Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathil Vizhuntha Thirumana Maalai!
Idhayathil Vizhuntha Thirumana Maalai!
Idhayathil Vizhuntha Thirumana Maalai!
Ebook151 pages38 minutes

Idhayathil Vizhuntha Thirumana Maalai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த கதை இதயத்தை உருக கற்கும் உன்னத படைப்பு.திரைப்படமாக வரவேண்டும் என நான் ஆசைப்படும் கதை. தன் தந்தையின் அந்தஸ்தையும் கவுரவத்தையும் தூக்கி வீசியெறிந்துவிட்டு தான் விரும்பிய பூச்செண்டுடன் கிராமத்தை விட்டு வெளியேற திட்டமிடும் சக்திவேல் மணல் லாரி மோதி உயிரை விட... தன் வீட்டு வேலைக்காரியின் மகள்தான் எனத் தெரியாத சக்திவேலின் தந்தை அந்த பெண் யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பை பூச்செண்டின் தாயிடமே ஒப்படைக்க... அவள் என்ன செய்தாள்?

பூச்செண்டை ஒருதலையாய் நேசித்த இளவரசனின் காதல் கைகூடியதா... படபடப்பான கிராமத்து கதை இது...

Languageதமிழ்
Release dateAug 9, 2022
ISBN6580128308587
Idhayathil Vizhuntha Thirumana Maalai!

Read more from Maheshwaran

Related to Idhayathil Vizhuntha Thirumana Maalai!

Related ebooks

Reviews for Idhayathil Vizhuntha Thirumana Maalai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathil Vizhuntha Thirumana Maalai! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இதயத்தில் விழுந்த திருமண மாலை!

    Idhayathil Vizhuntha Thirumana Maalai!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஆற்றங்கரையோர ஆலமரம் ஆயிரம் பேர் நின்று இளைப்பாறுகிற அளவிற்கு அடர்த்தியாய் நிழலைப் பரப்பிக் கொண்டிருந்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கிளைகளில் இளந்துளிர்கள் எட்டிப் பார்த்து புன்னகைத்தன... எங்கிருந்தோ கும்பல் கும்பலாய் பறந்து வந்த பறவை இனங்கள் கிளைக்கு கிளைத்தாவி... இலவசமாய் இன்னிசைக் கச்சேரி நடத்தின... கிளைகளிலிருந்து கீழே இறங்கி மண்ணில் வேர் ஊன்றியிருந்த விழுதுகள் தனித்தனி மரங்களைப் போல காட்சியளித்தன...

    விழுது ஒன்றை கைகளால் இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு கால்களை தரையில் அழுத்தி ஒரு எம்பு எம்பி... விழுதோடு சேர்ந்து உயரபோய்... ஆற்றுத் தண்ணீருக்குள் ‘தொபுக்கடிர்’ என விழுந்தாள் பூச்செண்டு.

    தண்ணீர் திவலைகள் நாலாபுறமும் பளிங்குச் சிதறல்களாய்... தெறிக்க ஆற்றின் போக்கோடு கொஞ்சதூரம் நீந்திப்போய் திரும்பிவந்து... ஈரம் சொட்டச் சொட்ட கரையேறினாள்.

    பூச்செண்டுக்கு இருபத்தி நான்கு வயது.

    இளமை கொஞ்சும் அழகு கிளி.

    கள்ளம் கபடமற்ற கிராமத்து தேவதை.

    பார்க்கும் விழிகளை பரவசத்தில் ஆழ்த்துகிற பட்டாம்பூச்சி வட்டமுகமும், துறுதுறுவென்ற கண்களும், செதுக்கிய நாசியும், சிவந்து கனிந்த இதழ்களும்... போதுமான உயரமும், இடைவரை நீண்ட கூந்தலும், மஞ்சளை அரைத்து பூசியது போன்ற நிறமும்... துள்ளலான நடையும் பூச்செண்டை தனித்துக்காட்டும்.

    எத்தனைப் பேருக்கு மத்தியில் நின்றாலும் பூச்செண்டு மட்டும் முழுநிலா மாதிரி தகதகவென மிளிர்வாள்.

    ஒருதடவைப் பார்த்தவர்களை மறுபடியும் மறுபடியும் திரும்பிப்பார்க்க வைக்கும் அவளுடைய தோற்றம்.

    அடியேய் பூச்செண்டு...

    குடத்துடன் ஆற்றில் தண்ணீர் எடுக்க வந்த செவ்வந்தி உரக்க அழைத்தாள்.

    என்னக்கா...

