Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavum Pussykuttyium
Ammavum Pussykuttyium
Ammavum Pussykuttyium
Ebook285 pages1 hour

Ammavum Pussykuttyium

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புரிதல் இன்றி விவாதம் அமைத்தால் புறமுதுகு காட்டி ஓடுவதுதான் முடிவாகும். தலை தீபாவளியைக் கூட தங்கள் வியர்வை நனைந்த பணத்தால்தான் கொண்டாட வேண்டும் என்று நினைக்கின்றனர் பதிவுத் திருமணம் செய்து கொண்ட அந்த அன்பான ஏழைத்தம்பதிகள். நம்மிடம் இருக்கும் பணத்தை நாம் அநாவசியமாக செலவழிப்பதை விட அநாதை ஆசிரமங்களுக்கு உதவலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. எந்தெந்த நேரத்தில் ஒரு கடமையைச் செய்ய வேண்டும் என்பதை உணர்பவன் மனிதன் மட்டுமல்ல நல்ல தகப்பனும் கூட என்பதைப் பற்றியும், ஒரு அன்பான கணவன் மனைவி புரிதலுடன் நடந்துகொண்டால், அதேபோல் இன்னும் பல தம்பதிகளை உருவாக்கலாம். இவ்வாறாக ஒவ்வொரு சிறுகதையிலும் ஒவ்வொரு புரிதல். வாருங்கள் நாமும் இச்சிறுகதைகளை புரிந்துகொண்டு புன்னகையுடன் பயணிப்போம்...

Languageதமிழ்
Release dateApr 11, 2022
ISBN6580111008364
Ammavum Pussykuttyium

Read more from Arnika Nasser

Related to Ammavum Pussykuttyium

Related ebooks

Reviews for Ammavum Pussykuttyium

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavum Pussykuttyium - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    அம்மாவும் புஸ்ஸிக்குட்டியும்

    Ammavum Pussykuttyium

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளடக்கம்

    1. தலை தீபாவளி

    2. ஆசைக்கணவன்

    3. பெட்டைகளும் சேவல்களும்

    4. கூண்டு

    5. குதிரை வியாபாரம்!

    6. பெயர்

    7. ரோஜா பூந்தோட்டம்

    8. தனா…

    9. இவளொரு இளங்குருவி!

    10. கடிதம்

    11. மன்னவனே அழலாமா?

    12. மன்னி!

    13. இறந்தாலும் இருக்கிறேன்

    14. சித்ரா!

    15. ஆழத்தே… வெகு ஆழத்தே…

    16. பந்தயம்

    17. மலர்ந்தும் மலராத பூவே!

    18. அம்மாவும் புஸ்ஸி குட்டியும்

    19. நிறைவு!

    20. மழை நடனம்

    21. வெள்ளைக் கொடி!

    22. ரோஜா இல்லம்!

    23. சாம்பல் பறவைகள்!

    24. தட்டு

    25. மச்யகந்தி

    26. காட்டுப்பூ

    27. பாதி வெற்றிடம்

    28. கழுத்துக் கச்சம்

    1. தலை தீபாவளி

    படுக்கையறை.

    கவிதா முன்னுக்கு மடங்கிய முழங்காலில் கைகள் கோர்த்திருந்தாள். அவளது முகத்தில் தூசி கலக்காத கறுப்பு ஒட்டடையாய் கவலை படர்ந்திருந்தது.

    தீபாவளிக்கு இன்னும் சில நாள் இருந்தாலும் வெளியே தொடர்ந்து வெடி சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. மனைவியின் முகவாயை சுந்தர் தனது முகத்திற்கு உயர்த்தினான்.

    குட்டிம்மா!

    ம்…

    தலை தீபாவளி கொண்டாட முடியலையேன்னு வருத்தமாயிருக்கா உனக்கு?

    என் அம்மாவழி பாட்டி இறந்துபோன வருத்தம் தான் அதிகம் இருக்கு. என் மனசில.

    உன் பாட்டிக்கு சாகும் போது வயசு எண்பது. அது நிறைவான மரணம் தானே?

    மரணத்தில் நிறைவான மரணம்- நிறைவில்லாத மரணம் என்று பாகு பாடு ஏது? பாட்டி மீது எனக்கு கொள்ளைப் பிரியம். அவங்க இன்னும் உயிர் வாழ வேண்டும். என்றல்லவா விரும்பினேன். என் கல்யாணத்தைக் கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக உயிரை இறுக்கி பிடித்துக் கொண்டு இருந்தாங்க. உங்களையும் என்னையும் ஜோடியா பார்க்கும் போதெல்லாம் கண்கள் மின்னும் முகம் பூரிச்சு போகும்! இனி அந்த முகத்தை எங்கு காண்பேன்?

