Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ella Muthangalum Enakke!
Ella Muthangalum Enakke!
Ella Muthangalum Enakke!
Ebook168 pages52 minutes

Ella Muthangalum Enakke!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580128304738
Ella Muthangalum Enakke!

Read more from Maheshwaran

Related to Ella Muthangalum Enakke!

Related ebooks

Reviews for Ella Muthangalum Enakke!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ella Muthangalum Enakke! - Maheshwaran

    http://www.pustaka.co.in

    எல்லா முத்தங்களும் எனக்கே!

    Ella Muthangalum Enakke!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    என்னைப் பற்றி

    என் கண்ணின் மணியான கண்மணி வாசகர்களுக்கு வணக்கம்!

    உங்களின் பேராதரவினால் மீண்டும் சந்திக்க வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. எல்லா முத்தங்களும் எனக்கே நாவல் கடல் பின்னணியில் எழுதப்பட்ட நெகிழ்ச்சியான காதல் கதை, புதிய களம். புதிய கதை. வித்தியாசமான கதாபாத்திரங்கள்.

    இந்த உயிர் உன்னதமானது. விலை மதிப்பில்லாதது. சோகங்கள் இங்கே யாருக்குத்தான் இல்லை? வேதனையின் வலியை உணராத இதயம் இருக்கிறதா என்ன? எந்த சூழ்நிலையிலும் விபரீதமான முடிவைத் தேடிப் போககூடாது. நமக்காக வாழ பிடிக்கவில்லை என்றாலும் பிறருக்காக வாழலாமே? வானவனின் கதாபாத்திரம் மூலம் அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

    நாயகி நெத்திலி உங்களை கலங்க வைக்கப்போகிறாள். இக்கதையை வாசித்த பிறகு எங்கேனும் கடற்கரைக்கு செல்லும் போது உங்களுக்கு கண்டிப்பாய் நெத்திலியின் நினைவு வந்து விடும்.

    உலகிலேயே ஆழமானது கடலா? காதலா?

    புயல்வீசும் கடலில் படகில் சென்று காதலனைத்தேடும் நட்சத்திரா உங்களுக்கு புரிய வைக்கப்போகிறாள். நாவலை வாசித்ததும் அவசியம் விமர்சனம் எழுதுங்கள். உங்களின் விமர்சன அலைகளை எதிர்பார்க்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

    மகேஷ்வரன்

    1

    வரம் தருகிற தேவதை

    கண்முன் தோன்றினால்

    'இப்போது எனக்கு தேவை

    இரண்டே இரண்டு சிறகுகள் மட்டுமே!

    என்றுதான் கேட்பேன்

    அப்போதுதானே

    நீ இருக்கும் திசையை நோக்கி

    பறந்து வரமுடியும்?

    தன்னை யாரும் கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ முடியாது என்கிற துணிச்சலில் கடல் அது பாட்டுக்கு சீறிக்கொண்டிருந்தது. பகல் முழுவதும் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் சிந்தி பூமிக்கு சேவை புரிந்ததன் காரணமாக சூரியன் மேற்கு பக்கம் வானத்தில் பதுங்கி ஓய்வெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

    நன்றாக விரித்துக் காயப்போடப்பட்ட நீலவண்ணச் சோலையாய் பரந்து படர்ந்து கிடந்தது கடல்.

    அருகிலிருந்து மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர்கள் ஈரமணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய நடந்தாள் நட்சத்திரா.

    சிங்கப்பூரில் இருக்கிற விக்டரிடமிருந்து எப்போது அழைப்பு வரும் என்று கையிலிருந்த செல்போனை அடிக்கடி ஏக்கமாய் பார்த்தாள்.

    விக்டர் தினமும் இந்த நேரத்திற்குத்தான் பேசுவான், வீட்டுக்கு அருகில் சிக்னல் பிரச்சினை.

