Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthuvelicham
Puthuvelicham
Puthuvelicham
Ebook236 pages1 hour

Puthuvelicham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது ஒவ்வொரு வெற்றியும் என் தாய் ராஜம் துரைஸ்வாமிக்கும், தந்தை திரு. எம்.பி. துரை ஸ்வாமிக்கும் சமர்ப்பணம்... எனது முதல் சிறுகதை 'குங்குமத்தில்’ தான் வெளியானது.

ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலைமகள், அமுதசுரபி, லேடீஸ் ஸ்பெஷல், தமிழரசி, மங்கை, தாய் போன்ற பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளும் பெற்ற எனது சிறுகதைகளைத் தொகுத்து 'புது வெளிச்சம்' என்ற நூலை வெளியிட்டுள்ளேன். இத்தொகுப்பில் பல கதைகள் பரிசு பெற்றவை. எனக்கு ஊக்கம் தந்த பத்திரிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி... நன்றி...!

“ஒரு மயிலாப்பூர் ஏஜென்ட்” என்ற சிறுகதை சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் 'மைலாப்பூர் டைம்ஸ்' செய்தித்தாள் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

எனக்கு முழு ஆதரவு தந்து என்னை உருவாக்கி வரும் எனது கணவர் திரு.பட்டாபிராமன் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது...

- பத்மினி பட்டாபிராமன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580129204679
Puthuvelicham

Read more from Padmini Pattabiraman

Related to Puthuvelicham

Related ebooks

Reviews for Puthuvelicham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthuvelicham - Padmini Pattabiraman

    http://www.pustaka.co.in

    புதுவெளிச்சம்

    (சிறுகதைகள்)

    Puthuvelicham

    (Sirukathaigal)

    Author:

    பத்மினி பட்டாபிராமன்

    Padmini Pattabiraman

    For more books

    http://pustaka.co.in/home/author/padmini-pattabiraman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    நீதிக்கு அப்பால்...

    களைகள்

    ஒரு மயிலாப்பூர் ஏஜென்ட்

    முப்பரிமாணம்

    நடப்புகள் நாளை மாறும்

    புது வெளிச்சம்

    திசை மாறிய கோபம்!

    யாருக்கு நஷ்டம்?

    நடிகை வீட்டு மாடியில்...

    உண்மையான பொய்சாட்சி

    மறுமுகம்

    காணிக்கையான கடன்

    பணப்பந்து

    இதுவும் ஒரு தண்டனை

    நல்லாசிரியனாய்...

    மதி-மதிப்பு

    பானுமதியும் பாசுமதியும்

    எதிர்காற்று

    ஒரு சின்னப் பெண்ணும் செல்போனும்...

    ஏழாவது சுவை

    முன்னுரை

    எனது ஒவ்வொரு வெற்றியும் என் தாய் ராஜம் துரைஸ்வாமிக்கும், தந்தை திரு. எம்.பி. துரை ஸ்வாமிக்கும் சமர்ப்பணம்... எனது முதல் சிறுகதை 'குங்குமத்தில்’ தான் வெளியானது.

    ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலைமகள், அமுதசுரபி, லேடீஸ் ஸ்பெஷல், தமிழரசி, மங்கை, தாய் போன்ற பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளும் பெற்ற எனது சிறுகதைகளைத் தொகுத்து 'புது வெளிச்சம்' என்ற நூலை வெளியிட்டுள்ளேன். இத்தொகுப்பில் பல கதைகள் பரிசு பெற்றவை. எனக்கு ஊக்கம் தந்த பத்திரிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி... நன்றி...!

    ஒரு மயிலாப்பூர் ஏஜென்ட் என்ற சிறுகதை சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் 'மைலாப்பூர் டைம்ஸ்' செய்தித்தாள் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

    எனக்கு முழு ஆதரவு தந்து என்னை உருவாக்கி வரும் எனது கணவர் திரு.பட்டாபிராமன் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது...

    இந்நூலை வெளிக் கொண்டுவர உதவி செய்த தீபம் திருமலை அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி!

    - பத்மினி பட்டாபிராமன்

    நீதிக்கு அப்பால்...

    அதிகாலைக்கும், காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் சுமதியால் தூங்க முடிந்தது. கீழ் வீட்டில் ஏதோ ஒரு போர்ஷனில் பால் குக்கரின் நீண்ட கூவல்.

