Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Vaazhthi Paadukirean!
Unnai Vaazhthi Paadukirean!
Unnai Vaazhthi Paadukirean!
Ebook388 pages2 hours

Unnai Vaazhthi Paadukirean!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கிறிஸ்டியன் மதத்தைச் சார்ந்த நாயகி, தன்னை விபத்தில் காப்பாற்றிய இந்து மதத்தை சார்ந்த நாயகனை விரும்பி அவனையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். நட்புடன் அவளோடு பழகி வரும் நாயகன் அவளை விலக்கி நிறுத்துவதுடன், வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.

விசயத்தைக் கேள்விப்பட்ட நாயகி எடுக்கும் முடிவென்ன? நாயகன் மணப்பது யாரை? அண்ணனும் தங்கையும் ஒரே வீட்டிற்குத் திருமணமாகி செல்லும் விதமாக ஏற்பாடு செய்த தாயாரின் திட்டம் நிறைவேறுகிறதா? மதத்தை பெரியதாக நினைக்காத நாயகியின் முடிவென்ன? என்பதை விறுவிறுப்பு கலந்து சற்றே மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கொடுத்திருக்கிறேன். வாசித்து பார்த்து தங்களுடைய கருத்துக்களை தயங்காமல் முன் வையுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580162109532
Unnai Vaazhthi Paadukirean!

Read more from K. Anantha Jothi

Related to Unnai Vaazhthi Paadukirean!

Related ebooks

Reviews for Unnai Vaazhthi Paadukirean!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Vaazhthi Paadukirean! - K. Anantha Jothi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்!

    Unnai Vaazhthi Paadukirean!

    Author:

    K. ஆனந்த ஜோதி

    K. Anantha Jothi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-anantha-jothi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அனைவருக்கும் வணக்கம்,

    என் பெயர் K. ஆனந்த ஜோதி. சொந்தவூர் நாகர்கோவில் அருகில் உள்ள ஆலன்கோட்டை புதூர். கணவர் CISF காவலர். மகன்கள் இருவர். எழுத்துலகிற்கு அறிமுகமாகி இரண்டரை வருடங்கள் ஆகின்றன.

    இதுவரை 14 நாவல்கள், 7 குறுநாவல், 10 சிறுகதையும், ஒரு சில கட்டுரையும் எழுதி இருக்கிறேன். பெரிய பெரிய எழுத்தாளர்கள் பலர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் இடத்தில், நானும் ஒருவராய் அவர்களுடன் கரம் கோர்க்க ஆசைப்படுகிறேன்.

    இந்நாவலில் ஜாதி, மதம், வசதி, காதல், திருமணம், மாமியார், நாத்தனார் கொடுமைகள், சமூக கருத்துகள் என பலவகையான காட்சி நகர்வுகளை, கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைத்துள்ளேன். உங்களுக்கு ஏதேனும் குற்றம் குறை தெரிந்தால் பொறுத்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ***

    கதைப் பற்றிய சில வரிகள்

    கிறிஸ்டியன் மதத்தைச் சார்ந்த நாயகி, தன்னை விபத்தில் காப்பாற்றிய இந்து மதத்தை சார்ந்த நாயகனை காதலித்து, திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள். நட்புடன் அவளோடு பழகி வருபவன் அவளை விலக்கி நிறுத்துவதுடன், வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.

    விசயத்தைக் கேள்விப்பட்ட நாயகி எடுக்கும் முடிவென்ன? நாயகன் மணப்பது யாரை? அண்ணனும் தங்கையும் ஒரே வீட்டிற்குத் திருமணமாகி செல்லும் விதமாக ஏற்பாடு செய்த தாயாரின் திட்டம் நிறைவேறுகிறதா? என்பதை விறுவிறுப்பு கலந்து சற்றே மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கொடுத்திருக்கிறேன்.

    வாசித்துப் பாருங்கள்; கருத்துக்களை பதிவிடுங்கள்.

    நன்றிகளுடன்

    ஜோதி

    அத்தியாயம் 1

    "தகதக தகதகவென ஆடவா – சிவ

    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

    தகதக தகதகவென ஆடவா – சிவ

    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா...

    ஆலகாலனே ஆலங்காட்டினில்

    ஆடிடும் நாயகனே

    நீலகண்டனே வேதநாயகா

    நீதியின் காவலனே

    ஆலகாலனே ஆலங்காட்டினில்

    ஆடிடும் நாயகனே

    நீலகண்டனே வேதநாயகா

    நீதியின் காவலனே..."

