Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annamalaiyar Alitha Anubavangal
Annamalaiyar Alitha Anubavangal
Annamalaiyar Alitha Anubavangal
Ebook155 pages1 hour

Annamalaiyar Alitha Anubavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

2005-ம் வருடம் வரை, எனது தொழில் தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதும் அனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. தமிழில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதையும், அவ்வப்போது மனதில் தோன்றியதை, நான் அறிந்த நடையில், கவிதை வடிவில் எழுதுபவன் என்பதையும் எனது உற்றமும், சுற்றமும் அறிவார்கள். அவை தவிர, கட்டுரைகள் என்று பெரிதாக எதுபற்றியும் நான் எழுதியிருக்கவில்லை. ஆனால் எனது வேலையில் இருந்து நான் ஒய்வு பெற்ற சில வருடங்களில், “தமிழ் ஹிந்து” இணைய தளம் ஆன்மிகக் கட்டுரைகளைத் தமிழில் வெளியிட்டதைப் பார்த்து, நாமும் நமக்குத் தெரிந்ததை எழுதலாமே என்று தோன்ற, அவர்களும் நான் எழுதியவைகளைத் தொடர்ந்து பதிக்க, எனக்கேற்பட்ட எழுத்தார்வம் மேலும் அதிகமாயிற்று.

அவ்வாறு பல கட்டுரைகள் உயிர்பெறத் தொடங்கின. அவைகளில், சில தொடர் கட்டுரைகள் நூலாகவும் பதிக்கப்பட்டுப் பின்னர் வெளியிடப்பட்டன. எனது படைப்புகளைப் படித்த சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க, சில ஆங்கில நூல்களை மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிடும் வாய்ப்புகளையும் நான் பெற்றேன். அவை அனைத்துக்கும் முதலாக விளங்கி, அதற்கான ஊக்கமும் வழங்கிய “தமிழ் ஹிந்து” இணைய தள நிர்வாகிகளுக்கு நான் எவ்வளவு முறை நன்றி கூறினாலும் போதாது.

சுமார் 1967-ம் ஆண்டு முதலே, எனக்குத் திருவண்ணாமலை தவச்சீலர் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் படைப்புகளிலும், அவரது வழிகளிலும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் 1971-ம் ஆண்டு முதல் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைக் கட்டுரைகளாக முதலில் எழுதத் தொடங்கினேன். அவ்வாறு 2009-2010 ஆண்டு காலகட்டத்தில், “தமிழ் ஹிந்து” இணைய தளத்தில் பதிக்கப்பெற்ற சில கட்டுரைகளைத் தொகுத்து, ஒரு நூலாக வெளியிடும் ஆர்வம் தற்சமயம் எனக்குத் தோன்றியது. இந்தக் கட்டுரைகள் எழுதும்போதும், அவைகளை நூலாகத் தொகுக்கும்போதும் பல வழிகளில் பொறுமையுடன் இருந்து எனக்கு உதவிய எனது மனைவி திருமதி. சாரதா ராமன் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

இந்த நூலைப் படித்து அதனால் பயன் பெறும் வாசகர்கள், அந்த மகரிஷியையே தன்னிடம் ஈர்த்து, தனது மலைச்சாரலில் தங்க வைத்து, அவரது வாழ்நாள் முழுதும் அவரைத் தனது மடியில் இருத்தி வைத்துக் காத்து, இறுதியில் அவரது உயிரை ஒளிமயமாக்கித் தன்னுடன் ஐக்கியப்படுத்தி, உலகோர்க்கு அவரே அண்ணாமலையார் என்றும், அவர் போல் எவரும் வாழ்ந்து காட்ட முடியும் என்பதையும் தெளிவுபடுத்திய அந்த அண்ணாமலையாருக்கே அவர்கள் நன்றி கூறவேண்டும்.

