Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Osaiyilla Alaigal
Osaiyilla Alaigal
Osaiyilla Alaigal
Ebook136 pages55 minutes

Osaiyilla Alaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தாத்தாவின் மீது கொண்ட பாசத்திற்காக தன் காதலை தியாகம் செய்து முகுந்தனை மணம் புரிந்து கொள்கிறாள் கவிதாயினி அபர்ணா. பெண் பித்தனான அவனுடன் கசக்கும் மண வாழ்க்கையில் முகநூல் வழியாக மீண்டும் அவளுடன் நண்பனாக இணைகிறான் பழைய காதலன் அரவிந்தன். செம்மொழி என்ற புனைப்பெயரில் அவனுடன் நட்பைத் தொடர்கிறாள் அபர்ணா. அவள் வாழ்க்கையில் பின்னர் நடப்பவை என்ன..? என்பதை பல சுவராஸ்யமான திருப்பங்களுடன் சொல்கிறது இந்த நாவல்... நடந்தது என்ன..? அறிந்து கொள்ளப் படியுங்கள் தொடர்ந்து இந்நாவலை...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580147310011
Osaiyilla Alaigal

Read more from Viji Muruganathan

Related to Osaiyilla Alaigal

Related ebooks

Reviews for Osaiyilla Alaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Osaiyilla Alaigal - Viji Muruganathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஓசையில்லா அலைகள்

    Osaiyilla Alaigal

    Author:

    விஜி முருகநாதன்

    Viji Muruganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-muruganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 1

    தேவலோகத்து மயன் வந்து அலங்கரித்துவிட்டானோ? என்று பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைத்துப் போகும்படி வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களினால் அமைத்தது போல் வெண்ணிற விளக்குகள், அந்த ஹாலின் நாற்புறமும் சரமாய்த் தொங்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திலிருந்து வர்ண நீரூற்று தனக்குள்ளிருந்து எழுந்த இதமான ஒலிக்குத் தகுந்தபடி தாளம் தப்பாது நடனமாடிக் கொண்டிருந்தது. முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தென்னங்கீற்று தட்டியின் நாற்புறமும் அலங்காரமாக ரோஜாக்கள் செருகப்பட்டு இடையில் சாதனைப் பெண்கள் 2022 என்ற ஜிகினா எழுத்துக்கள் மின்னின‌. பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் விருது பெறுபவர்களின் பெயர்களும், தலைமை தாங்குபவரின் பெயரும், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்பவர்களின் பெயர்களும்‌ வண்ண எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன.

    அதற்குக் கீழே பெரிய மேஜையில் பன்னீர், சந்தனம், குங்குமம், கல்கண்டு ஒரு தட்டிலும், ரோஜாப் பூக்கள் இன்னொரு தட்டிலுமாக வைக்கப்பட்டிருந்தன. ஒரே மாதிரியான சிகையலங்காரத்தில், நகையலங்காரங்கத்தில், அழகான புடவை, எம்பிராய்டரி ரவிக்கையில் அதிக முக ஒப்பனையில், கண்ணில் உடல் மொழியில் தூக்கலான கர்வத்துடன் நான்கு இளம்பெண்கள் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

    வரிசையாக வந்து நின்ற கார்களிலிருந்து இறங்கிய பிரபலமான பெரிய மனிதர்களை, அல்லது அவ்வளவு நீளமான கார்களிலிருந்து இறங்கியதால் அப்படி ஒரு அந்தஸ்த்துடன் நினைக்க வைக்கப்பட்டவர்களை முகப்புப் பெண்கள் வாய் நிறைந்த புன்னகையில், தலயசைப்பில் கை கூப்பலுடன் பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

    விழா ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன. உள்ளே வந்திருந்த விருந்தினர்களை மேடைக்கு அழைக்க வரவேற்புரை வழங்கும் பெண் மைக்குக்கு முன் புறம் வந்து நின்றார்.

    வெளியே வேகமாக ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவசரமாக வந்தாள் அவள். நல்ல மஞ்சளில் உடம்பு முழுவதும் கருப்பில் வேல் கம்பு பிடித்திருந்த வீரர்கள் போல் டிசைன் செய்யப்பட்டிருந்த காட்டன் சேலை அவள் கட்டியிருந்ததால் ‘அழகான’ என்ற சொல்லைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது. முன்புறம் வந்து நின்றவளை ஏறிட்ட முகப்பில் நின்ற பெண்கள் குதிங்கால் செருப்பால் உயர்த்தப்பட்டிருந்த தங்கள் ஐந்தரை அடி உயரத்தை நினைத்து உள்ளுக்குள் எழுந்த பெருமூச்சுடன் கை கூப்பினார்கள்.

    வரவேற்றவர்களை மென்புன்னகையுடன் ஏறிட்டவள். ஐயெம் அபர்ணா... விழா தொடங்கி விட்டார்களா?!

    நோ மேம்... வித் இன் ஃபைவ் மினிட்ஸ்...

    ஓ.கே. தேங்க்யூ... என்றவள் அங்கிருந்த கல்கண்டை எடுத்து வாய்க்குள் போட்டபடி அரங்கத்துள் நுழைந்தாள். உறுத்தாத வெளிச்சம் அரங்கம் முழுவதும் படர்ந்திருக்க, ஏறத்தாழ எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் நிரம்பி இருந்தனர். கண்களைச் சுழற்றியபடி நின்றவளின் அருகில் டை கட்டி உயர்தர பேண்ட்சூட்டில் கிரீம் பூசி அமர்த்திய தலையுடன் தூக்கலான நறுமணத்துடன் வந்து நின்றான் அவன், எஸ்.மேம்... அவார்ட் வாங்குகிறீர்கள் என்றால் பர்ஸ்ட் ரோவில் சீட் ஒதுக்கி இருக்காங்க... என்றபடி கேள்வியாக நோக்கியவனை நோக்கி... எஸ் என்றாள்‌. வாங்க என்றபடி முன் நடந்தவனைத் தொடரவும், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அறிவிப்பு வரவும், நடந்து கொண்டிருந்தவர்கள் அப்படியே நின்றார்கள்.

