Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mupparimanam
Mupparimanam
Mupparimanam
Ebook250 pages1 hour

Mupparimanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பத்மினி பட்டாபிராமன் எழுதி வெளியிட்டிருக்கும் இந்த சிறுகதைகள் தொகுதியில், மொத்தம் 28 சிறுகதைகள் உள்ளன

கலைமகளில் வெளியாகி, பெரும் பாராட்டுப் பெற்றது முப்பரிமாணம் சிறுகதை,மனைவியை ஏமாற்ற நினைக்கும் கணவர், அவரை சந்தேகிக்கும் மனைவி, நடுவில் புகும் திருடன், யாரை யார் ஏமாற்றினார்கள்? அதுவே இக்கதை.

ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை “பிற்பகல்” அதே பத்திரிகையில் வெளியான மற்ற கதைகள், “புலி தின்ற மிச்சம்”, “எதிர்காற்று.”

குமுதம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது “மறுமுகம்” சிறுகதை.

விக்கிரமன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய தமிழரசி பத்திரிகையில் அமரர் எம்.ஜி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு வென்ற கதை “களைகள்”

ஒரு கிராமத்து ஏழை அர்ச்சகர் வீட்டில் டீவி சீரியலுக்கான ஷூட்டிங் நடக்கிறது. அப்போது என்னா ஆகிறது? சுவையான “அன்னதானம்” சற்றே நீண்ட கதை.

“சின்னப் பெண்ணும் செல்ஃபோனும்”, “நீலச் சட்டைக்காரன்”, டிசைனர், சின்ன மனசு கதைகள் முறையே கல்கி, லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர்களில் வெளியானவை.

சிரிக்கவும் சிந்திக்கவும் கவர் கவராய் கனவுகள் கதை.

இன்னும், சாவி, அமுதசுரபி, மங்கை, ராஜம்,வளையோசை பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580129206805
Mupparimanam

Read more from Padmini Pattabiraman

Related to Mupparimanam

Related ebooks

Reviews for Mupparimanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mupparimanam - Padmini Pattabiraman

    https://www.pustaka.co.in

    முப்பரிமாணம்

    Mupparimanam

    Author:

    பத்மினி பட்டாபிராமன்

    Padmini Pattabiraman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/padmini-pattabiraman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    எனது 22 வருட நாடகம், சினிமா அனுபவத்தில் முதன் முறையாக சென்ற ஆண்டு ஒரு கதை இலாகாவை ஏற்படுத்தினேன். அந்த இலாகாவில் ஒரே பெண்மணி திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள்தான்.

    பெண்களிடம் சாதாரணமாக ஒரு மென்மை இருக்கும் அந்த மென்மை இவர்களிடம் இருந்தாலும், கதை என்று வரும்போது ஒரு முரட்டுத்தனமான பிடிவாதம் அவர்களிடம் இருந்தது. சினிமாவில் என்னைப் பொறுத்தவரை Compromises, Compromises, Compromises.

    ஆனால் இவர்கள் தன்னுடைய எண்ணத்தில் கற்பனை போக்கில், சிந்தனை ஓட்டத்தில் Compromise என்ற வார்த்தையையே நெருங்க விடமாட்டார்கள். அந்தக் கொள்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது நானும் அதே அணுகுமுறையை 17 வருடங்களுக்கு முன்னமேயே கையாண்டு இருந்தால் வேறு கோணத்தில் ஜொலித்து இருப்பேனோ என்று நினைக்கத் தோன்றியது.

    எனக்கு ஒரு சந்தேகம் சினிமாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள். அதுவும் சொற்ப எண்ணிக்கையில் அதே போல் விரல்விட்டு எண்ணக்கூடிய பெண் கதாதாசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். அதுவும் சொற்ப எண்ணிக்கையில் தான். துரதிருஷ்டவசமாக அந்த அணுகுமுறை தொலக்காட்சித் தொடர்களிலும் தொடர்கிறது மணத்தை எடுத்துக் கொண்டு இலையைத் தூக்கி எறியது போல, பெண்களிடம் மூலக் கதையை வாங்கிக்கொண்டு அவர்களை ஓரம் கட்டி விடுகிறார்கள். அந்த நிலை மாறினால் பத்மினி பட்டாபிராமன் போன்றோர் பரிமளிப்பது நிச்சயம். அதற்கு இந்நூலிலுள்ள கதைகளே சாட்சி. அவர்கள் வாழ வளர வளமே பெற என் பிரார்த்தனைகள்.

