Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellarukkum Pidikkum Kavithai!
Ellarukkum Pidikkum Kavithai!
Ellarukkum Pidikkum Kavithai!
Ebook133 pages45 minutes

Ellarukkum Pidikkum Kavithai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகின் சொர்க்கம் ஊட்டி... இங்கே நடக்கும் ஒரு உன்னதமான காதல் கதைதான் “எல்லோருக்கும் பிடிக்கும் கவிதை.” கோடீஸ்வரன் வீட்டு ஒரே பிள்ளை இனியன். தினசரி பூச்செடி விற்று வயிற்றைக் கழுவுகிற தூரிகை. இந்த இரண்டு இதயங்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டம்தான் இக்கதை.

ஊட்டியில் பயணிக்கிற அற்புத கதை... திரைப்படம் போல நகர்கிற கதை.. எல்லாருக்கும் பிடிக்குமா கவிதை....

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580128307605
Ellarukkum Pidikkum Kavithai!

Read more from Maheshwaran

Related to Ellarukkum Pidikkum Kavithai!

Related ebooks

Reviews for Ellarukkum Pidikkum Kavithai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellarukkum Pidikkum Kavithai! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எல்லோருக்கும் பிடிக்கும் கவிதை!

    Ellarukkum Pidikkum Kavithai!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    சமர்ப்பணம்

    என்மீது உயிரையே வைத்திருந்து...

    எனக்காகவே வாழ்ந்து... மறைந்த

    எனது அண்ணன் தெய்வத்திரு

    பொ. ராஜரத்தினம்

    அவர்களுக்கு...

    என்னுரை

    என் அன்பான வாசகர்களே!

    வணக்கம்.

    என்னை உங்களில் ஒருவனாய் நேசித்து, எனது எழுத்துக்களை வாசித்து மகிழும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தரமான படைப்புகளை தர வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    குறைவாய் எழுதினாலும் தரமாய் எழுத வேண்டும். வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு எழுதத் தொடங்கிய நான் இன்று உங்களின் அன்பான, அமோகமான ஆதரவினால் முன்னணி எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறேன் என்பதை உணரும்போது பரவசமாக இருக்கிறது.

    எல்லோருக்கும் பிடிக்கும் கவிதை நாவல் மாறுபட்டதுதான்.

    ஊட்டி பின்னணியில் எழுதப்பட்ட கதை.

    எல்லோருக்கும் பிடிக்கும் கவிதை!

    தோள் உரசி நகரும் மேகங்கள்... செவிவழி ஊடுருவி இதயத்தைத் தாலாட்டுகிற பனிப்புகை... உயிர்வரை சில்லிட வைக்கிற ஈரக்காற்று... விறைத்துப் போக வைக்கிற குளிர்... நாசிக்கு இதமான தைல வாசனை... கண்களுக்குக் கவிதை படைக்கும் பூந்தோட்டங்கள்... முதுகுத் தண்டை சுரீரென்று தாக்குற மரணப் பள்ளத்தாக்குகள்... திரும்பிய பக்கமெல்லாம் பச்சைக் குல்லாய் மாட்டின சிப்பாய்களாக நெடுநெடு மரங்கள்... நெளிந்து வளைந்து குறுகிச் செல்கிற கொண்டை ஊசி வளைவுகள்... திடகாத்திரமாய் படுத்திருக்கும் முரட்டு முரட்டு மலைகள்... கவலையே இல்லாமல் படபடக்கிற பறவைகள்...

    இதுதான் ஊட்டி...

    உலகின் சொர்க்கம் ஊட்டி...

    இங்கே நடக்கும் ஒரு உன்னதமான காதல் கதைதான் எல்லோருக்கும் பிடிக்கும் கவிதை.

    கோடீஸ்வரன் வீட்டு ஒரே பிள்ளை இனியன். தினசரி பூச்செடி விற்று வயிற்றைக் கழுவுகிற தூரிகை. இந்த இரண்டு இதயங்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டம்தான் இக்கதை.

    முரட்டு மலையிலிருந்து துள்ளித் துடித்து குதிக்கும் அருவி மாதிரி, ஒரே மூச்சில் சரசரவென்று நான் எழுதிய நாவல்...

    இதோ உங்களின் பார்வைக்கு...

    வாழ்த்துங்கள். வளர்கிறேன்...

    நன்றி.

    உங்கள் அன்பில் மகிழும்,

    மகேஷ்வரன்.

    1

    இரவு பெய்திருந்த அதிகப்படியான பனியின் காரணமாக தோட்டத்தில் இருந்த செடிகள் அனைத்தும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தன. மலை முகட்டிலிருந்து எட்டிப் பார்த்த கதிரவனின் வெளிச்சத்தை வெளியே கசிய விடாதபடி அடர்த்தியான கருமேகங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. மலைச்சரிவைச் சுற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள் குட்டையாய் குடை விரித்திருக்க... நடுவில் இருந்தது கல்நார் வேயப்பட்ட அந்த சிறிய வீடு.

