Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பகல் நேர பாரிஜாதங்கள்!
பகல் நேர பாரிஜாதங்கள்!
பகல் நேர பாரிஜாதங்கள்!
Ebook82 pages27 minutes

பகல் நேர பாரிஜாதங்கள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தையல் மிஷினை ஓட்டிக் கொண்டிருந்த சுபத்ரா ஆயாசப் பெருமூச்சோடு நிமிர்வதற்கும் வாசலில் அந்தக் கருநீல அம்பாசிடர் கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. மிஷினின் ஓட்டத்தை நிறுத்தி விட்டு எழுந்த சுபத்ராவுக்கு நாற்பது வயது. பாழ் நெற்றி - வற்றலாகிப் போன உடம்பு வாகு. சரியாய் வாரப்படாத தலைமுடிக் கற்றையை அசுவாரசியமாய் சுருட்டிக் கொண்டை போட்டிருந்தாள். கசங்கிப் போன கனகாம்பர வாயல் சேலையைத் தட்டுமுட்டாய் சுற்றி - தொள தொள ஜாக்கெட்டை தோள் பட்டைக்குக் கொடுத்திருந்தாள்.
 காரினின்றும் இறங்கி வந்த இளைஞனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். 'லவ் ஸ் வீக் ஆல் லாங்வேஜ்ஸ்' என்ற வாசகங்களைக் கொண்ட பனியனை அணிந்து நல்ல நிறத்தில் களையாய் தெரிந்தான்.
 "வணக்கம்மா..."
 "நீங்க யார் தம்பி...!" கேட்டுக் கொண்டே கொஞ்சம் அதிர்ச்சியோடு பின் வாங்கினாள்...
 இளைஞன் சிரித்தான். "எம் பேர் ராஜா... என்னை உட்காரச் சொல்லமாட்டீங்களாம்மா...?"
 "வா... வாங்க... தம்பி... உ... உட்கார்ங்க..." சுபத்ரா தடுமாற்றமாய் நடந்து போய் - சுவரோரமாயிருந்த மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டாள்.
 அந்த ராஜா உட்கார்ந்தான்.
 சுபத்ரா எட்ட நின்றாள் அவனையே பார்த்துக் கொண்டு, "யாரிவன்! எதற்காக வந்திருக்கிறான்...?" மனசுக்குள் யோசனை அவிழ்த்துவிட்ட கன்றுக் குட்டியாய் அலைந்தது.
 அவன் சொன்னான்
 "அம்மா... நீங்க இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல ரெடியாகி என் கூடப் புறப்பட்டு வரணும்..."
 "நான்... நான் உங்ககூடப் புறப்பட்டு வரணுமா...?

ஆமா..."
 "எ... எ... எங்கே...?" குரலில் குளிர் அடித்தது.
 "பயப்படாதீங்கம்மா... நான் உங்களை ஒரு நல்ல காரியத்துக்காக... ஒரு நல்ல இடத்துக்குத்தான் கூட்டிட்டுப் போகப்போறேன்... சுபத்ரா குழம்பினாள்.
 "நீ... நீங்க... என்ன சொல்றீங்க தம்பி... எனக்கு ஒண்ணுமே புரியலை...?"
 அந்த ராஜா புன்னகைத்தான். "புரியும்படியாகவே சொல்றேன்மா... காட்டன் மர்ச்செண்ட் முருகபூபதியை உங்களுக்குத் தெரியுமா...?"
 "தெரியும்... முன்னாடி இந்த ஊர்க்கு சேர்மனாயிருந்தார்..."
 "அவரேதான்..."
 "அவர்க்கென்ன...?"
 "அவரோட பையன் தான் நான்... எம்.காம். முடிச்சுட்டு அப்பாவோட பிஸினஸையே பாத்துட்டிருக்கேன்..."
 சுபத்ராவின் கண்களில் - இப்போது ஒரு திடீர் மதிப்பு வந்து உட்கார்ந்தது. "அ... அ... அவரோட பையனா நீங்க...?"
 "ஆமா... எங்க அப்பாவும்... அம்மாவும் உங்களைப் பார்க்கணும்ன்னு பிரியப்பட்டாங்க. அதனால கூட்டிக்கிட்டு போகலாம்ன்னு வந்தேன்."
 "அவங்க என்னைப் பார்க்கணுமா... எதுக்காக...?"
 "நீங்க தானே மிருதுளாவுக்கு அம்மா...?"
 "ஆ... ஆமா..."
 "மிருதுளா எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா... அதுக்கான பூர்வாங்கப் பேச்சைத் தொடங்க வேண்டாமா...?

