Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chithirai Pookkal
Chithirai Pookkal
Chithirai Pookkal
Ebook133 pages50 minutes

Chithirai Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மை நிகழ்வுகள் என்ற கருவோடு ஓரளவு கற்பனை கலந்து பிறப்பதுதான் சிறுகதையாகும். ஒரு தரமான சிறுகதை என்பது, நேர்மறை எண்ணங்களை பரப்பும் ஒரு கருவியாக அமைய வேண்டியது மிக முக்கியம். தன்னை சுற்றி, எந்த நல்ல நிகழ்வும் நடக்கவில்லை என்ற வாசகனின் தவறான எண்ணத்தை மாற்றி அமைப்பதாக இருக்க வேண்டும். ஒரு சிறுகதையை படிப்பதனால், வாசகனின் மனிதாபிமான எண்ணங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தத் தொகுப்பில் அடங்கிய ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு தளங்களை மையமாகக் கொண்டு புனையப்பட்டதாகும்.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580164009738
Chithirai Pookkal

Read more from S. Raman

Related to Chithirai Pookkal

Related ebooks

Reviews for Chithirai Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chithirai Pookkal - S. Raman

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சித்திரைப் பூக்கள்

    (போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு)

    Chithirai Pookkal

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    சித்திரைப் பூக்கள்

    அன்னபூரணி!

    காத்தவராயனின் பயணக் குறிப்பு!

    மணி ஓசை

    கடவுள் எங்கே... அவர் இங்கே...!

    மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம்...!

    ஏர் கொண்ட பார்வை

    தீர்ப்பு!

    ரௌத்திரம் பழகு!

    கல் பாறையில் ஒரு காதல் பூ!

    குடும்பம் எனும் கோலம்

    முன்னுரை

    வணக்கம்.

    உண்மை நிகழ்வுகள் என்ற கருவோடு ஓரளவு கற்பனை கலந்து பிறப்பதுதான் சிறுகதையாகும். ஒரு எழுத்தாளனின் மனதில் எவ்வளவுக்கு எவ்வளவு அந்த கரு ஊறி, கதையாக மாறுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அந்த கதையின் தாக்கம் வாசகன் மனதில் ஆழமாக பதியும் வாய்ப்புகள் அதிகமாகிறது. சிறுகதைகளின் இலக்கணம் காலத்துக்கு ஏற்ப உரு மாறினாலும், எடுத்துக் கொள்ளப்பட்ட மையக் கருவின் வலு, அது கதையாக விவரிக்கப்படும் விதம் போன்ற அடித்தளங்களுக்கான முக்கியத்துவம் சிறிதளவும் குறையவில்லை என்று சொல்லலாம்.

    ஒரு தரமான சிறுகதை என்பது, நேர்மறை எண்ணங்களை பரப்பும் ஒரு கருவியாக அமைய வேண்டியது மிக முக்கியம். தன்னை சுற்றி, எந்த நல்ல நிகழ்வும் நடக்கவில்லை என்ற வாசகனின் தவறான எண்ணத்தை மாற்றி அமைப்பதாக இருக்க வேண்டும். ஒரு சிறுகதையை படிப்பதனால், வாசகனின் மனிதாபிமான எண்ணங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

    தரமான எழுத்துகளை ஊக்கிவிக்கும் விதமாக, பல பத்திரிகைகளும், இலக்கிய அமைப்புகளும் சிறுகதைகளுக்கான போட்டிகளை அவ்வப்போது அறிவித்து, சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, எழுத்தாளர்களை கௌரவப்படுத்துகின்றன.

    போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள், நீண்ட அனுபவம் கொண்ட எழுத்தாளர்களை உள்ளடக்கிய குழுவால், பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு, தேர்ந்தெடுக்கப்படுவதால், அவைகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது.

    பிரபல தமிழ் பத்திரிகை மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளால் நடத்தப்பட்ட போட்டிகளில் பரிசு பெற்ற என் சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து, வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன்.

