Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hinduthvathin Adipadaigal
Hinduthvathin Adipadaigal
Hinduthvathin Adipadaigal
Ebook234 pages1 hour

Hinduthvathin Adipadaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இந்துத்துவம்” என்ற பெயர் ஒரு மனித குலத்தின் வாழ்விற்கே ஓர் அர்த்தம் தந்து, அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தூண்டக்கூடிய ஆற்றல் பெற்ற பெயர்களிலே ஒன்று. இந்தப் பெயரைக் குறித்து நிலவும் சிந்தனைகளும், நோக்கங்களும், கருத்துக்களும், மதிப்புகளும், அதனைச் சார்ந்துள்ள சமூகங்களும், நிறுவனங்களும் பலப்பல வகையாக உள்ளன. அத்துடன் அவை மிக்க பொருள் பொதிந்ததாகவும், சக்தி பொருந்தியதாகவும், எளிதில் அறிந்துகொள்ளவும் இயலாதபடி நுண்ணியதாகவும் இருக்கின்றன. அதனால் இந்துத்துவம் என்ற அந்தப் பெயரை எந்த விதத்தில் ஆராய்ந்து பார்த்தாலும், அது அளவிட்டுப் பார்க்க முடியாத ஓர் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்துத்துவம் குறைந்த பட்சம் நான்காயிரம் ஆண்டுகளாக வாழ்ந்ததோடு மட்டும் அல்லாமல் வளர்ந்துகொண்டும் இருக்கிறது.

இந்துத்துவம் என்பது ஒரு வெறும் சொல் அல்ல; அது ஒரு சரித்திரம். அதே போன்று உள்ள இன்னுமொரு சொல்லான “இந்து” என்ற சொல்லுடன், இந்துத்துவத்தைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்து எனும் சொல் மக்களின் ஆன்மிக அல்லது சமயச் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறது என்றால், இந்துத்துவம் முழுக்க முழுக்க ஒரு சரித்திரமே ஆகும். இந்து என்ற சொல்லால் நாம் குறிப்பிடுவது இந்துத்துவத்தின் ஒரு சிறிய பகுதி, அல்லது அதிலிருந்து கிளைத்து எழுந்தது என்பதே சரியாகும்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130405938
Hinduthvathin Adipadaigal

Read more from S. Raman

Related to Hinduthvathin Adipadaigal

Related ebooks

Reviews for Hinduthvathin Adipadaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hinduthvathin Adipadaigal - S. Raman

    https://www.pustaka.co.in

    இந்துத்வத்தின் அடிப்படைகள்

    Hinduthvathin Adipadaigal

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

    2. இந்துத்துவம் வேறு இந்து என்ற சொல் வேறு

    3. இந்து என்ற சொல்லின் அர்த்தம் என்ன?

    4. பெயரின் பழமை

    5. ஹிந்துக்கள், ஒரு தேசம்

    6. மற்றைய பெயர்கள்

    7. பெயர்கள் உருவான கதை

    8. சர்வதேச அரங்கில்

    9. புத்தமதத்தின் மங்கு தசை

    10. புத்தமதம் - ஓர் உலகளாவிய மதம்

    11. பின்விளைவுகள்

    12. தேசிய உணர்வை ஆதரித்த அமைப்புகள்

    13. இனங்களின் கூட்டணி

    14. வேதங்கள் மீண்டும் தழைத்தன

    15. சிந்துஸ்தானம்

    16. ஆரியர் என்பவர் யார்?

    17. இந்துவும் இந்துஸ்தானும்

    18. புத்தருக்கு அஞ்சலி

    19. இந்தியர்கள் ஒன்றே! இந்தியாவும் ஒன்றே!!

    20. ஹிந்துஸ்தானி மொழி

    21. அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள்

    22. இந்துத்துவத்தின் ஆற்றல் சக்தி

    23. மதியற்ற எண்ணமே போ! போ!

    24. இந்துத்துவம் உணர்த்தும் உள்ளர்த்தங்கள்

    25. இரத்த பந்தம்

    26. பொதுக் கலாச்சாரம்

    27. நாகரீகம் என்றால் என்ன?

    28. பொதுநல விதிகளும், வழிபாட்டு முறைகளும்

    29. இந்து என்பவன் யார்?