    காரைக்கால் அம்மையார் என்ற திரைப்படத்தில் திரு. குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் திரு. கண்ணதாசன் அவர்களின் பாடல் வரியில், திருமதி. கே.பி. சுந்தராம்பாள் அவர்களால் பாடப்பெற்ற தெய்வீக கானம், கோவில் அருகில் உள்ள கடையில் இருந்து ஒலியிடப்பட்டது.

    பாடலின் வரிகளிலும், கணீரென்ற குரலிலும், இசையின் முழக்கத்திலும் மெய் சிலிர்க்க, காரிலிருந்து குடும்ப சகிதம் இறங்கி நின்றான் வித்யார்த்!

    அவனது பெரிய தங்கை கஸ்தூரியின் மகனுக்கு முடி காணிக்கை செலுத்தும் பொருட்டு, தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள, ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூரில் குடி கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்திருக்கிறார்கள்.

    தாய்மாமன் வித்யார்த், மூன்று தங்கைகள், தம்பி, தாய், கஸ்தூரியின் கணவன், பெற்றோர், உடன்பிறப்புகள் இருவர் புடைசூழ வருகை தந்திருக்கிறான்.

    ஓட்டுனரிடம் சற்று நேரம் பேசிவிட்டு, முடி காணிக்கை செலுத்தும் இடத்தை நோக்கி நடந்தனர். அதற்குரிய இடத்தில் நிறைய நபர்கள் குழுமியிருக்க, ஆள் குறைவாக தென்பட்ட இடத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றான் வித்யார்த். 'தாய் மாமனின் மடியில் வைத்து செய்ய வேண்டும்' என்றார் அவனது தாயார் சரஸ்வதி. 'சரி'யென்று அவனும் அமர்ந்தான். மடியில் ஒரு வயது நிறைவடைய இன்னும் பதினைந்து நாட்கள் மட்டுமே இருக்கின்ற, தங்கை மகன் சிவனேசை வாங்கி அமர வைத்தான்.

    கத்தியை பார்த்ததும் அவன் அழத் துவங்கினான். அனைவரும் அவன் முன்பு நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து சிரிக்க வைத்தனர். சற்று நேரத்தில் முழுவதுமாக அகற்றப்பட்டு பளீரென்று வெட்டியது கேசமில்லா தலைப்பகுதி. அவன் கை கொண்டு தடவி பார்த்து விட்டு 'ம்மா.. ம்மா' என்று காண்பித்துக் கொடுத்தான். அனைவரும் ரசித்து சிரித்தனர். வெட்ட வெட்ட நிறைய வளர்ந்து வந்திடும் செல்லக்குட்டி அவனை சமாதானப்படுத்தினான் வித்யார்த்.

    தாய்மாமன் மடியில் வச்சு முடி எடுத்தாச்சு. சீராக உனக்கு என்ன கொடுத்திருக்கிறார்? குழந்தையிடம் கேட்பது போல வித்யார்த்திடம் கேட்டாள் கஸ்தூரியின் நாத்தனார்.

    அவன் புன்னகைத்தான். சட்டை பாக்கெட்டில் இருந்து இரண்டு சவரன் தங்க சங்கலியை எடுத்து அணிவித்தான். அவனுக்காக வாங்கிய புத்தாடையை தங்கையிடம் நீட்டினான்.

    இதென்ன பெரிய விசயம். இதை விடவும் நிறைய எங்க பக்கத்து வீட்டுலயும் செஞ்சுருக்காங்க என்று முனகலுடன் கூறினாள்.

    அவளது திருப்தியின்மை பேச்சிலேயே புலப்பட்டது.

    புன்னகையுடன் எழுந்தான் வித்யார்த். அவங்க அவங்க தகுதிக்கு ஏற்றார் போல் இதெல்லாம் மனமுவந்து கொடுப்பது. குறை கூறவோ, கேட்டுப் பெறவோ எவருக்கும் உரிமை கிடையாது என்றான்.

    மகளின் பேச்சுப் பிடிக்காமல், ஆமா, நீ பையனோட அத்தை ஆச்சே! உன் மருமகனுக்கு என்ன போடப்போற? என்று அவளை மடக்கினார்.

