Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Imaiyaney... Ithayaney...
Imaiyaney... Ithayaney...
Imaiyaney... Ithayaney...
Ebook298 pages2 hours

Imaiyaney... Ithayaney...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இனியா தனது அண்ணன் இமயனின் வரவை தினம் தினம் எதிரபார்க்கின்றாள். தொலைந்தவன் வரலாம் மறைந்து கொள்பவன் வருவானா? இதய மறுத்துவனான இமயன் தனது உத்தியோகத்தை உதறி தள்ளி, வீட்டை விட்டும் உடன் பிறந்த அன்பு தங்கையை தனித்து விடுத்தும், யாருமாறியா இடத்தில் தனித்து வாழ்வது ஏன்?

தன்னை துரத்தி வந்த இருவரிடமிருந்து திருமணமானப் பெண் ஸ்ருதி இமயனிடம் அடைக்கலமாக அவளின் வாழ்வை உரியவரிடம் ஒப்படைக்க இமயன் எடுக்கும் நடவெடிக்கை என்ன? ஸ்ருதிக்கும், இமயனுக்கும் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் காதல் துடிக்குமா? இதயம் கணக்கும் இனிய முடிவு கொண்ட காதல் கதை.

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580169410164
Imaiyaney... Ithayaney...

Related to Imaiyaney... Ithayaney...

Related ebooks

Reviews for Imaiyaney... Ithayaney...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Imaiyaney... Ithayaney... - Praveena Thangaraj

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இமயனே... இதயனே...

    Imaiyaney... Ithayaney...

    Author:

    பிரவீணா தங்கராஜ்

    Praveena Thangaraj

    For more books

    https://www.pustaka.co.in/home/author/praveena-thangaraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இதயம் - 1

    இதயம் - 2

    இதயம் - 3

    இதயம் - 4

    இதயம் - 5

    இதயம் - 6

    இதயம் - 7

    இதயம் - 8

    இதயம் - 9

    இதயம் - 10

    இதயம் - 11

    இதயம் - 12

    இதயம் - 13

    இதயம் - 14

    இதயம் - 15

    இதயம் - 16

    இதயம் - 17

    இதயம் - 18

    இதயம் - 19

    இதயம் - 20

    இதயம் - 21

    இதயம் - 22

    இதயம் - 23

    இதயம் - 24

    இதயம் - 25

    இதயம் - 26

    இதயம் - 27

    இதயம் - 28

    இதயம் - 29

    இதயம் - 1

    நீண்ட நேரமாக அப்பெரிய வீட்டின் வரவேற்பறையில் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த அலைப்பேசி மீண்டும் மீண்டும் அலறியது.

    கொஞ்சம் காலமாக எத்தனை விதமான அலைப்பேசி அழைப்புகள், அனைத்தும் அவன் ஒருவனைப் பற்றியே கேட்டு வந்து கொண்டிருக்கின்றன.

    தன் ஒற்றை செயற்கை காலோடு கஷ்டப்பட்டு வந்து அலைப்பேசியை எடுத்தாள் இனியா.

    ஹலோ நான் வசந்த் பேசறேன். டாக்டர் இமயன் இருக்காரா? என்று கேட்டது அந்தக்குரல். இதற்கு முன்னும் இதே நபர் அழைத்திருக்க இனியாவுக்கு அப்பெயர் நினைவு வந்தது.

    சார் நீங்களா... எதுக்கு சார் திரும்பத் திரும்பக் கால் பண்ணறிங்க. இமயன் அண்ணா இங்க இல்லை. இங்க இல்லை இங்க இல்லை. அவர் எங்க போனார் என்று தெரியலை. இங்க வந்தா நிச்சயம் பெரிய பேப்பரில் விளம்பரம் கொடுக்கறோம். நாங்களே எங்க அண்ணா எப்ப வீடு வந்து சேருவார்னு எதிர்பார்ப்போட இருக்கோம். ப்ளிஸ் தொந்தரவு செய்யாதீங்க. என இனியா என்ற பெயருக்கு எதிர்பதமாக எரிந்து விழுந்தாள்.