    எத்தனை உரக்கப் பேசினாலும் விக்டரின் குரல் விட்டு விட்டுதான் கேட்கும். அதனால் தான் செல்போனை எடுத்துக் கொண்டு கடற்கரைப் பக்கமாய் வந்துவிட்டாள்.

    அது ஒரு அழகான கடற்கரையோர கிராமம்.

    கிராமத்தின் பெயர் படகு கட்டிக்கரை.

    மொத்தமே நூற்றி ஐம்பது வீடுகள்தான்.

    பெரும்பாலானவர்கள் மீனவர்கள்.

    கடலையே நம்பியிருக்கும் மனிதர்கள். அவர்களை வாழ வைப்பதும் கடல்தான். அவர்களை அழிப்பதும் கடல்தான். அவர்களை சிரிக்க வைப்பதும் கடல்தான். அழவைப்பதும் கடல்தான். எல்லாமே கடல்தான்..

    அடிக்கடி அந்த கிராமத்தில் கடல் கொந்தளிப்பு நிகழ்வதுண்டு..

    கடல் நிறைய தடவை நிறைய உயிர்களை குடித்திருக்கிறது.. பாதி பேர் வீட்டைக்காலி பண்ணிக்கொண்டு வெளியூருக்கு ஓட காரணமே கடல்தான்.

    நட்சத்திராவின் அப்பா செபஸ்டியன் அந்த கிராமத்திலேயே வசதியானவர். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்று இப்போது தொழிலதிபராக கொடிகட்டி பறக்கிறார்.

    நட்சத்திரா அவருக்கு ஒரே மகள்.

    கல்யாணமாகி பத்து வருடங்கள் கழித்து பிறந்தவள் என்பதால் செபஸ்டியனுக்கும் அவர் மனைவி அற்புதராணிக்கும் நட்சத்திராவை ரொம்ப பிடிக்கும்.

    நட்சத்திரா மீது கொள்ளைப்பிரியம் வைத்திருந்தார்கள். அவள் ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி விடுவார்கள்.

    விக்டர் நட்சத்திராவின் முறைப்பையன்.

    சொந்த அத்தைமகன்.

    விக்டர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திருச்சியில்தான், இப்போது கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் மிகபெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான். விக்டரின் அப்பா சகாயமும், அம்மா கிரேஸியும் திருச்சியில் வசிக்கிறார்கள்.

    உம்பொண்ணு நட்சத்திராவை எம்புள்ளைக்கு கொடுத்துடுண்ணே...

    நட்சத்திரா சிறு குழந்தையாக இருக்கும் போதிலிருந்து செபஸ்டியனிடம் நச்சரித்துக் கொண்டேயிருப்பாள் கிரேஸி.

    இப்பவே வாக்குறுதி கொடுக்கறது தப்பு கிரேஸி. ரெண்டு பேரும் வளரட்டும். கல்யாண வயசு வர்றப்போ அவங்க மனசுல என்ன இருக்குதோ அதை ஏத்துக்கலாம்.

    புன்னகையை சிந்துவார் செபஸ்டியன்.

    விக்டரும், நட்சத்திராவும் வளரவளர அவர்களை அறியாமலேயே இருவருக்குள்ளும் ஆசையும் காதலும் வளர்ந்து செழித்துவிட்டது.

    ஒவ்வொரு வருடமும் விடுமுறை மாதத்தில் விக்டர் இங்கே வந்துவிடுவான். அல்லது நட்சத்திரா திருச்சிக்குப் போய்விடுவாள்.

    கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிய விக்டர் கிளம்பிய போதுதான் நட்சத்திராவின் காதல் எல்லோருக்கும் தெரியவந்தது.

    வேணாம்.. விக்டர்.. என்னை விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க.. வெடித்துக் கதறினாள்.

    கண்கள் பொங்கி வழிந்தது. ஏங்கி ஏங்கி அழுததில் கன்னங்கள் வீங்கிப் போனது.