    குளிச்சது போதும்டி... உங்கம்மா ஒன்னைய சல்தியா வூட்டுக்கு வரச்சொல்லுது...

    இப்பத்தான் வந்து தண்ணியில கால் வைக்கறேன்... அதுக்குள்ள கூப்பாடு வந்துடுச்சா...? நீ போக்கா... எங்கம்மாவுக்கு வேற வேலையே இல்லை...

    எரிச்சலாய் அலுத்துக் கொண்டபடியே... திரும்பவும் விழுதில் தொங்கியவாறே தண்ணீருக்குள் குதித்து மூழ்கி எழுந்தவளை முறைப்பாய் பார்த்தாள் செவ்வந்தி.

    வெளையாடறதுக்கு இதுவாடி நேரம்... ஒன்னை பொண்ணுப் பார்க்க வந்திருக்காங்களாம்...! பொண்ணு ஆத்துக்கு குளிக்கப் போயிருக்கான்னு சொல்லி... மாப்பிள்ளைவூட்டுக்காரங்களை வாசல்லயே நிறுத்தி வெச்சிருக்கு ஒங்கம்மா. அதனால தான் ஒன்னை அவசரமா வரச்சொல்லுது... நாஞ்சொல்றதை சொல்லிப்புட்டேன்... போறதும் போகாம இருக்கறதும் ஒன்னோட விருப்பம்...! அப்புறம் ஒங்கம்மா விறகு கட்டையை எடுத்துகிட்டு அடிக்க தொரத்துச்சுன்னா என் வூட்டுப்பக்கம் தான் ஓடி வருவே...

    கழுத்தை நொடித்தபடியே சொல்லிவிட்டு குடத்தில் தண்ணீரைத் தளும்ப தளும்ப அள்ளி இடுப்பில் தூக்கி வைத்தாள் செவ்வந்தி.

    பூச்செண்டின் வீட்டிற்கும் செவ்வந்தி வீட்டிற்கும் இடையே ஒருசின்ன திடல் மட்டும் தான். செவ்வந்தி ஆற்றிற்கு தண்ணீர் எடுக்க வருவதைப் பார்த்துவிட்டுத்தான் விஷயத்தை சொல்லியனுப்பியிருக்கிறாள் பூச்செண்டின் அம்மா.

    ஏங்க்கா நெசமாத்தான் சொல்றியா?

    இந்த விஷயத்துல யாராச்சும் பொய் சொல்வாங்களா? உன்னைய கிண்டல் பண்ணிகிட்டு நிக்கறதுக்கு எனக்கு வேலை வெட்டியே இல்ல பாரு!

    விறைப்பாய் சொன்னவள் கரை மீது ஏறி திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டேயிருந்தாள்.

    ‘செவ்வந்தி அக்கா பொய் பேசலை.

    அம்மாதான் சொல்லிவிட்டிருக்கிறாள்...

    ஆத்துலேர்ந்து கெளம்பி போகலைன்னா... அம்மாவே தேடி வந்திடும் இப்ப என்னையப் பொண்ணுப்பார்த்துட்டு போயி என்ன பண்ணப் போறாணுங்க....? நான் கழுத்தை நீட்டணும்ல...?’

    மனசுக்குள் எண்ணங்கள் சிதற... சோப்புக்கட்டியை தண்ணீரில் நனைத்து உடம்பு முழுவதும் பரபரவென தேய்த்தாள். மஞ்சள் கிழங்கை கரையில் கிடந்த கருங்கல்லில் இழைத்து முகத்திலும் கழுத்திலும் பூசிக்கொண்டாள். பிறகு தண்ணீரில் இறங்கி ஒரே முழுக்குதான் போட்டாள்.

    ‘இன்னிக்கும் சேர்த்து நாளைக்கி ஆற அமர குளிச்சுக்கலாம்... ஆட்டம் போட்டுக்கலாம்... இப்ப போயிடலாம்...’ ஈரம் சொட்டச்சொட்ட கரையேறி... புதருக்குள் புகுந்து மாற்றுத் துணியை உடுத்திக்கொண்டாள். ஈரக்கூந்தலை துவட்டி அள்ளி முடிந்தாள். நனைந்த துணிகளை பிழிந்து தோளில் போட்டாள். மறக்காமல் சோப்பு பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு குறுக்குப் பாதையில் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

    ‘பெண்ணுப் பார்க்க வந்திருக்கறது யாரா இருக்கும்?

    அம்மா இதைப்பத்தி முன்கூட்டியே சொல்லலையே...

