Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thik Thik Thilothi
Thik Thik Thilothi
Thik Thik Thilothi
Ebook107 pages40 minutes

Thik Thik Thilothi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆள் அரவமற்ற காட்டில் இருக்கும் ஜமீன் மாளிகையில் சொர்ணமீனாட்சி என்னும் மூதாட்டி மட்டும் தனித்திருக்கிறார் அந்த ஜமீன் மாளிகையில் இருக்கும் விலை மதிக்க முடியாத வைரவாளைக் கொள்ளையடிப்பதற்காக இரண்டு கொள்ளையர்கள் அந்த ஜமீன் மாளிகைக்குள் பிரவேசிக்கிறார்கள் அதேசமயம் திலோத்தி என்கிற கோடீஸ்வரன் வீட்டு இளம்பெண் தன் காதலன் திவாகரை சந்திப்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் காரில் வந்து கொண்டிருக்கிறாள். அவள் வந்த நேரம் அவன் ஊரில் இல்லை முன்பின் வந்திடாத காட்டுப்பாதையில் கார் ஒரு இடத்தில் நின்று விடுகிறது திவாகருக்கு போன் பண்ணுகிறாள் அவன் அருகாமையில் இருக்கும் ஜமீன் மாளிகையில் போய் தங்கிக் கொள் விடியும் வரை உனக்கு பாதுகாப்பாக இருக்கும் விடிந்ததும் வந்து விடுகிறேன் என சொல்லுகிறான். அவள் அந்த ஜமீன் மாளிகைக்கு தட்டுத்தடுமாறிஇருட்டில் செல்கிறாள்அங்கே இருக்கும் இரண்டு கொள்ளையர்களிடம் திலோத்தி சிக்கினாளா? வைரவாளை காப்பாற்றினாளா? சொர்ண மீனாட்சியின்கதி என்ன ஆனது கீழே வைக்கும் வரை இந்த புத்தகத்தை யாரும் மூட மாட்டீர்கள் அத்தனை விறுவிறுப்பான நாவல்

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580128310641
Thik Thik Thilothi

Read more from Maheshwaran

Related to Thik Thik Thilothi

Related ebooks

Related categories

Reviews for Thik Thik Thilothi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thik Thik Thilothi - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திக் திக் திலோத்தி

    Thik Thik Thilothi

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 1

    அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால் ஒரு முழு நாள் போதாது. அத்தனை பெரிய வீடு. பார்க்கும் கண்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிற வீடு. ஒரு நாள் முழுக்க சுற்றினாலும் போதாது, கால்கள் தான் வலிக்கும். அத்தனை பெரிய வீடு.

    ஒரு கம்பீரமான அரண்மனைக்கு உரிய அத்தனைத் தகுதிகளும் அந்த வீட்டிற்கு இருந்தது.

    இரண்டடுக்கு மாடி வீடு, சிமெண்ட் கலவையோடு முட்டையின் வெள்ளைக் கருவையும் மூலிகை சாற்றையும், ஊற்றி கலந்து பிசைந்து கட்டப்பட்ட வீடு.

    வீட்டின் எந்த பகுதியிலும் சிறு கீறலோ விரிசலோ கிடையாது. இந்த காலத்து சிவில் இன்ஜினியர்கள் எல்லாம் அந்த வீட்டைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள், மூக்கில் விரலை வைப்பார்கள்.

    வீட்டைச் சுற்றிலும் நிறைய தென்னை மரங்கள், வருடம் முழுவதும் காய்த்து குலுங்குகிற மாமரங்கள், பூக்கள் ஒரு பக்கம், பிஞ்சுகள் ஒரு பக்கம், கனிந்த பழங்கள் ஒரு பக்கம், என ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் பலன் தருகிற மாமரங்கள்.

    மாமரங்களில் இருக்கிற குலுங்குகிற பழங்களைக் கொத்தித் தின்ன வருகிற கிளிக் கூட்டத்தை விரட்டியடிப்பது தான் சொர்ண மீனாட்சியின் ஒரே வேலை. கிளிக் கூட்டத்தின் கொஞ்சல் மொழி எந்த நேரமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

    அந்தக் கிளிகளை துரத்துவதாலேயே சொர்ண மீனாட்சி எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க காரணம் கிளிகளைத் துரத்தி அடிக்கிற தினசரி வேலையும் ஒரு காரணம்.

    சொர்ண மீனாட்சிக்கு எழுபது வயது, இரட்டை நாடி உடம்பு. தினப்படி மாற்றுச் சேலையாக உடுத்துக் கொள்வதே பட்டுச் சேலைகளைத்தான்.

    அள்ளி முடிந்த கூந்தல், பாம்படங்கள் அணிந்த காதுகள், மூக்கில் இரண்டு பக்கமும் தோசை கல்லாட்டம் வைரக்கற்கள்பதித்தமூக்குத்தி, அதில் பளீரிடுகிற வைரங்கள்,

    கழுத்தில் நான்கு வடச் சங்கிலி, சொர்ணமீனாட்சிக்கு வயது தான் அதிகம். ஆனால் யானை பலம். ஐந்து ஆண்களுக்கு சமமான பலசாலி, தைரியசாலி, உறங்குகிறபோதும் விழித்து இருக்கிற அதி புத்திசாலி. அத்தனை பெரிய வீட்டில் சொர்ண மீனாட்சி ஒருத்தி மட்டும் தான் இருந்தாள்.

