Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadal Kozhigal
Kadal Kozhigal
Kadal Kozhigal
Ebook278 pages1 hour

Kadal Kozhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடல் கோழிகள் என்ற இந்த சிறுகதைத் தொகுதியில், ராணி வார இதழ், குமுதம் சினேகிதி, கலைமகள் தினமலர் வாரமலர், மங்கையர் மலர், கல்கி, லேடீஸ் ஸ்பெஷல் உட்பட பல்வேறு பத்திரிகைகளில் வெளியான, மற்றும் பரிசும் பெற்ற 22 சிறுகதைகளும், வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை, (கலைமகள் பரிசு )கதை வடிவிலுமாக மொத்தம் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580129210897
Kadal Kozhigal

Read more from Padmini Pattabiraman

Related to Kadal Kozhigal

Related ebooks

Reviews for Kadal Kozhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadal Kozhigal - Padmini Pattabiraman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடல் கோழிகள்

    Kadal Kozhigal

    Author:

    பத்மினி பட்டாபிராமன்

    Padmini Pattabiraman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/padmini-pattabiraman

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    திருமதி. பத்மினி பட்டாபிராமன்

    1. கடல் கோழிகள்

    2. புதுச் செருப்பு

    3. ஜனனம்

    4. அடைப்பு ஒரு அழைப்பு

    5. தித் தித் தை

    6. சைபீரியன் ஜக்கு

    7. பாஸ் மகன்

    8. விளம்பரம்

    9. பொன் மணித்துளிகள்

    10. காதில் விழுந்த காட்சிகள்

    11. உன்னை ஏன் சந்தித்தேன்

    12. அமோல்

    13. வேலு நாச்சியார்

    14. விரட்டல் எளிது

    15. பணங்காட்டு நரிகள்

    16. மாயம் விலக்கு மனசே

    17. புரகோலியை ஏன் புறக்கணித்தாள்?

    18. தப்பான கணக்கு

    19. தேவை ஒரு தனி இடம்

    20. உள்ளிருந்து ஒரு குரல்

    21. வரைத்தன்று உதவி

    22. கடைசி நிமிடங்கள்

    23. மின்னல் தெறித்த பார்வை

    அணிந்துரை

    ஸ்ரீ கணபதே நம: ஓம் முருகன் துணை

    எளிமையாக இருக்க வேண்டும். தெளிந்த நீரோடை போல் இருக்க வேண்டும். ஆர்பாட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். வாசகர்களின் மனநிலையோடு ஒன்றிப்போக வேண்டும். இறுதியில் எதிர்பார்க்காத களுக் முடிவுடன் இருக்க வேண்டும்

    சிறுகதையின் வடிவமைப்பைப் பற்றி ரீடர்ஸ் டைஜஸ்டில் எப்போதோ படித்த ஞாபகம். இது இப்போது திடீரென்று என் நினைவுக்கு வருவானேன்... எல்லாம் பத்மினி பட்டாபிராமனின் கடல் கோழிகள் சிறுகதை தொகுப்பைப் படித்ததின் விளைவு தான்

    மொத்தம் இருபத்தி மூன்று கதைகள்.

    சுலபமாக நம்மையும் சம்பந்தப் படுத்திக் கொள்ளச் செய்யும் யதார்த்தமான சம்பவங்கள். சுற்றி வளைக்காத எளிமையான நடை. சில எதிர்பாராத ஆனால் மனதைத் தொடும் முடிவுகள். நடு நடுவே சில கலகல கதைகள்...

    இந்தத் தொகுப்பில் பதிவாகியிருக்கும் கதைகளெல்லாம் பல பத்திரிகைகளில் பிரசுரமானவைதான். அந்தந்த பத்திரிகையின் எதிர்பார்ப்புகளுகேற்ப நாடி பிடித்து கதைக் கருவையும் எழுத்து வடிவத்தையும் ஆசிரியர் தேர்ந்தெடுத் திருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. கதையை நோக்கி அவரின் தெளிவான அணுகுமுறையும் பளிச்சென்று வெளிப்படுகிறது.

    முதல் கதையே புத்தகத்தின் தலைப்புக் கதை தான்... கடல் கோழிகள்...