    30. சிந்துவில் இந்துக்கள்

    31. இந்தியாவிற்கு இயற்கை அன்னையின் கருணைக் கொடை

    அந்தமான் சிறையில் இருந்தபோது வீர் சாவர்க்கர் இந்த நூலை 22-1921 ஆண்டுகளில் எழுதி முடித்தார். பின்னர் இது ஒரு மராட்டியர் என்ற அவரது புனைப்பெயரில் வெளியிடப்பட்டது.

    தமிழாக்கம்: எஸ். ராமன்

    முன்னுரை

    இந்துத்துவம் என்ற பெயர் ஒரு மனிதகுலத்தின் வாழ்விற்கே ஓர் அர்த்தம் தந்து, அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தூண்டக்கூடிய ஆற்றல் பெற்ற பெயர்களிலே ஒன்று. இந்தப் பெயரைக் குறித்து நிலவும் சிந்தனைகளும், நோக்கங்களும், கருத்துக்களும், மதிப்புகளும், அதனைச் சார்ந்துள்ள சமூகங்களும், நிறுவனங்களும் பலப்பல வகையாக உள்ளன. அத்துடன் அவை மிக்க பொருள் பொதிந்ததாகவும், சக்தி பொருந்தியதாகவும், எளிதில் அறிந்துகொள்ளவும் இயலாதபடி நுண்ணியதாகவும் இருக்கின்றன. அதனால் இந்துத்துவம் என்ற அந்தப் பெயரை எந்த விதத்தில் ஆராய்ந்து பார்த்தாலும், அது அளவிட்டுப் பார்க்க முடியாத ஓர் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்துத்துவம் குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டுகளாக வாழ்ந்ததோடு மட்டும் அல்லாமல் வளர்ந்துகொண்டும் இருக்கிறது.

    இந்துத்துவம் என்பது ஒரு வெறும் சொல் அல்ல; அது ஒரு சரித்திரம். அதே போன்று உள்ள இன்னுமொரு சொல்லான இந்து என்ற சொல்லுடன் இந்துத்துவத்தைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்து எனும் சொல் மக்களின் ஆன்மிக அல்லது சமயச் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறது என்றால், இந்துத்துவம் முழுக்க முழுக்க ஒரு சரித்திரமே ஆகும். இந்து என்ற சொல்லால் நாம் குறிப்பிடுவது இந்துத்துவத்தின் ஒரு சிறிய பகுதி, அல்லது அதிலிருந்து கிளைத்து எழுந்தது என்பதே சரியாகும்.

    1. ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

    ஒரு மனிதனின் கை, கால், தோள், முகம், அல்லது ஏதோ ஒரு பாகத்தைக் கூடக் குறிப்பிடாத அந்தப் பெயர் எதுவாக இருந்தால்தான் என்ன? என்று சொன்னாளாம் ரோமியோவின் காதலி ஜூலியட். அவனது குலத்தின் பெயரை மாற்றினால் என்னதான் ஆகிவிடும் என்று காதலில் மயங்கியிருந்த அந்த வெரோனா நகரத்து மங்கை ஜூலியட் மிக்க வாஞ்சையுடன் ரோமியோவிடம் அவ்வாறு சொன்னாளாம். நாம் அனைவரும் இந்துக்கள்; என்றைக்கும் அவ்வாறே இருப்போம் என்று மார்தட்டி, உறுதியாக நாம் நம்மைப் பற்றி ஒரு பாரம்பரியப் பெருமையுடன் சொல்லிக்கொண்டால் அந்த ஜூலியட் நம்மை மன்னிப்பாள் என்றே நம்புகிறோம். ஒரு பெயரில் என்னதான் இருக்கிறது? அந்தப் பெயர் அல்லாது வேறெந்தப் பெயர் வைத்திருந்தாலும் ஒரு ரோஜாப் பூவின் இனிமையான மணம் மாறாது, அப்படியேதானே இருக்கும்? அதனால் குலத்தின் பெயரை மாற்றிக்கொள் என்பதுதான் அந்த மங்கை அவன்மேல் கொண்டிருந்த ஆசையினால் கேட்ட நியாயமான வேண்டுகோள். அதற்கு இணங்கிப் போகக்கூடாதா என்று அவர்களை இணைக்கவிருந்த பாதிரியார் அறிவுறுத்தியது போன்றே, நாம் கூட ஒருவேளை அந்தக் காதலனுக்குச் செவிசாய்த்து நம் சம்மதத்தைத் தெரிவித்திருக்கலாம்.

    இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றாலோ, அல்லது அவை இரண்டிற்கும் ஒரு புதிய அல்லது எளிமையான உறவு இருக்கிறது என்றிருந்தாலோ, நமக்குத் தேவை ஒரு பொருளே தவிர அதன் பெயர் இல்லை என்று கூட நாம் முடிவு செய்திருப்போம். அது சரியான முடிவுதான் என்றால், ஒரு பொருளுக்குப் பல மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் இருப்பதால், அந்தப் பொருளுக்கும் அதன் பெயரை உச்சரிக்கும்போது எழுப்பப்படும் ஒலிக்கும் மாற்ற இயலாத, இயற்கையான ஒரு தொடர்போ, உறவோ இருக்கிறது என்ற கருத்து கூட அடிபட்டுத்தானே போகிறது.

    ஆனாலும் எந்தப் பொருளுக்கும் ஒரு பெயர் இடப்பட்டு, அந்தப் பெயரைப் பலமுறை, பலரும் சொல்லக் கேட்டதும், அந்தப் பொருளைப் பற்றி நமக்கு இருக்கும் உள்ளுணர்வுகள் அந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நமக்கு வருகிறது என்றால் என்ன அர்த்தம்? அந்தப் பொருளுக்கும், பெயருக்கும் உள்ள பந்தத்தை அது நமக்கு உணர்த்தி, அவை இரண்டையும் பிரித்துப்பார்க்க இயலாது செய்துவிடுகிறது என்றுதானே அர்த்தம்?

    அந்தப் பொருளுடன் நமக்கு முன்பே வாய்த்திருந்த பல அனுபவங்களின் வாயிலாக நமக்குப் பல எண்ணங்கள் முளைத்து, முதிர்ந்து, காய்த்து, கனிந்து நிற்கின்றன. அது மட்டும் அல்லாது அதன் விளைவாக எவரும் காணமுடியாதபடிக்கு அதைப் பற்றிய வாசனைகள் எனும் இரண்டாம் கட்டத் தொடர்பும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து நிற்கின்றன. இவ்வாறாக அந்தப் பொருளுக்கும், அதன் பெயருக்கும் பின்னிப் பிணைந்துள்ள பந்தமே அதன் பெயரைக் கேட்டதும் நுண்ணதிர்வுகளாக நம்முள் தோன்றி, அவை இரண்டையும் பிரிக்க முடியாதபடி விளங்குகின்றன. அது உண்மை என்றால், ஒரு பெயரும் அது குறிப்பிடும் பொருளைப் போன்றே முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்று சொல்வதிலும் என்ன தவறு இருக்க முடியும்?

    ஒரு பெயரில் என்னதான் இருக்கிறது? என்று அவ்வாறு கெஞ்சிக் கேட்ட அந்த மங்கைகூட தன் மனம் கவர்ந்த காதலனான ரோமியோவை அந்தப் பெயரால் கூப்பிடாமல் பாரிஸ் என்ற பெயரால் கூப்பிடவேண்டும் என்று சொன்னால் ஒத்துக்கொண்டிருப்பாளோ? அதேபோல அந்த ரோமியோவும் தன் காதலியின் பெயரான ஜூலியட் என்பதற்குப் பதிலாக அவளை ‘ரோசலிண்ட்’ என்று கூப்பிட்டால் தன் காதில் தேன் வந்து பாய்கிறது என்றோ, அது தன் மனதிற்கு மிக இனிமையாக இருக்கிறது என்றோ நிலவின்மேல் சத்தியம் செய்து கொடுக்கத் தயாராக இருந்திருப்பானோ? (தினப்படி வழக்கத்தில் உள்ள பெயரை யார்தான் கைவிட முடியும்?)

