Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Engey? En Anbe!
Nee Engey? En Anbe!
Nee Engey? En Anbe!
Ebook152 pages51 minutes

Nee Engey? En Anbe!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீனதயாளன்- ஜானகியின் ஒரே மகன்தான் 28 வயது இளங்காளை உத்தமன். இவனுக்கு ஆசையையும் காதலையும் விதைத்து, மனசில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டாள் இதயா. ஒரு நாள் ஏற்பட்ட சந்திப்பிலே ஆயுள் முழுவதும் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் உத்தமன். ஊர் பெயர் தெரியாதவளை தேடிக் கண்டுபிடித்தானா? விதிவசத்தால் இவர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580128310160
Nee Engey? En Anbe!

Read more from Maheshwaran

Related to Nee Engey? En Anbe!

Related ebooks

Related categories

Reviews for Nee Engey? En Anbe!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Engey? En Anbe! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ எங்கே? என் அன்பே!

    Nee Engey? En Anbe!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஏலகிரி மலை.

    பச்சைப் பசேலென்ற தேயிலைத் தோட்டத்திற்கு இடையில் சரிவில் நீண்டுகொண்டே போனது. அகலம் குறைவான தார்ச்சாலை.

    சீரானவேகத்தோடு ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் உத்தமன்.

    இருபத்தியெட்டு வயது இளங்காளை.

    இறுக்கமான பேண்ட்டும், கோடு போட்ட முழுக்கை சட்டையும் அணிந்து அதற்கு மேலே குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர்மாட்டியிருந்தான்.

    நல்ல வசீகரமான முகம். சுருள் சுருளாய் நெற்றியில் வழிகிற தலை கேசம். முறுக்கு மீசை.

    கழுத்தில் தடிமனாய் தங்கச் சங்கிலி... கையில் தங்கக் காப்பு...

    பணக்கார வீட்டு ஒரே வாரிசு என்பதை அவனுடைய தோற்றமே சொல்லாமல், சொல்லியது.

    உத்தமன் எம்.பி.ஏ. முடித்திருக்கிறான்.

    எஸ்டேட் நிர்வாகத்தை தற்சமயம் அவன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

    தீனதயாளன் - ஜானகி தம்பதியரின் ஒரே மகன். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. தீனதயாளனுக்கு ஆறுமாதங்களுக்கு முன்புதான் இருதய அறுவை சிகிச்சை நடந்திருந்தது.

    பொறுப்புகள் அத்தனையையும் உத்தமனிடம் ஒப்படைத்து விட்டு தீனதயாளன் ஓய்வில் இருக்கிறார். நடைப் பயிற்சியைக்கூட பங்களாவைச் சுற்றிலும் இருக்கும் புல்வெளியிலேயே முடித்துக்கொண்டு விடுகிறார்.

    தீனதயாளன் ஜானகி தம்பதியரின் தற்போதைய ஒரே கவலை... உத்தமனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லையே என்பதுதான்.

    உத்தமனுக்கு வரன்கள் வராமல் இல்லை. எத்தனையோ வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. வரிசைக்கட்டிதான் நிற்கிறது.

    உத்தமன் எல்லாவற்றையும் தட்டிக் கழித்து விடுகிறான்.

    ஜீப் ஓடிக் கொண்டிருந்த பாதையின் குறுக்கே ஒரு இடத்தில் மான்களும், முயல்களும் கூட்டமாய் குபீர் குபீரென்று பாய்ந்தோடின.

    தேயிலைத் தோட்டத்திற்கு அப்பால் காய்கறித் தோட்டம். ஏக்கர் கணக்கில் முட்டைக்கோசையும், காலிஃபிளவரையும், கேரட்டையும் பயிரிட்டிருந்தார்கள்.

    முயல்களும், மான்களும் காய்கறி தோட்டத்தில்தான் மேய்ந்து கொண்டிருந்தன. ஜீப்பின் இரைச்சல் கேட்டதும் தான்... அங்கிருந்து பயந்து சிதறி ஓட்டம் பிடித்திருந்தன.

    ஜீப்பின் வேகத்தை சற்றே குறைத்தான்.

    தேயிலைத் தோட்டத்தினுள் தேயிலைத்துளிர்களைக் கிள்ளி கூடையினுள் சேகரித்துக் கெண்டிருந்த பெண்கள் உத்தமனைப் பார்த்ததும் தலையை நிமிர்த்தி பார்த்தனர்.

    மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சூபர்வைசர் பொன்னுரங்கம் உத்தமனின் ஜீப்பைப் பார்த்ததுமே... விரைந்தோடி வந்தார்.