    ஏதோ குழந்தையை பிடித்துத் தள்ளின அழுகை, குருக்கள் மாமா யாரிடமோ உரக்கப் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் எனக் கலவையான சத்தங்களில் வழக்கமாக விடிகிற அவளது பொழுது இன்றைக்குக் கொஞ்சம் தாமதமாகவே விடிகிறது.

    கடகடவெனத் தண்ணீர் பம்ப் யாரோ விடாமல் அடிக்கிறார்கள்... போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்று போக வேண்டும் என்ற நினைப்புதான் ஓடிவந்து கவ்வுகிறது... இரண்டு நாட்களாக அவளை ஆக்கிரமித்துத் தூங்கவிடாமல் செய்த சம்பவத்துக்கு, நினைவுகளுக்கு இன்று வடிகால் கிடைத்துவிடுமா? பரபரவெனக் குளித்து உடைமாற்றித் தலை வாருகிறாள்...

    ஜபமாலை உருட்டியபடி அம்மா... முகவாயைக் கீழே கொண்டு வந்து மூக்குக் கண்ணாடியின் மேல் பகுதி வழியாக அவளைக் கவனிக்கிறாள்...

    திருப்பியும் கேட்கிறேன் சுமதி... எனக்கு ஒண்ணும் தெரியாது... நான் யாரையும் பார்க்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லிடேன்... எதுக்குப் போலீஸ்காரா, ரௌடின்னு வம்பு நமக்கு... சொன்னாக் கேளுடி...

    முன் உச்சி நரையைக் கறுப்புக்கு கீழே தள்ளி வாரி, பல்லில் இருந்த ஹேர்பின்னை எடுத்துச் செருகி விட்டுச் சலிப்போடு சொல்கிறாள்...

    எத்தனை தடவை நீயும் சொல்வே... நானும் பதில் சொல்வேன்... இதுங்களை எல்லாம் சும்மா விடக்கூடாதும்மா... நீ கவலைப்படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது... நீ உன் ஜபத்தைப் பண்ணு...

    புடவை மடிப்புகளைப் பின் செய்தபடி.

    தோசை பண்ணியாச்சா? நானே பண்ணிடட்டுமா?

    எல்லாம் வெச்சிருக்கேன்... நீ முதல்ல நான் சொல்றதைக் கேளு...

    அம்மா… கண்டிப்பான குரலில்.

    உன்னோட கால்பிளேடர் ஆபரேஷன் சரியா நடக்கணும்னு பகவானைப் பிரார்த்திச்சுக்கோ... அது போதும்... நான் முதல்ல ஸ்கூலுக்குப் போயி பிரின்ஸியைப் பார்த்து லோன் அப்ளிகேஷன் குடுத்துட்டு, பர்மிஷன் போட்டுட்டுப் போலீஸ் ஸ்டேஷன் போகத்தான் போறேன்...

    சிமெண்ட் பெயர்ந்த மாடிப்படிகளில் செருப்பு வழுக்காமல் லேசாக புடவையைத் தூக்கிப்பிடித்தபடி இறங்குகிறாள்... கைப்பையில் மத்யானச் சாப்பாடு, தண்ணீர் பாட்டில், வகுப்பு மாணவிகளின் ஓரிரு ரெகார்ட் நோட்டுகள், பர்ஸ், பில்.. என்று கனக்கிறது... தண்ணீர் பம்ப் இருப்பதால் சதா ஈரித்துக் கிடக்கும் கல் பாவிய முற்றத்தில் வந்து முடியும் மாடிப்படி... நீண்ட, பல குடித்தனம் கொண்ட ஸ்டோர்ஸின் நடுவில் மாடிப் போர்ஷன்...

    முற்றத்து வழுக்கலைத் தாண்டி முன்புறம் இருக்கும் இரண்டு பக்க வீட்டுக் குடித்தனம் தாண்டி வழி நடைக்கு வந்த பின்பே புடவைக் கொசுவத்தின் பிடிப்பை விடமுடிகிறது... முற்றத்துக்குப் பின்னால் அதே வரிசையில் கொல்லைப் புறமாய் ஓடும் பகுதியில் வேறு மூன்று நான்கு குடித்தனங்கள்.

    ரேழி தாண்டி வாசல் திண்ணையில் தூணைப் பிடித்தபடி குண்டாய் குருக்கள் மாமா... வாசலில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவர், சுமதியைப் பார்த்ததும்.

