Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neer Thedum Nenjangal
Neer Thedum Nenjangal
Neer Thedum Nenjangal
Ebook136 pages1 hour

Neer Thedum Nenjangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Aadhalaiyur Suriyakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466442
Neer Thedum Nenjangal

Related to Neer Thedum Nenjangal

Related ebooks

Related categories

Reviews for Neer Thedum Nenjangal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neer Thedum Nenjangal - Aadhalaiyur Suriyakumar

    17

    1

    ஆதித்யா இப்படி திடீரென்று வந்து நிற்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    பைக்கில் இருந்து இறங்கி வந்த ஆதித்யாவை ஓடிச்சென்று வாரி அணைத்துக் கொண்டாள் அம்மா காமாட்சி.

    என்னடா இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கற... வா… வா… உடம்புக்கு எப்படி இருக்கு? வாசல் வரை வந்து ஆதித்யாவை வரவேற்றுக் கொண்டே கேட்டார் கலியமூர்த்தி ஆதித்யாவின் அப்பா...

    போன் பண்ணலாம்னுதான்ப்பா நினச்சேன். அப்புறம் உங்களைத் தொந்தரவு பண்ண வேணாமின்னு தோணுச்சு. ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்ணுதான் இப்படி வந்து நின்னுட்டேன்.

    அதுவும் இல்லாம என் பிரண்ட், அதாம்ப்பா நம்ம ரவி காலைலயே பஸ்ஸ்டாண்ட்ல வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்னு ராத்திரியே போன் பண்ணிட்டான். பின்னால் திரும்பி ரவியைப் பார்த்தான் ஆதித்யா.

    வாப்பா ரவி… ரெண்டு பேரும் உள்ள வாங்க… கலியமூர்த்தி இந்த இருவருடனும் உள்ளே ஹாலுக்கு சென்றார்.

    பொழுது இன்னும் விடியாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. மெல்லிய குளிர் பரவிப் படர்ந்து கொண்டு இருந்தது. சாலையில் செல்வோரின் முகங்கள் இன்னும் மங்கலாகவே தெரிந்தன.

    ஹாலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டார்கள் ஆதித்யாவும், ரவியும்.

    நான் புறப்படறேன்டா. ராத்திரி முழுக்க பஸ்ல பயணம் செஞ்சி வந்திருக்க. ரொம்ப களைப்பா இருக்கும். நீ ரெஸ்ட் எடு. நான் சாயங்காலம் வந்து உன்னை சந்திக்கிறேன்.

    ரவி புறப்படத் தயாரானான்.

    இருடா, காப்பி சாப்பிட்டு போகலாம்...

    அவன் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தான் ஆதித்யா.

    அதற்குள் ஆதித்யாவின் அம்மா காப்பி கலந்து கொண்டு வந்து விட்டாள்…

    பவுடர் காப்பி இல்லப்பா… நம்ம வீட்டுல பசு மாடு கறக்குது…. இப்பதான் காலைல கறந்த பால். குடிப்பா.

    காப்பி தட்டை நீட்டினாள் காமாட்சி.

    ஆதித்யா படிப்பிற்காக சென்னை போய் ஐந்து வருடங்களாகி விட்டது. ப்ளஸ் டூ முடித்த போது எம்.எஸ்.சி. புவியியல் படிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் சீட் கிடைத்ததும் யோசிக்கவே இல்லை பறந்து விட்டான்.

    விருந்து, விசேஷம் என்றால் அவ்வப்போது வருவான். மற்றபடி படிப்பு படிப்பு தான் அதுவும் புவியியல் அவனுக்கு மிகவும் பிடித்த படிப்பு.

    இந்த மண்ணையும், மனிதர்களையும் காப்பாற்ற வேண்டும். மண்ணின் வளத்தை அதிகரித்து மகசூலை அதிகரித்து விவசாயத்தை எல்லோரும் விரும்பும் தொழிலாக மாற்ற வேண்டும் என்று… ஊருக்கு வரும் போதெல்லாம் ரவியிடம் சொல்லிக் கொண்டு இருப்பான் ஆதித்யா.