    தாயார் இப்படி கேட்கவும் அவள் முகம் அவமானத்தால் சிவந்தது. அதைக் கண்டு கொள்ளாமல் வித்யார்த், தன் வீட்டாரை அழைத்துக்கொண்டு கடலில் நீராட சென்று விட்டான்.

    ஏம்மா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படியா என்னை அத்தனை பேருக்கும் முன்னால் மாட்டி விடுவே? என் வீட்டுக்காரர் படுற கஷ்டம் உனக்குத் தெரியாது? ஏற்கனவே வாங்குற சம்பளம் பத்தாம கஷ்டப்படுறேன். கொரானா வந்த பிறகு ஆபீஸ்ல சம்பளத்தையும் குறைச்சுப்புட்டாங்க. என் பிள்ளைங்க ரெண்டு பேரை படிக்க வச்சு, எப்படி ஆளாக்க போறேன்னு எனக்கே தெரியல... இதில தங்கம் விலை வேற மலை போல உயர்ந்து போச்சு என்று சொல்லிவிட்டு மூக்கால் அழுதாள்.

    இங்க பாரு. குடும்பம்னா ஆயிரம் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி முறைன்னு ஒண்ணு இருக்கு. அதை நீ மறந்திடாத. வித்யார்த் பாவம்! அவங்க அப்பா இறந்த பிறகில் இருந்து குடும்பத்துக்காக மாடா உழைக்கிறான். அவன் வந்து நின்னாலே போதும். உன் அண்ணி அத்தனை பேர் முன்னாடி வாயை மூடிட்டு போறான்னு பார்க்காதே! ஏதாவது சொன்னா அப்புறம், உன்னால தாங்க முடியாம போயிடும். இனிமேலாவது பொதுவெளியில் எப்படி பேசுறதுன்னு கத்துக்கோ! மகளிடம் அறிவுறுத்தி விட்டு அவர்களை நோக்கி நடக்க துவங்கினார்.

    ம்கும்... பொல்லாத மருமகள். இவங்களுக்கு மட்டும் தான் வாய்ச்சிருக்கு. ஏற்கனவே அவளைக் கையில பிடிக்க முடியாது. இப்போ, மாமியார் தனக்காக இம்புட்டு பேசினான்னு தெரிஞ்சா அம்புட்டுதான் என்று முனகிக்கொண்டே தானும் அவர்களைத் தொடர்ந்தாள்.

    முதலில் சிவனேசை குளிக்க வைத்து விட்டு தங்கையிடம் நீட்டினான் வித்யார்த். பின்னர், வயதுக்கு வந்திருந்த தங்கைகள் இருவரின் கைகளையும் பற்றிக்கொண்டு அலைகடலில் நீராட செய்தான். தம்பி நிலவனும் அவர்களோடு நின்று கொண்டான். சற்று நேரம் கடலில் விளையாடி மகிழ்ந்தார்கள். அங்கிருந்து ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டு, உடை மாற்றிக்கொண்டு காலை உணவை முடித்தார்கள்.

    தங்கைகளை அழைத்து கடைப்பகுதிக்கு சென்றான். அவர்கள் கேட்டதை எல்லாம் மறுக்காமல் வாங்கி கொடுத்தான், மதிய நேரம் கடந்ததும் அருகில் உள்ள சுற்றுலா பகுதிகளான மணிமுத்தாறு, குற்றாலம் போன்ற இடங்களை பார்வையிட சென்றனர். அங்கிருந்து கிளம்பும் நேரம் இருள் படர துவங்கி விட்டது. மறுநாள் காலையில் வேலைக்குப் போக வேண்டுமாதலால், தங்கையின் வீட்டிற்கு போகாமல், நேராக தாங்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்று விட்டான்.

    வித்யார்த் படிப்பை முடித்து விட்டு, அவன் அப்பா பார்த்து வந்த மெக்கானிக் ஷாப்பை நிர்வகித்து வருகிறான். அவனது தந்தை இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. தாயார் சரஸ்வதி, மூன்று மகள் இரண்டு மகன்களின் மீதும் பாரபட்சமின்றி அன்பைக் கொட்டுபவர். அவர்களும் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வாழ்ந்து வருகிறார்கள்.