    ஒளிக்காமச் சொல்லு கவிதா. நாம தலைதீபாவளி கொண்டாடின பறிகு உங்க பாட்டி செத்திருக்கலாமேன்னு உன் மனசோரம் தோணுதா?

    அப்படி நினைக்க நான் ஒண்ணும் சுயநலப்பேய் இல்லை. இந்த ஆண்டோடு தீபாவளி கொண்டாடுறதை அரசு தடை பண்ணிடவாப்போகுது? அடுத்த தீபாவளியை சேத்து வச்சு கொண்டாடிட்டு போறது?

    புன்னகைத்தான் சுந்தர். கவிதாவின் பாட்டிபாசம் சுந்தருக்கு பொறாமை கலந்த பெருமிதத்தைத் தந்தது.

    சரி, நாம தலை தீபாவளி கொண்டாடல. அதற்கு மாறாக தீபாவளி அன்று நாம் என்ன செய்வது?

    என் தோழி சக்திகிட்ட சொல்லியிருக்கேன். புதுசா திருமணம் செய்து கொண்ட ஏழை தம்பதியினர் யாராவது தலை தீபாவளி கொண்டாட பணமில்லாம சிரமப்படுறாங்களான்னு தேடிப் பார்க்கச் சொல்லியிருக்கேன்!

    தேடிக் கண்டுபிடித்து?

    அவர்களின் ஒட்டுமொத்த தலைதீபாவளி செலவை நாம் செய்வோம். தலை தீபாவளி கொண்டாடின மகிழ்ச்சி அவர்களுக்கு. கொண்டாட வைத்த மனநிலை நமக்கு!

    இந்த திட்டத்துக்கு மொத்த செலவு என்னாகும்னு நினைக்கிறே?

    சிக்கனமோ கஞ்சத்தனமோ இல்லாது கணக்கிட்டா பத்தாயிரம் ஆகும்

    ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பத்தை நீட்டினான் சுந்தர். நல்ல திட்டம் சரியான ஜோடிகளை தேர்ந்தெடுத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்து குட்டிம்மா!

    படுக்கையறைக் கதவு தட்டப்பட்டது.

    யாரு? என்றாள் கவிதா.

    "நான் சக்தி!’‘

    கதவு வெறுமனேதான் சாத்திகிடக்கு வா சக்தி!

    உள்ளே வந்த சக்தி தொண்டையைச் செருமினாள் கவிதாவையும் சுந்தரையும் ஆராய்ந்தாள். நான் திடீரென்று உள்ளே வந்தது உங்களுக்கு ஒண்ணும் தொந்திரவா இல்லையே போயிட்டு அப்புறம் வரவா?

    கண்டதை கற்பனை ‘பண்ணிக்காதே சக்தி. போன காரியம் என்னாச்சு?

    ஒரு ஏழைத்தம்பதியை கண்டேன். பெண்ணின் பெயர் வனஜா. மணமகனின் பெயர் மனோகரன். இருவரும் பெற்றோரை எதிர்த்து காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

    சுந்தர்! சக்தி சொல்வதைக் காது கொடுத்து கேட்டீர்களா?

    ஓ! மிகச்சிறப்பான தேர்வாகப்படுது குட்டிம்மா.  அந்த தம்பதியை இப்போதே பார்க்க மனம் பரபரக்கிறது!

    நாளை அதிகாலையில் போவோம்

    அப்படியென்றால் இன்று பட்டுச்சேலை, பட்டுவேட்டி, சட்டை, பட்சணங்கள், வெடிகள் மத்தாப்புகள் வாங்கி வந்துவிடலாமா?

    அவசரப்படாதீங்க. அவர்கள் ரசனை நம்மோடு ஒத்துபோக வேண்டுமே? அதைவிட பணத்தைக் கொடுத்து விடலாம். அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொள்ளட்டும்!

    அதுவும் சரிதான்!’ சுந்தர் தலையாட்டினான். அந்தக் தம்பதியருக்குத் தகவல் தெரிவித்தான்.

    அதிகாலை.