வணக்கம்.
எஸ். ராமன்

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130404764
Annamalaiyar Alitha Anubavangal

Read more from S. Raman

Related to Annamalaiyar Alitha Anubavangal

Related ebooks

Reviews for Annamalaiyar Alitha Anubavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annamalaiyar Alitha Anubavangal - S. Raman

    https://www.pustaka.co.in

    அண்ணாமலையார் அளித்த அனுபவங்கள்

    Annamalaiyar Alitha Anubavangal

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஜோதியில் கலந்தோர்

    2. குரு வலம் தந்த கிரி வலம்

    3. பிரம்மா − விஷ்ணு மோதல் நமக்கு உணர்த்தும் பாடங்கள்

    4. நம்மைத் தேடி வரும் இறைவன்

    5. ஆன்மிக நினைவுகள் − 1

    6. ஆன்மிக நினைவுகள் − 2

    7. ஆன்மிக நினைவுகள் − 3

    8. ஆன்மிக நினைவுகள் − 4

    9. ஆன்மிக நினைவுகள் − 5

    10. அருணாசல அக்ஷர நாமாவளி

    11. ஆன்மிக நினைவுகள் − 6

    12. ஆன்மிக நினைவுகள் − 7

    13. ஆன்மிக நினைவுகள் − 8

    14. அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்

    15. அற வழியில் நால்வர்

    16. மஹா யோகம்

    17. உள்ளத்தே உள்ளதே உண்மை

    முன்னுரை

    2005ம் வருடம் வரை, எனது தொழில் தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதும் அனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. தமிழில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதையும், அவ்வப்போது மனதில் தோன்றியதை, நான் அறிந்த நடையில், கவிதை வடிவில் எழுதுபவன் என்பதையும் எனது உற்றமும், சுற்றமும் அறிவார்கள். அவை தவிர, கட்டுரைகள் என்று பெரிதாக எதுபற்றியும் நான் எழுதியிருக்கவில்லை. ஆனால் எனது வேலையில் இருந்து நான் ஓய்வு பெற்ற சில வருடங்களில், தமிழ் ஹிந்து இணைய தளம் ஆன்மிகக் கட்டுரைகளைத் தமிழில் வெளியிட்டதைப் பார்த்து, நாமும் நமக்குத் தெரிந்ததை எழுதலாமே என்று தோன்ற, அவர்களும் நான் எழுதியவைகளைத் தொடர்ந்து பதிக்க, எனக்கேற்பட்ட எழுத்தார்வம் மேலும் அதிகமாயிற்று.

    அவ்வாறு பல கட்டுரைகள் உயிர்பெறத் தொடங்கின. அவைகளில், சில தொடர் கட்டுரைகள் நூலாகவும் பதிக்கப்பட்டுப் பின்னர் வெளியிடப்பட்டன. எனது படைப்புகளைப் படித்த சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க, சில ஆங்கில நூல்களை மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிடும் வாய்ப்புகளையும் நான் பெற்றேன். அவை அனைத்துக்கும் முதலாக விளங்கி, அதற்கான ஊக்கமும் வழங்கிய தமிழ் ஹிந்து இணைய தள நிர்வாகிகளுக்கு நான் எவ்வளவு முறை நன்றி கூறினாலும் போதாது.

    சுமார் 1967ம் ஆண்டு முதலே, எனக்குத் திருவண்ணாமலை தவச்சீலர் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் படைப்புகளிலும், அவரது வழிகளிலும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் 1971ம் ஆண்டு முதல் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைக் கட்டுரைகளாக முதலில் எழுதத் தொடங்கினேன். அவ்வாறு 2009 - 2010 ஆண்டு காலகட்டத்தில், தமிழ் ஹிந்து இணைய தளத்தில் பதிக்கப்பெற்ற சில கட்டுரைகளைத் தொகுத்து, ஒரு நூலாக வெளியிடும் ஆர்வம் தற்சமயம் எனக்குத் தோன்றியது. அதுதான் நீங்கள் கையில் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல்.

    இந்தக் கட்டுரைகள் எழுதும்போதும், அவைகளை நூலாகத் தொகுக்கும்போதும் பல வழிகளில் பொறுமையுடன் இருந்து எனக்கு உதவிய எனது மனைவி திருமதி. சாரதா ராமன் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

    இந்த நூலைப் படித்து அதனால் பயன்பெறும் வாசகர்கள், அந்த மகரிஷியையே தன்னிடம் ஈர்த்து, தனது மலைச்சாரலில் தங்கவைத்து, அவரது வாழ்நாள் முழுதும் அவரைத் தனது மடியில் இருத்தி வைத்துக் காத்து, இறுதியில் அவரது உயிரை ஒளிமயமாக்கித் தன்னுடன் ஐக்கியப்படுத்தி, உலகோர்க்கு அவரே அண்ணாமலையார் என்றும், அவர் போல் எவரும் வாழ்ந்து காட்ட முடியும் என்பதையும் தெளிவுபடுத்திய அந்த அண்ணாமலையாருக்கே அவர்கள் நன்றி கூறவேண்டும்.