    சாரி மேம்... அவர் இதயம் மாற்றுச் சிகிச்சை செய்தார். அதற்கு நன்றி சொல்லதான் முயற்சி பண்ணினோம். ஆனா எத்தனை தடவை மருத்துவமனை போன் போட்டும் அவர் வரலை என்றதால தான் பர்சனல் நம்பருக்கு அழைக்க வேண்டியதா போச்சு என்று மன்னிப்பு கேட்டது வசந்த் என்ற குரல்.

    இனியா கோபத்தை குறைத்து, கடைசியானா... பெங்களுர் சுந்தரம் மருத்துவமனையிலா? என்று கேட்டாள்.

    ஆமா மேம் அங்கதான். என்றது எதிர்பக்க வசந்த் குரல்.

    யாருக்கு பொருத்தியிருக்காங்க? என்று கேட்டாள். இம்முறை கனிவை தேங்கியிருந்தது இனியா குரல்.

    எங்க எம்டியோட தம்பிக்கு மேம். எம்டிதான் தொடர்ந்து போன் செய்து இமயன் டாக்டருக்கு நன்றி கூறச் சொன்னார்.

    சார்... என் அண்ணா இமயன் எங்க போனாருனு தெரியலை. அவர் திரும்பி வந்தா நிச்சயம் இதயம் பொருத்தப்பட்ட நபரை பார்க்க நிச்சயம் வருவார். ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க என்று அணைத்து விட்டுச் சோபாவில் அமர செல்ல அதற்குள் சற்று தள்ளாடி முடித்து விழும் நேரம் இனியா கணவன் அரவிந்த் பிடித்திருந்தான்.

    என்ன இனியா பார்த்து நடக்கக்கூடாதா? என்று கைதாங்கலாக அமர வைத்தவன் போன்ல யாரு? என்று ஆர்வமாகக் கேட்டான்.

    இமயன் அண்ணாவை கேட்டு போன் அரவிந்த். நன்றி சொல்ல... அண்ணா கடைசியா செய்த இதயமாற்று சிகிச்சைக்காக. என்று நெஞ்சில் சாய்ந்து அழவும், அரவிந்த் அவள் தலையைக் கோதி ஆறுதல்படுத்தினான்.

    இங்க பாரு இனியா... உங்கண்ணா இமயன் திரும்ப வருவார். அப்போ என் தங்கையை அழவைக்கிறியா அரவிந்த் என்று அதட்டுவார் என்று மனைவி அழுவதை நிறுத்தப் போராடினான்.

    முடியலை அரவிந்த். தினமும் ஒர் போன் காலாவது இமயன் அண்ணாவை கேட்காம இல்லை. எத்தனை முறை பதில் சொல்லறேன் தெரியுமா? சில நேரம் போன் கூட வேண்டாம்னு கட் பண்ணி வைக்கலாமானு தோன்றுது. ஆனா அந்த நேரம் இமயன் அண்ணா கால் செய்துட்டா? அந்த ஒரு காரணத்துக்காகத் தான் காத்திருக்கேன். என்றவளை சிகையை வருடிக் கொண்டிருந்தான்.

    அதே நேரம் சிவா வந்து கொண்டிருந்தான்.

    அரவிந்தின் அண்ணன் சிவா. வாசலில் அவனைக் கண்டதும் இனியா கண்களைத் துடைத்து முடிக்க, அரவிந்தும் அவள் தோளிலிருந்து கையை எடுத்து வரவேற்றான்.

    வாங்கண்ணா... அத்தானை பற்றித் தெரிந்ததா? என்று அரவிந்த் கேட்க, மௌனத்தைப் பதிலாய்த் தந்தான் சிவா.

    இனியா எழுந்து கிச்சனில் டீ போட செல்ல, அவள் சென்றதை ஊர்ஜிதப்படுத்திச் சிவா அரவிந்திடம் மென்குரலில் பேச ஆரம்பித்தான்.