    அந்த குடிசை வீட்டைத் தேடி சாக்கடை நீர் மேலே தெறித்து விடாமல் கவனமாய் நடந்தனர்.

    ஒரு குடிசையின் முன் ஒரு திராவிட நிற வாலிபன் பல் துலக்கிக் கொண்டிருந்தான். இவர்களைக் கண்டதும் பற்பொடியை கொட்டி விட்டு வாயை அவசரஅவசரமாக கொப்பளித்து வரவேற்றான்.

    வாங்க! வாங்கம்மா! வனஜா! யார் வந்திருக்காங்கன்னு பாரு!

    வனஜா ஓடிவந்து வரவேற்றாள். இருவரும் குனிந்து உள்ளே போயினர். உட்கார கோரைப்பாயை  விரித்தாள் வனஜா.

    அமர்ந்ததும் கோரைப்பாயை மீறி ஜில்லிப்பு தாக்கியது. வனஜா பக்கத்து குடிசைக்கு ஓடிப்போய் பால் வாங்கி வந்தாள். மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்து காப்பி போட்டுக் கொடுத்தாள்.

    உறிஞ்சியபடி கேட்டான் சுந்தர். எப்படி இருக்கீங்க?

    வனஜாவும் மனோகரனும் கூட்டாய் அமோகமா இருக்கோம் சார்! என்றனர்.

    ரொம்ப மகிழ்ச்சி எங்களை உங்களின் நெருங்கின சொந்தமாக பாவித்து நாங்கள் தரும் பணத்தைக் கொண்டு தலை தீபாவளி கொண்டாடுங்கள் கவிதா பணத்தை நீட்டினாள்.

    பணம் வேண்டாம்! கூட்டாய் வனஜாவும் மனோகரனும் சொன்னார்கள்.

    ஏன்?

    பதிவுத்திருமணம் செய்துகொண்டு எங்கள் காதலை வெற்றிபெற வைத்தோம். திருமண வாழ்விலும் வெற்றி பெற்றாக வேண்டும். தலை தீபாவளியை எங்களின் வியர்வை நனைந்த பணத்தால் எளிமையாகக்  கொண்டாட நினைக்கிறோம். வாழ்க்கையின் தொடக்கத்திலேயே கை நீட்டத் தொடங்கினால் பின் ஆயுளுக்கும் எங்கள் கைநீட்டல் நிற்காது. வனஜாவுக்கு விலை குறைந்த கைத்தறிச் சேலை, எனக்கு கதர்வேட்டி சட்டை. முறுக்கும் அதிரசமும் செய்ய தேவையான சாமான் வாங்கி வைத்திருக்கிறோம்

    ….

    உங்கள் நல்ல இதயங்களுக்கு எங்கள் நன்றி. எங்களுக்கு செலவிட இருந்த பணத்தை ஓர் அநாதை ஆசிரமத்தின் முழு நாளைய தீபாவளி செலவுக்குக் கொடுங்கள். பத்து தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்!

    மூலையில் தொங்கிய சட்டைப்பையிலிருந்து கசங்கிய ஐம்பது ரூபாயை எடுத்தான் மனோகரன். அநாதை ஆசிரமத்துக்கு நீங்கள் செலவு பண்ணப் போகும் பணத்துடன் எங்களின் எளிய பரிசையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! என்றான்.

    கவிதாவும் சுந்தரும் ஒருசேர நெகிழ்ந்து போயினர். அந்த குடிசைத் தம்பதி கோபுரத்தை விட உயர்வாய்த் தெரிந்தனர்.

    2. ஆசைக்கணவன்

    கதவைத் திறந்தாள் காவ்யா. மணி பதினொன்றரை  ஆகிறது. இத்தனை நேரம் எங்க ஊர் மேஞ்சிட்டு வரீங்க! நண்பர்களோடு கும்மாளமா? வாயை ஊதுங்க பார்ப்போம்

    ……

    பக்கத்து வீட்டு விவேக்கைப் பாருங்க…  அலுவலகம் முடிஞ்சா வீடு. வீட்டை விட்டா அலுவலகம் எந்த கெட்டபழக்கமும் இல்லை. அவர்ல ஒரே ஒரு சதவீதமாவது இருக்கலாமில்ல நீங்க? விவாதித்தாள்.

    இன்னைக்கும் உன் புலம்பல் ராமாயணத்தை ஆரம்பிச்சிட்டியா? சே.. எரிச்சலாய் உள்ளே நடந்தான் அருண். பக்கத்து வீட்டு ஜன்னல் தெரிந்தது. விளக்கு வெளிச்சத்தில் வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது.