    அது தவிர, ஓர் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு என்பதற்கும் மேலாக, எந்தவொரு எண்ணமும் போற்றத்தக்க, பரந்து விரிந்த பல பரிமாணங்களையும் கொண்டு விளங்குகிறது. அத்தகைய விவரங்களை ஓர் எண்ணத்தின் பெயரே எளிதாக விளக்கிவிடுவதால், நாம் அறியாமலேயே நம்முள் நுண்ணுயிர்கள் வளர்வதுபோல, எந்தப் பெயர்களும் தன்னளவிலேயே நிகரற்றவையாக விளங்குகின்றன. வெரோனா மங்கை ஜூலியட் கூறியது போல சில பெயர்கள் ஒரு மனிதனின் கை, கால், தோள், முகம், அல்லது ஏதோ ஒரு பாகத்தைக் கூடக் குறிப்பிடாததன் காரணமே அவை எந்தவொரு பாகத்தையும் குறிப்பிடாமல் அந்த மனிதர்களின் அந்தராத்மாவையே முதன்மையாகக் குறிக்கின்றன என்பதே ஆகும். அதனாலேயே பொருட்கள் அல்லது மனிதர்களின் பெயர்கள், அவர்கள் வாழும் காலத்தையும் தாண்டி வருங்காலச் சந்ததிகளின் நினைவில், எண்ணங்களாகவே நின்று நிலைபெற்று நீடூழி வாழ்கின்றன.

    ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்த ஜீஸஸ் எப்போதோ இறந்துபோய்விட்டாலும், கிறிஸ்து என்னும் பெயர் அந்த ரோமானிய அரசர்களையும், அவர்களது ஆட்சிக் காலத்தையும் தாண்டி இன்றும் நிலைத்து நிற்கிறது. ஸ்பெயின் தேசத்து மடோன்னாவின் ஓவியங்களின் கீழே அவளது இயற்பெயரான பாத்திமா என்று எழுதி வைத்தால், மற்ற எந்த ஓவியத்தையும் பார்க்கும் ஆர்வத்துடன்தான் அம்மக்கள் அதையும் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். ஆனால் பாத்திமா என்று இருப்பதை அழித்துவிட்டு மடோன்னா என்று எழுதினால், முன்பு ஒரு விறைப்புடன் நின்று பார்த்துக்கொண்டிருந்த அதே மக்கள் தங்களின் கால்கள் சற்றே தளர்ந்து, கண்களில் ஒரு திடீர் ஆர்வம் மலர்ந்து, அதுவரை சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கூர்ந்து கவனித்து, ஏதோ ஒரு தெய்வீக அன்னை தன் அன்பைப் பொழிந்துகொண்டு தன்னருகேயே நிற்பதுபோல உணர்ந்து, அதனால் பாசமும் உள்ளத்தில் பொங்க, அந்த ஓவியத்தைப் பார்க்கத் தொடங்குவார்கள். (அது பெயரின் மகிமை அல்லாது வேறென்னவாக இருக்கமுடியும்?)

    ஒரு பெயரில் அப்படி என்னதான் இருக்கிறது? ராமர் அவதரித்த இடமான அயோத்தியை ஹோனலூலு என்றும், ஜூலியட்டின் காதலனை பூ பா என்றும், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் பெயரை செங்கிஸ்கான் என்றும் சம்பந்தப்பட்டவர்களை மாற்றச் சொல்லியோ, அல்லது முஸ்லீம் அன்பர்களை யூதர்கள் என்று நினைக்கச் சொல்லியோ கேட்டால், அதனால் ஏற்படும் குழப்பங்களை நீக்குவதற்கு அலிபாபாவின் திறந்திடு சிசேம் மந்திரம் ஒன்று மட்டுமே போதாது.

    2. இந்துத்துவம் வேறு இந்து என்ற சொல் வேறு

    இந்துத்துவம் என்ற பெயர் ஒரு மனிதகுலத்தின் வாழ்விற்கே ஓர் அர்த்தம் தந்து, அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தூண்டக்கூடிய ஆற்றல் பெற்ற பெயர்களிலே ஒன்று. அதனுடைய ஆதார இயல்புகளையும், முக்கியத்துவத்தையும் இப்போது நாம் ஆராயலாம். இந்தப் பெயரைக் குறித்து நிலவும் சிந்தனைகளும், நோக்கங்களும், கருத்துக்களும், மதிப்புகளும், அதனைச் சார்ந்துள்ள சமூகங்களும், நிறுவனங்களும் பலப்பல வகையாக உள்ளன. அத்துடன் அவை மிக்க பொருள் பொதிந்ததாகவும், சக்தி பொருந்தியதாகவும், எளிதில் அறிந்துகொள்ளவும் இயலாதபடி நுண்ணியதாகவும் இருக்கின்றன. அதனால் இந்துத்துவம் என்ற அந்தப் பெயரை எந்த விதத்தில் ஆராய்ந்து பார்த்தாலும், அது அளவிட்டுப் பார்க்க முடியாத ஓர் ஆச்சரியமாகவே இருக்கிறது.