    வீட்டிற்கு வந்து சற்று நேரம் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கட்டிலில் சரிந்தான். அதிகாலையில் சேவல் கூவும் சப்தத்தில் எழுந்து பல்துலக்கி உடை மாற்றினான். தாயார் கொடுத்த காஃபியை அருந்திக்கொண்டே, பணிபுரியும் மெக்கானிக் ஷாப்பிற்கு கிளம்பிச் சென்று விட்டான். அங்கு அவனுக்கு கீழே இருவர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    கிடைக்கும் வருமானம், வீட்டை நிர்வகிக்கவும், தங்கைகளின் படிப்பு, உடை, திருமணமாகி சென்றவளுக்கு சீர் செய்வது என்றே சரியாகி விடுகிறது. கையில் கிடைக்கும் மொத்த வருமானத்தையும் தாயாரிடம் கொடுத்து விட்டு, அன்றாட வாழ்வில் தன்னை திணித்துக் கொண்டான். தன் வயதுக்கு உரியவர்கள் மிடுக்குடன் நடக்க, அவனோ தன்னுடைய ஆசையை அடக்க கற்றுக் கொண்டான்.

    இதில் சேமிப்பு என்பது கனவாகவே போய்விட்டது. அவர்கள் நால்வரையும், தாயாரையும் நன்முறையில் பார்த்துக் கொண்டால் மட்டுமே போதும் என்ற அளவிற்கு மனதைப் பக்குவப்படுத்தி விட்டான்.

    வித்யார்த்தின் இரண்டு தங்கைகளும் கல்லூரியில் இரண்டாம் வருடம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்கிறார்கள். தம்பி நிலவன் பீ.ஈ கடைசி வருடம் பயின்று வருகிறான்.

    நேற்று திருச்செந்தூருக்கு சென்று வந்தது சற்று அதிகப்படியான செலவாகி விட்டது. தாயார் 'நீதான் இதெல்லாம் செய்யணும். இது நம்ம வீட்டு செலவு. செய்யா விட்டால், தங்கையை அவள் கணவன் வீட்டார் குறைவாக பேசுவார்கள்' என்று கூறி, ஆரம்பத்திலேயே அவனது வாயை அடைத்து விட்டார்.

    தங்கம் விற்கும் விலையில் இரண்டு சவரன் வாங்குவது என்பது சற்று சிரமமாக இருந்தது. தாயாரின் மனதை வருத்த மனமின்றி நண்பர்களிடம் கடன் வாங்கினான்.

    அத்துடன், வீட்டில் இருந்து சென்று வந்த கார் வாடகை, அவர்களின் செலவு என்று நீண்டு விட்டது. எப்படியும் தான்தானே பார்த்தாக வேண்டும் எனும் எண்ணத்தில் அமைதியாக தன்னுடைய வேலையை கவனிக்க துவங்கினான்.

    அன்று ஜெனிஃபரின் கல்லூரி தோழிகள் அனைவரும், கட்டாயம் புடவை அணிந்து வர வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். இதுவரையில் புடவை அணிந்து பழக்கமில்லாமல் 'முடியாது! நான் அன்னைக்கு வரமாட்டேன்' என்று மறுத்தாள். அவர்கள் கேட்பதாக தெரியவில்லை.

    வேறு வழியில்லாமல் வீட்டிற்கு வந்து கூறிவிட்டு முகத்தை இறக்கினாள். தாயார் தானே அணிந்து விடுவதாக கூறினார். அவர் முன்பு புடவை இல்லாமல் நிற்க நாணி 'முடியாது' என்று மறுத்து விட்டாள். அவரோ ஆமாண்டி! பிறந்ததுல இருந்து உன்னை குளிப்பாட்டி, உடை மாத்தி, பாலூட்டி வளர்க்கும் போது பார்க்கல பாரு. அதுல இப்பத்தான் பார்க்கப் போறேனாக்கும்! பொய் கோபம் கொண்டவரை போல் முறைத்தார் கிரேஸ்லெட்.

    ஜெனிஃபர் அதுவேற டிபார்ட்மென்ட்; இதுவேற என்று சொல்லிக்கொண்டே உதட்டை சுழித்தாள்.

    ம்கும்… இப்படி பொத்தி பொத்தி மூடி வைக்கும் அழகை, மொத்தமா கொள்ளையடிக்க ஒருத்தன் வருவான். அப்போ என்ன செய்வியாம்? என்று கிடுக்குப்பிடி போட்டார்.

    அவள் திருதிருவென்று முழித்தாள்.