    வணக்கம்.

    எஸ். ராமன்

    1. ஜோதியில் கலந்தோர்

    நமது இதிகாசங்களும், புராணங்களும் பல நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவைகளைப் படிக்கும் பலருக்கும் அவை அனைத்தும் ஏதோ கற்பனையில் உதித்த கட்டுக்கதைகள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். உண்மையில் அவை அப்படி அல்ல என்று காட்டுவதற்காகவோ, அல்லது அவைகளில் பொதிந்துள்ள உண்மைகளை உணர்த்துவதற்காகவோ சில நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பற்றி பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதியுள்ள பெரிய புராணத்தில் நடந்ததாக சொல்லப்பட்ட ஒரு நிகழ்வையும், சமீபத்தில் 1950ம் வருடம் நிகழ்ந்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது இக்கட்டுரை.

    வட மொழியில் இருந்து வந்த வால்மீகி ராமாயணத்தைக் கம்பரும், வியாசர் எழுதிய மகா பாரத்தை வில்லிபுத்தூராரும் தமிழில் எழுதியதைப்போல, தமிழிலிருந்து வட மொழிக்குச் சென்ற ஒரே காவியம்தான் பெரிய புராணம். அது உபமன்யு முனிவர் எடுத்துரைப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ள காப்பியம்; வட மொழியில் அதற்கு சிவபக்தவிலாசம் என்பதுதான் தலைப்பு.

    அதன் ஆரம்பக் காட்சிகளிலேயே, கைலாயத்தில் உட்கார்ந்து கொண்டு உபமன்யு முனிவர் தனது சீடர்களுக்குச் சிவபெருமானின் பெருமையைக் கூறுவதுபோல வரும். உபமன்யு அப்படி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மின்னல் போன்ற ஒரு சுடர் தென் திசையிலிருந்து சிவபெருமான் வீற்றிருக்கும் வடதிசை நோக்கிச் செல்கிறது. அதைக் கண்டதும் முனிவர் கை கூப்பித் தொழுது நிற்கிறார். கூட இருந்த சீடர்களுக்கோ ஒரே ஆச்சரியம். அங்கு நடப்பது என்ன என்று குருவை வினவ, அவரும் விளக்குகிறார்.

    முன்பு ஒருமுறை சிவனின் இன்னோர் அம்சமாக விளங்கிய ஆலால சுந்தரர் என்பவர் தான் அவர். சிவ பூஜைக்கு உரிய பணியைக் கவனித்தவர். அப்பணியில் நேர்ந்த கவனச் சிதறலால், அவரை இறைவன் தென்னாட்டில் மானிடனாகப் பிறக்கக் கட்டளை இடுகிறார். அவரால் தென்னாட்டில் நடைபெற இருக்கும் ஒரு பணி முடிந்ததும், அவர் மீண்டும் கைலாயம் திரும்புவார் என்றும் இறைவன் அருள்கிறார். அந்தப் பணிதான் ‘சிவ நாமத்தை ஓதுவதும், சிவன் புகழைப் பாடுவதும் அன்றி வேறு எதுவும் அறியாத’ சிவனடியார்களான அறுபத்து மூவர்களைப் பற்றிப் பாட வேண்டியது. அவர் அப்பணியைச் செவ்வனே முடித்து விட்டு சுந்தரமூர்த்தி நாயனாராக இப்போது திரும்பியிருக்கிறார் என்று முனிவர் விளக்கிக் கூறினார். அவ்வாறு பாடப் பெற்ற சுந்தரரின் ‘திருத்தொண்டத் தொகை’ தான், சேக்கிழாரின் பெரிய புராணம் என்று அறியப்படும் ‘திருத்தொண்டர் புராண’த்தின் முன்னோடியாக அமைந்தது. அவை இரண்டிற்கும் இடையில், நம்பியாண்டார் நம்பி என்பவர் ‘திருத்தொண்டத் திருவந்தாதி’யை இயற்றியிருந்தார்.

