Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalavukku Kai Koduppom
Kalavukku Kai Koduppom
Kalavukku Kai Koduppom
Ebook151 pages53 minutes

Kalavukku Kai Koduppom

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Kalavukku Kai Koduppom

Read more from Jdr

Related to Kalavukku Kai Koduppom

Related ebooks

Related categories

Reviews for Kalavukku Kai Koduppom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalavukku Kai Koduppom - JDR

    22

    1

    தூற்றுத் தொண்ணூற்றேழு துல்லிய வினாடிகளுக்கு முன் பூமிக்குக் காலை வணக்கம் சொன்ன சூரியனாகப்பட்டவர் மைக்ரோ மில்லிமீட்டர், மைக்ரோ மில்லிமீட்டராகத் தனது ஊர்தலை வானத்தில் செய்து கொண்டிருந்த காலை.

    எழிலின் குவியலாக இருந்தது அந்தப் பஸ் ஸ்டாப், விதவிதமான வண்ணங்கள் சாகசம் புரிகின்ற உடைகளை உடுத்திய எழில்மிகு பெண்கள்; அவர்களை ரசித்தபடி கட்டிளங் காளையர்.

    சுடிதார், தாவணி, மிடி அணிந்த மாணவிகள் நோட்டுகளையும் டிபன் டப்பாவையும் மார்பில் அழுத்திக் கொண்டிருந்தார்கள்.

    ராதா, பாருடி அவனை... தினம் நான் வர்றப்ப ஃபாலோ பண்ணி பின்னாடியே வந்து ஸ்டைல் பண்றேன்னு குரங்குச் சேட்டை பண்ணுதுடி. மூஞ்சைப் பாரு ஜப்பான்காரன் மூக்காட்டம்...

    ஜீன்ஸ், டைட், பேக்கிஸ் அணிந்த மாணவர்கள் மகா ஸ்டைலாக ஆளுக்குத் தலா இரு நோட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

    பாருடா மாம்ஸ், அடுத்த பிறவியில மனுசனாப் பொறக்கக்கூடாதுறா. பேசாம ஒரு குயர் நோட்புக்கா பொறந்திடணும்... என் ஆளு வச்சிருக்கிற நோட்டைப் பாரு மாம்ஸ்... ஐயோ, உரசிட்டே இருக்குதே... கைப்பையும். டிபன் கேரியரை உள்ளடக்கிய கூடையுமாய் நிற்கும் ஆபீஸ் அம்மணிகள். அவர்களில் பெரும்பான்மை திருமணத்திற்குக் காத்திருக்கும் இளசுகள் என்பது பின் குறிப்பு.

    மிஸஸ் மீனாட்சி, எங்க மானேஜர், ஸ்டெனோ விவகாரம் சிந்துபாத் கதைமாதிரி நீண்டுண்டே போகுது. நேத்து மானேஜர் ரூமுக்குள்ளே லெட்டர் நோட்ஸ் எடுக்கப்போன ஸ்டெனோ ஒண்ணரைமணி நேரம் வெளில வரவே இல்லை... ஆபீஸ் முழுக்க ஒரே கசமுசா...

    ஆறு கிலோ எழுதூற்றைம்பது கிராம் மொத்த எடை கொண்ட நோட்டு புத்தகங்களை தோள் பையில் வைத்துச் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் யூனிபார்ம் பொடிசுகள்.

    வனஜா மிஸ் ஷீலுவை நேத்துச் செமடோஸ் விட்டுத்துடீ... பாவம் ஷீலு ரெண்டு பீரியட் அழுதிட்டிருந்தா...

    நாம் மேற்குறித்த பிரிவினர் தவிர, இன்னும் வகை வகையான அலுவலர்கள், சொந்த வேலையாய்ப் பயணிக்க இருப்பவர்கள் என்று பலர் அங்கு இருந்தார்கள்.

    இவர்கள் கூடவே சோமுவும், மாதவனும். சோமு...மாதவன்...?

    இந்த இரு ஆசாமிகள் பற்றியும் நீங்கள் அறிந்து கொண்டே ஆகவேண்டும். இருவருமே சகோதரர்கள் போல-வெளித்தோற்றத்தில் இருந்தார்கள். ஆகவே, ஓர் ஆளை வர்ணிப்போம். அடுத்த ஆசாமியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

    யாரை வர்ணிக்கலாம்?

    சோமுவை...? மாதவனை? சோமுவை வர்ணித்து விடலாமா? ஓகே...