    இந்த தொகுப்பில் அடங்கிய ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு தளங்களை மையமாக கொண்டு புனையப்பட்டதாகும்.

    தொகுப்பை பற்றிய வாசகர்களின் நல்ல விமர்சனங்களை இந்த புத்தகத்தின் விலை மதிப்பற்ற அணிந்துரையாக ஏற்று மகிழ்வேன்.

    இந்த சிறுகதைகளை நீங்கள் படிப்பதோடு மட்டுமில்லாமல், அவைகளை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசாக அளித்து, எழுத்துகளின் நல்மணத்தை பரப்புமாறு வேண்டுகிறேன்.

    நன்றி

    எஸ். ராமன்

    தொடர்பு எண்: 9840077902

    சித்திரைப் பூக்கள்

    எட்டிப் பார்க்கும் லேசான வெளிச்சமும், விலகிக் கொண்டிருந்த இருளும், ஒன்றையொன்று பிரிய தயாராகிக் கொண்டிருந்த விடியற்காலை நேரம்.

    வாட்டசாட்டமான உடற்கட்டு, பரந்து விரிந்த மார்பு, மலைக் குன்று போன்ற தினவெடுத்த தோள்கள், குன்றிலிருந்து, முழங்கால் வரை நீண்ட கைகளில், எஃகு கம்பியாக இறங்கி ஓடிய நரம்பு கம்பிகள், பரந்து விரிந்த நெற்றியில் அளவெடுத்தாற்போல் மூன்று கற்றைகளாக இடப்பட்ட விபூதி, முறுக்கிய மீசை சகிதம் தோன்றிய மலையப்பன், வீட்டிற்குள்ளிருந்து வெளிப்பட்டு, தோட்டத்திற்குள் நுழைந்தார். அவர் வருகையை கட்டியம் கூறும் விதமாக, வேலன் என்ற அவருடைய நாட்டு நாய், முன்னே சென்றது.

    ஒவ்வொரு மரம், செடிகள் முன் நின்று, ‘சௌக்கியமா... வசதிக்கு ஏதாவது குறை இருக்கா...?’ என்று விருந்தினர்களை உபசரிப்பதுபோல் விசாரித்துக் கொண்டிருந்தவரை, வேலன் மெல்லிய குரைப்பால், தன் பக்கம் ஈர்த்தான்.

    அவன் காட்டிய பக்கம், சூரிய வெளிச்சம் போதாமல், ஒரு செடி தன் தலையை கவிழ்த்து, சாய்ந்து நின்றது.

    செடியையும், வேலனையும் தடவிக் கொடுத்தவர், ‘வெளிச்சம் வர்ற இடத்துக்கு இவரை மாத்திடலாம்...’ என்று சொன்னவுடன், வேலன் தன் வாலை ஆட்டி ஆமோதித்தான்.

    மூன்று நாட்களுக்கு முன் தெளித்த சில விதைகள், லேசான கோடை மழையில் குப்பென்று முளைவிட்டு, அவை, பூமித்தாயின் கருப்பையிலிருந்து வெளிப்படும் பச்சை குழந்தைகளாக அவருக்கு தெரிந்தன.

    என்னை நம்பி வெளியே வந்துட்டீங்க. உங்களை பாசத்தோடு பராமரித்து, பெரிய புள்ளைங்களா வளர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு... அவைகளை கைகளால் தொடாமல், அருகில் சென்று, வாய்விட்டு பேசி, வாக்குறுதி கொடுத்தார். வீட்டில் குழந்தை பிறந்தது போன்ற ஆனந்தத்தில் அவர் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அவைகளை அன்போடு வரவேற்கும் விதமாக, தண்ணீரை கையில் அள்ளி, பன்னீர் தெளிப்பதுபோல், அவைகள் மீது லேசாக தெளித்தார்.