    அன்புடன்

    விசு

    (மாமரத்து வீடுகள் தொகுதிக்கு திரைப்பட இயக்குனர், நடிகர், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர் அமரர் விசு அவர்கள் எழுதிய முன்னுரை )

    என்னுரை.....

    என்னுடைய ஒவ்வொரு வெற்றியையும் என் அம்மா அமரர் திருமதி. ராஜம், என் அப்பா அமரர் திரு.எம்.பி. துரைஸ்வாமி அவர்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன்.

    என் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என் கணவர் திரு.பட்டாபிராமன் அவர்களுக்கு முதல் நன்றி.

    குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள், அமுதசுரபி, கல்கி, சாவி, குங்குமம், லேடீஸ் ஸ்பெஷல், இலக்கியப்பீடம், தாய், மங்கை, ராஜம், தமிழரசி, மங்கையர் மலர், உரத்தசிந்தனை போன்ற பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளும் பெற்ற எனது சிறுகதைகள், மாமரத்து வீடுகள், புது வெளிச்சம் என்ற சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

    அவற்றோடு, மேலும் பரிசு பெற்ற பல சிறுகதைகளையும் சேர்த்து முதல் தொகுதியாக மலைச்சரிவில் ஒரு டீக்கடை என்னும் தலைப்பிலும் இரண்டாவது தொகுதியாக முப்பரிமாணம் என்னும் தலைப்பிலும் வெளியிட முனைந்துள்ளேன்.

    அமரர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்கள், திரு. எஸ். பாலசுப்பிரமணியம், திரு. திருப்பூர் கிருஷ்ணன், திருமதி. லக்ஷ்மி நடராஜன், திரு. அமிர்தம் சூர்யா, திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், திரு.ப்ரியா கல்யாணராமன், திருமதி. கிரிஜா ராகவன், திரு. உதயம் ராம் திரு.கண்ணன் விக்கிரமன், உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. நன்றிகள், ஆயிரம்

    வாழ்த்துரை வழங்கிய சான்றோருக்கும் நன்றி.

    பொருளடக்கம்

    முப்பரிமாணம்

    சின்ன மனசு

    கவர் கவராய் கனவுகள்

    டிசைனர்

    அன்னதானம்

    பாதை ஒன்றுதான்

    புலி தின்ற மிச்சம்

    பிற்பகல்

    இருவார நேரம்

    போகிற வழியில்...

    மனு

    வேலை மயக்கம்

    மிரட்சி

    மாற்று....?

    இரட்டை அழைப்பு

    புண்ணிய நிதி

    களைகள்

    நடப்புகள் நாளை மாறும்

    யாருக்கு நஷ்டம்?

    நடிகை வீட்டு மாடியில்...

    உண்மையான பொய்சாட்சி

    மறுமுகம்

    காணிக்கையான கடன்

    நல்லாசிரியனாய்..

    எதிர்காற்று

    நெருப்பின் நடுவே

    முப்பரிமாணம்

    ஒரு திங்கட்கிழமை காலையும், சுப முகூர்த்த வேளையும் சேர்ந்து அந்த நில சார்பாளர் அலுவலகத்தில் கூட்டத்தைச் சேர்த்திருந்தது. பழைய அலுவலகம்....

    இருந்தும் பல நூறு பேர் அன்று வந்து போவார்கள் என்பதால் அவன் அதைத் தேர்ந்தெடுத்திருந்தான். தேட்டை போட வந்திருப்பவன் என்று தெரியாத அளவுக்கு நல்ல தோற்றமும், கையில் ஹிண்டுவும் "இப்படி உட்காருங்க சார்'' என்று ஊழியர் ஒருவரை உபசரிக்க வைத்தது.

