Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Kuthirai
Karuppu Kuthirai
Karuppu Kuthirai
Ebook114 pages55 minutes

Karuppu Kuthirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விறுவிறுப்பான கதைகளம். முன்ஜென்ம கதை. சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நாட்டியகாரி நீலமதி, இளவரசன் பிரதாபன் இவர்களது சோகமான வீரமான கதை. இக்கதையும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. இக்கதையை திரைப்படமாக காணவேண்டும் என்பதே என் ஆசை...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580128308602
Karuppu Kuthirai

Read more from Maheshwaran

Related to Karuppu Kuthirai

Related ebooks

Related categories

Reviews for Karuppu Kuthirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Kuthirai - Maheshwaran

    http://www.pustaka.co.in

    கருப்புக் குதிரை

    Karuppu Kuthirai

    Author :

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சாலையில் இருபுறமும் வரிசைவரிசையாய் இலுப்பை மரங்கள். அடிப்பகுதி பருத்து அடர்ந்த கிளைகளுடன் காட்சியளித்தன. கரடுமுரடான மண்சாலை முழுவதும் இலுப்பை பூக்கள் சிதறி கிடந்தன...

    வீசிய காற்றில் இலுப்பை பூ வாசனை சங்கமமாகியிருந்தது.

    காரை சீரான வேகத்தோடு செலுத்திக் கொண்டிருந்தான் நவீன்.

    காரினுள் மறைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரிலிருந்து ஜேசுதாஸின் இனிமையானக் குரல் வழிந்தது.

    ஆள் அரவமற்ற சாலை... வீடு வாசல் எதுவுமே காணப்படவில்லை.

    சாலையில் குறுக்கே அணில்பிள்ளைகளும் கீரிப்பிள்ளைகளும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தன.

    இடை இடையே மயில்களும் கூடவே மயில் குஞ்சுகளும் காரின் இரைச்சல் கேட்டு அகவியபடியே குபீர் குபீரென பறந்தன...

    மத்தியானம் ஒருமணி...

    சூரியன் எங்கு இருக்கிறான் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அங்கே நிழலாகவே காட்சியளித்தது.

    சாலையில் இருபக்கமும் நூறடி இடைவெளியில் உயரமான செங்கல் தூண்கள் காரைப் பெயர்ந்து காட்சியளித்தன. தூணின் உச்சியில் துருப்பிடித்த பச்சைக் கழும்பு படிந்த வெண்கல மணிகள். நாக்கு உடைந்த நிலையில் பரிதாபமாய் தொங்கிக் கொண்டிருந்தன.

    ராசாக்கள் காலத்திலும் ஜமீன்தார்கள் காலத்தில் முக்கியமான தகவல்களை தெரிவிக்க பயன்படுத்தப்பட்ட வெண்கலமணிகள் ஓயாமல் ஒலித்து ஒலித்து தற்காலத்தில் நிரந்தரமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தன.

    எந்த பிடிமானமும் இல்லாத செங்கல் தூண்கள்.

    மேலே ஏறுகிறபோது பாதியிலேயே உடைந்து விழுந்துவிடாமல் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும் என்பதாலேயோ என்னமோ... காலங்கள் கடந்தும்கூட அந்த வெண்கலமணிகள் களவாடப்படாமல்... தொங்கிக் கொண்டிருந்தது ஆச்சரியத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நவீன் காரின் வேகத்தை சற்றே குறைத்து... இடது கையினால்... டிரைவிங் சீட்டிற்கு பக்கமாய் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து... கடகடவென தொண்டைக்குள் தண்ணீரை இறக்கினான்.

    சில்லென்ற தண்ணீர் வயிற்றை நிறைத்தது.

    தண்ணீரைக் குடித்ததும் பாட்டிலின் மூடியைமூடி சீட்டிற்கு கீழே உருட்டிவிட்டான்.

    மறுபடியும் ஸ்டியரிங்கைப் பற்றி காரின் வேகத்தைக் கூட்டினான்.

    ‘கொடுவாள்புரம் அரண்மனை’ பத்து கிலோமீட்டர் என்றொரு மைல்கள் கண்ணில் அகப்பட்டது.

    ‘இன்னும் பத்துகிலோமீட்டர் போகணுமா?’