    ரகுநாத பூபதி காலமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. சூரிய பிரபு, சந்திர பிரபு, என இரண்டு பிள்ளைகள். இருவருமே நன்றாகப் படித்து வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்கள்.

    சூரிய பிரபு அமெரிக்காவிலும் சந்திரபிரபு ஆஸ்திரேலியாவிலும் வசிக்கிறார்கள். இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. மனைவி குழந்தைகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள்.

    எங்களோட வந்து விடுங்கள் அம்மா எத்தனையோ தடவை கூப்பிட்டு விட்டார்கள். காலில்விழாதபடியாகக் கெஞ்சி விட்டார்கள். மன்றாடி விட்டார்கள்

    உங்கப்பா நடமாடின வீடு. உங்களைப் பெற்றெடுத்து மார்பிலயும் தோள்லயும் போட்டு கொஞ்சின வீடு. அதுவும் அந்த மர மாடிப்படியில் இருந்து கீழே இறங்கிட்டு இருந்தப்பத்தான் உங்கப்பா சுருண்டு கீழே விழுந்து இறந்தார்...இன்னும் அவரோட ஆத்மா இந்த வீட்டிலேயே சுத்துறதா தான் நினைக்கிறேன், தனிமை ஒரு விதத்தில் நரகமாக தெரிந்தாலும், பழைய நினைவுகளை அசைபோடுறப்போ சொர்க்கமாக மாறிடுது, தயவு செஞ்சு இனிமேல் என்னை உங்களோட வர சொல்லிக் கூப்பிடாதீங்க கண்ணீர் மல்க தழுதழுப்பாய் பேசி பிள்ளைகளின் விருப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்,

    சொர்ண மீனாட்சி பிள்ளைகள் இருவரும் திரும்பத் திரும்ப எத்தனை முறை வற்புறுத்தி அழைத்தாலும் சொர்ண மீனாட்சியின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

    சொர்ண மீனாட்சி ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதிலிருந்து எள்ளளவும் மாறமாட்டாள், மாற்றிக் கொள்ளவும் மாட்டாள்.

    திடமான உறுதியான முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அவளுடைய குணம் பிள்ளைகள் இருவருக்கும் நன்றாகவே தெரியும். பிள்ளைகள் இருவருக்கும் சொர்ணா மீனாட்சிமீது பாசத்தை விட பயபக்தி அதிகம்.அதனாலே தங்களுடைய எண்ணத்தையும் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அவளை வெளிநாட்டிற்கு அழைப்பதை அடியோடு நிறுத்தி இருந்தார்கள். சொல்லி வைத்துக்கொண்டு குடும்பத்துடன் இங்கே வருவார்கள். சொர்ண மீனாட்சியோடு பொழுதை குதூகலமாகக் கழித்துவிட்டு. பத்து தினங்களில் அவரவர் நாட்டுக்குக் கிளம்பி விடுவார்கள்.

    அந்த பத்து நாட்களும் சொர்ண மீனாட்சிக்கு திருவிழா தான் சொர்க்கலோகத்தில் இருப்பதைப் போல பூரித்து போவாள், தன் பேரக் குழந்தைகளோடு, சேர்ந்து தானும் ஒரு குழந்தையாக மாறி போய்விடுவாள்.

    தன் கையினால் சமைத்ததை மருமகளுக்கும் ஊட்டி விடுவாள். அக்காட்சியை பார்க்கிற பொழுது சூரிய பிரபுவிற்கும் சந்திர பிரபு விற்கும் கண்களில் ஈரம் கசியும்.

    வெறுமனே பத்து நாட்கள் வந்து தங்கினதுக்கே இவ்ளோ குதூகல படுறீங்களே நாங்கள் எல்லோரும் உங்கள் கூடவே நிரந்தரமாக தங்கிட்டா எப்படி இருக்கும்? உணர்ச்சி பொங்க சூரிய பிரபு கேட்ட கேள்விக்கு இதழ்களில் சின்ன புன்னகையை தவழவிட்டபடி சொர்ண மீனாட்சி சொன்ன பதில் இதுதான்.

    வெடிச்சிடும்டா, சந்தோஷத்துல என் நெஞ்சு வெடிச்சிடும்டா,

    அம்மா

    எல்லாரும் நிரந்தரமா வந்து என் கூடவே தங்கிட்டீங்கன்னா சந்தோஷத்துல தாங்க முடியாமல் நெஞ்சு வெடிச்சிடும்டா

    அம்மா பதறி போனான் சூரிய பிரபு.

    "போதும் சூர்யா, நீயும் உன் தம்பியும் இங்கே வந்து பத்து நாட்கள் தங்கி இருக்கிறதே அதிகம், இந்த பத்து நாட்கள் நிகழ்வுகளை நினைத்துக்கொண்டே நான் முழு வருடத்தையும் நகர்த்தி விடுவேன் இப்போதைக்கு உங்கள் குழந்தைகள் படிக்கிறதும் நல்லா வளர்வதும்தான் முக்கியம். அவங்க ஆளாகி சொந்த காலில் நிற்கிறதுக்கு கத்துக்கிட்ட பிறகு நீயும் உன் தம்பியும், அவங்க அவங்க மனைவியோட இங்க வந்துருங்க,

    Enjoying the preview?
    Page 1 of 1