Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indhuja Iru Kadhalippom
Indhuja Iru Kadhalippom
Indhuja Iru Kadhalippom
Ebook91 pages52 minutes

Indhuja Iru Kadhalippom

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466640
Indhuja Iru Kadhalippom

Read more from Jdr

Related to Indhuja Iru Kadhalippom

Related ebooks

Related categories

Reviews for Indhuja Iru Kadhalippom

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indhuja Iru Kadhalippom - JDR

    22

    1

    அந்த எட்டாம் நம்பர் வீடு அந்த ஏரியாவில் மிகவும் பிரசித்தம். பெயிண்ட் விளம்பரத்திற்காக டி.வி.யில் காட்டுவார்களே, அதைப்போல கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அழகாய் ரம்மியமாய் இருந்தது.

    கண்ணை உறுத்தாத க்ரே கலர் சுவர்கள், வீட்டின் முன்பாக புல்வெளி. பூச்செடிகள். பக்கவாட்டில் தென்னை என்று பசுமையாய் அது காட்சியளிக்கும்.

    தொழிலதிபர் சூர்யகாந்தனின் வீடு அது. இந்த வீட்டில்தான் இந்த நாவல் ஆரம்பமாகிறது.

    வேலய்யா...

    கம்பீர குரல் சூர்யகாந்தனுடையது. அந்த அழைப்புக்கு ஓடோடி வந்தான் வேலய்யா. சுத்தமான வெள்ளை சீருடையில் இருந்தான்.

    சூர்யகாந்தனின் கார் டிரைவர் அவன்.

    ஐயா...

    கார் ரெடியா இருக்குதா?

    ரெடிங்க ஐயா. பெட்ரோல் போட்டாச்சு. ஏர் செக் பண்ணியாச்சு. ஸ்டெப்னி செக் பண்ணியாச்சு. கார் சர்வீஸ் போயிட்டு நேத்துதான் வந்திச்சு ஐயா.

    சரி, நான் அவசரமா பிசினஸ் விஷயமா மெட்ராஸ் போக வேண்டியதிருக்கு. நான் மெட்ராஸ் வரை கார்ல பயணம் செய்ய முடியாது, அதனால நான் டிரைன்ல வர்றேன். ஆனா எனக்கு மெட்ராஸ்ல கார் அவசியத் தேவை. அதனால நீ காரை எடுத்துகிட்டு மெட்ராஸ் வந்திடு.

    சரிங்க ஐயா.

    நான் நெல்லை எக்ஸ்பிரஸ்ல வர்றேன். அது காலைல ஏழே முக்காலுக்கெல்லாம் எக்மோர் ஸ்டேஷனுக்கு வந்திடும். நீ அதுக்குள்ளே காரை அங்கே கொண்டு வந்திடணும்.

    சரிங்க ஐயா.

    இந்தாப்பா, இதுல முந்நூத்தம்பது ரூபா இருக்கு. உன் வீட்டுக்காரிகிட்ட செலவுக்குக் கொடுத்திட்டு வா. நாம திரும்பிவர அஞ்சாறு நாள் ஆகலாம். சூர்யகாந்தன் பணம் கொடுக்க, வேலய்யா நெகிழ்ந்து போனான்.

    இது அவருக்கு வழக்கம்தான். தன்னிடம் வேலை செய்பவர்களின் கஷ்டத்தை உணர்ந்து உதவி செய்வது அவர் வழக்கம். இளகிய மனது அவருக்கு.

    ரொம்ப நன்றிங்க ஐயா என்று பணிவாக வாங்கிக் கொண்டான்.

    சரி, நீ வீட்டுக்குப் போய் சொல்லிட்டு சாயங்காலம் நாலு மணிக்கெல்லாம் வந்திடு. எனக்கு அஞ்சு மணிக்கு மெட்ராஸ் டிரெய்ன். என்னை ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு நீ மெட்ராஸ்க்குப் புறப்படலாம்.