    ‘இதே வேகத்துல போனா எப்படியும் இருபத்தி அஞ்சு நிமிஷத்துல போய் சேர்ந்துடலாம்.’

    சற்றே கீழே சாய்ந்து எழுத்துக்கள் உதிர்ந்துப் போயிருந்த மைல் கல்லை கடந்து நவீனின் கார் ஓடியது.

    நவீன் இருபத்தியெட்டு வயது இளைஞன்.

    தொழிலதிபர் செங்குட்டுவனின் ஒரே மகன்.

    கிரைனைட் பிசினஸில் கொடிக்கட்டிப் பறப்பவர் செங்குட்டுவான்.

    ரெஸ்டாரண்ட்...

    டிரான்ஸ்போர்ட்...

    ஜூவல்லரி...

    ஜவுளிகடை... என எல்லா ஊரிலும் அவருக்கு சொந்தமாய் நிறுவனங்கள் இயங்குகிறது.

    பணம் பலவழிகளிலும் கொட்டோ கொட்டென கொட்டுகிறது.

    ஆனாலும் செங்குட்டுவன் ஒருநாள் கூட வீட்டில் இருக்கமாட்டார்.

    பிசினஸ் பிசினஸ் என ஓடிக் கொண்டேயிருப்பார்.

    பணம் பணம்... என கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும் விமானத்தில் பறந்துக் கொண்டேயிருப்பார்.

    நவீன் நேர் எதிர்.

    துளியும் பணத்தாசையில்லாதவன்.

    நவீனை இன்ஜினியருக்கோ, டாக்டருக்கோ படிக்க வைக்க ஆசைப்பட்டார் செங்குட்டுவன்.

    அவருடைய ஆசை நிராசையானதுதான் மிச்சம்.

    நவீனுக்கு ஓவியக்கலையில் தீராத மோகம்.

    பழங்கால பொருட்கள், அரண்மனைகள், ஜமீன்மாளிகைகள் இதில் எல்லாம் ஆர்வம் அதிகம்.

    எம்.ஏ. ஹிஸ்டரி படித்திருந்தான்.

    நவீன் வரைகிற உயிரோட்டமான ஓவியங்களை பாராட்டாதவர்களே கிடையாது.

    தான் வரைகிற அபூர்வமான ஓவியங்களை இந்த உலகமே அதிசயமாய் பார்க்க வேண்டும் என்பது நவீனின் விருப்பம்.

    பழங்கால சிற்பங்கள்.

    சிதிலமடைந்த கோவில்கள்.

    இடிந்த நிலையில் இருக்கும் அரண்மனைகள்.

    இவைகளைத் தேடிப்போய்... நாள் கணக்கில் அங்கேயே தங்கியிருந்து அணுஅணுவாய் ரசித்து... தத்ரூபமான ஓவியங்களை உருவாக்குவதுதான் நவீனின் பொழுதுபோக்கு.

    தான் இதுவரைக்கும் வரைந்திருக்கும் ஓவியங்களையும், இனிமேல் வரையப்போகும் ஓவியங்களையும் சேர்த்து பெரிய அளவில் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்த வேண்டும் என்பதுதான் நவீனின் கனவு.

    தோளுக்குமேல் வளர்ந்த மகனைத் தோழனாய் பாவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத்தான் அவமரியாதை. இதை நன்கு புரிந்துகொண்டிருந்தார் செங்குட்டுவன்.

    தன்வழிக்கு நவீன் வரமாட்டான் என்பதை உணர்ந்ததன் காரணமாக அவன் வழியிலேயே விட்டுவிட்டார்.

    எம்புள்ளை சாதிக்கணும்... எதாவதொரு துறையில் சாதிக்கணும்... உனக்கு பிடிச்ச ஓவியத் துறையிலேயே எதையாவது சாதிச்சு காட்டு நவீன்...

    உற்சாகப்படுத்தினார்.

    நிச்சயம் சாதிப்பேன் டாடி...

    செங்குட்டுவனின் உற்சாகம் நவீனை இன்னும் அதிக ஆர்வத்தோடு செயல்பட வைத்தது. அதுமட்டுமில்லாமல், நவீன் காதலித்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் தலையாட்டியிருந்தார் செங்குட்டுவன்.

    Enjoying the preview?
    Page 1 of 1