    அருண் தனது வீட்டு விளக்கை அணைத்து தனது மனைவி காவ்யாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தான். ஜன்னல் பக்கம் இருவரும் பதுங்கி பக்கத்து வீட்டில் நடப்பதை கேட்டனர்.

    அன்பான தம்பதியரிடையே சண்டையா? நம்ப முடியவில்லையே! என்றாள்.

    உஷ்… சத்தம் போடாதே! அதட்டினான். விவேக்.

    என்ன மிரட்டுறீங்க? ரூபலா கோபமாய்க் சீறினாள்.

    என் தங்கச்சிக்கு நான் கடன் வாங்கி பத்தாயிரம் கொடுத்தது உண்மைதான் அதற்கு எனக்கு உரிமையில்லையா? செருமினான். விவேக்

    நானும் சம்பாதிக்கிறேன் நீங்களும் சம்பாதிக்கிறீங்க. நான் மட்டும் எந்த செலவுன்னாலும் உங்ககிட்ட அனுமதி வாங்கனும்.. நீங்க கேக்கமாட்டீங்களா? நேருக்கு நேரே விரல் நீட்டினாள். ரூபலா

    என்னடி… வாய்க்கொழுப்பா.. - நாக்கை மடக்கி எச்சரித்தான்.

    வாயைக் கிழிச்சடுவேன்! கையை ஓங்கினாள்.

    ராட்சசி…! பற்களை நறநற வெனக் கடித்தான். சாமான்கள் விழுந்தன…. உருண்டன….

    வாய்ச்சண்டை ஓய்ந்தது. வீடு முழு இருளில் ஆழ்ந்தது.

    அருண்-காவ்யா முகத்தில் ஆச்சரியம். அறையில் வெளிச்சம் பூத்தது.

    "நாம பரவாயில்லை போலிருக்கு..’ என்றாள் காவ்யா.

    அவன் திட்டின மாதிரி நான் உன்னை என்னைக்காவது திட்டியிருக்கேனா? அமுக்கினிப் பயல்களை நம்பக் கூடாதுன்னு இப்பவாவது தெரிஞ்சிக்கிட்டியா?

    "சரி சரி… ரொம்ப அலட்டிக்காதீங்க… சாப்பாடு ஆறுது.. சாப்பிட்டுட்டுப் படுப்போம்!’ கணவனின் மீது சாய்ந்தாள்.

    இருவரும் சாப்பிட்டனர். காவ்யா குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மல்லிகைப்பூ எடுத்து தலையில் சூடிக்கொண்டாள்.

    மனைவியின் குறிப்பறிந்து படுக்கையறைக்கு நடந்தான். அருண்.

    இவர்கள் போவதை இருட்டறையிலிருந்து ஒளிந்து கவனித்த ரூபலா விவேக்கிடம், எப்ப பார்த்தாலும்  காவ்யா அவ கணவனை உங்களை ஒப்பிட்டே திட்டுறா… கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதில்ல? அதான் திருஷ்டி கழிய சண்டை நாடகத்தை அரங்கேற்றினேன்.

    ….

    என் ஆசைக்கண்ணா… மன்னிச்சிடுங்க… பொய்சண்டையில ஏதேதோ பேசிட்டேன்..

    நான் திட்டினதுக்கு நீயும் மன்னிச்சிடு… நம்மால ஒரு வீட்டில் நல்லது நடந்தா சரி.. !

    இப்ப மகிழ்ச்சிதானே.. படுங்க…

    படுக்கிறதா? உண்மையா சண்டை போட்டவங்களே மகிழ்ச்சியா இருக்கும் போது நாம தூங்குறதா?- மனைவியை இறுக, இதமாய் அணைத்தபடி கட்டிலில் சரிந்தான் விவேக்.

    3. பெட்டைகளும் சேவல்களும்

    வசந்தகுமார் முகத்தில் ஏக மலர்ச்சி. ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான். தலைகேசம் கலையாமலிருக்க விஷேச திரவம் தடவினான். முகத்திற்கு தனி கிரீம்.

    மீசையில் தெரிந்த ஒற்றை நரைமுடியை கத்திரிக்கோலால் லாவகமாக அகற்றினான். கழுத்தில் சின்னதாய் செயின். புத்தம் புது ஆடை. சட்டையின் முழுக்கையை முக்கால் கையாக்கி ரசித்தான். அவசரமாய் நறுமணம் பீய்ச்சிக் கொண்டான்.

