Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraiyarul Petra Penn Siddharkal
Iraiyarul Petra Penn Siddharkal
Iraiyarul Petra Penn Siddharkal
Ebook123 pages45 minutes

Iraiyarul Petra Penn Siddharkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரததேசம் பழம்பெரும் பூமி மட்டும் அல்ல... எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் வாழ்ந்து, மறைந்து இன்னும் கூட பல அருளாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான பூமி இது... ஆண் சித்தர்கள் மட்டும் அல்ல... பெண் சித்தர்களும் பல சேவைகளையும் அருள் அனுபவங்களையும் பக்தர்களுக்குக் கொடுத்துள்ளனர்... அப்படிப்பட்ட இறையருள் பெற்ற சித்தர்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

Languageதமிழ்
Release dateMar 20, 2023
ISBN6580147309718
Iraiyarul Petra Penn Siddharkal

Read more from Viji Muruganathan

Related to Iraiyarul Petra Penn Siddharkal

Related ebooks

Reviews for Iraiyarul Petra Penn Siddharkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraiyarul Petra Penn Siddharkal - Viji Muruganathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இறையருள் பெற்ற பெண் சித்தர்கள்

    Iraiyarul Petra Penn Siddharkal

    Author:

    விஜி முருகநாதன்

    Viji Muruganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-muruganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஆண்டவன் பிச்சை(பிச்சி)

    2. பக்த குணவதிபாய்

    3. யோகி கிரிபாலா

    4. லல்லேஸ்வரி

    5. ஷிவம்மா தாயி

    6. ராதா கிருஷ்ணமாயி

    7. சிவகாமி பரதேசி அம்மையார்

    8. சக்கரையம்மா

    9. நீலம்மையார்

    10. மாயம்மா

    11. அம்மணி அம்மாள்

    12. அக்க மகாதேவி

    13. தரி கொண்ட வேங்கமாம்பா

    14. பீபீ நாச்சியார்

    15. குருசாமி அம்மையார்

    இறையருள் பெற்ற பெண் சித்தர்கள் என்ற எனது இந்த ஆன்மீகத் தொடர் தினத்தந்தி நாளிதழில் ஆன்மீகம் பகுதியில் பதினைந்து வாரங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

    இத்தொடர் புத்தகமாக வெளிவரும் இத்தருணத்தில் பிரசுரித்துப் பெருமை சேர்த்த தினத்தந்தி நாளிதழ் குழுமத்தினருக்கும், ஆன்மீகப் பகுதி ஆசிரியர் திரு. ஜெயவேல் முருகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    இப்படிக்கு

    உங்கள் எழுத்தாளர்

    விஜி முருகநாதன்.

    அன்புள்ள உங்களுக்கு,

    பாரததேசம் பழம்பெரும் பூமி மட்டும் அல்ல... எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் வாழ்ந்து, மறைந்து இன்னும்கூட பல அருளாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான பூமி இது... ஆண் சித்தர்கள் மட்டும் அல்ல... பெண் சித்தர்களும் பல சேவைகளையும் அருள் அனுபவங்களையும் பக்தர்களுக்குக் கொடுத்துள்ளனர்... அப்படிப்பட்ட இறையருள் பெற்ற சித்தர்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

    1. ஆண்டவன் பிச்சை(பிச்சி)

    அரகோரா... அரகோரா... முழங்கும் பக்த கோஷங்களையும், பம்பை ஒலியுடன் ஆடும் காவடிகளையும், காற்றில் மிதந்து வரும் திருநீற்றின் வாசத்தையும், அதனுடன் கலந்தடிக்கும் பஞ்சாமிர்த நெடியையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக்கொண்டும், முகர்ந்து கொண்டும் சந்தோஷமாக மாயோன் முருகன் அருள்பாலிக்கும் பழநி மலை.

    அங்கே இருந்த தங்கும் விடுதியில் ஒரு அற்புதமான பிரபலமான பாடகர். திரைப்பட பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தவரை ஆட்கொண்டு தன்மேல் பாடல்கள் பாட வைத்து பெரும் புகழ் பெறச் செய்தான் முருகன். அதனால் கிருத்திகை தவறாமல் அவனை தரிசிக்க வந்து விடுவார்.

    அன்று அவர் அறையில் பணிபுரிந்த ஒரு இஸ்லாமிய பாலகன் மீண்டும் மீண்டும் ஒரு பாடலின் வரிகளைப் பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்க அந்தப் பாடலின் வரிகள் பாடகரை சுண்டி இழுக்க திரும்பத்திரும்ப அவனை பாட வைத்து அந்த வரிகளை எழுதிக் கொண்டார். பின்னர் அந்த வரிகளுக்கு மெட்டமைத்து தான் பாடும் அத்தனை கச்சேரிகளிலும் பாட அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானாலும் அதை எழுதியது யாரென்று தேடிக்கொண்டே இருந்தார்.

