Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachaikili
Pachaikili
Pachaikili
Ebook113 pages51 minutes

Pachaikili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்பை புனிதமாய்... உயிராய் நினைக்கிற கிராமத்து இளம் பெண்னொருத்தி கதை இது. நாயகி பச்சைக்கிளியை உங்கள் அனைவருக்குமே பிடிக்கும். சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டு... தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக... அவள் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள்... என்று நம்புகிறன். அழகானப் பெண்களுக்கு 'தைரியமும் முக்கியம்' என்பதை இந்நாவலின் நாயகி பச்சைக்கிளி நிரூபித்திருக்கிறாள்.
மகேஷ்வரன்
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305670
Pachaikili

Read more from Maheshwaran

Related to Pachaikili

Related ebooks

Reviews for Pachaikili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachaikili - Maheshwaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    பச்சைக்கிளி

    Pachaikili

    Author :

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    என்னுரை

    வணக்கம்!

    வேகமாய் வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர் நான் விடாமுயற்சியோடு நம்பிக்கை இழக்காமல்… ஏகப்பட்ட ஏமாற்றங்களையும், பொருட்படுத்தாமல் போராடி எழுத்துலகில் எனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறேன்.

    இக்குறுநாவல் தொகுப்பில்

    பெண் என்பவள் பூ மாதிரி மென்மையானவள்! பனி மாதிரி குளிரானவள்! நதி மாதிரி தாகம் தீர்ப்பவள்!

    தாயும் பெண்ணே!

    தாரமும் பெண்ணே!

    சகோதரியும் பெண்ணே!

    ஒவ்வொரு பெண்ணிற்குள்ளேயும் ‘தீ’ இருக்கிறது.

    பெண்மையை களங்கப்படுத்த நினைத்தால்…

    அந்த ‘தீ’ பெருகி எரித்து சாம்பலாக்கிவிடும்!

    அதுதான்! பச்சைக்கிளி நாவல்!

    தொடர்ந்து தங்களது ஆதரவை வேண்டும்…

    பின்னத்தூர்

    க. மகேஷ்வரன்

    1

    இளம்பச்சை வண்ணத்தில் சலசலவென்று… ஓடிக் கொண்டிருந்தது ஆறு.

    அந்த வாலைக்குமரிகள்… நான்கு பேரும்… தண்ணீரில் கெண்டை மீன்களாய்… நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    கரையோரத்தில் நின்றிருந்த பருமனான ஆலமரத்தின் விழுதுகளை கைகளினால் இறுகப் பற்றியபடி ஊஞ்சலாடினர்…! தண்ணீரைக் கிழித்துக்கொண்டு ‘பொத்’ ‘பொத்’தென்று குதித்து கும்மாளமிட்டனர்.

    ஆலமரத்தின் அடர்ந்த கிளையிடுக்கில் அமர்ந்திருந்த பறவைக்கூட்டம் சிறகுகளைப் படபடவென்று அடித்தபடி தங்களுடைய உற்சாகத்தைத் தெரியப்படுத்தின. அது பெண்கள் மட்டும் குளிக்கும் பகுதி என்பதால் ஆண்கள் யாரும் அங்கே வரமாட்டார்கள் என்ற துணிவில் ஆடை நழுவியதைக்கூட பொருட்படுத்தாமல் தண்ணீரில் ஆடி மகிழ்ந்தனர்… அந்த தேவதைகள்…

    அந்த பருவச் சிட்டுக்களில் அவள் மட்டும் தனித்திருந்தாள்.

    மாம்பழ வண்ணம்.

    வாளிப்பான உடம்பு…

    வஞ்சகமே இல்லாமல் இளமை… பூத்துக் குலுங்கியது

    வட்ட முகம். திராட்சைப் பழ கண்கள்… ரோசாப்பூ… இதழ்களை ஒட்ட வைத்தது போல இதழ்கள். மயில்போல கழுத்து என பேரழகியாய்த் தெரிந்தாள்.

    இன்னும் சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால்… அழகு அவளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது!

    அவள் பெயர் பச்சைக்கிளி…

    அந்த கிராமத்து ஆண்கள் அத்தனைப் பேருக்கும் கனவுக்கன்னி… அவள்தான்.