    "இமயன் போனை யாரோ ஒர் நபர் எடுத்து வேற சிம்மை போட்டு உபயோகப்படுத்த பார்த்தாங்க. போன் IMEI நம்பரை வைத்து கண்டுபிடிச்சாச்சு.

    அதோட... இமயன் கார் திருடியிருக்காங்க. போலீஸ் அடிச்சி விசாரிச்சதில் கார் பாம்பன் பாலத்தோடு முனையில் இடிச்சி இருந்ததாம். உள்ள யாருமே இல்லை என்றாலும் விலையுயர்ந்த போன் கார் என்றதால் திருடியதா வாக்குமூலம் தந்து இருக்காங்க."

    இமயன் அத்தானுக்கு என்னாச்சு அவர் கார் எப்படி அங்க? என்று அரவிந்த் கேட்டதும் கையை விரித்தான் சிவா.

    தெரியலை... திருடினவன் ஒரு வேளை அவர் கடலில் குதித்து இறந்துயிருக்கலாம்னு சொல்லறான். என்று சிவா முடிக்கவும்.

    நீங்க நம்பறிங்களா? என்றான் அரவிந்த். தன் இல்லாள் வரக்கூடாது கேட்ககூடாது என்ற தவிப்போடு சிவாவிடம் பேசினான்.

    "இல்லை... நம்பலை... பெங்களுரில் ஆப்ரேஷன் முடிந்து அவன் எப்படி இராமநாதபுரம் பக்கம் போனான். எதுக்கு... அப்படியே போனாலும் அங்க போய் இறக்க முடிவு பண்ண மாட்டான்.

    சாகறதா முடிவெடுத்தா சின்ன நைப் போதும் அவனுக்கு. உடல் அங்கம் எங்க கட் செய்தா எத்தனை மணிக்குள் உயிர் போகும்னு தெரிந்தவன்.

    அதுவுமில்லாம தன் உடல் உறுப்பை மீனுக்கு இரையாக விடமாட்டான். அவனுக்குத் தெரியாததா? மனித உடல் பாகத்தோட முக்கியத்துவம்." என்று சிவா கூறினான்.

    அவர் எங்கதான் இருக்கார். எப்படித் தான் கண்டுபிடிக்க? உயிரோட இருக்காரா செத்தாரானு தெரியாம தினம் தினம் இனியா தவிக்கறா. கஷ்டமா இருக்கு அண்ணா. என்ன செய்யலாம். என்று தவிப்பாய் கேட்டான் அரவிந்த்.

    சின்னதா ஒரு விளம்பரம் கொடுப்போம். அதுல அவனைத் தேடி ஒரு மெஸேஜ். கடைசியா முயற்சி செய்யலாம். அதுக்குப் பிறகு என்னால எந்த முயற்சியும் பண்ண முடியாது. என்று ஏதோ ஆதரவாய் முடித்தான்.

    என்ன மெஸேஜ் கொடுக்க? என்று கேட்கவும் இனியா கப்பை கீழே போட்டு சரியவும் பயந்து ஓடி வந்தனர் இருவரும்.

    ஒன்றுமில்லை அரவிந்த். லைட்டா தலை சுத்துது. சாரி சிவாத்தான். என்று எழ போராடினாள்.

    அதற்குள் சோபாவில் அமர, சிவா பல்ஸை ஆராய்ந்து முடித்தான்.

    இனியா கருவுற்று இருக்க, பேபி பார்ம் ஆகியிருக்கு. எதுக்கோ டெஸ்ட் எடுத்துடுமா. மெஸேஜா இதையே மறைமுகமா கொடுப்போம். என்று சிவா கூறவும் அரவிந்த் இனியாவை முட்டிப்போட்டு மடியில் தலை சாய்த்திருந்தான்.

    சிவா கூறவும் தான் இனியாவே நாட்களை எண்ணி பார்த்து முடித்தாள்.

    அத்தான் இந்த நியூஸை பார்த்தா அண்ணா சந்தோஷமா என்னை பார்க்க வருமா? என்று கேட்டாள் இனியா.