    வார்ப்பு இரும்பில் செய்யப்பட்ட பிச்சுவா போல இறுகிய உடம்பு. பாரட்டா ரிவால்வர் நிறம். நிமிர்ந்து நின்றால் இரண்டு ரைபிள்களை ஒன்றன் மேல் ஒன்றாய் நிறுத்தி, அதில் முப்பது சென்டி மீட்டரைத் தள்ளுபடி செய்தால் கிடைக்கிற நிகர உயரம். பருவ இளமையில் பருக்கள் பதித்துவிட்டுக் சென்ற நினைவுப் பள்ளங்கள் காரணமாகக் கையெறிகுண்டின் மேல்பகுதி போல சொரசொரப்பாகி விட்ட கன்னங்கள். ‘டுமீல்’ செய்த துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் புகைபோலச் சுருள் சுருளாய்த் தலைமுடி. டபிள் பாரல் துப்பாக்கிபோல மூக்கு. அதன்கீழ் கத்தி கைப்பிடி இரண்டை எதிர் எதிராக ஒட்டவைத்தது போல மீசை, இத்தகைய உடலமைப்பு கொண்ட சோமுவாகப்பட்டவன், ஒரு டெர்லின் சட்டையும், பாலியெஸ்டர் பாண்ட்டும் அணிந்திருந்தான்.

    சோமுவின் உயரத்தில் பத்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி கொடுத்தால் அது மாதவனின் உயரம். ஏற்கெனவே கூறியதுபோல, சோமுவின் தம்பி போல இருந்தான் மாதவன்.

    வர்ணனையைப் படித்தே இவர்கள் வில்லன் டைப் ஆசாமிகள் என்று ஊகம் செய்திருப்பீர்களே...

    அதே!

    இருவருமே ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதது போல பாவலா காட்டிக் கொண்டிருந்தார்கள்.

    அந்தப் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த எல்லாருமே ஏக்கம் நிறைந்த ஒரு பார்வையைப் பஸ்ஸை எதிர்பார்த்துச் சாலையின் எல்லை நோக்கிப் பதித்திருந்தார்கள்.

    சோமுவும், மாதவனும் நின்றிருப்பவர்களைப் பார்வையால் தடவல் செய்தார்கள்.

    தொலைவில் பஸ் வரும் சத்தமும், தொடர்ந்து பஸ்சும் வந்தது. கூட்டம் அலர்ட் ஆனது. நெருக்கிவந்த அந்தப் பஸ் ஐந்து அடல்ட்ஸ் ஒன்லி. (5-A).

    பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் பஸ்ஸின் வாசலைக் குறிவைத்து நகர்ந்தார்கள். மற்றவர்களை ஏமாற்றி நழுவி பஸ் வாசலை அணுகும் தந்திரங்களைக் கையாண்டார்கள்.

    அப்போதுதான் மாதவன் அந்தச் சமூகப்பணியைத் தொடகினான்.

    எல்லாரும் பர்ஸ், பணத்தை ஜாக்கிரதையா வச்சுக்குங்க... எல்லாம் பத்திரமா இருக்கானு பார்த்துக்குங்க... பிக்பாக்கெட் இங்க அதிகமாயிட்டுது... பணம் ஜாக்கிரதை... ஜாக்கிரதே...

    பஸ் நோக்கி நநர்ந்தவர்கள் அணிச்சையாய்ப் பணம் வைத்திருந்த தங்கள் பைகளைத் தொட்டுப்பார்த்துக் கொண்டார்கள். அதை மகா கவனமாய்ப் பார்த்துக் கணக்கிட்டான் சோமு. மனதுக்குள் ‘டிக்’ அடித்தான்.

    பஸ் வந்து நிற்க, எல்லாரும் கூட்டமாய் வாசலை மொய்த்தார்கள். சோமுவும், மாதவனும் டிட்டோ.

    எல்லாரும் பஸ்ஸினுள் புகுந்து பிதுங்க, இவர்கள் இருவரும் மனித மூதாதையர்போல வாசலில் தொத்திக் கொண்டார்கள்.

    பெருமாள்புரம் - ஒண்ணு... என்று சோமுவும் "ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் ஒரு டிக்கெட் என்று மாதவனும் ஆளுக்கொரு டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள்.

    மாதவன் மீண்டும் வாயைத் திறந்தான்.

    அண்ணே... கொஞ்சம் உள்ளே நகர்ந்து போங்கண்ணே... சார் கட்டம் போட்ட சட்டை சார், கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க சார்... உள்ளே இடம் இருக்குதுல்ல. போங்க சார்... நாங்க இங்க வாசல்ல தொங்கிட்டு வர்றோம் பாருங்க...

    சத்தம் கொடுத்தான். தொடர்ந்து சோமுவும் வாய் திறந்தான்.