    தலைப்பைப் பார்த்தவுடன் கடலில் ஏது கோழிகள்? ஒருவேளை ஒருவகை அசைவ உணவைப் பற்றின கதையோ என்று முதலில் பாமரத்தனமாக நினைக்கத் தோன்றியது. ஆனால் கதையைப் படித்தவுடன் அதில் இருந்த ஆச்சர்யம் அட போட வைத்தது. ஏமாற்றங்கள் நிரந்தரமானதல்ல... அதை மறப்பதற்கான தீர்வு... கதையைப் படித்தால் புரியும்.

    புதுச் செருப்பு கொஞ்சம் எதிர்பார்க்கக் கூடிய முடிவு தான் என்றாலும் சிறுவன் மகேசனின் ஆர்வமும் தன் இலக்கை நோக்கிய பயணமும் நம்மை ஈர்க்கிறது.

    அடைப்பு ஒரு அழைப்பு... விசு படம் போல் தலைப்பு இருந்தாலும் உண்மையிலேயே ஒரு நாள் காலையில் குழாயில் தண்ணி வராவிட்டால் குடும்பத்தில் ஏற்படும் டென்ஷனை ஆசிரியர் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் போது நிச்சயமாக நம் இதழ்கள் புன் சிரிப்பாக மாறுவதைத் தவிர்க்க முடியாது.

    யூ-டியூப் சேனல்கள் அமைக்கும் திடீர் மோகம் பலரையும் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதில் சில பதிவுகள் சகித்துக் கொள்ளும் எல்லையைத் தாண்டி இருக்கும்... இதை யதார்த்தம் நிறைந்த நகைச்சுவையோடு ஆசிரியர் வர்ணித் திருப்பது இன்னொரு நகைச்சுவை பொக்கிஷம்.

    தன்னால் ஏற்பட்ட ஒரு நிகழ்வு தன் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்குமோ? அது தங்காமல் போய் விடுமோ? சாந்தினி அச்சப்படுகிறாள்... துர் சொப்பனம் காண்கிறாள்? இறுதியில் தன் வாரிசை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதை உருக்கமாக வர்ணிக்கும் கதை தான் ஜனனம்.

    என் மனதை ரொம்பவும் பாதித்த கதை சைபீரியன் ஜக்கு. காலில் அடிபட்டிருக்கும் ஒரு பறவையை குடும்பத்தாரிட மிருந்து காப்பாற்றி அதற்கு முதலுதவி கொடுக்க ஒரு சிறுமி தவிக்கும் தவிப்பு... நிச்சயம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்தப் பறவை மீண்டும் ஆகாயத்தில் பறந்து செல்லும் போது நம் மனதிலும் ஒரு நிம்மதி... ஆசிரியர் அதோடு விட்டிருந்தால் இது சாதாரண கதை... ஆனால் அந்த கடைசி இரண்டு வரிகளில் நம்மைப் புரட்டிப் போட்டு விடுகிறார்... (அது என்னவென்று நீங்களே படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்). இந்தக் கதையைப் படித்ததன் தாக்கம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

    பாஸ் மகன் கதையிலும் கடைசி இரண்டு வரிதான் கதையின் ஹை-லைட்.

    இந்த விளம்பரம் யுகத்தில் வெற்றி விமலர் (பேர் வித்தியாசமா இருக்கே!) தான் செய்யும் உதவியை சுயநல விளம்பரத்துக்காக தம்பட்டமடித்து மீடியாக்களில் பளிச்சிடச் செய்ய... முத்துகுமார் ஐயா ஒரு விதிவிலக்காகத் தெரிகிறார். வாழ்க்கையில் அடையாளம் தெரியாத பல முத்துகுமார் ஐயாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்துக்குவர விரும்புவதில்லை.

    அன்றாட வாழ்க்கையில் வேலை, குடும்பம் என்று prioritise செய்து பேலன்ஸ் செய்வது அவசியம். ஆனால் பலர் இதில் தான் கோட்டை விடுகிறார்கள். எது முக்கியம் என்று சரியான சமயத்தில் புரிந்துக் கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள். காலம் கடந்த பின் சிலர் அதை உணர்ந்து வருந்துகிறார்கள். சிலர் இறுதிவரை புரிந்துக் கொள்ளாமல் தங்களுடைய நிலைப்பாட்டிலேயே இருந்து விடுகிறார்கள். இதை சொல்லியும் சொல்லாமலும் விட்ட கதை பொன் மணித்துளிகள். அவசியம் படிக்க வேண்டிய கதை.