சுபத்ரா 'திக்'கென்று நிமிர்ந்து அவனையே பார்த்தாள். பதட்டமும் பயமும் அவளுடைய முகத்திற்கு வியர்வையைக் கொடுத்தது.
 "எ... என்ன தம்பி சொல்றீங்க...?"
 ராஜா சிரித்தான். "இனிமேலும் நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை... மிருதுளாவும் நானும் ரெண்டு வருஷ காலமாகவே ஒருத்தரையொருத்தர் விரும்பிட்டிருக்கோம்... அவ டெல்லிக்குப் போய்க் கம்ப்யூட்டரிங் கோர்ஸை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் நான் காத்திட்டிருக்க வேணும்ங்கிறது உங்க மகளோட கட்டளை... மிருதுளா கோர்ஸை முடிச்சுட்டு இன்னும் ரெண்டு நாள்ல டில்லியிலிருந்து திரும்பப் போறா... நானும் இன்னிக்குக் காலையில தான் என்னோட காதல் விவகாரத்தை வீட்ல டிக்ளேர் பண்ணினேன். என்னோட அப்பாவும் சரி... அம்மாவும் சரி... ஒரு இம்மியத்தனை எதிர்ப்புக்கூடக் காட்டலை. என் பர்ஸ்ல வெச்சிருந்த உங்க பொண்ணோட போட்டோவைக் காட்டினேன்... கல்யாணத்துக்குப் பச்சைக் கொடி காட்டிட்டாங்க...
 மிருதுளா... டெல்லியிலிருந்து திரும்பறதுக்குள்ளே - கல்யாண நிச்சயதார்த்த தேதியையும் முகூர்த்த தேதியையும் முடிவு பண்ணனும்... ரயில்வே ஸ்டேஷன்ல ரிலீவ் பண்ணும்போதே மிருதுளாகிட்டே இந்த விஷயத்தைச் சொல்லணும்..."
 சுபத்ரா சந்தோஷத்தில் திணறிக்கொண்டிருந்தாள். கண்களில் பரவசம் பளபளத்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223223009
பகல் நேர பாரிஜாதங்கள்!

Read more from Rajeshkumar

Related to பகல் நேர பாரிஜாதங்கள்!

Related ebooks

Related categories

Reviews for பகல் நேர பாரிஜாதங்கள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பகல் நேர பாரிஜாதங்கள்! - Rajeshkumar

    1

    கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

    சாயந்தர நேரம். பார்வையாளர்கள் ரொட்டி, பால், சாத்துக்குடியோடு உள்ளே போய்க் கொண்டிருக்க - நான் ஸ்கூட்டர்க்கு சாய்ந்து டாக்டர் ஜெகதீஸ்வரனுக்காகக் காத்திருந்தேன். டாக்டர் ஜெகதீஸ்வரன் என்னுடைய ஆரம்பப் பள்ளி நண்பன். எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படிப்பு வராமல் - வாத்தியார்களால் மொத்தப்பட்டவன். திடீரென்று புத்தர்க்கு ஞானம் பிறந்த மாதிரி எஸ்.எஸ்.எல்.சிக்கு மேல் நன்றாகப் படித்து டாக்டர் படிப்பை முடித்து ஒரு அழகான பொண்ணுக்கு கணவனாகி - ஒரு கண்டெஸா கார்க்கும், டாடாபாட் பங்களாவுக்கும் சொந்தக்காரனாகி அமர்க்களமாய் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டவன்.

    நான் வாட்சைப் பார்த்தேன்.

    சிட்டிஸன் குவார்ட்ஸ் 5.10 என்று சொல்ல ஜெகதீஸ்வரனை முதல் தடவையாய் முட்டாள் என்று திட்டினேன்.

    அஞ்சு மணிக்கெல்லாம் வந்துரு என்று போனில் சொன்னானே...? உள்ளே ஏதாவது அவசரக் கேஸ்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ...!

    ஸார்...

    என் யோசிப்பை வெட்டிக் கொண்டு - முதுகுக்குப் பின்னாலிருந்து அந்தக் குரல் எழுந்தது.

    திரும்பினேன்.