    தமிழ்த்தாயை வாழ்த்தி முடித்ததும், முன்புறம் வரிசையாக பெயர் ஒட்டப்பட்டிருந்த இருக்கையின் அருகே அவளை அழைத்துச் சென்றவன் கேள்வியாக நோக்கவும் அபர்ணா... எக்ஸலென்ஸ் அவார்ட் என்றாள். அவள் பெயர் எழுதி இருந்த இருக்கையை காண்பித்தவன் அவள் அமர்ந்தவுடன் நகர்ந்தான். நல்ல வேளையாக எக்ஸ்கியூஸ்மீக்களை செலவு செய்யாத முதல் வரிசை... அமர்ந்தவள் பக்கவாட்டில் இருக்கையுடன் நீட்டியிருந்த பலகையில் தண்ணீர் பாட்டிலும் தட்டில் ஜரிகைப் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த ஸ்நாக்ஸ் ஐட்டமும் வைக்கப்பட்டிருந்தன. மேடையில் வரவேற்புரை தொடங்கியது.

    அவளை அறிந்திருந்த ஒரு பெண்மணி வாழ்த்துக்களைக் கொடுத்தது, நன்றியைப் பெற்றுக்கொண்டு அவசரமாக விலகினாள். மேடையை கவனிக்க ஆரம்பித்தாள். விருதுகள் வழங்க வந்திருந்த பணி ஓய்வு பெற்ற மதிப்பிற்குரிய நீதிபதி அம்மா பேச ஆரம்பித்திருந்தார்கள்.

    இங்கே விருது பெற வந்திருக்கும் அத்தனை பெண்களின் சாதனைக்குப் பின்னாலும் எவ்வளவு வலி, வேதனை, போராட்டங்கள் நிறைந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன். இருந்தாலும் இவர்கள் அதை வென்று தங்களின் திறமையால் தங்களுக்கென்று முகவரி தேடிக் கொண்டவர்கள். இன்னும்... பேசிக் கொண்டே போனவரின் குரல் காதில் கேட்டுக் கொண்டிருந்தாலும், மனம் பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.

    அத்தியாயம் 2

    க்குகூ...க்குகூ...

    எப்போதும் போலவே அன்றும் குயில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் அபர்ணா. கடிகாரத்தைப் பார்க்காமலேயே சரியாக மணி நான்கு என்று சொல்லிவிட முடியும். அவ்வளவு சரியாக ஒரு நாள் தவறாது அந்த நேரத்திற்கு கூவும் அது. ஆச்சரியமாக இருக்கும் அபர்ணாவிற்கு. எப்படி சொல்லி வைத்ததுபோல் தினமும் இந்த நேரத்திற்கு கூவுகிறது என்று.

    அவள் வீட்டின் பின்புறம் இருக்கும் பெரிய மாமரத்திலிருந்துதான் கூவும் அது. அதைத் தொடர்ந்தார் போல் வரிசையாக க்கூ...க்கூ... என்று பல குயில்கள் கூவத் தொடங்கும்.

    ஏய்... எழுந்திரு... விடியப் போகுது... சீக்கிரம்... என்று முதல் குயில் எழுப்ப... இதோ எந்திருச்சிட்டோம்... என்று மற்ற குயில்கள் கூவுவது போல் தோன்றும் அவளுக்கு. அன்றும் அந்தக் குயில்களின் கூவலை ரசித்துக் கொண்டே படுத்திருந்தவள், மனதிற்குள்ளயே... ஒன்று... இரண்டு... என்று இருபத்தி ஐந்து முறை எண்ணத் தொடங்கியபடி தன் மூச்சையே கவனிக்கத் தொடங்கினாள். எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாக கண் விழித்து, ஒட்டியிருந்த குளியலறைக்குள் சென்றவள், கால் மணி நேரத்தில் மேலே தூக்கிச் சொருகிய கொண்டையும், லேசான பருத்திக் குர்த்தாவும், பேண்டும் அணிந்து வெளியே வந்தாள்.

    படுக்கையறைக் கதவை மெதுவாக சாற்றிவிட்டு ஹாலுக்கு நுழைந்தாள். அங்கிருந்த யோகா மேட்டை விரித்து யோகா செய்ய ஆரம்பித்தாள். சரியாக முக்கால் மணி நேரம் உடலைத் தளர்த்திக் கொள்ளும் பயிற்சி. முடித்து கடிகாரத்தைப் பார்த்தாள், மணி ஐந்து என்றது. மீண்டும் கண் மூடி அமர்ந்தவள் ஓம் என்ற ஓங்காரத்துடன் புருவ மத்தியில் உள்ளம் குவித்து தியானம் செய்து மனமும் உடலும் தெளிவாக ஐந்தரைக்குக் எழுந்தாள்.

    சமையலறைக்குள் நுழைந்து காப்பி மேக்கரில் தூளைப் போட்டு தண்ணீர் விட்டு ஆன் செய்து விட்டு...

    டைனிங் டேபிள்

    Enjoying the preview?
    Page 1 of 1