    காதில் விழுந்த காட்சிகள்... யூகிக்க முடிந்தாலும் வித்தியாசமான கற்பனை...

    மனம் ஒரு குரங்கு. வாய்ப்பு கிடைத்தால் சபலப்பட்டு தவறு செய்யத் தயங்காது. ஆனால் தாய்மை புனிதமானது. விலை மதிப்பற்றது. மனம் தவறு செய்தாலும் தாய்மை அதை அடக்கிவிடும்... அமோல் இறுதியில் வளையலையும் ஐம்பது ரூபாயையும் திருப்பிக் கொடுத்ததில் நம் மனதில் நிச்சயமாக ஒருவித நிறைவை உணர முடிகிறது... அமோல் கதையில்...

    வேலு நாச்சியாரின் வரலாறு கச்சிதமாகக் கூறப்பட் டிருக்கிறது. முழு சரித்திரமும் படிக்க பொறுமை இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்தால் கண்டிப்பாக வேலு நாச்சியாரின் வீர சாகசங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

    இந்தத் தொகுப்பில் பல கதைகள் நம்மிடையே நடக்கும் பல சம்பவங்களின் அடிப்படையில்தான் பின்னப் பட்டிருக் கின்றன. அந்த வரிசையில் பணங்காட்டு நரிகள் ஆன்-லைன் பண மோசடி கும்பலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கதையில் கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்தாலும் நல்ல பாடம்.

    மாயம் விலக்கு மனசே ஒரு திகில் கதையைப் போல் ஆரம்பித்து விஷுவல் ஹாலூசினேஷன் விஷயத்தை சாமர்த்தியமாக இணைத்திருக்கிறார் ஆசிரியர்... மனதில் ஏற்படும் பல மாயங்களுக்கு காலம் தான் நிவாரணம். உண்மையில் இது ஒரு நாவலாக எழுதப்பட வேண்டிய கரு. சிறுகதையாக்கி யிருக்கிறார் ஆசிரியர்... இதை நாவலாக்க இன்னமும் முயற்சிக்கலாம்... ஒரு த்ரில்லர் பிறக்க வாய்ப்பிருக்கிறது.

    தப்பான கணக்கு, தேவை ஒரு தனி இடம், புரொகோலியை ஏன் புறக்கணித்தாள் என்ற குறு நாடகம், உள்ளிருந்து ஒரு குரல் (ஜனித்திருக்கும் கருவே தாயுடன் உரையாடுவது நல்ல கற்பனை), வரைத்தன்று உதவி, மின்னல் தெறித்த பார்வை என்று வரிசையாக மணி மணியான கதைகள்.

    கடைசி நிமிடங்கள்... இன்றைய யதார்த்தத்தின் பிம்பம். பெற்றவர்களிடம் வீடியோ கால்கள் மூலம் பாசத்தைக் கொட்டுபவர்களின் இயலாமையின் வெளிப்பாடு.

    கரடு முரடாக இல்லாமல் வழுக்கிக் கொண்டு போகும் நடை... எங்கேயும் சலிப்பு ஏற்பாடாமல் பார்த்துக் கொண்ட சாதுர்யம்... புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் எழுத்து...

    கடல் கோழிகள் நிச்சயம் உங்கள் மனதில் நிறைவாக கூவிக் கொண்டே இருக்கும்.

    ஆசிரியர் பத்மினி பட்டாபிராமனுக்கு வாழ்த்துக்கள்.

    16/12/2023

    எஸ்.எல். நாணு

    என்னுரை

    என்னுடைய ஒவ்வொரு வெற்றியையும் என் அம்மா அமரர் திருமதி. ராஜம், என் அப்பா அமரர் திரு.எம்.பி. துரைஸ்வாமி அவர்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன்.

    என் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என் கணவர் திரு. பட்டாபிராமன் அவர்களுக்கு முதல் நன்றி.

    குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள், அமுதசுரபி, கல்கி, சாவி, குங்குமம், லேடீஸ் ஸ்பெஷல், இலக்கியப்பீடம், தாய், மங்கை, ராஜம், தமிழரசி, மங்கையர் மலர், நம் உரத்த சிந்தனை போன்ற பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளும் பெற்ற எனது சிறுகதைகள்,

    1. மாமரத்து வீடுகள

    2. புது வெளிச்சம்

    3. முப்பரிமாணம்

    4. மலைச் சரிவில் ஒரு டீக்கடை

    ஆகிய சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

    கல்கியில் முதல் பரிசு பெற்ற வேட்கை குறுநாவல் உள்ளிட்ட, பல பத்திரிகைகளில் வெளியான குறு நாவல்களைத் தொகுத்து ‘அன்னபூர்ணா’ என்னும் பெயரில் புத்தகம் வெளிவந்துள்ளது.

    எனது கம்யூட்டர் கிராஃபிக்ஸ், மற்றும் அனிமேஷன் கட்டுரைகள், ‘டிஜிடல் வாழ்க்கை’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

    அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பயண அனுபவங்கள், ‘உலக சுற்றுலாவாசியாக’என்னும் புத்தகமாக வந்துள்ளது.

    அமரர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன், (ஆனந்தவிகடன்) அமரர் திரு. எஸ். பாலசுப்பிரமணியம், அமரர் திரு.சாவி அவர்கள், அமரர் திரு.ப்ரியா கல்யாணராமன் ஆகியோர் எனது பல கதைகளை வெளியிட்டு ஊக்கம் தந்திருக்கிறார்கள்.

    கடந்த மூன்று ஆண்டுகளில், தினமலர் வாரமலர், ராணி, மங்கையர் மலர், குமுதம் சினேகிதி, மின்மினி, மங்கையர் மலர், கலைமகள், லேடீஸ் ஸ்பெஷல்,இலக்கியப் பீடம், குவிகம் தொகுப்பு, சீனியர் சிடிசன்ஸ் ஃபாரம், பொதிகை மின்னல், இவற்றில் வெளிவந்த எனது சிறுகதைகளைத் தொகுத்து, கடல் கோழிகள் என்ற புத்தகமாக தற்சமயம் வெளியிடுகிறேன்.

    திருமதி. லக்ஷ்மி நடராஜன், திருமதி. ஜி.மீனாட்சி, திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியம், தினமலர் வாரமலர் ஆசிரியர், குமுதம் சினேகிதி திருமதி. ராஜசியாமளா,, திருமதி. கிரிஜா ராகவன், திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், திரு. உதயம்ராம், திரு வசீகரன், திரு. கண்ணன் விக்கிரமன் ஆகிய அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...

    இதற்கு முன் எனது புத்தகங்களை வெளியிட்ட திருமதி. சிவசங்கரி (மாமரத்து வீடுகள்), திரு.நல்லி குப்புசாமி (புது வெளிச்சம்) இயக்குனர் திரு.வசந்த்சாய் (டிஜிடல் வாழ்க்கை) திரு.லேனா தமிழ்வாணன் (உலக சுற்றுலாவாசியாக), காத்தாடி ராம மூர்த்தி (அன்னபூர்ணா, மலைச்சரிவில் ஒரு டீக்கடை, முப்பரிமாணம் ஆகிய நூல்கள்), ஆகியோருக்கு மிகவும் நன்றி.

    பத்மினி பட்டாபிராமன்

    எண் 21, மூன்றாவது டிரஸ்ட்

    கிராஸ் தெரு,

    மந்தவெளிப்பாக்கம்,

    சென்னை 600028.

    தொலைபேசி : 98414 33622

    திருமதி. பத்மினி பட்டாபிராமன்

    பத்திரிகையாளர், எழுத்தாளர்.

    உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அனிமேஷன், வெப் டிசைனிங் துறையில் வருகைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பயிற்சி நிலையம் நிறுவி அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்திருக்கிறார்.

    சென்னை தொலைக் காட்சியில் அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளராகவும், அகில இந்திய வானொலியில் எஃப்.எம். செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றியவர். அகில இந்திய நாடக விழாக்களில் இவர் எழுதிய நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகை தொலைக் காட்சியின் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கு எழுத்து வடிவம் தந்துள்ளார்.