    இதோ வராளே... என்றவர்...

    அம்மாடி டீச்சரம்மா... இவா உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப நேரமா உக்காந்திருக்கா...

    தெருவிலேயே குத்திட்டு உட்கார்ந்திருந்த இரண்டு உருவங்கள் சற்று வேகமாக எழுந்தன...

    கும்புடறோம் சாமி... என்று கை நடுங்கக் கும்பிட்டன... தம்பதியாக இருக்க வேண்டும்... திகைத்துப் போனாள்... யார் இவர்கள்? தெருவிலேயே உட்கார்ந்திருந்த விதம், உடைகளில் படு ஏழ்மை, பெண்ணானாலும் அவளைப் பார்த்து, சாமி என்று பரிதாபமாய் வணங்கிய அறியாமை.

    உழைப்போ, வறுமையோ அவர்கள் வயதை உயர்த்தியிருந்தது...

    யாரும்மா நீங்க... யாரய்யா நீங்க? முதல்லே இப்படி உட்காருங்க... இப்படி... திண்ணைல உட்காருங்க... ஓரக்கண் நோக்கினாள்... நல்லவேளை... வம்பு கேட்காமல் குருக்கள் உள்ளே போவது தெரிந்தது...

    திண்ணையில் உட்காரவும் அஞ்சிய அந்த இருவரும் கும்பிட்ட கைகளை இன்னும் விலக்கவில்லை...

    வயதான ஆண் பேசினார்... யம்மா... சாமீ... நாங்க தொலதூரம் கிராமத்துலேருந்து வாரமுங்க... திருச்செந்தூரு பக்கம்... செந்தில் எங்களுக்கு ஒரே மவனுங்க... அவனுக்கு மின்னாடி ரெண்டு பொட்டப் புள்ளங்களப் படாத பாடு பட்டுக் கட்டிக் குடுத்துட்டமுங்க... சாமீ... யாரு செந்தில்?

    அவன் நல்லா படிக்கட்டும்னுதான் இருந்த நெலத்த எல்லாம் வித்துட்டு அவனுக்கு அனுப்பிச்சம் சாமி... அவன்... காலேசுங்கறாங்களே... பெரிய படிப்பு படிக்கணும்னுதான் சாமீ... இப்படி நாங்க கூலி வேலதான் செய்யறோம் சாமீ... அது கூடப் பாதி நாளைக்கு இல்ல சாமி...

    எங்கோ தொலைவில் ஏதோ புரிவது போல இருந்தது சுமதிக்கு...

    குடித்தனக்காரர்களின் இன்னும் பள்ளிக்குப் போகாத ஒன்றிரண்டு குழந்தைகள் திண்ணையில் நின்று உடையைக் கடித்தபடி இவர்களை வேடிக்கை பார்த்தன... பெண்கள் ஓரிருவர் அப்படியும் இப்படியும் போவது போல நோட்டம் விட்டனர்.

    இப்படி வாங்க... சற்றுத் தள்ளி அவர்களை நகர்த்திக் கொண்டு போனாள் சுமதி...

    இப்ப சொல்லுங்க... யாரு நீங்க... என்ன வேணும்...?

    எங்கூருப் புள்ள மணிதான் வந்து நேத்து சொல்லிச்சு... உங்க மவன் செந்திலு ஏதோ தப்புத் தண்டா பண்ணிட்டுப் போலீசுல இருக்கான்னு...

    அப்படியே ஓடிப்போய் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டாள் சுமதி...

    நாய்கள்... பொறுக்கிகள்... என்று இடைவிடாமல் இரண்டு நாளாய்த் திட்டிக் கொண்டிருந்ததை மறுபடியும் சொன்னாள்...

    அந்த மூன்று நாய்களில் யாருடைய பெற்றோர் இவர்கள்...?

    ஆயிரம் முறை அவளுக்குள் எழுந்து எழுந்து மடியும் அந்தச் சம்பவம்...

    மூன்று நாள் முன்பு மதியம்... பள்ளிக்கு ஏதோ சாமான் வாங்க பிரின்சிபல் அவளை அனுப்பியிருந்தார்...

    முக்கியச் சாலையில் இருந்து பிரியும் இரண்டாவது வட்டச் சாலையின் சிக்னலில் ஆட்டோ காத்துக் கொண்டிருக்கிறது... அந்தத் தெருவில் அந்த நேரத்தில் அவ்வளவாக டிராபிக் இல்லை...

