிக்குள் சிரித்தான் பரிதி.

    அவனவன் பெண்டாட்டி தொந்தரவிலிருந்து தப்பிக்கிறதுக்காக விடிஞ்சும் விடியாத நேரத்துல எந்திரிச்சு ஓடுவான். என் பெண்டாட்டி அப்படியில்லையே...?

    காலங்கார்த்தாலே... ஐஸ்... எனக்கு ஒத்துக்காது. எந்திரிக்கிறீங்களா...?

    சரி... இப்போ கம்பளிப் போர்வையை எடுக்கப் போறேன். உன்னோட அழகான மஞ்சள் பூசி குளிச்ச முகம் எனக்கு நேரா இருக்கணும்...

    இப்ப... நேராத்தான் இருக்கு... போர்வையை எடுத்தான் பரிதி. மகிழ்ச்சி கண்களில் விரிந்தது.

    ஆஹா... சந்த்ரோதயம்...

    வீணா எழுந்து கொண்டாள்.

    இதோ... பாருங்க. நான் திவ்யமா குளிச்சிட்டு வந்திருக்கேன், தொட்டு இழுக்கிற வேலையெல்லாம் வேண்டாம்...

    திரண்ட தோள்களோடு ஆஜானுபாகுவாய் தோற்றம் காட்டிய பரிதி தன் கெட்டியான மீசைக்குக் கீழே சிரித்தான்.

    தொட்டா என்னவாம்...?

    இன்னொருவாட்டி நான் குளிக்க வேண்டியதாயிருக்கும்...

    பேஷாப் போச்சு... ரெண்டு பேரும் சேர்ந்தே குளிச்சுடலாம்...

    சொல்லிக் கொண்டே பரிதி வீணாவின் செழிப்பான தோள் பட்டையைப் பற்றிய விநாடி -

    வாசலில் அந்த சத்தம் கேட்டது.

    ஜீப் ஒன்று டயர்களைத் தேய்த்து நின்ற சத்தம்.

    வீணா... யார்ன்னு போய்ப் பார்... வீணா ஓடிப்போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.

    விமானப்படைத் துறைக்கான ஜீப் இள நீல நிறத்தில் நின்றிருந்தது...

    என்னங்க... உங்க டிபார்ட்மெண்ட் ஜீப். உங்களை யாரோ பார்க்க வந்துட்டிருக்காங்க... கையில ஏதோ கவர்.

    பரிதி அரக்க பரக்க எழுந்து கண்ணாடி பார்த்து முகம் துடைத்து பேண்ட் சர்ட்டுக்கு மாறினான். தலைக் கேசத்தை சீப்பால் ஒரு அவசர வாரலுக்கு உட்படுத்தி முடித்த போது -

    அந்த பைலட் ஆபீஸர் உள்ளே வந்தார். சல்யூட் வைத்து தளர்ந்தார்.

    பரிதி மிடுக்காய் நிமிர்ந்து எஸ் என்றான்.

    ஸார்... திஸ் ஈஸ் ஃபார். யூ... பைலட்

    Enjoying the preview?
    Page 1 of 1