Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaikkul Sorgam
Kaikkul Sorgam
Kaikkul Sorgam
Ebook115 pages37 minutes

Kaikkul Sorgam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580128304744
Kaikkul Sorgam

Read more from Maheshwaran

Related to Kaikkul Sorgam

Related ebooks

Related categories

Reviews for Kaikkul Sorgam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaikkul Sorgam - Maheshwaran

    http://www.pustaka.co.in

    கைக்குள் சொர்க்கம்

    Kaikkul Sorgam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    இருபுறமும் சொர்க்கம்

    இருபுறமும் மரங்கள் அடர்ந்து அணி வகுத்திருந்தன.

    நடுவில் நீண்டிருந்தது - சற்றே கரடுமுரடான பாதை. வாகனங்களோ – மனிதர்களோ அதிக நடமாட்டம் இல்லாததால், அந்தப் பாதையில் ஆங்காங்கே சிறுசிறு புற்கள் முளைத்திருந்தன. வானத்தில் சூரியன் இருக்கிறானா... இல்லையா என சந்தேகப்படுகிற அளவுக்கு அப்பகுதியில் மிக குறைவான வெளிச்சமே பரவி இருந்தது.

    மண்பாதையில் சீரான வேகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது அந்த வெளிநாட்டு கார்.

    டாடி- காரை ஓட்டிக்கொண்டிருந்த நீலகண்டனின் தோளில் மென்மையாய் கையைப் பதித்தாள் வண்ணமலர்.

    ம்.

    உங்களோட குலதெய்வ கோவிலுக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?

    எப்படியும் இங்கிருந்து ஆறேழு கிலோ மீட்டராவது இருக்கும் என்றார் நீலகண்டன். சாம்பல் வண்ண 'சபாரி சூட்'டில் இருந்தார். கண்களில் தங்க 'பிரேம்' கண்ணாடி.. நரைத்திருந்த தலைக்கேசத்துக்கு கறுப்பு வண்ணம் பூசியிருந்தார். ஐம்பது வயதுக்கு அதிகமானாலும், உடம்பை கட்டுக்கோப்பாய் வைத்திருந்தார்.

    யாரிடமாவது 22 வயதுப் பெண்ணின் தந்தை இவர்' என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். 'அண்ணன்' என்று சொன்னால்கூட கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடுவார்கள்.

    காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவரின் மனைவி உமையாள்.

    பட்டுச்சேலை கட்டி இருந்தாள். கழுத்தில் தாலிக்கொடியைத் தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதால், முன்னெச்சரிக்கையாக ஆபரணங்களை தவிர்த்திருந்தாள்.

    நீலகண்டர் பிரபல தொழிலதிபர். 'பணம்... பணம்' என்று எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருப்பவர். உறக்கத்தின் நடுவேகூட தொழிலைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார். 'கிரானைட்' தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்.

    இதுதவிர காரைக்குடியில் நகைக்கடை, துணிக்கடை, ஓட்டல் என ஏகப்பட்ட சொத்து சுகம் இருக்கிறது.

    வண்ணமலர் அவருடைய ஒரே செல்ல மகள். கல்லூரிப் படிப்பை சமீபத்தில்தான் முடித்திருந்தாள்.

    தொழிலதிபர் சுந்தரேசனின் ஒரே மகன் முகிலனோடு அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது.

    முகிலன், சிங்கப்பூரில் இருக்கிறான். மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறானாம். இன்னும் சில தினங்களில் இந்தியாவுக்கு வந்துவிடுவான்.

    கல்யாணத்துக்கு இருபது நாட்களே இருக்கிறது. கல்யாணம் முடிந்ததுமே அவளும் முகிலனோடு சிங்கப்பூருக்கு பறக்கப் போகிறாள்.

    புதுக்கோட்டையைத் தாண்டி குடுமியான் மலை அடிவாரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருக்கும் பச்சைக்காளி கோவிலுக்குத்தான் நீலகண்டன் தன் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார்.

    வண்ணமலரின் கல்யாண அழைப்பிதழ், அச்சாகி வந்திருந்தது.

    பச்சைக்காளி சக்தி வாய்ந்தவள். அதுமட்டுமின்றி குலதெய்வமும் அல்லவா!

    நீலகண்டனின் குடும்பத்தில் எந்த நல்லகாரியம் நடந்தாலும், முதல் மரியாதை அவளுக்குத்தான்.

    வண்ணமலரின் கல்யாணம் எந்தத் தடங்கலும், எவ்விதக் குறையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.

    எனவேதான் முதல் அழைப்பிதழை பச்சைக்காளியின் பாதங்களில் வைத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என எண்ணினார்கள். இதற்காக எல்லா வேலைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, கோவிலை நோக்கிபோய்க் கொண்டிருந்தார்கள்.

    டாடி... கோவிலை இந்தக் காட்டுக்குள்ளே கொண்டுவந்து கட்டினது யாரு?- ஆர்வமாய் வினவினாள் மகள்.

    எங்க முன்னோர், ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவங்க. அவங்கள்ல யாரோதான் இந்தக் காட்டுப்பகுதியில் பச்சைக்காளி கோவிலைக் கட்டி இருக்காங்க.

    இதுக்கு முந்தி கோவிலுக்கு என்னை நீங்க கூட்டிட்டு வந்ததே இல்லையே?

    என்னோட கல்யாண நிச்சயமான நேரத்துல வந்திருக்கேன். அதுக்குப் பிறகு இருப்பத்தி மூணு வருஷம் கழிச்சு இன்னைக்குத்தான் வர்றேன்.

    பாதையைப் பார்த்து ஓட்டுங்க என்று உமையாள் அன்புடன் கட்டளையிட்டாள்.

    கோடி கோடியா பணத்தை சேர்த்து வெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க, இருக்கறதுல இந்தக் கோவிலுக்கும் கொஞ்சம் செலவு செய்யுங்க.

    என்ன செய்யணும்?

    வாகனங்கள் எல்லாம் வந்து போறதுக்கு வசதியா நல்லரோடு போட்டுக் கொடுங்க என்றாள் உமையாள்.

    போட்டுட்டாப் போச்சு- தலையைக் குலுக்கி சிரித்தார் நீலகண்டன்.

    டாடி...

    உங்க அம்மாவோட ஆசையை சீக்கிரமாவே நிறைவேத்திடுறேன். உனக்கென்னம்மா ஆசை?

    மொதல்ல காரை நிறுத்துங்கப்பா என்றாள் அவசரமாய்.

    ஏம்மா?

    நிறுத்துங்க சொல்றேன்...- பரபரத்தாள்.

    குழப்பமாய் காரை நிறுத்தினார் அவர்.

    காரின் கதவைத் திறந்துகொண்டு அவசரமாய் தாவி –

    கீழே குதித்தாள் வண்ணமலர்.

    2

    எப்போதோ நடந்தது...

    ஏற்றி வைத்த அகல் விளக்குகளாய் விண்மீன்கள் வானம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. பாதியாய் உடைந்த தங்கத் தாம்பாளம்போல துண்டு நிலவு கரிய மேகத்தின் பிடியில் சிக்கி இருந்தது. குளிரான இளந்தென்றல் வீசியது.

    நாகமலை ஜமீன் மாளிகையின்

    Enjoying the preview?
    Page 1 of 1