    கணவனின் அலங்காரத்தைப் பார்த்து அமுக்கலாய் சிரித்தாள். தேவிகா.

    அழகுப் போட்டிக்கா போறீங்க… வேலைக்குத்தானே?

    என்ன அப்படிச் சொல்றே? அழகைப் பாதுகாத்துக்க வேண்டாமா?

    இப்படி கண்டகண்ட கிரீம் போட்டு விலையுயர்ந்த உடை அணிஞ்சாதான் பெரிய அழகா?

    என் வயதுக்கு நான் கவர்ச்சியா இருக்க வேண்டாமா?

    உங்களுக்கு கல்யாணம் ஆனதையே அடிக்கடி மறந்திடுறீங்க. உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கு

    அதனாலென்ன? எனக்கு இளமை குணம் மாறலை. எப்போதும் அழகான பெண்களை ரசிக்கிறேன், அவர்களுடன் பேசி மனங்களைச் சலனப்படுத்துறேன். அதுக்கு இந்த அழகெல்லாம்  வேண்டியது இருக்கே!

    ஒரு பொண்டாட்டிகிட்ட பேசுற பேச்சா இது? பொய்க்கோபம் காட்டினாள் தேவிகா.

    குழந்தைங்க பள்ளிக்கூடம் போயிட்டாங்களா? பேச்சை மாற்றினான்.

    ஒ!

    விசிலடித்தபடி அவள் கன்னத்தில் ‘நச்’ சென ‘இச்’ பதித்தான்.

    மாலை தன் கணிணியில் ஏதோ செய்து கொண்டிருந்தான் வசந்தகுமார் மனைவியும் மகளும் ரகசியம் பேசுவதைக் கண்டு எழுந்தான். ஜன்னல் வழியே பார்வையை நோக்கினான்.

    மனைவி மட்டும் வீட்டைவிட்டு வெளியேறி தெரு ஓரத்தில் நிற்கும் மோட்டார் சைக்கிள் பையனிடம் போகிறாள். இருவரும் பத்து நிமிடம் பேசுகின்றனர்.

    வசந்தகுமாருக்கு சஸ்பென்ஸ் தாளவில்லை. திரும்பி வந்த மனைவியை அழைத்தான்.

    அந்த மோட்டார் சைக்கிள் பையன் யாரு?

    முதலில் மழுப்பினாள். பின் அது சின்ன பிரச்சனை.. தீர்த்துட்டேன் விடுங்க! என்றாள்.

    என்ன பிரச்சினை?- கேள்வியால் துழாவினான்.

    சொன்னா தாம்தூம்னு குதிக்கக்கூடாது!

    சரி!

    உங்க பொண்ணை அந்த பையன் ஒருமாசமா பின்தொடர்ந்து ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லி இருக்கான். அவனைக் கூப்பிட்டுப் பேசி அனுப்பி இருக்கேன்!

    நம்ம பொண்ணுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்னானா? அவ குழந்தையாச்சே?

    நல்ல கதை.. அவ பதினாறு வயசு இளம்பெண். இந்த வயசுல அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா நீங்க தாத்தா ஆயிடுவீங்க!

    சாதாரணமா சொன்னாளோ, உள்ளர்த்தம் தொனிக்கச் சொன்னாளோ தெரியவில்லை.

    உண்மை, வசந்தகுமார் முகத்தை அறைந்தது. அவன் நிலை குலைந்தான்.

    "ஒ! சேவலுக்கு வயதாகிவிட்டது! சேவலின் அடுத்த தலைமுறையான விடலைக் கோழி, இளம் சேவல்களால் காதலிக்கப்பட ஆயத்தமாகி விட்டது!’ –நினைத்த வசநத்குமார், ரொம்பவே மாறிவிட்டான்.

    அவன் நல்ல மனிதன் மட்டுமல்ல நல்ல தகப்பனும் கூட இப்போது தன்னை அதிகமாய் அழகுபடுத்திக் கொள்ள ஆளுயரக்கண்ணாடி முன் அவன் நிற்பதே இல்லை!