    இந்துத்துவம் குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டுகளாக வாழ்ந்ததோடு மட்டும் அல்லாமல் வளர்ந்துகொண்டும் இருக்கிறது. அது இப்போது இருக்கும் நிலையில் இருப்பதற்கும், இந்தப் பெயரால் அறியப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்த பற்பல கவிஞர்களும், தீர்க்கதரிசிகளும், சட்டம் இயற்றுபவர்களும், சட்ட மேதைகளும், சரித்திர ஆய்வாளர்களும், சரித்திரம் படைத்த நாயகர்களும் அதன் பிரதிநிதிகளாக வாழ்ந்தார்கள், போராடினார்கள், வென்றார்கள், வீழ்ந்தார்கள். நமது ஒட்டுமொத்த சமூகமே அவ்வப்போது ஒன்றுபட்டு ஒத்துழைத்தோ, அல்லது தங்களுக்குள் இருக்கும் பிணக்கினால் சண்டையிட்டுக்கொண்டோ எடுத்த பல செயல்களின் விளைவுதானே அது?

    இந்துத்துவம் என்பது ஒரு வெறும் சொல் அல்ல; அது ஒரு சரித்திரம். அதே போன்று உள்ள இன்னுமொரு சொல்லான இந்து என்ற சொல்லுடன் இந்துத்துவத்தைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்து எனும் சொல் மக்களின் ஆன்மிக அல்லது சமயச் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறது என்றால், இந்துத்துவம் முழுக்க முழுக்க ஒரு சரித்திரமே ஆகும். இந்து என்ற சொல்லால் நாம் குறிப்பிடுவது இந்துத்துவத்தின் ஒரு சிறிய பகுதி, அல்லது அதிலிருந்து கிளைத்து எழுந்தது என்பதே சரியாகும். பின்னது எப்படிப்பட்டது என்று விளக்கப்படாமல் இருந்தால், முன்னது என்ன என்பதும் விளங்காமல் போகும்.

    பல சமூகங்களுக்கும் பொதுவாக இருந்து, மதிப்பீடு செய்வதற்கும் கடினமாக உள்ள இந்து சமய நாகரிகத்தின் வழிவழியாய் வளர்ந்த அச்சமூகங்களுக்குக் கூட அந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள வேற்றுமை புரியாதுபோனதால், அவர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது போனார்கள். அதனால் ஒரு சமூகம் மற்றதன் மேல் தன் சந்தேகப் பார்வையையும் கொண்டிருந்தது. நாம் மேலே செல்லச் செல்ல, அந்த இரு சொற்களுக்கும் உள்ள வேற்றுமை புரியவரும். இப்போதைக்கு இந்துத்துவமும், இந்து (அல்லது இந்தீயம்) என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படுவதும் வேறானது என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் போதுமானது.

    ஆன்மிகம், சமயம் அல்லது ஒரு குழு தொடர்பான சடங்குகள் அல்லது வழிமுறைகளின் அடிப்படையில் வரும் கோட்பாடுகளையே இயம் (ism) என்று நாம் பொதுவாக குறிப்பிடுகிறோம். மொழிகளின் குறுக்கீடுகள் நம் வழியில் வராது இருந்திருந்தால், இந்து என்பதற்குப் பதில் இந்துத் தன்மை என்ற சொல்லே நாம் இந்து என்று இப்போது குறிப்பிடுவதை நன்கு விவரித்திருக்கும். மேலும் அதுவே இந்துத்துவத்திற்கு இணையான இரண்டாவது சொல்லாகப் புழக்கத்திலும் வந்திருக்கும். ஆக இந்துத்துவம் என்ற சொல் ஒரு சமய அளவில் மட்டும் நிற்காது, ஒரு சமுதாய அளவில் இந்து மத மக்களின் ஒட்டுமொத்த வாழும் முறையையும், அவர்களது எண்ணங்களையும், செயல்களையும் குறிக்கிறது.

    ஆதலால் இந்துத்துவம் என்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் இந்து என்ற சொல்லின் பொருளை நன்கு உணர்ந்து, எப்படி அது திறமை வாய்ந்தவர்கள், தைரியம் மிக்கவர்கள் உள்ளிட்ட பல கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்று விளங்கியது என்பதையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1