    சார் உள்ளார தள்ளிப்போங்க சார்... நடுவுலதான் நிறைய இடம் இருக்குதே. போங்க சார், இல்லைனா கொஞ்சம் இடமாவது விடுங்க. நான் உள்ளே போயிடுறேன்

    சொல்லிவிட்டுச் செயலிலும் இறங்கினான்.

    கூட்டத்தில் இடித்துக்கொண்டு புகுந்தான்; புகுந்து உள்ளே சென்றான். செல்லும்போதே பிக்பாக்கெட்டிற்கு பயந்து பையைத் தொட்டுப்பார்த்த பணக்காரர்களைக் கவனித்து நெருங்கினான்.

    அவர்கள் தொட்டுப்பார்த்ததை வைத்துப் பணம் இருக்கும் இடத்தை எளிதாகப் பார்த்து வைத்திருந்த சோமு கூட்டத்தினுள் புகுந்து மூன்வாசல் வழியே வந்து, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது

    அவனது இடுப்பின் மறைவான பகுதிகளில் மொத்தம் ஆறு பர்ஸ்கள். மாதவனும் இறங்கிக் கொண்டான்.

    தூத்துக்குடி செல்லும் பஸ்கள் நிற்குமிடத்திற்கு வந்து, அதற்குப் பின் இருக்கும் கட்டணக் கழிப்பறைக்குள் புகுந்தான் சோமு.

    கதவைப் பூட்டிக்கொண்டு பர்ஸினுள் சிறைப்பட்டிருந்த பணத்திற்கு விடுதலை வாங்கினான்.

    சோமுவால் விடுதலை வழங்கட்ட மொத்த பணம் ரூ. 134.90.

    பர்ஸ்களை பேப்பரில் சுற்றி ஒரு பார்சலாகக் கட்டிக் கொண்டு பணத்தை பாண்ட் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான்.

    வெளியில் மாதவன் அவனுக்காகக் காத்திருந்தான்.

    வசூல் எவ்வளவு சோமு?

    நூத்து முப்பத்து நாலு ரூபா தொண்ணூறு பைசா...

    ச்சே... ரொம்ப குறைவு... என்றான் மாதவன் சோர்வாக.

    இருவரும் நடந்தார்கள். சாக்கடைக்குள் பர்ஸ் பார்லைத் தூக்கி எறிந்தான் சோமு. இருவரும் நடந்து நாகர்கோவில் பஸ்கள் நிற்கின்ற இடத்திற்கு வந்தார்கள்.

    "பசிக்குது சோமு சாப்பிடலாமா...?

    வா...

    நடந்து ஜன்னத் ஹோட்டலுக்கு வந்தார்கள். ஆப்பமும், ஆட்டுக்கால் பாயாவும் ஆர்டர் செய்தார்கள்.

    சோமு யோசனையாய் உட்கார்ந்திருந்தான், என்ன சோமு யோசனையா இருக்கிறே?

    மாதூ... நம்ம நிலமையை யோசிச்சுப்பார்த்தேன்... தினம் நூறு ரூபாய்க்கும் நூத்தம்பது ரூபாய்க்கும் நாம கஷ்டப்பட வேண்டியதிருக்கு... ஒரு தடவை தொழில் செய்த ரூட்ல திரும்ப தொழிலுக்குப் போக ஒருவாரம், பத்து நாள் இடைவெளி விடவேண்டியதிருக்கு... நம்ம பொழைப்பைப் பார்த்தியா...?

    ஆமா சோமு... ஒவ்வொருத்தன் பேங்க், வீடுனு போய் கைவச்சா லட்சக்கணக்கில கொண்டு வந்திடுறான். அப்புறம் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடுறான். நம்மளப்பாரு...

    மாது! நாமும் அத மாதிரி ஒரு கொள்ளையாவது நடத்... பேரர் ஆப்பமும், பாயாவும் கொண்டுவர சோமுவின் பேச்சில் தடங்கல். பேரர் தான் ட்ரேயில் கொண்டு வந்தவற்றை சோமு-மாதவன் முன் மேசையில் பரப்பினான்.

    வேற எதும் வேணுமா சார்...?

    வேணும்னா சாப்பிட்டுட்டுச் சொல்றோம்... பேரர் நகர்ந்ததும் சோமு தொடர்ந்தான்,

    "ஒண்ணாவது நாம் நடத்தணும் மாது. அதுலதான் த்ரில் இருக்கு... பணமும் கிடைக்குது... வசமா ஒருகொள்ளை சிக்கினா போதும்...

    Enjoying the preview?
    Page 1 of 1