    சொல்லுடி மகாராணி? என்னை வெளியே போகச் சொன்ன மாதிரி அவர்கிட்டேயும் சொல்லுவியா? என்று குறும்பாக கேட்டார்.

    தாயாரின் திருட்டுத்தனம் புரிந்தது. அப்படியாவது தன்னிடம் உதவிகோர மாட்டாளா எனும் எதிர்பார்ப்பில் கேட்கிறார் என்பதும் தெரிந்தது!

    மெதுவாக அருகில் நெருங்கினாள். பின்னிருந்து தள்ளிக்கொண்டு வெளியில் வந்தாள். உங்க மருமகனுக்கும் இதே கதி தான் சத்தமாக நகைத்தாள் ஜெனிஃபர்.

    மகளின் பேச்சை ரசித்து சிரித்தார் கிரேஸ்லெட். பார்க்கலாம். நாங்களும் இப்படித்தான் சொன்னோம்… என்று கூறிய தாயாரை மறித்து, நாங்களும் சொல்லுவோமில்லை! என்று கண்ணடித்தாள்.

    அவளே முயற்சி செய்து பார்க்கட்டும். இல்லா விட்டால் தான் உதவலாம் எனும் எண்ணத்தில், புன்னகையுடன் வேலைகளை கவனிக்க சென்றார் அவளது தாயார்.

    அதன் பிறகு தன்னுடைய அறைக்குள் நுழைந்து, யூடியூப் உதவியால் ஒரு வழியாக அணிந்து பழக கற்றுக் கொண்டாள். புடவை கழன்று விடக்கூடாது என்பதற்காக ஏகப்பட்ட பின்களை ஆங்காங்கே குத்தி வைத்திருந்தாள். பிறந்தநாள் அன்று அப்பா வாங்கி கொடுத்த புடவை, அண்ணன் அன்பளிப்பாக கொடுத்த வெண்ணிற டைமண்ட் நெக்லஸுயுடன், தன்னை இயல்பாக அலங்கரித்து பிரேயர் அறைக்குள் நுழைந்தாள்.

    சில நிமிடங்கள் கண்மூடி ஜெபம் செய்தாள். 'இன்றைய நாள் நல்ல நாளா அமையணும். பெற்றோரின் மனம் புண்படாமல் நடந்துக்கணும். அண்ணனின் அன்புக்கும், அக்கறை கலந்த பாசத்துக்கும் இறுதி வரை நம்பிக்கையுடையவளா இருக்கணும். படிப்பு முடிஞ்சதும் ஆசைப்பட்ட வேலைக்குப் போகணும். அதுவரைக்கும் எந்தவிதமான கேடும் என் வாழ்வில் நிகழ கூடாது. என்மீது உயிரையே வச்சுருப்பவர்களுக்கு என்னால் எந்தவொரு கஷ்டமோ, மனச் சங்கடமோ ஏற்பட்டு விடக்கூடாது' என்று மனதார வேண்டிக் கொண்டாள்.

    பின்னர் அங்கிருந்து வெளியே வந்து தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.

    நேரம் எட்டுமணி கடந்தது. தாயார் கிரேஸ்லெட் காலை உணவை சாப்பாட்டு மேஜையின் மீது எடுத்து வைத்தார். மகளை அழைத்துக்கொண்டே கணவர் சாமுவேல் மற்றும் மகன் ஆல்வினையும் அழைத்தார்.

    கூப்பிட்ட குரலுக்கு அனைவரும் விரைந்து வந்து அமர்ந்தனர். புடவையில் மகளைப் பார்த்ததும் மனதார ஆசிர்வதித்தார் சாமுவேல். ஆல்வின் வாழ்த்து கூறிவிட்டு தங்கையின் அழகை பெருமிதத்துடன் ரசித்தான்.

    மகளிடம் கல்லூரி படிப்பை பற்றி விசாரித்தார்.

    ஜெனிஃபர் டேட்! இன்னும் மூணு மாசத்தில் படிப்பு முடியப் போகுது. அப்புறம் பீ.எட் (B.Ed) பண்ணனும். பிறகு, கொஞ்ச நாள் டீச்சரா வேலைக்குப் போகணும் தன்னுடைய எதிர்கால திட்டத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள்.

    ஆல்வின், ஏய் குட்டி! படிச்சது போதும். வயசு அதிகமாகிட்டே இருக்கு. உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறேன். புருசன் வீட்டுக்குப் போய் சந்தோஷமா குடித்தனம் பண்ணிட்டு, எனக்கு மருமகன், மருமகளை பெத்துக் கொடு என்று புன்னகையுடன் கூறினான்.