    முன் வராண்டாவில் இருந்த ஒரு தேசல் பெஞ்சில் உட்கார்ந்து, அருகிலிருந்த காலாடும் மேஜையில் கையை ஊன்றிக் கொண்டு ஹிண்டு படிக்கும் பாவனையில் முகம் மறைத்தான்...

    அரை மணி நேரம் குறி வைத்ததில் ஓரிருவர் கூட சரியாகச் சிக்கவில்லை .

    பாதிக்கு மேல் புரோக்கர்கள்...’நிலம் விற்க, வாங்க என்று வந்திருக்கும் வில்லங்க கவலை தோய்ந்த முகங்கள். சார்பாளர் அதிகாரி யாராவது உள்ளே வருவதும் "வணக்கம் சார்...'' என்றபடி ஒரு சிறு கூட்டம் அவரைத் தொடர்ந்து உள்ளுக்குள் நுழைவதுமாக அவ்வப்போது சிறு அமர்க்கள அரங்கேற்றங்கள். அப்போதுதான் அவர் காரிலிருந்து இறங்கி வருவதை அவன் கவனித்தான்.

    இறங்கியவரின் உடை, நாற்பதுகளின் இறுதியைத் தொடும் வயது, கதவைத் திறந்த டிரைவரின் உடை, இவற்றையெல்லாம் பார்த்த போது அவர் ஒரு ஐ.டி கம்பெனியின் ஜி.எம் அல்லது எம்டியாக இருக்கக் கூடும் என்று யூகித்தான். சுவாரஸ்யம் விட்டுப் போயிற்று. இவரெல்லாம் க்ரெடிட் கார்டு ஆசாமி... பெட்ரோலுக்கு மட்டும் பர்சில் சில நூறுகள் இருக்கலாம்...

    மேஜைக்கு அருகிலிருந்த பழைய நாற்காலியில் உட்காரச் சொன்ன ஊழியரின் உபசரிப்பை மறுத்து விட்டு, இன்றும் கணபதி வரல்லே...? என்று வாட்சைப் பார்த்தார்....

    வந்திடுவார் சார். உங்களை உட்கார வைக்கச் சொன்னார்.

    "இருக்கட்டும்... இப்படியே நிக்கிறேன்...'' என்று அவன் இருந்ததையே கவனிக்காமல் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றார்....

    பின் பையில் பர்ஸ் எதுவும் துருத்திக் கொண்டு இல்லை... அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது... அலுவலக வாசலில் குப்பை அள்ளும் இயந்திரத்தின் சத்தம் அதிகபட்சமாகக் கேட்டுக் கொண்டிருந்ததால் போனின் வாய் பொத்தி பேசினார்.... மெதுவாகத்தான் பேசினார். இருந்தாலும்... வார்த்தைகள் பின்னோக்கி அவன் காதில் உதிர்ந்தன.

    சொல்லு அம்பிகா...

    ...

    இல்லையே... நீ குளிச்சிட்டு இருந்தே... பாத்ரூமுக்கு வெளியே குரல் கொடுத்துட்டுதான் வந்தேன்... அவசரமா இன்னிக்கு மீட்டிங் போகணும்மா...

    ...

    உம்.... ஓகே... நேத்துதான் ஏ.டி.எம் லேர்ந்து எடுத்து வந்து வச்சிருக்கேன்... பிரோவுல பாரு... வச்சிரவா...

    ...

    "சரி... சரிம்மா.... வேலைக்காரி விஷயமெல்லாம் நீயே பார்த்துக்கம்மா... வச்சிரவா...?''

    ...

