Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Povom Ini Kaadhal Desam
Povom Ini Kaadhal Desam
Povom Ini Kaadhal Desam
Ebook92 pages30 minutes

Povom Ini Kaadhal Desam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீபன் சஞ்சிதாவை உயிருக்கும் மேலாய் விரும்பும் பணக்கார ஆடவன். ஆனால் சஞ்சிதா அவன் பணத்தையே முழுக்க முழுக்க விரும்பும் ஒரு பெண். இவர்களின் மத்தியில் கதாநாயகியான அதிசயா பணத்தை பெரிதென எண்ணாமல் அன்பை முழுக்க அளிக்கும் ஒரு தேவதை. தீபன், சஞ்சிதா வாழ்வில் அதிசயாவால் ஏற்படும் மாற்றங்கள் நன்மையில் முடிந்ததா? காதல் தேசத்தில் பயணிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580128308597
Povom Ini Kaadhal Desam

Read more from Maheshwaran

Related to Povom Ini Kaadhal Desam

Related ebooks

Reviews for Povom Ini Kaadhal Desam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Povom Ini Kaadhal Desam - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    போவோம் இனி காதல் தேசம்

    Povom Ini Kaadhal Desam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    தூரிகை கிப்ட் சென்டர்.

    நகரிலேயே பிரபலமான கடை அதுதான். வாரத்தின் ஏழுநாட்களிலும் கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக்கிழமையில்தான் கூட்டம் இருமடங்கு வரும் என்பதால் அன்றைக்கும் கடை உண்டு.

    குறைந்தது ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை பரிசுப் பொருட்கள் கிடைக்கும். பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் தூரிகை கிப்ட் சென்டரைத்தான் விரும்பி தேடி வருவார்கள்.

    இரண்டு மாடிக் கட்டிடம்.

    முழுவதும் ஏஸி வசதி செய்யப்பட்டிருந்தது.

    சிஸ்டர்... அதோ அந்த நெட்டி வொர்க் டெம்பிளை எடுங்க...

    நெட்டியினால் உருவாக்கப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கம்பீரமாய் கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்டிருந்தது. கொஞ்சங்கூட மாற்றம் இல்லாமல் அப்படியே அச்சு அசலாய் காட்சியளித்தது.

    அந்த இளைஞன் சுட்டிக்காட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் நெட்டி சிற்பத்தை கண்ணாடி பெட்டியோடு சேர்த்து இரு கைகளாலும் எடுத்தாள் அதிசயா.

    விலை எவ்ளோ சிஸ்டர்...

    பை தௌஸன் ருபீஸ்...

    அடேயப்பா... அவ்வளவு காஸ்ட்லியா வேணாம்... அந்த இளைஞன் பதறினான்.

    விலையைப் பார்க்காதீங்க... சார், பொருளோட தரத்தைப் பாருங்க... நேத்தைக்குதான் அஞ்சு பீஸ் வந்துச்ச... நாலு ஓடிடுச்சு... ஒண்ணுதான் மிச்சம்...

    *யாராவது பணக்காரங்க வாங்கிட்டுப் போயிருப்பாங்க. நான் மிடில் கிளாஸ். தௌஸன் ரூபீஸ்ல ஏதாவது எடுத்து காட்டங்க சிஸ்டர்..."

    பவ்யமாய் தன்னுடைய நிலைமையை ஒத்துக்கொண்ட அந்த இளைஞனை கண்ணியமாய் ஒரு பார்வை பார்த்தபடியே நெட்டியினால் செய்யப்பட்டு. ஜாரிகை துணியினாலும், ஜமிக்கிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தேர் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

    இந்தாங்க. நைன் ஹன்ட்ரடு ருபீஸ்தான்...

    பார்த்ததுமே தேர்பொம்மையைப் பிடித்து விட்டது அந்த இளைஞனுக்கு முகத்தில் மலர்ச்சியை மலரவிட்டான்.

    ஓகே. சிஸ்டர்... இதே பேக் பண்ணி குடுங்க... கேஷ் கௌண்ட்டரை நோக்கி நடந்தான்.

    அதற்காகவே காத்திருந்ததைப் போல அந்த தேர் பொம்மையை கண்ணாடிபெட்டியோடு எடுத்து அட்டைப் பெட்டிக்குள் திணித்தாள் அதிசயா. பரபரவென செயல்பட்டு ஜிகினா தாளினால் அழகாய் சுற்றி, மடித்து, ஒட்டி அட்டைப் பெட்டியை பேக் பண்ணினாள்.

    லேபிள் ஒட்டி பிளாஸ்டிக் ரோஜாவை இணைத்து பேக்கேஜை தன்னுடன் வேலைப் பார்க்கும் வீணா மூலமாய் கேஷ் கௌண்ட்டருக்கு அனுப்பி வைத்தாள்.

    செல்போஃன் சிணுங்கியது.

    வேறு யாருடையதோ என நினைத்தாள்.

    ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த அவளுடைய செல்போஃன்தான் சிணுங்கியது.

    ஏய்... அதிசயா... போஃன் அடிக்குது பாரு... என்றாள் கூட வேலைப்பார்க்கிற கோகிலா,

    அடிக்கட்டும்...

    எடுத்து பேசுடி...

    போஃன்ல பேசற அளவுக்கு எனக்கு யாருமே கெடையாது... கம்பெனி காலா இருக்கும்...

    அதிசயா அதை லட்சியமே பண்ணவில்லை.

    ஷெல்பின் மேல் பகுதியில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து தூசி இல்லாமல் துடைத்துக் கொண்டிருந்தாள்.

    இரண்டாவது தடவையாக சிணுங்கியது செல்போஃன்.

    யாருன்னுதான் பாரேன்...

    செல்போஃனை எடுத்து பேசாமல் கோகி விடமாட்டாள் போல தோன்றியது ஹேண்ட்பேக்கில் திணித்து வைத்திருந்ததை வேண்டா வெறுப்பாய் வெளியே எடுத்தாள்.

    ஏதோ ஒரு லேண்ட் லைன் நம்பர்தான் ஒளிர்ந்தது.

    ஏதாவது நகைக்கடையா இருக்கும். நாம என்னமோ பணத்தைக் கொட்டி வெச்சிருக்கறாப்ல வலிய கூப்பிடுவாங்க பாரேன்... என்ற படியே பச்சைப் பொத்தானை அழுத்தி காதில் வைத்தாள்.

    அலோ...

    டி... அதிசயா... மறுமுனையில் கரகரப்பாய் ஒலித்தது ஒருகுரல்.

    யாரு...?

    நான்... அம்மாடி! என்னோட குரல் புரியலையா உனக்கு...?

    அம்மா... நீயா...? என்னம்மா போன் எல்லாம் பண்றே? இப்ப எங்கேர்ந்து பேசறே?

    வேலை செய்யற மொதலாளி ஐயா வீட்லேர்ந்துதான். பேசறேன்...

    என் போஃன் நெம்பர் ஏதும்மா?

    Enjoying the preview?
    Page 1 of 1