    ஜெனிஃபர் முடியாது! நான் இன்னும் நிறையப் படிக்கணும். உடனே குழந்தைகளை பெத்துக்க ஆசையா இருந்தா, நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சுக்கோங்க குறும்பாக கண் சிமிட்டினாள்.

    உடனே அவன், நானா வேண்டாம்னு சொல்றேன். இப்போதுன்னாலும் நான் ரெடிதான் என்று முணுமுணுத்தான்.

    அடுத்த நிமிடம் அவனை அப்பாவிடம் மாட்டி விட்டாள் ஜெனிஃபர்.

    அப்பா, அண்ணாவுக்கு கல்யாண ஆசை வந்துருச்சாம். உடனே பொண்ணு பார்த்து முடிக்கச் சொல்றாங்க

    சாமுவேல் அவனைப் பார்த்த பார்வையில், வாயில் வைத்த உணவு தொண்டையில் சிக்கி புரையேறி விட்டது.

    அடியேய் ராட்சசி! உன்கிட்டே சொன்னதை ஏண்டி அப்பா கிட்டே சொல்லிக் கொடுத்தே? எனக்கு கல்யாணம் ஆகட்டும். உன்னை வச்சி செய்றேன் பாரு என்று முறைத்துக்கொண்டே கூறினான்.

    அவள், அப்பா! அண்ணா யாரையோ விரும்புறாங்களாம். அவங்களையே கட்டிக்க ஆசைப்படுறாங்களாம். அண்ணி வந்த பிறகு, ரெண்டு பேருமா சேர்ந்து என்னைத் துரத்தி விட்டுடுவாங்களாம் கண்ணை கசக்கி கொண்டே கூறினாள். அவனோ, விட்டால் போதும் என்று எழுந்து ஓடினான்.

    வாய் விட்டுச் சிரித்தாள் ஜெனிஃபர்.

    என்ன ஆல்வின் இது? வயசுப் பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது? என்னைக்கு ஜெனியோட கல்யாணம் முடியுதோ அதுக்குப் பிறகு தான் உன்னோட கல்யாணம். அதுவரைக்கும் உன் ஆசையெல்லாம் மனசுக்குள்ள வச்சுக்கோ! என்று கண்டிப்புடன் கூறினார்.

    அவன் தங்கையின் செவியை பற்றித் திருகிக்கொண்டே சிடுசிடுத்தான்.

    அப்பா, அண்ணா... என்று ஆரம்பிக்கவும், அவன் ஓடியே விட்டான். சிரிப்பை அடக்க முடியாமல் சில நிமிடங்கள் தவித்தாள்... தாயாரின் அதட்டலில் நேரமாகி விட்டதை உணர்ந்து, வேகமாக உணவை முடித்துக் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

    ஜெனிஃபர் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பீ.எஸ்சி (B.Sc) மூன்றாவது வருடம் படித்து வருகிறாள். வீட்டார் மீது மிகுந்த பாசமுடையவள். மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பா, தங்கை என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் அண்ணன், அவர்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் தாயார், என்று அத்தனை அன்பும், அன்யோன்யமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள்.

    சாமுவேல் பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். ஆல்வின் வங்கியில் மேனேஜராக பணிபுரிகிறான். தங்கையின் மீதான அளவில்லா பாசத்தில், சில நாட்களாக கண்ணில் படுகின்ற நபர்களில், அவளுக்குப் பொருத்தமான நபரை தேர்வு செய்து விட்டு வந்து அனைவரிடமும் கூறுவான். அவளோ 'படிப்பு படிப்பு' என்று நான்கு வரன்களை தட்டிக் கழித்து விட்டாள். தற்சமயம் அவனது வங்கிக்கு புதியதாக வந்திருக்கும் மேலதிகாரியின் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். தங்கைக்கு பொருத்தமாக இருப்பதாக எண்ணினான். அதனாலே இன்று மேலோட்டமாக கூறினான். அவளோ, அவனையே அதில் சிக்க வைத்து தெரித்து ஓட செய்து விட்டாள். தங்கையின் குறும்புதனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே தானும் அலுவலகத்திற்கு கிளம்பினான் ஆல்வின்!

    ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டே தாயாரிடம் விடை பெற்றாள் ஜெனிஃபர். நேரமாகிவிட்டதை உணர்ந்து வேகத்தை அதிகப்படுத்தினாள். இன்னும் பத்து நிமிடத்தில் சென்று விடலாம் எனும் நிலையில் அது நிகழ்ந்தது.

    வீசியடித்த தென்றல் காற்றில் புடவை முந்தானை பறந்து சென்று சக்கரத்தில் சிக்கியது. அடுத்த நிமிடம் ஸ்கூட்டி நிலைதடுமாறி சாலையோரம் சரிந்தது. புத்தகப்பை ஒரு புறமாக விழ, அவளது ஒரு கால் பகுதிகள் ஸ்கூட்டிக்கு அடியில் மாட்டிக் கொண்டது. அம்மா!! என்ற அலறலில், வேலை பார்த்துக் கொண்டிருந்த வித்யார்த் வேகமாக ஓடி வந்தான்.

    அத்தியாயம் - 2

    திடீரென்று கேட்ட சப்தத்தில் ஓடி வந்த வித்யார்த், கலைந்த ஓவியமாக சாலையோரம் அடிபட்டு விழுந்து கிடந்தவளை பார்த்தான். புடவை சக்கரத்தில் சிக்கியதால், பின் தெரித்து ரவிக்கை கிழிந்து போயிருந்தது. வயிற்றுப் பகுதியில் இருந்த இறுக்கம் மற்றும், கை முட்டுப் பகுதியில் வழிந்த குருதி, அவளது அச்சம் கலந்த அழுகை அனைத்தும் அவனை என்னவோ செய்தது.

    வெண்ணிற தோற்றத்தை உடைய அவள் மேனியில் படிந்த செங்குருதியும், கீறலும் பார்ப்பதற்கு வெண்பனியின் மீது உலாவும் சிவப்பு ரோஜாவையும், முள்ளையும் போன்று காட்டியளித்தன. அப்போது வலியால் துடித்த உதடுகள் அம்மா என்று உச்சரிக்கவும், விழிகளை தட்டிக் கொண்டு அவசரமாக சென்று ஸ்கூட்டியை தூக்கினான். அவள் மேலும் அழுதாள். உடனே வயிற்றில் பின்னிடப்பட்ட புடவையை மெதுவாக கழற்ற உதவினான். அவள் மறுத்து அவன் கரத்தைப் பற்றினாள்.

    இங்கே பாரு, புடவையை கொஞ்சமா தளர்த்தா விட்டால், சக்கரத்தில் இருந்து எடுப்பது சிரமம். அத்தோடு வயிற்றுக்கும் ஏதாவது ஆகிடப் போகுது. கொஞ்சம் பொறுத்துக்கோ என்றான்.

    அவள் இரு கரம் கொண்டு மெய்தனை மறைத்தாள். தலை சம்மதமாக அசைந்தது. விழிகளில் நீர் விடாமல் வழிந்தது.

    சற்று நேரம் கடந்தது. சக்கரத்தில் சிக்கிய அவளது புடவையை எடுத்து விட்டு ஸ்கூட்டியை நகர்த்தி நிறுத்தினான். அவள் அப்பா ஆசை ஆசையாக வாங்கி கொடுத்திருந்த புடவை, சக்கரத்தின் இடையில் சிக்கியதால் கசங்கி, கருப்பு நிற ஆயில் படர்ந்து காணப்பட்டது.

    மனவேதனை தாளாமல் அழுதாள் ஜெனிஃபர். அவனுக்குப் பாவமாகி விட்டது. இதுபோல் எத்தனைப் புடவை வேணும்னாலும் புதுசா வாங்கலாம்... உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவே? கொஞ்சம் கவனமா வந்திருக்கலாமே? நல்லவேளை இடையில் கார், பஸ் எதுவும் வரல. வந்திருந்தா... அவளது துடித்த உதடுகளைக் கண்டு பேச்சை நிறுத்தினான் வித்யார்த்.

    பிறந்த நாள் அன்று பெற்றவர் எடுத்துக் கொடுத்த புடவையை அணிந்து கொண்டு எத்தனை ஆசையுடன் வந்திருந்தாள் ஜெனிஃபர். இப்போதானால் அது கசங்கி, கிழிந்து, ரத்தமாக... அப்படியொரு நிலையில் அவளால் பார்க்க முடியவில்லை. முழங்காலில் முகத்தைப் புதைத்து விம்மினாள்.