    திடுதிடுப்புன்னு வந்திருப்பாங்களா...?’

    நாட்டையே ஆளற ராசா வந்தாலும் நான் கழுத்தை நீட்ட மாட்டேன்னு அம்மாவுக்கு தெரியலையே...

    இந்த கழுத்து ஏங்கறது யாருடைய பூமாலைக்காகன்னு... அம்மாகிட்டே எப்படி சொல்றது...?

    இந்த மனசு காத்திருக்கறது யாருக்காகன்னு அம்மாகிட்டே எப்படி தெரியப்படுத்தறது...?

    எம்மனசு தெரியாம... தவிப்பை அறியாம ஒவ்வொருத்தரையா ஏம்மா பொண்ணுப் பார்க்க வரச்சொல்றே...?

    பூச்செண்டு தன் வீட்டை நெருங்கியிருந்தாள்.

    கொல்லைப்புற மூங்கில் படலைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.

    ஏண்டி... நீ குளிக்கத்தான் போனியா? இல்லே... தூக்கனாங்குருவி ஆத்தையே வெலைபேசி வாங்கியாரப் போனியா...? அவங்க எவ்ளோ நேரமா காத்திருக்காங்க தெரியுமா...? சீக்கிரமா வாடி...

    வீட்டின் பின்பக்க தகரக்கதவோரமாய் பூச்செண்டிற்காகவே காத்திருந்த செல்லாத்தா... படபடத்தபடியே அவளை உள்ளே இழுத்துப் போனாள்.

    தகரப்பெட்டியைத் திறந்து உள்ளிருந்து பளபளப்பான பஞ்சுமிட்டாய் வண்ண சேலை ஒன்றை எடுத்து கையில் தயாராய் வைத்திருந்தாள்.

    இதைக் கட்டிக்கடி...

    நான் ஒன்கிட்டே கல்யாணம் வேணும்னு கேட்டனா...?

    கேட்கலைன்னாலும்... காலத்துல ஒன்னைய ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுக்கறது என்னோட கடமைடி...

    நீயாத்தான் அவங்களை வரச்சொன்னியா...?

    அவங்களாத்தான் வந்திருக்காங்க.! வரப்போறது தெரிஞ்சிருந்தாதான்... முன்னமே ஒங்கிட்டே சொல்லியிருப்பேனே! ஒரு வாரத்துக்கு முந்தி நம்ம செடிபவுனுவைக் கூட்டிகிட்டு தருமாசுபத்திரிக்கு போனேல்ல...

    ஆமா... போனேன்... செடிபவுனு அக்காவுக்கு வயித்து வலி... புருஷன்காரன் கேரளாவுல இருக்கான்... கூடமாட உதவி பண்ண மனுஷர் இல்லன்னு நாந்தான் அந்த அக்காவைக் கூட்டிகிட்டு தருமாசுபத்திரிக்கு போனேன்... அதுக்கென்னவாம்...?

    செல்லாத்தாவிடம் பேசியபடியே... சேலையைக் கட்டி முடித்திருந்தாள். பஞ்சு மிட்டாய் வண்ண சேலை பூச்செண்டின் அழகை கூடுதலாக்கி காட்டியது.

    ஆசுபத்திரியில வெச்சுதான் மாப்ளதம்பி ஒன்னைய பார்த்திருக்காரு! பார்த்ததுமே புடிச்சுப்போச்சாம் யாரிந்தப் பொண்ணுன்னு விசாரிச்சு... கட்டினா ஒன்னையத்தான் கட்டுவேன்னு அவங்க வீட்ல போய் ஒத்தக்கால்ல நின்னுருக்காரு...! ஒத்தப்புள்ளை... ஆசையைக் கெடுப்பானேன்னு நம்ம ஊரையும் பேரையும் தெரிஞ்சுகிட்டு... பொண்ணுப் பார்க்க வந்திட்டாங்க. மாப்ளதம்பி... தருமாசுபத்திரியில வேலைப் பார்க்கறாராம். மருந்து மாத்திரை எடுத்துக் கொடுக்கற வேலையாம்! கவர்மெண்ட் உத்யோகம்... கைநெறைய சம்பளம்... யாருக்குடி கெடைக்கும் இந்த யோகம்...?

    செல்லாத்தாவின் கண்களில் கனவுகள் மினுக்கியது.

    குடைராட்டினத்தில் ஏற்றிவிடப்பட்ட சின்னக் குழந்தையாய் குதூகலித்தது மனசு.

    Enjoying the preview?
    Page 1 of 1