    4. கூண்டு

    இராணி சீதை ஆச்சி அடுக்குமாடிக் குடியிருப்பு ‘ஜி’ பிளாக் மூன்றாவது தளம் பிளாட் வாசலின் முகப்பில் ‘கவிதை இல்லம்’ எனும்  பிளாஸ்டிக் போர்டு பதிக்கப்பட்டிருந்தது. கதவின் இருபுறமும் பூஞ்செடி தொட்டிகள்.

    வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தாள் உத்ரா. வயது 39 இருக்கக் கூடும். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியை. கூடுதலாய் புதுக்கவிஞர் ஹைக்கூ கவிதை எழுதுவதில் நிபுணி. மடியில் கவிதை எழுதும் பேடு. வலக்கையில் மைக்ரோ டிப்பேனா. இடதுகை பாப்கார்னை எடுத்து எடுத்து கொறித்துக் கொண்டிருந்தது. எதிரே ஆடியோ இல்லாமல் டிவி ஓடிக் கொண்டிருந்தது.

    பால்கனியில் மேலும் அலங்காரப்பூஞ்செடி தொட்டிகள்.

    தொட்டிகளுக்கு நடுவே ஒரு கூண்டு அமைந்திருந்தது. கூண்டுக்குள் கிளிகள் ஊஞ்சலாட இரு சிறு ஊஞ்சல்கள். மினரல் வாட்டர் நிரம்பிய நீர் கிண்ணம். பழத்துண்டுகள் நிரம்பிய உணவுக்கிண்ணம்.

    வரவேற்பறையில் மின்விசிறி போடப்படாமலேயே இருந்தது. காரணம் அறைக்குள் அரை குறையாய் பறக்கும் கிளிகள் அடிபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.

    உத்ராவின் இருதோள்களிலும் இரு கிளிகள் தொற்றியிருந்தன. ஒருகிளியின் பெயர் செல்லம்மமா. இன்னொரு கிளியின் பெயர் கண்ணம்மா. இருகிளிகள் கழுத்திலும் பழுப்பு வளையல்கள். செல்லம்மாவின் அலகு நாவல்நிறம். கண்ணம்மாவின் அலகு ரோஜாநிறம்.

    செல்லம்மா எட்டி உத்ராவின் மூக்கு கண்ணாடியை கவ்வி இழுத்தது.

    கண்ணம்மா கவிதைத்தாளை கிழித்து கால் நீட்டி பிராண்டியது.

    உத்ரா செல்லமாக, ஏய் செல்லம்மா.. கண்ணம்மா.. சும்மா இருக்க மாட்டீங்க… அம்மா கவிதை எழுதுறது உங்க கண்களுக்குத் தெரியல?

    உத்ராம்மா… உத்ராம்மா… செல்லம்மா கொஞ்சியது.

    கண்ணம்மா தொடர்ந்து சீழ்க்கை அடித்துக்காட்டியது.

    ஓஹோ! ரெண்டு பேரும் இன்னைக்கு ஜாலி மூடுல இருக்கீங்க போலிருக்கு!

    இரு கிளிகளும் அவசர அவசரமாய் தலையசைத்தன.

    தரைத்தளத்தில் ஓர் ஆட்டோ தரைதேய்த்து நின்றது. அதிலிருந்து ஒரு மாநிறப்பெண் இறங்கினாள். வயது 24 இருக்கக்கூடும் இடதுதோளில் ஜோல்னாப்பை தொங்கவிட்டிருந்தாள். கையிலிருந்து முகவரிச்சீட்டை வைத்துக் கொண்டு தரைத்தளத்தில் விசாரிக்கிறாள். அவர்கள் மேலே சுட்டிக் காட்டுகிறார்கள். மேலேறி வருகிறாள்.

    அழைப்புமணி அமுக்கினாள்.

    நைட்டியை சரி செய்து கொண்டு எழுகிறாள் உத்ரா. தோளில் கிளிகள் சரியாமல் ‘பேலன்ஸ்’ செய்து நிற்கின்றன.

    கதவைத் திறக்கிறாள்.

    புதிய முகத்தைக் கண்டதும் கிளிகள் ‘கீச் கீச்’ என்று கத்தின. செல்லம்மா எவடி இவ?’ என்றது. உத்ரா செல்லம்மாவை கண்டித்தபடி திரும்பி யாரு வேணும்?" வினவினாள்.

    உத்ரா மேடம்?

    நான்தான். உள்ளே வாம்மா..

    கால் செருப்பை கழற்றி வைத்துவிட்டு உள்ளே வந்தவள் ஜோல்னாப் பையிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1