    எப்படிச் சொல்வார்கள் அவன் இருக்கின்றானா? இறந்துள்ளானா? அறியவே இந்த முறை என்று.

    அடுத்த நாளே இனியா அரவிந்த் புகைப்படம் அரைபக்கம் போட்டு வாழ்த்து கூறும் விதமாகச் சிவா செய்தியை மூலை முடுகெல்லாம் அறிய வைத்தான்.

    அதன் காரணமாக அண்ணா வாழ்த்து சொல்லவாது பேசுவான் என, என்றும் அலைப்பேசியை கையில் வைத்து இருந்தாள். மேலும் கார்டுலஸையும் கைப்பேசியோடும் சுழன்றாள் இனியா.

    ஸ்டிக் வைத்து நடந்தாலும் அதிகமாகக் கால் வலிக்கும் என்று அரவிந்த் கீழே அறையை மாற்றி இருக்க ஹாலுக்கும் அறைக்குமாய் அலைந்தாள்.

    ஆனால் அவள் எதிர்பார்த்த அழைப்பு தான் வரவில்லை.

    இரண்டு வாரம் கடக்கவும் சிவா இமயன் இறந்துவிட்டதாக முடிவே கட்டினான்.

    அரவிந்தோ ஓரளவு புரிந்து கொண்டான். இலக்கியாவோ பைத்தியம் போலப் போனுக்குக் காத்திருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

    இமயன் உயிரோடு இருக்கின்றனரா இல்லையா என்று தவிக்க உறவுகள் இருந்தும் அவன் தான் யாரையும் பார்க்க முடியாமல் தனித்துச் சென்றிருந்தான்.

    அதுவொரு தீவு.

    தனிதீவில் சில கட்டிடம் இருக்கும். ஹனிமூன் காட்டேஜ் போன்றோ தனித்துப் பேச்சுலர் கொட்டம் அடிப்பதற்கும், அந்த ஹோட்டல் ரெசார்ட் இருந்தது. வாரத்திற்கு இரண்டு முறை தான் படகுகள் வரும்.

    அவனைக் காண கரைச்சேர்த்த அந்தப் படகும் சில நேரம் வரும். அடிக்கடியெல்லாம் வராது. இருவர் மட்டுமே அந்தப்பக்கம் போட்டில் சுற்றுவார்கள்.

    போட்டில் இருந்த தந்தை, கூட வந்த சிறுவனிடம், டேய் கொடுத்துட்டு உடனே வா. அங்கயே பேசிட்டு நிற்காதே. படகு மீன் பிடிக்கப் போகணும் என்று அறிவுறுத்தியே அனுப்பினார்.

    அந்தச் சின்னப் பையனோ, ஆமா நான் பேசிட்டாலும் அந்தண்ணா அப்படியே பேசிடும். பிரண்டை பார்த்துக்க அப்பா என்று முணங்கி அந்தத் தீவில் தனித்திருந்த குடிசை போன்ற இடத்திற்கு வந்தான்.

    அண்ணா... அண்ணா... என்று குடிசைக்குள் தலையை நுழைத்து அழைத்தான்.

    என்னாச்சு... இரண்டு வாரமா வரலை என்று பின்னாலிருந்து கேட்டான் இமயன்.

    ஜூரம்னா... என்று எடுத்து வைத்த பேப்பர் காய்கறி மற்றும் சில பொருட்களைக் கூடையில் போட்டு விட்டு எதுனா வேணுமா அண்ணா என்றான். இல்லையெனத் தலையசைத்தான் அவன்.

    முட்புதர்போன்ற தாடிகள் அவன் சோகத்தின் மறு அவதரம் என்று காட்டி கொடுத்தது.

    தன்னிடமிருந்த ரூபாய் நோட்டை நீட்டவும் பெற்றுக்கொண்டு அந்தச் சின்னப் பையன் அகன்றான்.

    இரண்டு மாதம் வாங்கி வந்ததற்குக் கொடுத்துவிட்டான். இது அடுத்த மாதத்திற்கு என்று புரிந்து கொண்டு வித்தியாசமாகப் பார்த்தபடி சென்றான்.