    தன்முன்னே அவள் இருந்த தோற்றமும், அழுகையும் அவனுக்குள் பரிதாபத்தையும், கனிவையும் ஒருங்கே தோற்றுவித்தது.

    இங்கே பார். அடி ஒண்ணும் பெருசா படல. ஓய்வெடுத்தா சீக்கிரமே சரியாகிடும் ஆறுதலாக கூறியவன் அவளை எழச் செய்ய முயன்றான். அவள் எழாமல் அழுது கொண்டே இருந்தாள். பயப்படாதே! உனக்கு ஒண்ணுமில்லை. வா! பக்கத்துல நான் வேலை பார்க்கிற இடமிருக்கு. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு கிளம்பு என்றான். அவள் மிரண்ட விழிகளால் அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.

    என்னைப் பார்த்தா மோசமானவனா தெரியுதா? அவள் அச்சத்துடன் தலையசைத்தாள்.

    பிறகென்ன? இப்படியே உன்னை ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சிட்டு போனாலோ, வீட்டாரை வரச்சொல்லி ஒப்படைச்சாலோ உன்னால தாங்க முடியுமா? அப்புறம், அதுவே மறக்க முடியாத அளவுக்கு ரணமா மாறி உன்னையே காயப்படுத்தும். நான் யார் கிட்டேயும் எதுவும் சொல்ல மாட்டேன். என்னை நம்பு! எனக்கும் உன்போல் வயதில் சகோதரி இருக்காங்க அவள் மனம் இலகுவாகும் பொருட்டு சாந்தமாக கூறினான்.

    அவளது புடவை முந்தானையை எடுத்துக் கழுத்தோடு சுற்றி மூடினான். அப்படியே, இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு தன்னுடைய மெக்கானிக் ஷாப்பை நோக்கி நடந்தான். தனக்கென்று பிரத்யோகமாக அமைக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த படுக்கையில் கிடத்தினான்.

    உடல் வலியால் அவளது உதடுகள் துடித்தன. விழியோரம் விடாமல் நீர் வடிந்தன. அழாதே! சீக்கிரமே சரியாகிடும் ஆறுதலாக கூறினான் வித்யார்த்.

    அவள் பதில் கூறாமல் விசும்பினாள்.

    மெரூன் நிற சாஃப்ட் சில்க் புடவையில் அவளது வெண்ணிற தேகம் பளீரென்று வெட்டியது. தரையில் விழுந்து அடிபட்டதால் ஏற்பட்ட காயம் மற்றும் இரத்தத்தைக் கவனித்தான். புடவை அணிஞ்சுட்டு வர்றப்போ கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே?

    அவள் தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.

    ரொம்ப வலிக்கிதா?

    ம்...

    இதோ, இப்போ வந்திடறேன் என்றான். அவளது பதிலையும் எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான். சற்று நேரத்தில் மறுபடியும் வந்தான். கையில் இருந்த முதலுதவி பெட்டியை திறந்து, பஞ்சு, மருந்து, சிறிய அளவிலான கத்தரி அனைத்தையும் நாற்காலியின் மீது எடுத்து வைத்தான்.

    காயம் பட்ட இடத்தில் மெதுவாக துடைத்ததும், டெட்டாலில் நனைந்த பஞ்சு, எரிச்சலை ஏற்படுத்தியது. 'ஸ்...ம்மா' என்று முனகிக்கொண்டே உதட்டைக் கடித்தாள்.

    மென்மையாக புன்னகைத்தான் வித்யார்த்.

    வேகமாக துடைத்து மருந்திட்டான். கால் பகுதியில் அடிபட்டிருப்பது தெரிந்தது. புடவையை சற்று நகர்த்தினான். அவள் மறுத்தாள். அடிபட்டிருக்கா பார்க்கறேன். வேறெதுவும் இல்லை என்றான். அவள் தயங்கினாள்.

    அப்பா, அண்ணாவை தவிர யாரிடமும் அதிகம் பேசாதவள் ஜெனிஃபர். அப்படியிருக்க யாரென்று அறியா வாலிபன் கால் பகுதியை பார்வையிட சென்றால், எங்ஙனம் அனுமதிப்பாள்?

    வலியையும் மீறிய நாணத்தில் வதனம் சிவந்து காணப்பட்டது. அவன் புடவையில் இருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1