    தாவரங்களுக்கும் அன்பும், பாசமும் கலந்த அரவணைப்பு தேவை. ஒரு செடியை கிள்ளிப் போடுபவரைவிட, அதற்கு தண்ணீர் ஊற்றி, அரவணைப்பவரிடம், நட்பு உணர்வை வெளிப்படுத்தும் குணம் செடிகளுக்கு உண்டு என்பது அவருக்கு தெரியும். வேம்பு என்று தன் மகனின் பெயரை உரக்க உச்சரிக்கும் போதெல்லாம், அவர் வீட்டின் பிரமாண்ட வேப்பமரமும் பதில் சொல்லுவதுபோல் அசைந்தாடுவதை கண்குளிர பார்த்து ரசிப்பார்.

    மரம், செடி, கொடிகள் வெறும் ஜடப்பொருள்கள் அல்ல; சந்தோஷம், துக்கம், பீதி போன்ற உணர்வுகள் அவைகளுக்கும் உண்டு என்ற ஆழ்ந்த நம்பிக்கையில், அவைகளின் மீதான அவருடைய காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

    சமீபத்தில், வீட்டு தோட்டத்தில் ஒரு மரம் இடி விழுந்து பட்டுப்போனபோது, வீட்டில் சாவு விழுந்ததுபோல், அழுது புலம்பி, ஒரு நாள் முழுவதும், சாப்பிடாமல் துடித்துப் போனார். மரத்தை பிளக்காமல், அப்படியே மண்ணில் குழிதோண்டி புதைத்து, தன் இறுதி மரியாதையை அதற்கு செலுத்தினார். அதற்கு ஈடாகத்தான் பல மரங்களுக்கு வித்திட்டார்.

    சோகத்தையும், சந்தோஷத்தையும் அவர் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தபோதுதான், அந்த குரல் அவர் காதை பிளந்தது. குரல் வந்த திசையை நோக்கி பார்வையை செலுத்தினார்.

    உங்க வீட்டு வேப்பமரம், எங்க வீட்டு சுவத்தை இடிச்சு நிக்குது. சுவர் பிளவு பட்டுதுன்னா நீங்கதான் கட்டிக்கொடுக்கணும். காய்ந்த இலை தழைகள் எங்க வீட்டு பக்கம் விழுந்து, அசிங்கமாகுது. ஒண்ணு... நீங்களா மரத்தை முழுசா வெட்டி சாய்க்கணும்... இல்லைன்னா, என்னோட கூர்தீட்டின கோடாரிக்கும், அரிவாளுக்கும் வேலை வந்துடும்... அந்த வேலைக்கான கூலியையும் கறந்துடுவேன்... ஆமாம் சொல்லிப்புட்டேன்... பக்கத்து வீட்டு சோலை, மலையப்பன் காதில் விழவேண்டும் என்ற நோக்கத்தில் வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டாக கத்திவிட்டு, வீட்டிற்குள் வேகமாக சென்றார்.

    சத்தம் கேட்டு, வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்த மலையப்பனின் மனைவி பார்வதி, கைகளை புடவை தலைப்பில் துடைத்தபடியே, ஓட்டமும், நடையுமாக தோட்டத்திற்கு வந்தாள். உள்ளே சென்றவர் திரும்ப வருவாரா என்று எதிர்பார்த்து, மலையப்பனின் கோப பார்வை பக்கத்து வீட்டு வாயிலையே குத்திட்டு நின்று கொண்டிருந்ததை கவனித்து, அதிர்ந்து போனாள்.

    வேண்டாங்க... வாயை விட்டுடாதீங்க... பெரிய சண்டையாயிடும். சுவர் இடிஞ்சுடக் கூடாதுங்கற நினைப்பிலே சொல்லியிருப்பார்போல... தயங்கியபடியே பேசிய பார்வதிக்கு மகன் பற்றிய இன்னொரு பிரச்னையும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. பிரச்னையை எப்படியாவது அவன் மனம் கோணாதபடி தீர்த்து வைப்பதாக நேற்றுதான் வாக்கு கொடுத்திருந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1