    பொன்னுரங்கம் ரொம்ப காலமாக இங்கே வேலை பார்க்கிறார். எஸ்டேட்டில் மேடு எங்கே இருக்கிறது... பள்ளம் எங்கே இருக்கிறது எல்லாமே அவருக்கு அத்துப்படி...

    கும்பிடறேன் சின்னய்யா...

    பணிவாய் கைகளைக் குவித்துக் கும்பிட்டார்.

    நம்ம எஸ்டேட்டைச் சுத்திலும் முள்வேலி போட்டிருக்கோம்தானே?

    ஆமாங்கய்யா...

    முள்வேலியில எதாவதொரு எடத்துல... டேமேஜ் ஆகியிருக்கா பொன்னுரங்கம்?

    எதனாலய்யா கேட்கறீங்க...? பொன்னுரங்கம் குழப்பமாய்ப் பார்த்தார்.

    ஜீப்போட சத்தம் கேட்டதும் மான்களும் முயல்களும் நெறைய ஓடுதே... என்றான்.

    நெசந்தாங்கய்யா... முள்வேலி ஒரு எடத்துல சேதமாகியிருக்கறது நெசந்தாங்கய்யா...! காட்டு யானைங்க கூட்டமா வந்து சேதப்படுத்திட்டதுங்கய்யா. நாளைக்கே சரி பண்ணிடறேன்... மான்களும் முயல்களும்... காய்கறித் தோட்டத்துக்கு வராம விரட்டுறேன்யா...

    வேணாம்... பொன்னுரங்கம்... அதை சரிபண்ண வேணாம்... டேமேஜ் அப்படியே இருந்துட்டுப் போகட்டும். மான்களையோ, முயல்களையோ விரட்ட வேணாம். பாவம்... வாயில்லா ஜீவன்கள்... வயித்துப் பசிக்காகத்தானே ஓடி வருதுங்க... ஏக்கர் கணக்குல காய்கறிங்களைப் பயிரிட்டிருக்கோம்... அவ்வளவையுமா தின்னுடப் போவுதுங்க...?

    அதைக் கேட்டதும் பதறிப் போனார் பொன்னுரங்கம்.

    சின்னய்யா... எம்மேல கோபத்துல சொல்றீங்களாய்யா?

    ம்ஹூம்... கோபமா...? நீங்க என்னதப்பு பண்ணுனீங்க... கோபப்பட? டாடி கோடிக்கணக்குல சேர்த்து வெச்சுருக்காரு... இருக்கறதே போதும்... இந்த மான்களும் முயல்களும் சாப்பிடறதால எதுவுமே கொறைஞ்சிடாது... புரியுதா...?

    புருவங்களை உயர்த்தினான்.

    புரியுதுங்கய்யா... உங்க மனசு யாருக்குமே வராதுங்கய்யா...! உங்க மனசுக்கு புடிச்சாப்ல ஒரு பொண்ணு கூட காலத்துல கல்யாணமாகி நூறு வருஷம் சந்தோஷமா வாழணும்யா... சீக்கிரமாவே நான் உங்களை ஜோடியோட மலையுங்கழுத்துமாப் பார்க்கணும்... அதாங்கய்யா... இந்தக் கட்டையோட தீராத ஆசை...

    உணர்ச்சிவசப்பட்டு பொன்னுரங்கம்... தழுதழுத்தார் பதிலே சொல்லவில்லை உத்தமன்.

    ஓகே... பொன்னுரங்கம்... நீங்க போய் உங்களோட வேலையைக் கவனிங்க...

    பொன்னுரங்கத்தை அனுப்பி வைத்துவிட்டு... ஜீப்பை... மெதுவாய் வளைத்து... திருப்பி வந்த வழியே செலுத்த தொடங்கினான்.

    ஸ்வெட்டரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் சிணுங்கியது. வெளியே எடுத்தான்.

    அம்மா ஜானகிதான் அழைத்தாள்.

    சொல்லும்மா...

    பச்சைப் பொத்தானை அழுத்திக் காதில் வைத்தான்.

    இப்ப எங்கடா இருக்கே?

    தேயிலைத் தோட்டத்துலம்மா...

    சீக்கிரமா... ஜீப்பைத் திருப்பிட்டு... வீட்டைப் பார்க்க வந்துசேருடா...

    ஏம்மா...

    நீ வந்ததும்... நேர்ல சொல்றேன்...

    சொன்னாதான் வருவேன்...

    உன்னைப் பார்க்கறதுக்காக பொண்ணு வீட்டுலேர்ந்து வர்றாங்கடா...?

    ஏம்மா உனக்கு வேற வேலையே இல்லையா?