    நானா...? நான் இப்ப பெட்ரோல் பங்க்ல இருக்கேன்... டிரைவர் பெட்ரோல் போட்டுகிட்டு இருக்கான்.... வச்சிடட்டுமா?... கடைசி வாக்கியத்தின் பொய்யில் கொஞ்சம் ஆச்சரியமாகி அவன் நிமிர்ந்து பார்த்தான். வேலைக்காரி பிரச்சினையைச் சொல்வதால் அம்பிகா அவரது மனைவியாக இருக்க வேண்டும்...

    நில சார்பாளர் அலுவலகத்தில் நின்று கொண்டு பெட்ரோல் பங்க் என்று ஏன் பொய் சொல்கிறார்...?

    அவனுக்குச் சிறிது சுவாரஸ்யம் ஏற்பட்டது... இதற்குள் வேட்டி சட்டையுடன் எளிய தோற்றத்தில், முகத்தில் அறிவு தேஜஸ் பொலிவுடன் ஒருவர் உள்ளே நுழைந்தார்....

    "வா... கணபதி... வா வா...'' என்று அவரை நோக்கிப் போகும் பரபரப்பில் செல்போனை மேஜை முனையில் வைத்தார் ஐ.டி.கம்பெனி மேலாளர்...

    "மன்னிச்சுக்க மகேஸ்வரன்.. லேட்டாயிடுத்து லேசில பஸ் கிடைக்கலே.... சரி, அம்பிகா கிட்ட சொன்னியா? அவ என்ன சொன்னா...?''

    நீ வீட்டு மனை வாங்கறதுக்கு நான் விட்னெஸ் கையெழுத்துப் போடப் போறேன்... அவ என்ன சொல்றது? அவளுக்கு நம்ப நட்பு பத்தியெல்லாம்.... புரியாது... விட்டுத் தள்ளு.... அவகிட்ட நான் சொல்லவே இல்ல... எனக்கு அவசரமா ஆஃபீஸ் போகணும்... நீ சொன்ன சுந்தரேசன் வந்துட்டாரா....?

    அவர்கள் மும்முரமாகப் பேசிக் கொண்டு இருக்கும்போது அவன் அந்தச் செல்போனை எடுத்தான்.

    முதலில் "சார்.. உங்க ஃபோன்...'' என்று கொடுக்கத்தான் நினைத்தான்....

    திடீரென்று ஒரு எண்ணம் மின்னலிட்டது. கழுத்துக்கு மேல் மட்டும் உருவங்கள் தெரிந்து கொண்டிருந்த கூட்டத்தில் மெல்ல முன்னேறி செல்போனுடன் வெளியே வந்து சத்தமான குப்பை இயந்திரத்தின் அருகில் நின்று கொண்டான். சற்று முன் வந்த அழைப்பைப் பார்த்தான். முதல் நான்கு எண்களிலிருந்து வீட்டு எண்தான்... அந்த வீடு அடையாறு பகுதி என்று தெரிந்தது... துணிந்து அந்த எண்ணை அழைத்தான்.... சில விநாடிகளுக்குப் பின் ஒரு பெண் குரல், என்ன... சொல்லுங்க.... இப்பதானே பேசினேன்...

    கைக்குட்டையால் வாய் பொத்தி, அம்பிகா... ஒரு முக்கியமான விஷயம்...

    சொல்லுங்க.... இருங்க... உங்க குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? அட எமகாதகி!

    அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா... இங்க பெட்ரோல் பங்க் பக்கத்துல குப்பை லாரி சத்தம்...

    உம்...

    நேத்து ஏடிஎம் லேருந்து பணம் எடுத்தேன் இல்ல... இப்பதான் ஒரு க்ளோஸ் ஃப்ரெண்டு போன் பண்ணுனார்.... அவருக்கு அவசரமா ஒரு (யோசித்தான்) இருபத்தி ஐயாயிரம் ரூபாய் வேணுமாம்... பார்த்து எடுத்துக்குடும்மா... நான் இப்ப ஒருத்தரை அனுப்பறேன்... அவன் பேரு (யோசித்து ) ஜவஹர்..... தன்னை குனிந்து பார்த்துக் கொண்டான். வெள்ளைப் பாண்ட்டும், நீலத்துல பிங்க் கலர் கோடு போட்ட சட்டையும் போட்டிருப்பான். நம்பிக்கையான ஆளுதான்... பணத்தை ஒரு பிரவுன் கவர்ல போட்டு பிளாஸ்டிக் பைல போட்டு வெளியே தெரியாம அழகா கொடு... என்ன....?