    அந்தண்ணா யார்டா. ஏன் இங்க வந்து வாழுது. என்றான் போட்டிலிருந்த அவன் தோழன்.

    அதுவா... தெரியாது. இரண்டு மாதமா இங்கதான் இருக்கு. குடிசை போட்டு இலையிலே செமையா வீடு கட்டியிருக்கு. அந்த இரண்டு தென்னமரத்தில் ஒரு தொட்டில் மாதிரி கட்டியிருக்கு. அதுலதான் அடிக்கடி தூங்கும் போல. ஒருமுறை அப்பாவோட போட் ஓட்ட தனியா சொல்லிக்கொடுக்க எடுத்துட்டு இந்தப் பக்கம் வந்தோம். அப்ப தண்ணிரில பார்த்தோம். காப்பாற்றி இங்கதான் நிறுத்தினார். அதுக்கு என்ன தோன்றுச்சோ இங்கயே இருக்கேன். வாரத்துக்கு ஒருமுறை இந்தபக்கம் வருவோம்னு சொன்னதும் தேவையானதை மட்டும் லிஸ்ட் போட்டு தரும். வாங்கியாந்து கொடுப்பார். அப்பா வரலைனா கூட நான் இந்தப்பக்கம் வர்றப்ப கொடுத்துட்டு போவேன் என்று பேசியபடி கடலில் சென்றனர்.

    இமயனுக்கு தேவையானது வந்ததும் முதல் வேலையாகப் பேப்பரை தான் பார்ப்பான்.

    இனியா கருவுற்றுயிருக்கும் வாழ்த்து செய்தி சிவா அதில் தன்னைத் தேடுவது அப்பட்டமாக தெரிந்தது.

    இமயன் உதடு சின்னதாய்ப் புன்னகைத்தது.

    உடனடியாகத் தனது கைகடிகாரத்தை எடுத்தான். அது மின்சாரம் இல்லாமல் சூரியனின் மூலமாக இயங்கும். அதை வாங்க சொல்லி அடம்பிடித்தவள் இன்று உயிரோடு இல்லை.

    வாழ்த்துகள் இனியா - அரவிந்த். சிவா நான் உயிரோடதான் இருக்கேன். என்னைத் தேட வேண்டாம். சாக மாட்டேன். எனக்கா எப்ப திரும்ப வரணும்னு தோன்றுதோ அப்ப வர்றேன். என்று அனுப்பி விட்டு வாட்சை வீட்டுக்குள் வைத்து விட்டான். நொடியில் அனுப்பிவிட்டு அணைத்து விட்டான்.

    சிவாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனை அப்படியே இனியா -அரவிந்திற்கு மெயிலை ஃபார்வார்டு அனுப்பினான்.

    மெயிலில் அதன் பிறகு இனியா நிறைய முறை உருக்கமாக அனுப்பி, காண வரச்சொல்லி தினமும் இரண்டு மூன்று அனுப்பியும் அவன் பார்க்கவில்லையா அல்லது பார்த்தும் பதில் அளிக்கவில்லையா என்று புலம்புவாள்.

    அவனாக வரும் வரை நாம் தேடுவது பிரோஜனம் இல்லை. கடைசியாக அனுப்பிய மெயில் கூட எங்கிருந்து அனுப்பினான் என்று கண்டறிய முயன்றால் தோல்வியே கிடைத்தது. இனி அவனாக வரவேண்டும் என்ற உண்மை மிகத் தாமதமாக உணர்ந்தாள்.

    தன் மகள் மோனிஷா பிறந்த பிறகே...

    ஒன்றை வருடம் கடந்து விட்டது இமயன் உயிரோடு இருக்கின்றான் என்பது மட்டும் அறிந்தனர். ஆனால் எங்கே என்று அறிய இயலவில்லை.

    தற்போது சின்னப் பையனாகப் போட் ஓட்டிய இருந்த ராமு பதினெட்டில் அடியெடுத்து வைக்கத் துவங்கினான்.