    நடுத்தர வயதில் அந்த நபர் நின்றிருந்தார். வெள்ளையில் நீலக்கோடு போட்ட சர்ட். வேஷ்டி, தலையை நேர் வகிடு எடுத்து - இரண்டு பக்கமும் வழித்து சீவியிருந்தார். கண்களில் கொஞ்சம் பயந்த பார்வை.

    என்ன? என்றேன்.

    நீங்க சினிமாப் பார்ப்பீங்களா ஸார்...?

    நான் குழப்பமாய் அந்த நபரைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் நின்று கொண்டிருக்கும் என்னை முன்பின் தெரியாத ஒருத்தர் - திடீரென்று வந்து நீங்க சினிமாப் பார்ப்பீங்களா... என்று கேட்டால் என்ன அர்த்தம்?

    லேசாய் எரிச்சலானேன். மெல்லிய குரலில் கேட்டேன்.

    ஏன்... நான் சினிமாப் பார்த்தா என்ன...? பார்க்காமே போனா என்ன...?

    சும்மா சொல்லுங்க சார்... பார்ப்பீங்களா மாட்டீங்களா?

    பார்ப்பேன்...

    யார் படம் பார்ப்பீங்க...?

    எனக்கும் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. ஜெகதீஸ்வரன் வருகிற வரைக்கும் இந்த மனிதனிடம் பேசிப் பார்க்கலாமே!

    எல்லார் படமும் பார்ப்போம்...

    எல்லார் படம்ன்னா யார் யார் படம்...? அவர் குழந்தைத்தனமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கேட்டார்.

    நான் சொன்னேன். கமல், ரஜினி படம்...

    ஹீரோயின்ல யார் நடிச்ச படம் பார்ப்பே...? திடீரென்று எனக்கு அந்த நிமிஷம் வரைக்கும் கொடுத்து வந்த மரியாதையை திடீரெனப் பிடுங்கிக் கொண்டார்.

    யார் நடிச்சாலும் பார்ப்பேன்...

    ஜெயதாரா நடிச்ச படம் பார்ப்பியா...?

    பார்ப்பேன்...

    இனிமே பார்க்காதே...

    ஏன்... நான் பார்த்தா உங்களுக்கு என்ன...?

    அவ நடிச்ச படத்தை நீ மட்டுமல்ல... யாருமே பார்க்கக் கூடாது. இந்த உலகத்தில் இருக்கிற யாருமே பார்க்கக் கூடாது...

    அதான் ஏன்னு கேக்கறேன்...?

    பார்க்கக் கூடாதுன்னா பார்க்கக் கூடாதுதான்... அவ ரொம்ப மோசம்... ராத்திரியானா போதும், தண்ணி அடிப்பா. பெட்ரூமுக்கு எவனெவனோ வந்து போவான்... புருஷனை மதிக்க மாட்டா...

    அப்படியா...?

    நான் சொல்றதை நீ நம்பணும்... நான் என்னிக்கும் பொய் சொல்ல மாட்டேன்... அவ நிஜ வாழ்க்கையில் ரொம்பவும் மோசம்... படத்துல மட்டும் சாமி வேஷம் போட்டுக்கிட்டு கையில சக்கரத்தை வெச்சுக்கிட்டு - அருள் பாலிக்கிற மாதிரி வந்துடுவா... ஆனா நிஜவாழ்க்கையில கெட்ட பொண்ணு... இனிமே... அவ நடிச்ச படித்தை நீ பார்ப்பியா?

    நான் பதில் சொல்லாமல் அந்த நபரையே பார்த்தேன்.

    அவரின் முகம் திடீரென்று விறைத்தது.

    என்னய்யா... நான் சொன்னது காதுல விழுந்ததா?

    .....

    இனி அவ நடிச்ச படத்தை நீ பார்க்கக் கூடாது. பார்த்தே... அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன். அவ படத்தைப் பார்க்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடு...

    அந்த நபர் என் கையை ‘கப்’பென்று பற்றிக் கொள்ள நான் உதறினேன். கத்தினார். சொல்லு...! இனிமே... அவ நடிச்ச சினிமாவைப் பார்ப்பியா... சத்தியம் பண்ணிக்குடு...

    நான் கையை உதற நினைத்த அதே விநாடி –

    பின்பக்கம் அந்தக் குரல்கள் கேட்டது.

    குமாரு... ஆசாமி அங்கே இருக்கான்... மெதுவா போய்ப்புடி...

    நான் திரும்பிப் பார்த்தேன்.

    வெள்ளுடுப்பு தரித்த

    Enjoying the preview?
    Page 1 of 1