    ஓரமாக பிளாட்பாரத்தில் கால் வைத்து ஒருமஞ்சள் சுரிதார் பெண் காத்துக் கொண்டிருக்கிறாள்... திடீரென ஹோவென ஆர்ப்பரிப்பு சத்தம்... சிரிப்பு... ஆட்டோவைத் தாண்டி ஒரு ராட்சச பைக்... அதில் மூன்று இளைஞர்கள்... அவர்களின் ஆர்ப்பாட்டம்... வேகமாக வந்த பைக்... மஞ்சள் சுரிதாரின் ஸ்கூட்டியை உரசி நிற்கிறது... அந்தப் பெண் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்து ஏதோ திட்டுகிறாள்...

    பைக்கின் முன்புறம் அடர்ந்திருப்பவர்கள் நீல ஜீன்ஸ், ஜெர்க்கின் அணிந்திருக்க, பின்னால் இருந்தவன் வெள்ளை பேண்ட், கறுப்பு டீஷர்ட்... அவர்கள் ஏதோ கிண்டலடிக்க மறுபடி அந்தப் பெண்ணின் திட்டு...

    சிக்னல் விழ, அந்தப் பெண் வண்டியைக் கிளப்ப.

    உற்சாகமோ, கோபமோ…. ராட்சச பைக்கை அவள் மேல் இடிக்கிறாற் போல ஒருவல் கிளப்பி நகர்த்த... பின்னால் வெள்ளை பேண்ட் அவளது ஸ்கூட்டியை உதைக்கிறான்...

    வண்டிகிளம்புகிற நேரம் விழுந்த எதிர்பாராத உதையால் அப்படியே பாலன்ஸ் தவறி வண்டியோடு... பிளாட்பாரம் ஒரு பக்கம் இடிக்க, அப்படியே தூக்கி எறியப்படும் பெண்... விளம்பரப் பலகை தாங்கி நிற்கும் இரும்புத் தூணில் தலை மோத அப்படியே குப்புற விழுகிறாள் அவள்...

    பாவிகளா... சுமதி கத்தியதில் வெள்ளை பாண்ட், மற்றும் ஜீன்ஸ் இளைஞர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள்...

    முகத்தில் திகில் பரவுகிறது...

    வண்டியை விட்டு இறங்கி சுமதி அடிபட்ட பெண்ணை நோக்கி ஓடுகிறாள்... இத்தனை அவசரத்திலும் பைக்கின் எண் கொஞ்சம் விநோதமாக இருந்ததால் மனதில் பதிகிறது…

    அதற்குள் பைக் பறந்து விடுகிறது…

    ஸ்கூட்டி விழுந்து கிடக்கிறது... நினைவிழந்து கிடக்கிற பெண்ணின் தலையைத் தூக்கியடி சமதி ‘ஆட்டோ’வை அழைக்கிறான்... அவன் வந்த ஆட்டோவைக் காணோம்... மாட்டிக்கொள்ளும் பயத்தில் பறந்துவிட்டான்…

    மெள்ளக் கூட்டம் சேருகிறது…

    எங்கிருந்தோ போலீஸ்காரர் இருவர் வருகிறார்கள்... ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்னைத் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறார் நடுவே பள்ளிக்கு போன் செய்து அவகாசம் கேட்டுக் கொள்கிறாள்… போலீஸ்காரர்களிடம் பைக் எண்ணைச் சொல்கிறாள் போலின் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்கிறார் மருத்துவமனையில் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை...

    உயிர் தப்பினாலும் பெண் மீளாத கோமாவில் ஆழ்கிறாள். சற்று முன்பு வரை துள்ளித் திரிந்த பெண்... கைப்பையிலிருந்து விலாசம் கிடைத்து, பெற்றோருக்குத் தகவல் போய், அலறி அலறி வருகிறார்கள்... அடித்துக்கொள்கிறார்கள்... அடுத்த மாசம் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்திருக்கிறார்களாம்...

    இனி அந்தப் பெண் எழுந்திருக்க... எத்தனைகாலம் ஆகுமோ... அல்லது ஒரு வேளை... உயிரையாவது காப்பாற்றிய சுமதிக்கு ஆயிரம் நன்றிகள் சொல்கிறார்கள்...

    என்ன செய்து என்ன...