    மகன் மண் பற்றியும், மண் ஆராய்ச்சி பற்றியும் படிப்பதையும், பேசுவதையும் கேட்கும் போதெல்லாம், கலியமூர்த்திக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். காது குளிர கேட்பார்.

    எங்க பரம்பரையே விவசாய பரம்பரைத்தான் ரவி உனக்கு தெரியாது… உங்கப்பாகிட்ட கேட்டுப்பாரு சொல்லுவான்... விசலூர் எண்பது வேலி நெலத்துல எங்களுக்கு பாத்தியப்பட்டது மட்டுமே இருவது வேலி. ஒரு போகம் வௌஞ்சுதுண்ணா கொட்டி வைக்க ஊடு கொள்ளாது. பொன்னு வௌயிற பூமின்னு சொல்வாங்கல்ல… அப்படி வெளைஞ்சு கிடந்த பூமி. இன்னைக்கு தண்ணியில்லாமா, வெந்து வெம்பரப்பா கிடக்கு. ஏதோ வீட்டுக்கு சாப்பாட்டுக்கு மட்டும் வெள்ளாமை போட்டுக்கறோம்.

    அங்கலாயத்துக்கொண்டார் கலியமூர்த்தி.

    அப்பா சொல்வதை கவலையோடு கேட்டுக்கொண்டிருந்தான் ஆதித்யா.

    ரவியும், ஆதித்யாவும் பள்ளித் தோழர்கள். இருவரும் ஒன்றாகத்தான் ப்ளஸ் டூ முடித்தார்கள். ஆதித்யா, மேற்படிப்புக்காக சென்னை போன போது ரவி பக்கத்து டவுனில் இருந்த கல்லூரியிலேயே சேர்ந்து படித்தான்.

    சரிடா ஆதி ஒரு டம்ளர் தண்ணி மட்டும் கொடுடா. குடிக்க.

    என்னடா, காபி குடிச்ச பிறகு தண்ணியா?

    ஆமாண்டா வாயெல்லாம் ஒரு இனிப்பா இருக்கு

    ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினான் ஆதி.

    என்னடா பில்டர் வாட்டரா…?

    இல்லடா... வீட்டுத் தண்ணிதான். இயற்கையான முறையில சுத்திகரிக்கற தண்ணீர்.

    இயற்கையான முறையா…? என்னடா சொல்ற…?

    ஆமா. இங்க வந்து பாருடா.

    ஆதித்யா… ரவியை அழைத்துக் கொண்டு சமையல் கட்டுக்குள் சென்றான்.

    மண்பானைக்குள் மூலிகைச் செடிகளை நிரப்பி அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார்கள்…

    இது என்ன மூலிகை தெரியுமா… துளசி… கரிசலாங்கண்ணி… இந்த தண்ணியை குடிச்சா… சளி பிடிக்காது…

    இன்னொரு பாத்திரத்தில் வெந்தயத்தையும், சீரகத்தையும் போட்டு நீர் நிரப்பியிருந்தது.

    இது எதுக்குடா?

    நல்லா செரிமானம் ஆகும்டா.

    நீ என்ன படிக்கறியோ அதையெல்லாம் உடனே செயல்படுத்திடற வாழ்த்துக்கள்... ஆதி… சந்தோஷமா இருக்கு…

    இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? இன்னும் இருக்கு. வந்து பாரு.

    கொல்லைப்புறத்திற்கு, ரவியை அழைத்துக் சென்றான், ஆதி.

    இரண்டு இடங்களில் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்திருந்தான்... ஒவ்வொன்றையும் பார்க்கும் போது ரவிக்கு வியப்பாகவே இருந்தது.

    இந்த மழை நீர் தொட்டியெல்லாம் நீ எப்ப செஞ்சடா…?

    "நான் எங்கே செஞ்சேன்? சென்னையிலருந்துகிட்டு போன்ல சொல்வேன். அப்பா அப்படியே பண்ணிடுவார்.