    வீட்டின் பின்பக்க சரிவில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இளம்பச்சை வண்ணத்திலும், கரும்பச்சை வண்ணத்திலும் தேயிலைச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தது. ஆங்காங்கே நடப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களிலிருந்து தண்ணீர் நாலாபுறமும் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் முன்பக்க சரிவின் முடிவில் தார்ச்சாலை வளைந்தோடியது. வாகனங்கள் விருட்விருட்டென நகர்ந்து கொண்டிருந்தன.

    கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் தூரிகை. குளிருக்கு இறுக்கமாய் ஸ்வெட்டரும், தலையில் ஸ்கார்ப்பும் கட்டியிருந்தாள். அவளது கையில் வட்ட வடிவமான பெரிய அளவு மூங்கில் தட்டு ஒன்று இருந்தது. வளமான செம்மண் நிரப்பப்பட்ட பாலிதீன் பைகளில்... பூக்களோடு காணப்பட்ட பல வண்ண ரோஜா செடிகளையும், தனது மிருதுவான விரல்களால் ஒரு பச்சைக் குழந்தையைத் தூக்குகிற பக்குவத்தோடு மெதுவாய் எடுத்து எடுத்து மூங்கில் தட்டில் அடுக்கினாள். அடுக்கு செம்பருத்தி, அடுக்கு நித்திய கல்யாணி, குண்டு மல்லிகை, டேலியா உட்பட இன்னும் பல்வேறு வகையான பூச்செடிகளையும்... இடை இடையே அடுக்கி வைத்தாள். மொத்தம் எத்தனைப் பூச்செடிகளை இன்று வியாபாரத்திற்கு எடுத்துப் போகிறோம் என்று எண்ணிப் பார்த்து மனசுக்குள் இருத்திக் கொண்டாள். பூச்செடிகள் நிறைந்த மூங்கில் தட்டைத் தூக்கி இடையில் வைத்துக்கொண்டு உள்ளேயிருந்த தாயிடம் சப்தமாய் சொன்னாள்.

    அம்மா... நா... வியாபாரத்துக்கு... கௌம்பிட்டேன். நீ பத்திரமா இரு. தலையை வலிச்சா... கட்டிலுக்கு கீழே... பிளாஸ்க்குல டீ தண்ணி கலந்து வெச்சிருக்கேன்... எடுத்துக் குடிம்மா...

    மத்தியானம் சாப்பிட வந்துடுவியா... தூரிகை...? உள்ளேயிருந்து சூடாமணியின் குரல் மெதுவாய் ஒலித்தது.

    பூச்செடியெல்லாம் வித்து முடிஞ்சாத்தாம்மா வருவேன். இல்லாட்டி... அங்கேயே வாட்டுன சோளக்கதிரு ஒண்ண வாங்கித் தின்னுட்டு இருந்துடுவேன்.

    வட்டமான, மாசு மருவில்லாத முகத்தில் வந்து விழுந்த சுருள் சுருளான நெற்றிக் கேசத்தை விரலால் ஒதுக்கிக் கொண்டாள்.

    உன் தம்பியும், தங்கச்சியும் ஸ்கூலுக்கு போயாச்சா...?

    இளம்பிறையும், செந்தமிழும் காலையில்... ஏழு மணிக்கே ஸ்பெஷல் கிளாசுன்னு கிளம்பி போயாச்சு. நீ அசந்து தூங்கிட்டு இருந்ததால உன்னை எழுப்பலேம்மா...

    சொல்லியபடியே சரிவில் இறங்கத் தொடங்கினாள். தைல வாசனையோடு கூடிய குளு குளு காற்று... மென்மையாய் முகத்தை வருடியது. தார்ச் சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சீரான வேகத்தோடு வந்துக் கொண்டிருந்தது. ஊட்டியைத் தொட்டுவிட்ட மகிழ்ச்சியில் பேருந்திற்குள் இருந்த மாணவ மாணவிகள் உற்சாகத்தோடு ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டி ஆரவாரம் செய்தனர்.

    பதிலுக்கு புன்முறுவலை உதிர்த்து, தானும் கையை அசைத்தபடியே தார்ச்சாலையில் நடக்கத் தொடங்கினாள் தூரிகை.

    ‘கடவுளே! இன்னைக்கு எல்லாப் பூச்செடியும் வித்துடணும்... ஒண்ணுகூட மிச்சம் இருக்கக் கூடாது...’

    அவளது உள் மனம் வேண்டிக் கொண்டது.

    ***

    நான்கு வருடங்களுக்கு முன்புவரை கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள் தூரிகை. அவளுடைய அப்பா நாராயணன் கடின உழைப்பாளி. உயிரோட்டமான ஓவியங்கள் வரைவதில் திறமைசாலி. மேட்டுப்பளையம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு என்று பெரிய பெரிய நகரங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கெல்லாம் விளம்பரப் படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறார். அவரது ஓவியங்கள் யதார்த்தமாக உயிர்த்துடிப்போடு இருக்கும். போட்டிப் போட்டு சம்பாதித்த பணத்தையெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1