    உன்கிட்டே கெஞ்சிப் பிரயோஜனமில்லை... மயிலே மயிலேன்னா இறகு போடாது... அதனாலதான் நானும் உங்கப்பாவும் அதிரடியா இந்த விஷயத்துல எறங்கிட்டோம். தரகர் காட்டின போட்டோவிலேயே பொண்ணைப் பார்த்தாச்சு... மூக்கும் முழியும் லட்சுணமா... மகாலெட்சுமி மாதிரி இருக்கா. பார்த்ததுமே இவதான் நம்ம வீட்டு மருமகள்னு முடிவு பண்ணிட்டோம்... தரகர் மூலமா... எங்களோட சம்மதத்தை பொண்ணு வீட்டுக்குத் தெரியப்படுத்தியாச்சு... இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு அவங்கள்ளாம்... நம்ம வீட்டுக்கு வர்றாங்க...! உன்னை நேர்ல பார்த்துட்டு பேசிட்டு... தாம்பூலத்தட்டை மாத்திகிட்டுப் போயிடப் போறாங்க... இந்த மாசக் கடைசியில் கல்யாணம்...

    மறுமுனையிலிருந்து ஜானகி, பேசிக்கொண்டே போனாள்.

    கலகலவென சிரித்தான் உத்தமன்.

    ஏண்டாசிரிக்கறே?

    உனக்கும் டாடிக்கும் நான் ஒரே பையன்தானா இல்லே... இன்னொரு பையன் இருக்கானா? அப்படி இருந்தான்னா... அவனுக்கு பண்ணி வெய்ங்க இந்த கல்யாணத்தை!

    உத்தமன்...

    மறுமுனையில் கோபமாய்க் கத்தினாள் ஜானகி.

    உங்க ரெண்டு பேரோட மனசுலயும்... என்னம்மா நெனைச்சுகிட்டிருக்கீங்க? நான் உங்ககிட்டே கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேனா? என்னமோ... அவசரம் அவசரமா ஏற்பாடு பண்றீங்களே!

    உனக்குகல்யாணம் பண்ணி வெய்க்க வேண்டியது எங்க கடமைடா... என்றாள் கனிவாய்.

    எனக்கு இப்ப வேணாம்! என்னைப் பார்க்கணும்னு யாரும் நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. மொதல்ல அந்த தரகரோட நம்பரைக் கொடும்மா! நான் பேசிக்கறேன்!

    உத்தமன் எரிச்சலாய்க் கத்தினான்.

    உத்தமன்... நீ எங்களோட தவிப்பை புரிஞ்சுக்கடா...

    நீங்க ரெண்டு பேரும் என்னைப் புரிஞ்சுக்கங்க! அவங்களையெல்லாம் வரவேணாம்னு சொல்லிடு. அப்பத்தான் நான் வீட்டுக்கே வருவேன். இல்லாட்டி தோட்டத்துலயே இருந்துடறேன்... பிடிவாதமாய் பேசினான்.

    டேய்... சொன்னாக் கேளுடா... கெஞ்சினாள்.

    நான் எதையும் கேட்கத் தயாரா இல்லை...

    அப்படின்னா... நீ... மனசுல இன்னும் அந்தப் பொண்ணைத்தான் நெனைச்சுகிட்டிருக்கியா?

    ஜானகி படபடப்பாய் கேட்டாள்.

    ஆமா...

    ஊரு தெரியாத ஒருத்திக்காக... பேரு தெரியாத ஒருத்திக்காக... முகவரி தெரியாத ஒருத்திக்காக... முன்ன பின்ன பழக்கமே இல்லாத ஒருத்திக்காக உன்னை நீயே வருத்திக்கறியே... உனக்கென்ன பைத்தியமாடா...?

    அம்மா...

    நீ மாறவே போறதில்லை... நானும் உங்கப்பாவும் என்ன பாவம் பண்ணினோமோ... தெரியலை... உன்னை மணக்கோலத்துல பார்ப்போம்ங்கற நம்பிக்கையையே நாங்க இழந்துட்டோம்...! எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லப்போகுதா? இல்லே காலன் எங்களைக் கூட்டிக்கப் போறானான்னு தெரியலியே...?

    அழுது புலம்பியபடியே மறுமுனையில் தொடர்பைத் துண்டித்தாள் ஜானகி.

    உத்தமன் சட்டைப் பையினுள் செல்போனைப் போட்டுக் கொண்டான். கண்களுக்குள் அந்த இளம் பெண் குறுக்கும் நெடுக்குமாய் ஓடினாள்.

    ‘தேவதையே... நீ எங்கே இருக்கிறாய்?’

    ‘உன்பேரென்ன?’

    2

    ஏழு மாதங்களுக்கு முன்புதான் உத்தமன் அந்த இளம் பெண்ணை சந்தித்திருந்தான்.

    அது ஒரு சுகமான நிகழ்வு.

    Enjoying the preview?
    Page 1 of 1