Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedivarum Vibareetham
Thedivarum Vibareetham
Thedivarum Vibareetham
Ebook98 pages1 hour

Thedivarum Vibareetham

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466725
Thedivarum Vibareetham

Read more from Jdr

Related to Thedivarum Vibareetham

Related ebooks

Related categories

Reviews for Thedivarum Vibareetham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedivarum Vibareetham - JDR

    1

    "ம்ப்ச்ச்..."

    அனுஜாவின் கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றைப் பதித்தான் அரவிந்த்.

    ம்ஹம்... குத்துது... என்று சிணுங்கியவாறு கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

    எனக்கு? அரவிந்த் கெஞ்சலாகக் கேட்க, அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்து, அவன் முகத்தைத் தன்னருகே இழுத்து, அவன் கன்னத்தில் தாடி இல்லாத பகுதியை உதடுகளால் தேடி வலது கண்ணுக்குக் கீழே ஒரு ‘இச்’ வைத்தாள் அனுஜா.

    அப்பாவும் பொண்ணும் கொஞ்சிக்கிட்டது போதும். இதோ இருக்கிற மெட்ராஸ்... போயிட்டு ரெண்டு நாளுல திரும்பப் போறீங்க... அதுக்கு இவ்ளோ பெரிய பிரியாவிடையா? சரிசரி... கிளம்புங்க... ரயிலுக்கு நேரமாச்சு... என்றபடி வந்தாள் அகல்யா.

    ஆமா... ஆமா... ரயிலுக்கு நேரமாச்சு... என்று அபினயித்தாள் அனுஜா.

    என் அனுஜா கண்ணுக்கு கிஸ் குடுத்தாச்சு... அகல்யா கண்ணுக்கு? என்றபடி அரவிந்த் அகல்யாவைப் பார்த்து ரகசியமாய் கண்ணடிக்க, அவள் முறைத்தாள் போலியாக.

    அதெல்லாம் நான் குடுத்துக்கறேன்... நீங்க போங்க டாடி... ரயிலுக்கு நேரமாச்சு... என்று தலையசைத்துச் சொல்லி, தன் இடதுகையைத் திருப்பி இல்லாத வாட்சில் நேரம் பார்ப்பது போல நடித்தாள் அனுஜா.

    அவர்கள் சிரித்தார்கள்.

    வேலைக்காரியை ரெண்டு நாளும் ராத்திரிக்கு படுக்கச் சொல்லிடு... நைட் எட்டரை ஒன்பதுக்கெல்லாம் பிளாக்கியை அவுத்து விட்டுடு...

    எனக்கென்னங்க பயம்?

    பக்கத்துல ரெண்டு வீட்டுலயும் ஆள் இல்ல... எதிர்வீடு கீழ்போர்ஷனும் காலியா இருக்கு... வேற வீடுகள் எதுவும் பக்கத்துல இல்லையே...

    எதிர்வீடு மாடி போர்ஷன்லதான் என் பிரண்ட் அமலா இருக்காளே...

    அவளுக்கும் அவவீட்டுக்காரருக்கும் அடிச்சுக்கிறதுக்கும், சண்டை போடுறதுக்குமே நேரம் போதாது... பக்கத்து வீட்டுல என்ன நடக்குது அப்படீன்னா கவனிக்கப் போறாங்க...? நம்ம ஏரியா தனிமையா இருக்கே... பக்கத்துல வீடுகளும் இல்லையேனுதான் யோசனையாய் இருக்கு...

    ஒண்ணும் கவலைப்படாம போயிட்டுவாங்க அத்தான். நான்தான் தைரியமா இருக்கேனே...

    ரெண்டு நைட் நான் உன்கூட இருக்கமாட்டேன். ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவி செய்யக்கூட இங்கே யாரும் பக்கத்துல இல்லையே அகல்? என்றான் அரவிந்த் கவலையாக.

    அதுதான் போன் இருக்குதே... எதும் அவசரம்னா அக்கா வீட்டுக்கு போன் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாம போயிட்டுவாங்க...

    காலைல பேப்பரைப் பிரிச்சா வீடு புகுந்து திருட்டு, ரோட்டில் செயின் பறிப்பு, பூட்டி இருந்த வீடு உடைப்பு, முகமூடித் திருடர்கள் கொள்ளைனு பக்கத்துக்குப் பக்கம் இந்தச் செய்திதான் போட்டி இருக்கு... நம்ம வீடு இருக்கிறது அவுட்டர் ஏரியாவாச்சுதா? அதுதான் எனக்கு உன்னைத் தனியா விட்டுட்டுப் போக பயமா இருக்கு...