    உம்... முனகினாள்.

    இரு.. அடையார் டெப்போலேருந்து நம்ம வீட்டுக்கு அவனுக்கு கொஞ்சம் நீயே வழி சொல்லிடு.. நான் பிஸியா இருக்கேன்... இந்தா அவன்கிட்டயே தரேன்... சில நொடிகள் இடைவெளி விட்டு, குரலைக் கீச்சாக மாற்றிக் கொண்டு..

    சொல்லுங்க மேடம்...

    அந்த அம்பிகா வழி சொல்லி முடித்ததும்..

    சரிங்கம்மா.... இருங்க சார் கிட்ட தரேன்...

    ஜவஹர்'' என்று சொல்லிக் கொண்டவன் ஃபோனை அணைத்து விட்டு யோசித்தான். இந்தச் செல்போன் சிம்கார்டு எதுவும் எனக்கு வேண்டாம்.. மொபைல் டிராக்கர் வைத்திருந்தால் என்னைக் கண்டு பிடித்து விடுவார்கள்.... செல்போன் தொலைந்து போனது தெரிந்தவுடன், இந்த நம்பரை லாக் செய்து விடுவார்கள்.. வீட்டுக்கும் கூப்பிட்டு ஒரு வேளை அவர் எச்சரிக்கை செய்யக் கூடும்...

    ஆனால் அந்த நேரம் மீண்டும் அந்த அம்பிகாவோ... இவரோ, கொஞ்ச நேரம்... நான் போய் பணம் வாங்கும் வரை தொடர்பு கொள்ளவும் கூடாது... என்ன செய்யலாம்...?"

    செல்போனை திருப்பி அதன் முதுகைத் திறந்தான்... சிம் கார்டை எடுத்துத் தலைகீழாய்ப் போட்டான்... பரிதாபமாக சிம்கார்டு உடையும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இத்தனையையும் சில நிமிடங்களுக்குள் முடிந்து விட்டு மீண்டும் நில சார்பாளர் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

    இன்னமும் அந்த மகேஸ்வரனும் கணபதியும் ஏதோ மும்முரமாய்ப் பேசிக் கொண்டிருக்க, செல்போனை மேஜையில் அவர் வைத்த இடத்திலேயே மெதுவாக வைத்து விட்டு கூட்டத்துக்குள் நழுவினான். திடீரென ஏதோ நினைவு வந்தவராக மகேஸ்வரனும் தனது செல்போனைக் கண்டெடுத்து மகிழ்வோடு கோட்டுப் பைக்குள் செருகிக் கொண்டார்...

    வெளியே வந்தவன் அவசரமாக ஆட்டோவை அழைத்து, அது நிற்குமுன் ஏறிக்கொண்டு அடையாறு.... அர்ஜண்ட்டாப் போ... என்றான்.

    போனை வைத்து விட்டு அம்பிகா யோசித்தாள். யாருக்கு அவசரமாப் பணம் கேக்கறார்...? நிச்சயமா அந்த சனியன் வைஜெயந்திக்குத்தான்.

    ஏதோ தூரத்து உறவுக்காரப் பெண், சாப்பாட்டுக்கே அம்மாவும் பொண்ணும் கஷ்டப்படறாங்கன்னு சொல்லி... தன் ஆஃபிஸ்லேயே போன வருஷம் வேலை போட்டுக் கொடுத்தார்.. திண்டாடறாங்க பாவம்னு வாடகைக்கு வீடும் பார்த்து அட்வான்ஸும் கொடுத்தார்... வீட்டைப் பார்க்க என்னையும் ஒப்புக்கு அழைத்துக்கொண்டு போனார்.