    குளிச்சது போதும்டி… நாம கரையேறலாமா? என்றாள் தன் தோழிகளைப் பார்த்து…

    அதற்குள் என்னடி… அவசரம்? இன்னுங்கொஞ்ச நேரம்… நீந்திப் புடிச்சு… விளையாடலாம்டி…

    கரையேற முயன்றவளை… தண்ணீருக்குள்… திரும்பவும் இழுத்தனர்.

    விடுங்கடி… என்னை…

    கையை உதறினாள் பச்சைக்கிளி…

    மஞ்சள் பூசிய முகம், வானத்து நிலவாய் மினுமினுத்தது. மஞ்சள் பட்டதனால் சிவந்த இதழ்கள் இன்னும் வசீகரமாய் காணப்பட்டது.

    கருங்கூந்தலை அள்ளி முடிந்து, மெல்லிய நூல் சேலையைப் பிழிந்து மேனியைச் சுற்றிக் கொண்டாள்.

    தினமும்… நீ ஒருத்திதான் வெகு நேரம் குளிப்பே! இன்னைக்கு என்னடி ஆச்சு உனக்கு? உன்னை யாராவது பார்க்க வர்றாங்களாடி…?

    அடிக்கள்ளி… எங்ககிட்டே எல்லாம் சொல்லவே இல்லையே…!

    நெனைச்சேன்! நீ அவசரப்படறப்பவே நெனைச்சேன்! ஆமா மாப்பிள்ளை எந்த ஊருடி? கறுப்பா… செவப்பா… மாநிறமா?

    ஆள் ஆளுக்கு… பச்சைக்கிளியை சீண்டி, வம்புக்கு இழுத்தனர். தண்ணீரை இருகைகளினாலும் அள்ளி அவளுடைய பளிங்குமேனியில் எறிந்தனர்.

    மண்ணாங்கட்டி! வாயை மூடுங்கடி! என்னை யாரும் பொண்ணுப் பார்க்கவும் வரலை! நானும் யாரையும் மாப்பிள்ளை பார்க்கவும் போகலை! எந்த நேரமும் இதே நினைப்புத்தான்டி உங்களுக்கு?

    கன்னங்கள் சிவக்க பச்சைக்கிளி சிணுங்கினாள்.

    பின்ன எதுக்குடி எங்களையெல்லாம் விட்டுட்டு நீ மட்டும் முன்னாடியே கரை ஏறுறே?

    இன்னைக்கு வியாழக்கிழமை! முத்துப்பேட்டை சந்தைக்கு கொல்லையில வெளைஞ்ச காய்கறிகளையெல்லாம் பறிச்சு எடுத்துகிட்டு அதிகாலையிலேயே கிளம்பி போயிடுச்சுடி எங்கம்மா! வியாபாரத்தை முடிச்சுட்டு அது வீடு திரும்பறதுக்கு மணி மூணும் ஆகும்; நாலும் ஆகும்! வயல் வேலைக்கு போயிருக்கற எங்கப்பாவுக்கு நேரத்துல சோறாக்கி, குழம்பு வெச்சு கொண்டுபோய் கொடுக்க வேணாமா?

    நாங்க கிண்டல் பண்ணாம வேற யாருடி உன்னைக் கிண்டல் பண்றது? சரி சரி… நீ கரையேறு! நாங்க இன்னும் கொஞ்ச நேரம் நீந்திப் புடிச்சு விளையாடிட்டுதான் கரையேறப் போறோம்…

    கிண்டல் பண்றதை பண்ணிடறது. கோபப்பட்டா உரிமைக் கொண்டாடி சமாளிக்கறது. இருங்கடி… உங்களை நாளைக்கு குளிக்கறப்ப கவனிச்சுக்கறேன்…!

    குடத்தில் தண்ணீரை நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

    கோபப்படாதே பச்சைக்கிளி! அடிக்கடி கோபப்பட்டா அழகு குறைஞ்சுடுமாம்…!

    சரிதான்… போங்கடி…

    பச்சைக்கிளி முன்னழகும்… பின்னழகும்… குலுங்க கரை ஏறினாள்.

    இருபுறமும்… பச்சை பசேலென்ற மரங்கள் நிறைந்த செம்மண் சாலையில் அசைந்து… அசைந்து… நடக்க ஆரம்பித்தாள்.

    ஊருக்கு ஒதுக்குப்புறமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1