    மணி இப்பவே எட்டு அஞ்சு ஆயிட்டுது... நீங்க புறப்படுங்க... என்றாள் அகல்யா.

    அரவிந்த் சூட்கேஸை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.

    அகல்...

    என்னங்க?

    நீ வேணுனா உங்க அக்கா வீட்டுக்குப் போயிடேன்...

    அதெல்லாம் வேண்டாம்... அவ என்ன தனிக் குடித்தனமா இருக்கிறா? மாமா, மாமியாரோட இருக்கிறா... அங்கே எல்லாம் நான் போய் ராத்திரி தங்கினா சிரமமா நினைப்பாங்க... நானே தைரியமா இருக்கிறேன்... நீங்க ஏன் பயப்படுறீங்க?

    சரி... என்றான் அரைமனதாக.

    அகல்... நைட்டுல எமர்ஜென்ஸி கேஸ்... சீரியஸ் கேஸ்னு எவனும் வந்து கதவைத் தட்டினா திறக்காதே... நைட்டுல நான் இல்லாத சமயம் கேஸ் எல்லாம் பார்க்க வேண்டாம்... நாம டாக்டர், ஒரு உயிரைக் காப்பாத்த வேண்டியது நம்ம தார்மீகக் கடமைனு எல்லாம் ஏதாவது தத்துவம் சொல்லிட்டு, நைட்ல கேஸ் அட்டன் பண்ணிடாதே... அட்லீஸ்ட் இந்த ரெண்டு நாளைக்காவது அதை எல்லாம் தவிர்த்திடு. காலம் ரொம்ப கெட்டுக் கிடக்குது... வர்றவன் நல்லவனா கெட்டவனானு நமக்குத் தெரியாது...

    சரிங்க...

    அரவிந்த் புறப்பட்டான். அனுஜா கவனிக்காத நேரம் பார்த்து அவள் கைபிடித்து அழுத்தினான்...

    போயிட்றேன்... அனுக் கண்ணூ... டாடி போயிட்டு வரேன்... டாட்டா...

    வாசல் தாண்டி போர்ட்டிக்கோவுக்கு வந்தான்.

    நான் ஸ்கூட்டர்லயே போயிடுறேன்... ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்ல போட்டுட்டு ரயில் ஏறிட்டா, திரும்பி வர்றப்ப எடுத்திட்டு வந்திடலாம்...

    ஆமா... அதுதான் வசதி... நீங்க கவலைப்படாம போய் நல்லபடியா கான்பரன்ஸை முடிச்சிட்டு வாங்க... பெஸ்ட் ஆஃப்லக்... என்றாள் அகல்யா.

    ஒரு வழியாய் அரவிந்த் கிளம்பிப் போனான்.

    வாசல் வரை வந்து நின்று அவனை வழியனுப்பி வைத்தாள் அகல்யா. அவனை அனுப்பிவிட்டு திரும்பினாள். இரவு எட்டு பதினைந்திற்கே அந்த ஏரியா முழுவதும் இருளடித்துப் போய் இருந்தது.

    கணவனிடம் தைரியமாகப் பேசி அவனை அனுப்பி வைத்து விட்டாள் என்றாலும் அந்தச் சூழ்நிலை அவளுக்கு அச்சம் தந்து கொண்டுதான் இருந்தது.

    அரவிந்தின் ஸ்கூட்டர் கண்ணிலிருந்து மறைந்தது. அதன் பின் விளக்கின் சிவப்பு வெளிச்சம் மட்டும் புள்ளியாய்த் தெரிய அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். சில வினாடிகளில் அதுவும் மறைந்து போயிற்று.

    அகல்யா வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

    வரவேற்பறை டீப்பாயில் சிதறிக்கிடந்த பத்திரிகைகளை எடுத்து அடுக்கி வைத்தாள்.

    சட்டென நினைவு வந்தவளாக அனுஜாவைக் கூப்பிட்டாள்.

    அனு... அனுக்கண்ணு...

    நிசப்தம்.

    Enjoying the preview?
    Page 1 of 1