    நாலு மாசம் முன்னாடி அவ அம்மாவுக்கு திடீர்னு அப்பெண்டிசைடிஸ் ஆப்பரேஷன்னு பணம் கொடுத்தார். அதுக்கே நான் கத்தினேன்... இப்படி இடம் கொடுக்காதீங்கன்னு... அதனால இன்னைக்குப் பொய் சொல்லி கேக்குறாரா....?

    சரிதான்.... அப்புறம் அந்த லயன்ஸ் கிளப் குரோம்பேட்டை ராஜலஷ்மி கதை மாதிரி என் கதையும் ஆகிடப்போறது... அவன் வீட்டுக்காரர் இப்படித்தான் யாருக்கோ உதவி செய்யப் போய் அவளையே ரெண்டாந்தாரமாய் கல்யாணமே செய்து கொண்டு விட்டாராமே!

    அதிலும் இந்த வைஜெயந்தி... பார்க்க ஓரளவு நன்றாக இருக்கா... முப்பது வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகல்லே.... பேசாம நன்றி என்கிற பேர்ல தன்னையே இவருக்குக் கொடுத்துட்டாள்னா?

    காலேஜும், ப்ளஸ் டூவும் படிக்கிற ரெண்டு பசங்களை வச்சிகிட்டு இவருக்குத் தேவையா இது?

    இனிமே நேரடியா கேட்க முடியாது... இப்படிப் பொய் சொல்லத் தோணும்... இவுங்க வழியிலேயே போய் நானும் என்ன செய்யணுமோ... அதைச் செய்யறேன்... கறுவிக் கொண்டு எழுந்தவள்.. எதற்கும் சரிபார்க்கும் எண்ணத்தோடு... கணவரின் அலுவலகத்தை போனில் அழைத்தாள்....

    அக்கவுண்ட்ஸ் செக்‍ஷன்ல வைஜெயந்தி இருக்காங்களா...?

    இல்ல மேடம்... அவுங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு இன்னைக்கு லீவு... சரிதான்... சந்தேகம் உறுதியாகி விட்டது...

    வாசலில் ஆட்டோ சத்தம்... தொடர்ந்த அழைப்பு மணி...

    பவ்யமாக, வெள்ளைப் பாண்ட்டும், நீலத்தில் பிங்க் கோடு போட்ட சட்டையுமாக அவன் நின்று கொண்டிருந்தான்...

    வணக்கங்க மேடம்... நான் ஜவஹர்... சார்.. சொல்லியனுப்பினாரு... இறுக்கமான முகத்தோடு பையை அவனிடம் நீட்டியவள்,

    யாருக்குன்னு ஏதாவது சொன்னாரா உங்க சார்...?

    "யாரோ ஃப்ரெண்டுக்குன்னு சொன்னாரு... எனக்கு வேறெதும் தெரியாதுங்க... வரேன்...

    ஆட்டோ என்ஜினைக் கூட அணைக்க விடாமல் காத்திருக்கச் சொல்லித் திரும்பி வந்து உடனே ஏறிக் கொண்டவன், அவசரமாக,

    லெஃப்ட் எடுத்துத் திரும்பிடு...

    ஆட்டோ கிரும்பி வெகுதூரம் வந்தபின் நிம்மதியாக மூச்சு விட்டான்... நெடுஞ்சாலையில் அந்த நட்சத்திர ஹோட்டலைப் பார்த்ததும் ரொம்ப நாளாக அதில் டெலீஷஸ் உணவு விடுதியில் சாப்பிட வேண்டுமென்ற வெறி குப்பென எழுந்தது. ஆட்டோவைக் கையில் கடைசியாய் இருந்த எழுபது ரூபாயைக் கொடுத்து அனுப்பி விட்டுக் கம்பீரமாக டெலீஷஸ் உள்ளே நுழைந்தான்.... கையில் பணப்பை இருக்கிறதா என்றும் பாத்துக் கொண்டான். விதவிதமான

    Enjoying the preview?
    Page 1 of 1