    ஆண்டுகள் பல கடந்து அவரை வைத்து ஆவணப்படம் எடுப்பதற்கு முன் வந்த ஒருவர் பாடகரையும் அழைத்துக் கொண்டு சென்னை காளிகாம்பாள் கோவிலில் பூஜை செய்யச் சென்றார். பூஜை முடிந்து பிரசாதம் கொடுத்த குருக்கள் அவர்களை அம்பாள் சன்னதியின் பக்கவாட்டுச் சுவரைக் காண்பித்தார். அங்கே செதுக்கி இருந்த கல்வெட்டில் இருந்தது அந்த முழுப்பாடல், அதை இயற்றியவர் பெயருடன்.

    மனம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்து கண்ணில் கரை கட்டிய நீருடன் நின்றிருந்த அந்தப் புகழ்பெற்ற பாடகர் திரு. டி. எம். சௌந்தர்ராஜன். பாடல் உள்ளம் உருகுதையா பாடலை எழுதியவர் ஆண்டவன் பிச்சை.

    கல்வெட்டில் உள்ளம் உருகுதடா என்று தான் பொரித்திருந்தது. அந்த இஸ்லாமிய சிறுவனும் அப்படியே பாடினான். ஆனால் டி.எம்.எஸ். மரியாதை கருதி ஐய்யா... என்று மாற்றி விட்டார்.

    யார் இந்த ஆண்டவன் பிச்சை...(சி)?!

    நமது தாய்த்திரு நாட்டில் எண்ணற்ற முனிவர்கள், யோகினிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் இறைவனைப் பாடியும், நேரிலேயே தரிசித்தும் புகழ் பெறாமலேயே வாழ்ந்து மறைந்தும் போயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் மரகதவள்ளி என்பவர் பின்னாளில் ஆண்டவன் பிச்சை என்று அழைக்கப்பட்டவர்.

    1899ஆம் ஆண்டு கபாலீஸ்வரர் ஆட்சி செய்கின்ற மயிலையில் சங்கர நாராயண சாஸ்திரி-சீதாலட்சுமி தம்பதியருக்கு ஒரு அழகான பெண் மகவு பிறந்தது. மரகதவள்ளி என்று பெயரிட்டனர். பண்டிதர்கள் தோன்றித் தழைத்த குடும்பம் ஆனாலும் மரகதத்திற்கு படிக்கப் பிடிக்கவில்லை. ஆனால் அறிவில் குறைவில்லை.

    ஆனால் அவரின் பாட்டிக்குத் தெரிந்திருந்தது. தனது பேத்தி அபூர்வப் பெண் என்று, நிறைய முருகப்பெருமான் பக்திக் கதைகளை பேத்திக்கு தினமும் சொல்லி வளர்த்தார்.

    அக்கால வழக்கப்படி மரகதத்திற்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். கணவர் நரசிம்ம சாஸ்திரி புகுந்த வீடு போன பிறகு ஒருநாள் மரகதத்தின் கனவில் தோன்றிய முருகன் அவர் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி மரகதம் என்னைப் பாடுவதே நாம் உனக்கு இட்ட பணி... என்று கட்டளையிட்டு மறைந்தார்.

    அதுவரை பள்ளிக்கூடம் பக்கமே போகாத மரகதவள்ளி ஆசுகவி போல் பல பக்திப் பாடல்களைப் பாடினார். எழுதினார்.

    பக்திநெறியில் வாழ்ந்தாலும் இல்லறநெறிப்படி பல குழந்தைகளுக்குத் தாயானார். ஐந்தாவது குழந்தையை அவர் சுமந்தபோது கந்தசஷ்டி விழா நடந்து கொண்டு இருந்தது. அவருக்கு வலி எடுத்த போது யாரும் இல்லை மிகவும் கஷ்டப்பட்டு ஆண்குழந்தை பிறந்தது.

    அரைமயக்கத்தில் கிடந்த மரகதத்தின் கனவில் தோன்றிய சிறுபாலகன். என்னை எடுத்துக் கொள்ள மாட்டாயா...?! என்று வினவினான்.

    நீ யாரப்பா... என்றார் மரகதம். நான் தான் மால்மருகன்... என்று மறைந்து விட்டார். அவ்வளவு தான் அப்போதே எழுந்து உட்கார்ந்து பல பாடல்களை எழுதத் தொடங்கினார்.

    குழந்தையைக்கூட கவனிக்காமல் இவர் முருகன் மேல் பித்தாகி பாடல்களை எந்நேரமும் எழுதுவதைக் கண்ட மாமியார். இவரை மிரட்டி இனிமேல் பாடல்களை எழுதக்கூடாது என்று கணவர், குழந்தைகள் மேல் சத்தியம் செய்யச் சொன்னார். பயந்த மரகதம் அதே போல் சத்தியம் செய்தார்.

    இவர் எழுதிய அத்தனை தாள்களையும் பெட்டியில் போட்டு மூடினார் மாமி.

    அதற்குப்பிறகு மாமியார் இயற்கை எய்தும்வரை எந்தப் பாடலையும் எழுதாமல் தன் முருக பக்தியை மனதிற்குள்ளேயே வைத்திருந்தார்.

    மாமியார் இறந்த பிறகு ஒருநாள் அவரைக் காண வந்த உறவினர் பெண்

    Enjoying the preview?
    Page 1 of 1