    மூன்று நாளாய்ச் சுமதியின் நினைவெல்லாம் அந்த அழகிய வட்ட முகப் பெண்ணும்... அவள் முதலில் அவர்களைத் திட்டியதும்... விழுந்து கிடந்த கோலமும்...

    நேற்று பள்ளிக்கு போன் வந்து அவளை அழைத்தார்கள்...

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் பேசினார்... அவள் கொடுத்த பைக் எண் வைத்து, சிலபேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துவைத்திருப்பதாகவும், அவள் வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்... மாலை வந்து அம்மாவிடம் சொன்னதிலிருந்து அம்மாவுக்கு ஒரே கவலை... மகளுக்கு ஏதும் அவர்களால் ஆபத்து வரக்கூடாதென...

    ஆனால் சுமதியோ... இரவெல்லாம்... அவர்களை உடனே கைது செய்து... ஏன்... தூக்கில் போட்டால் கூடத் தவறில்லை என்று கொதித்துக் கொதித்து தூங்காமல் கிடந்திருக்கிறாள்...

    இப்போது இவர்கள்...

    யம்மா சாமீ...

    பக்கத்தில் பரிதாபக்குரல்... தலையைத் தூக்கி பார்க்கிறாள்...

    அவள் கொஞ்சமும் எதிர்பாராமல் அவர்கள் சரேலெனத் தெருவில் அவள் காலில் விழுந்து விடுகிறார்கள்.

    அய்யய்யோ.. பதறிக்கொண்டு அவர்களை எழுப்புகிறாள்...

    அடிச்சுப்பிடிச்சு ராவெல்லாம் ரயில்ல நின்றுகிட்டு ஓடியாந்தோஞ் சாமி.. அங்க இங்க கேட்டுப் போலீசுடேசனுக்குப் போனோஞ்சாமி... அங்க ஒத்தரு ஏதோ எழுதிகிட்டு இருந்தாரு... அவருதான்... ஒரு ஆட்டோவுல எங்கள இங்க கொணாந்து விட்டு, இங்கன சுமதின்னு ஒரு அம்மா இருக்குது... அதுதான் இன்னைக்கு அடையாளம் காட்டப் போவுது... அது நெனச்சா உங்க மவனக்காட்டிக் குடுக்காம இருக்கலாம்னு சொன்னாரு... அவரு உடனே போயிட்டாரு... அதான் உங்களைப் பார்க்கணுமின்னு உக்காந்தோம் சாமீ...

    அழுகை வெடித்துப் பேசிய பெரியவர்... மறுபடியும், காலில் வுழறோம் சாமீ... எங்க புள்ளைய காட்டிக் கொடுக்காத சாமீ... அவனுக்கு ஏதோ வேண்டாத சினேகிதம்... தப்புப் பண்ணிட்டான் சாமீ... இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுரு சாமீ... தாயீ... பலவாறு புலம்பி மறுபடியும் அவர்கள் காலில் விழ முயற்சிக்கத் தடுத்து விடுகிறாள்...

    பெரியவர், தன் மனைவியிடம்...

    எடுறீ அத... என்று சொல்ல... புடவைத் தலைப்புக்குள் பொதிந்திருந்த ஒரு கசங்கல் மஞ்சள் பை வெளிவருகிறது...

    யம்மா... சாமீ... குரலைக் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறார்...

    மணி சொல்லிச்சு... பணம் குடுங்க... விட்ரு... வாங்க...ன்னுட்டு... எங்க கிட்ட ஏது சாமீ பணம்... ஓட்டை வீடு இருந்திச்சு... அத எங்க ஊரு அம்பலத்துகிட்ட வித்துட்டுப் பணம் கொண்டாந்தோம்... டேசன்ல இருந்தவரு கொஞ்சம் வாங்கிட்டாரு... மிச்சப் பணம் இதோ... இதுல இருக்கு தாயீ... வாங்கிக்குங்க... கை நடுங்க அவர் நீட்டுகிறார்...

    சற்றுத் திகைத்து விட்டுக் கை நடுங்க அவளும் பையை வாங்கிக் கொள்கிறாள்... பைக்குள் எத்தனை ஆயிரம் கைகள் மாறியதோ... எத்தனை ஆயிரமோ... அழுக்கு நோட்டுகள்... நீண்ட நேரம் கழித்துக் கேட்கிறாள்...

    உங்க பையன் யாருன்னு எனக்கு எப்படி தெரியும்...

    Enjoying the preview?
    Page 1 of 1