    சார் ஒன்ற வருஷமா இங்க என்ன பண்ணறிங்க சார்? உங்களுக்குச் சொந்தகாரங்க யாருமில்லையா? என்று கேட்டான்.

    இமயனோ பதில் பேசாமல் லிஸ்ட் மட்டும் கொடுத்து விட்டு, தன்னிடம் இருக்கும் கடைசிப் பணத்தைக் கொடுத்து முடித்தான்.

    காட்டுவாசியென்றால் தற்போது கனகச்சிதமாக இருக்கும். அந்தளவு மாறியிருந்தான் இமயன்.

    என்றைக்கும் போலப் பதிலின்றி ராமு போட் ஓட்டி சென்றான்.

    இமயன் வாரப் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருந்தான்.

    அவனுக்குக் கையிலிருந்த பணம் மொத்தமும் காலியானது. இனி போட் ஓட்டும் ராமுவுக்குப் பணம் கொடுக்க எப்படியும் ஏடிஎம் செல்ல வேண்டும்.

    யாரையும் பார்க்க பிடிக்கவில்லை ஆனால் பணம் வேண்டுமே. இயற்கையோடு ஒட்டிய வாழ்விற்கு அவன் கையில் இருந்த பணம் இந்த ஒன்றையாண்டு காலம் வந்ததே பெரிய விஷயம்.

    நாளை என்பதைப் புறம் தள்ளி இரவுக்குத் தேவையான சுள்ளியை பொறுக்கி வந்து ஊஞ்சலருகே அடுக்கி வைத்தான்.

    கடற்கரை தாண்டி அங்கே சற்றுத் தள்ளியிருக்கும் ஓடை போன்றவற்றில் குளிக்க ஆரம்பித்தான்.

    அங்கே அடிக்கடி மனிதர்கள் வருவார்கள் தங்குவார்கள். அதனால் ஓரளவு உப்பு வாட்டர் குறைந்த பகுதி அவ்விடம் மட்டும் உண்டு.

    மெல்ல இருள் சூழ தீப்பொறி ஏற்றிவிட்டு பிடித்த மீன்களின் மேற்புறத்தினை உரித்து நெருப்பில் வாட்டி தக்காளி சாஸ் தடவி அதனை வைத்து மென்றான்.

    பார்க்க மட்டும் அல்ல. கிட்டதட்ட காட்டுவாசியாகவே மாறியிருந்தான். அதனாலோ என்னவோ சுவையென்பது மறுத்துப் போயிருந்தது அவன் நாவில்.

    அவன் ஏற்றிய நெருப்பு மெல்ல மெல்ல அணைந்தது.

    எப்பொழுதும் போலத் தீயை அணைக்காமல் சிறுக வைத்து விட்டு அந்தயிடத்தில் கடலை பார்த்து உறங்க ஆரம்பித்தான்.

    வீல்லென்ற அலறலோடு ஒர் பெண் கத்த, இமயனோ உறக்கத்தின் பிடியில் இருந்தான்.

    இதயம் - 2

    அதிவேகமாக ஓடி வந்தது அப்பெண்ணின் கொலுசு கால்கள்.

    மூச்சு வாங்க தன் சேலையினைத் துரியோதனிடம் கொடுத்துவிட்டு ஓடும் பேதையாக, கண் மண் தெரியாது ஓடினாள்.

    சேலையை இழுத்த அடுத்த நொடி மீண்டும் கதறும் ஓசையைக் கேட்டதும் இமயன் விழிதிறந்து நின்றான்.

    இந்த இடத்தில் அலறல் சத்தமா? என்று யோசித்தவன் குரல் வந்த திக்கில் நடக்க முயன்றான்.

    ஆனால் அவனுக்கு அதிக தேடுதல் இல்லாமல் அவன் மீது மோதி மூர்ச்சையானாள் அவள்.