    பிளீஸ் நட்சத்திரா. அழாதே.! நீ இல்லாம நானில்லை. எப்பவும் எம்மனசுல நீதான் இருப்பே. இது நல்ல வாய்ப்பு. வேணாம்னு உதறினா திரும்ப கெடைக்காது. நாலு வருஷ ஒப்பந்தம்தானே. முடிஞ்சதும் ஓடி வந்துடுவேன். வந்ததும் நம்ம கல்யாணம்தான்..

    கண்ணீரைத் துடைத்து விட்டான். காதலோடு உருகினான்.

    நட்சத்திரா... உம்மனசுல விக்டர்தான் இருக்கான்னு தெரிஞ்சதும் நா எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா? கர்த்தர் என்னை கைவிடலைம்மா. நா ஆசைப்பட்டதையே நடத்தி வெய்ப்பார். அழாம சந்தோஷமா விக்டரை அனுப்பி வெய்மா! என்னைக்கு இருந்தாலும் நீதான் எனமருமக.. கிரேஸியும் நிறைந்த மனதோடு தழுதழுத்தாள்.

    அப்பா நீங்க ஒண்ணுமே சொல்லலையே..

    செபஸ்டியனை தயக்கமாய் ஏறிட்டாள் நட்சத்திரா.

    சொந்த அத்தைப் பையனைத்தானே கையை காட்டி இருக்கே? தடுப்பேனா நா? எப்பவும் நானும் அம்மாவும் உன்பக்கம்தான். உன்னோட சந்தோஷம்தான் எங்களோட சந்தோஷம்.

    அப்பா..

    விக்டர் திரும்பி வந்ததும்... இந்த ஊரே வியக்கறாப்ல உங்களோட கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்மா..

    மனமகிழ்ச்சியோடு அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டிருந்தார் செபஸ்டியன்.

    இது போதும்பா.. தேங்ஸ்பா..

    குரலில் உற்சாகம் சிதறியது.

    விக்டர்.. நான் காத்திருக்கேன் விக்டர்! நீங்க பத்திரமா திரும்பி வர்றவரைக்கும்.. நா இமைக்காமல் காத்திருக்கேன்.

    விக்டரின் தோளில் காதலோடு சாய்ந்தான்.

    விமானநிலையம் வரை சென்று கண்ணீரோடு கையசைத்து வழி அனுப்பினாள்.

    இதோ நான்கு வருடங்கள் கரைந்துவிட்டது.

    இன்னும் சில தினங்களில் விக்டர் இந்தியாவில் வந்து இறங்கப்போகிறான்.

    விக்டர் வீட்டிற்கு வந்ததும் மறுநாளே அவனுக்கும் நட்சத்திராவிற்கும் கல்யாணம்தான். கிரேஸியிடமும், சகாயத்திடமும் கலந்து பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் செபஸ்டியன்..

    வேளாங்கன்னி தேவாலயத்தில் தனக்கும் விக்டருக்கும் நடக்கப்போகிற கல்யாணத்தை நினைத்து நினைத்துப் பூரித்துப் போயிருந்தாள் நட்சத்திரா.

    அந்த சந்தோஷ தருணங்களுக்காகத்தான் கனவுகளோடு காத்திருந்தாள்.

    "நீதானா... நீதானா.. நெஞ்சே நீதானா

    நீயின்றி நான் இங்கே வாழ்வேனா..

    அன்பே அன்பே நீதான் அன்பே.."

    நட்சத்திராவின் கையிலிருந்த செல்போன் மூலம் அந்த பாடல் காலர்ட்யூனாய் ஒலித்தது.

    விக்டர்தான் அழைத்தான்.

    பரவசமானாள் நட்சத்திரா.

    செல்போனில் பச்சைப் பொத்தானை அழுத்தி காதில் வைத்தாள்.

    சொல்லுங்க விக்டர்..

    எப்படி இருக்கே நட்சத்திரா.?

    மறுமுனையிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1