    ஆகட்டுங்க ஐயா... என்ற வேலய்யா, வீட்டுக்குப் புறப்பட்டான்.

    சூர்யகாந்தனின் வீட்டிலிருந்து இருபது நிமிட நடைம் தூரத்தில் அவன் வீடு இருந்தது.

    வேலய்யா உற்சாகமாய் நடந்தான். உற்சாகத்திற்கான காரணம் கையில் இருந்த ரூ.350.

    வீட்டுக்கு வந்த வேலய்யாவை ஆர்வமாய்ப் பார்த்தாள் அவன் மனைவி கனகா.

    என்னங்க இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? பையன் ஸ்கூலுக்குப் போயிட்டான், பெண்டாட்டி தனியா இருப்பான்னு ஆசையா வந்தீங்களாக்கும்?

    அய... கையை எடு கனகா. இந்தா இந்த ரூபாயை வச்சுக்க. நான் இன்னிக்கு மெட்ராஸ் போறேன்.

    மெட்ராஸ்சுக்கா?

    ஆமா புள்ள...

    என்ன இப்படி திடீர்னு சொல்றீங்க?

    முதலாளி எதோ அவசர விஷயமா மெட்ராஸ் போகணுமாம். திடீர்னு புறப்பட்டுட்டாரு. அவருக்கு அங்கே கார் தேவைப்படுதாம். அதனால் நான் கார் எடுத்துகிட்டு மெட்ராஸ் போறேன்.

    ஐயோ, மெட்ராஸ்ல எல்லா பொருளும் மலிவா கிடைக்கும்னு சொல்லுவாங்களே, இப்ப பார்த்து நம்ம கையில பணம் இல்லையே... புலம்பினாள் கனகா.

    அவசரமாகத் தன் கணவன் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தாள்.

    முந்நூற்றைம்பது இருந்தது.

    ஐம்பது ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி முந்நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தாள்.

    இந்தாங்க, இத வச்சுக்குங்க. எனக்கு நல்லதா ஒரு புடவையும், பையனுக்கு நல்லதா ஒரு பேன்ட் சர்ட்டும் எடுத்துக்குங்க. உங்களுக்குக் கைலியும் கை வச்ச பனியனும் வாங்கிக்குங்க.

    ரூபாயைப் பூராவும் என்கிட்ட தந்திட்டா வீட்டு செலவுக்கு நீ என்ன புள்ள செய்வே?

    ஆங்... அத நான் கவனிச்சுக்கிறேங்க. நீங்க கவலைப்படாதீங்க.

    நான் வர்றதுக்கு ஒருவாரம்கிட்ட ஆகும்மா.

    பரவாயில்ல. நான் சமாளிச்சுக்கிறேன். மெட்ராஸ் போறப்ப துணிமணி வாங்கினாத்தான் நாம வாங்குனபடி. நீங்க வாங்கிட்டு வாங்க.

    இல்ல புள்ள. பணம் இல்லாட்டி நீ ரொம்ப கஷ்டப் படுவ. நீ இத வச்சுக்கோ. நான் வேற வழியில பையனுக்கும் உனக்கும் டிரஸ் வாங்கிட்டு வர்றேன்.

    வேற வழியிலயா? அப்படீன்னா...

    பதில் சொல்லாமல் மமதையான ஒரு சிரிப்பு சிரித்தான் வேலய்யா.

    அட, சொல்லுங்களேன். வேற வழியிலனா?

    அதெல்லாம் தொழில் ரகசியம் புள்ள. உனக்கெல்லாம் சொல்லித் தர்றதுக்கில்ல.

    அய்ய... ம்ச்... சொல்லுங்கன்னா... அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு கனகா கொஞ்ச, வேலய்யா இளகினான்.

    ம்ஹ்ம்... சொல்லுங்களேன். அது என்ன ரகசியம்?

    "வந்து முதலாளியை ரயில்

    Enjoying the preview?
    Page 1 of 1