    நான் அப்பப்போ வரும்போது சரியா இருக்கான்னு பாத்துட்டுப் போவேன். அவ்வுளவுத்தான்."

    ஆதித்யா சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் ரவி…

    "இந்த ரெண்டு தொட்டி அமைச்சதால நிலத்தடி நீர் மட்டம் அதிகரிச்சிடுச்சி ரவி. அதோடு இல்லாம வீட்டுக்கு தேவையான காய்கறிகள் போட்டுருக்கிறோம். நட்டு வச்ச எல்லா மரமும் நல்லா காய்ப்பு கொடுக்குது. தண்ணீரையும், மண்வளத்தையும் பாதுகாக்கணும் ரவி. அடுத்த தலைமுறைக்கு ஏன் நம்ம தலைமுறை தண்ணீர் பஞ்சம் இல்லாம் வாழணும்னா இது ரொம்ப அவசியம். தென் ஆப்பிரிக்காவுல இருக்கிற ‘கேப்டவுண்’ பத்தி கேள்விப்பட்ட இல்ல… என்ன ஆச்சு பாத்தியா…!

    உலகத்துல முழுக்க, முழுக்க தண்ணீர் இல்லாத நகரமா அறிவிச்சுருக்காங்க... எவ்வளவோ வசதியிருந்தும்… மனிதர்கள் வாழ முடியாத நிலைமைக்கு போயிடுச்சு அந்த நகரம்.

    அது மாதிரி… நம்ம ஊர் போயிடக்கூடாது ரவி… நம்ம ஊருன்னா… நாம வாழக்கூடிய இந்த ஊர்… இந்த மாவட்டம்… இந்த மாநிலம்… எதுவுமே பாதிக்கப்பட்டுடக்கூடாது… ரவி…"

    கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவனாய் பேசினான் ஆதித்யா…

    அவன் தோள்களை கொஞ்சம் ஆறுதலாக தட்டினான் ரவி...

    நீ இப்படி பீல் பண்ற ஆதி. இன்னொரு விஷயம் கேள்விப்பட்டா நீ ரொம்பவே வருத்தப்படுவே.

    ரவி ஏதோ பூடகமாய் சொன்னான்….

    என்ன சொல்ற ரவி? நான் வருத்தப்படற அளவுக்கு என்ன விஷயம்…?

    ரொம்ப போட்டு குழப்பிக்காத. நான் சாயந்திரம் வரேன். ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போவோம். நீ இப்ப போய் நிம்மதியா. தூங்கி ஓய்வு எடுடா!

    ரவி கிளம்பிவிட்டான். இப்படி சஸ்பென்ஸ் வெச்சுட்டுப்போனா எப்படிடா தூக்கம் வரும்…!

    எனக்கு வருத்தம் தரக்கூடிய விஷயமா எது இருக்கும்.

    கட்டிலில் புரண்டு, புரண்டு படுத்தப்படியே யோசித்துக் கொண்டிருந்தான்… ஆதித்யா

    2

    நான்கு மணி வெயில். வீரியம் குறையாமல் சுள்ளென்று முகத்தை சுட்டது. அடர்ந்து கிடந்த கருவேல மரங்கள் பாதி பழுத்த இலைகளை சுமந்து கொண்டிருந்தன. வயல் வெளிகளில் வண்டிச் சுவடுகள். இணை பிரியாத தண்டவாளம் போல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடந்தது. இலைகள் உதிர்ந்த மரத்தின் கிளையில் அமர்ந்து ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே உதிர்ந்து கிடந்த பறவையின் இறகுகள். சூழலே ஒரு விதமான சோகமான தோற்றத்தை உருவாக்கி உமிழ்ந்து கொண்டிருந்தது.

    ஆனைக்காத்தான் வாய்க்கால் தலைமாட்டில் கவலையோடு அமர்ந்திருந்தான் ஆதித்யா.

    Enjoying the preview?
    Page 1 of 1