    1950ம் வருடம் ஏப்ரல் மாதம் 14ந்தேதி இரவு 8:47 மணிக்கு பகவான் ரமணரின் இறுதி மூச்சு நிற்கும்போதும், சுந்தரர் கைலாயம் திரும்பும்போது நிகழ்ந்த ஒரு ஒளிப் பயணம் போலவே, திருவண்ணாமலையிலும் நடந்தது. அப்போது அவர் படுத்திருந்த அறையிலிருந்து ஓர் ஒளியானது அருணாச்சல மலையின் உச்சி நோக்கிச் சென்றதைப் பலரும் பார்த்ததாகச் சொல்வர். அதில் ஓர் அதிசயம் என்னவென்றால், அதைப் பலதரப்பட்ட மனிதர்களும், நாடு முழுதிலும் இருக்கும் வெவ்வேறு ஊர்களிலிருந்தும் பார்த்திருக்கின்றனர். அப்படிக் கண்கூடாகப் பார்த்தவர்களில் இருவரை நான் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவ்விருவரில் ஒருவர் அப்போது வேலூரில் தண்ணீர் குழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்தாராம். மற்றவர் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு மடத்தில் வசித்த அருந்தவ சிரேஷ்டர் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். திடீரென்று அத்தவ முனிவர் ஆகாயத்தைப் பார்த்து, ‘அதோ, அதோ ரமணர் போய்க் கொண்டிருக்கிறார்’ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாராம்.

    இப்படியான நிகழ்ச்சிகள், மனிதனாகப் பிறந்தாலும் ஒருவன் உயர் நிலைக்குச் சென்று உண்மை நிலையை உணரும்போது இறைவனுடன் ஒளியாக ஐக்கியம் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது. 1950ல் நடந்த அந்த நிகழ்வு எனக்கு அந்த நல்லோர்கள் மூலம் தெரிந்திருக்கவில்லை என்றால், நானும் பலரையும் போலவே இது போன்றவைகளில் என்னவென்ன கட்டுக் கதைகள் இருக்குமோ என்றுதான் நினைத்திருப்பேன்.

    2. குரு வலம் தந்த கிரி வலம்

    இது இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்த கதைதான். வயோதிக நிலையில் ஒருவனுக்குத் தான் வாழ்ந்த வாழ்க்கை பயன் நிறைந்ததுதானா என்றதொரு சந்தேகம் வருவது இயற்கையே. அதன்படி யோசிக்கையில், நான் மதுரையில் பிறந்து வளர்ந்ததையும், அங்குதான் பால ரமணர் ‘தன்னை உணர்ந்து’ ஞான நிலை அடைந்தார் என்று பின்பு தெரிந்து கொண்டதையும் என் வாழ்வில் மிக்க பயன் தந்ததாக நினைக்கிறேன். சுமார் இரண்டரை முதல் பதினான்கு வயது வரை நான் மதுரையில்தான் வளர்ந்தேன். நான் படித்த பள்ளியும் ரமணர் படித்து முடித்த பள்ளிக்கு அருகேதான் இருந்தது. அவர் படித்த காலத்தில் வேறு பெயர் என்றாலும், எனது காலத்தில் அவர் பள்ளிக்கு UCHS என்று பெயர்; எனது பள்ளிக்கு MCHS என்று பெயர். அருணாச்சலத்தால் கவரப்பட்டு அவர் திருவண்ணமலை செல்லுமுன் அவர் அந்தப் பள்ளியில்தான் படித்தார். அவர் விதேக முக்தி அடைந்தபோது எனக்கு ஆறு வயதே ஆகியிருந்ததால், நான் மதுரையில் இருந்தபோது அவரைப் பற்றி ஏதும் தெரிந்திருக்க நியாயமில்லை.

    1950களில், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, அடிக்கடி தனியே மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் எனக்கு உண்டு. எனது வகுப்பு மாணவன் ஒருவனைச் சந்திக்க,

    Enjoying the preview?
    Page 1 of 1