    இமயனுக்கு அவளின் கோலம் கண்டு பின்னாடி பார்த்தான். இருவர் துரத்துவதும் முதலில் அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

    துரத்தி வந்த ஒருவனோ கையிலிருந்த செயினைத் தூக்கியெறிந்து சரிந்தான். கூடவே ஓடி வந்தவன் தன் மீது சாய்ந்தவளை தீண்ட இமயன் அடித்ததில் மயங்கி விழுந்தான்.

    இமயன் அந்தப் பெண்ணைத் தன் குடிலில் படுக்க வைத்து அந்தச் சிவப்பு சேலையைப் போர்த்தி விட்டான்.

    தூக்கியெறிந்தவன் என்ன வீசினான் என்று பார்க்க அதிர்ந்தான். அவன் கரங்களுக்குள் ‘பொன்தாலி’ பளிச்சிட்டது.

    அதே நேரம் ஒரு ரூம்பாய் உடையோடு ஒருவன் ஓடி வந்து, சார் சார் போதையில் இருக்காங்க சார். இப்ப புத்தி சொன்னா புரியாது. என்றதும் இமயனோ அடக்கப்பட்ட சினத்தோடு கூட்டிட்டு போங்க என்றான்.

    ரூம் பாய் ஒன்றன் பின் ஒன்றாகத் தூக்கிக் கொண்டு சென்றான். உள்ளேயிருக்கும் பெண்ணைக் கண்டு அவளை ஆராய்ந்து முடித்தான். அவள் உடலை கண்டு அதிர்ந்து, பின் அவளுக்கு பயத்தினால் ஏற்பட்ட மயக்கம் என்று வெளியே வந்து வானத்தின் நட்சத்திரத்தை எண்ணினான்.

    அதிகாலை போதை ஆசாமி தங்கள் அருகே இருந்தவளை காணவில்லை என்றதும் அவள் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்று அஞ்சி இருவரும் இடத்தை மறந்து ஓடினார்கள்.

    உறக்கமா, மயக்கமா, கலைந்த பெண்ணவள் எழுந்து தன் நிலையை முதலில் உணர்ந்தாள். தான் அணிந்த சேலை தனக்குப் போர்வையாக மாறியிருக்கவும் இடத்தையும் கண்டு மெல்ல எழுந்து உடுத்தி வெளியே வந்தாள்.

    டீ தயாரித்துக் கொண்டிருந்த இமயனின் பக்கவாட்டில் மெல்ல நடந்தவள் அடிக்கக் கட்டையைத் தூக்கவும், இமயன் திரும்பவும் கட்டையைக் கீழே போட்டாள்.

    இமயனோ, நேற்று ஓடி வந்த... இரண்டு பேர் துரத்தினாங்க, என் மேல மோதி மயங்கிட்ட, அவங்களை ரூம்பாய் திரும்பக் கூட்டிட்டு போயிட்டான். நீ இப்ப பாதுகாப்பாதான் இருக்க, நீ தாராளமா இனி போகலாம். இது அவன் தூக்கியெறிந்தது. இந்தா என்று ரத்தின சுருக்கமாய் கூறி நீட்டினான்.

    அப்பெண் அதனை வாங்கவில்லை. கற்சிலை போல அமர்ந்தாள்.

    முதல் நாள் பயத்தில் இப்படி மாற்றம் பெறாது இருக்கின்றாளென, இமயன் ‘டாக்டர்’ என்ற ரீதியில் அவளை அமைதியாக விட்டு விட்டான்.

    டீயை நீட்டவும் அவளும் அமைதியாகப் பெற்று கொண்டாள்.

    நீ யாரு...? உன் பெயர் என்ன...? அவங்களிடம் எப்படி மாட்டின? உன் கணவர் எங்க? நீ இந்த ஊரா...? உனக்கு இங்க வேற யாராவது தெரியுமா? என்று இரண்டு வருடத்தில் இமயன் நீண்டு பேசி முடித்தான். ஆனால் அவளோ அவனுக்கு மேலாகப் பேச யோசித்தாள்.

    எதற்குமே வாயை திறக்கவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1