    சிறுகதைகள், குறுநாவல்கள், புதினங்கள், நாவல்கள், தவிர மல்டிமீடியா, மற்றும் பேட்டிக் கட்டுரைகள், மருத்துவம், உடல் நலம், தோட்டக் கலை, அழகுக் கலை, புகைப்படக் கலை, உலகம் சுற்றிய பயண அனுபவங்கள் ஆகியவை பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    தினமலர் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, ராணி, அமுதசுரபி, குங்குமம், கலைமகள், குமுதம் சினேகிதி, இலக்கியப் பீடம், லேடீஸ் ஸ்பெஷல், மங்கையர் மலர், மஞ்சரி, பெண்மணி போன்ற பல பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

    அமுதசுரபி கல்கி இதழ்களில் குறுநாவல் முதல் பரிசு, ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைக்கான பரிசு, குமுதம் சிறுகதை பரிசு,கல்கி நினைவு சிறுகதை பரிசு, இலக்கியபீடம் சிறுகதை பரிசு உட்பட பரிசு பெற்றவர்.

    இலக்கியசிந்தனை விருது, எழுத்துச் சுடர், தியாகதுருகம் விருது, உரத்தசிந்தனை ஜி.வி விருது, டாக்டர்.ஜே.ஜி. கண்ணப்பன் விருது, M.G.R ARTS OF EXCELLENCE விருது, I.F.P.T அளித்த வனிதா புரஸ்கார், லயன்ஸ் கிளப் சிறந்த பெண்மணி விருது, லேடீஸ் ஸ்பெஷல் அளித்த கலைத் திலகம் உட்பட பல விருதுகள் பெற்றவர்.

    1. கடல் கோழிகள்

    கடற்கரைச் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு ஷாலினிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான் நீரஜ்.

    ப்ராஜெக்ட் லீடர்கள், ஜி. எம் கலந்து கொள்ளும் முக்கியமான மீட்டிங் முடிந்ததும் ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்றிருக்கிறாள். முன்னே பின்னே ஆகலாம்.

    எப்படி இருந்தாலும் இன்று அவளிடம் சொல்லியே ஆக வேண்டும்.

    கார் கண்ணாடியை லேசாக இறக்கியதில் கடற்காற்று முடியைக் கலைத்தது. ஸ்டைலாக கோதிக் கொண்டான். இந்த கருநீல ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் ஷர்ட் அவளுக்குப் பிடிக்கும்.

    ஒரு நல்ல காஃபி ஷாப் அல்லது ஸ்டார் ஹோட்டலுக்குப் போயிருக்கலாம். ஷாலினிதான் பீச்சில் சந்திக்கலாம் என்று தீர்மானித்தாள்.

    இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் அவன் மார்க்கெட்டிங், அவள் ஐ. டி பிரிவில் முதன்மை அதிகாரி...

    நேற்று லன்ச்சில் அவளது கேபினுக்குப் போனான். அவள் இருப்பது வேறே பில்டிங்...

    ஹாய் நீரஜ் எங்கே வந்தே? என்றாள் வியப்புடன்...

    உன்னோட கொஞ்சம் பேசணும் ஷாலினி

    "இப்ப டயமில்லியே... வாட்சைப் பார்த்தாள்.

    சொல்லு... ரொம்ப முக்கியமான விஷயமா... ஆஃபிஸ்லே ஏதாவது பிரச்னையா?

    அலுவலகம், ப்ராஜெக்ட் விட்டா வேறு ஒண்ணுமே தெரியாதா உனக்கு?

    நினைவை அடக்கிக் கொண்டு கேட்டான்.

    எப்ப நீ ஃப்ரீயாவே?

    இன்னைக்கு சான்ஸே இல்லே... இப்ப வரீயா. கேன்டீனுக்குப் போகலாம்... ஒரு அரை மணி நேரம் டயம் இருக்கு,

    அரை மணியில் அவசரமாக சொல்லும் விஷயம் அல்ல இது... அதுவும் கேன்டீனில்.

    நாளைக்கு...?

    இரு... செக் பண்ணிட்டு சொல்றேன்... தன்னுடைய மொபைலில் பார்த்துவிட்டு

    நாளைக்கு ஈவ்னிங் ஃபைவ் தர்டி வரை ப்ராஜெக்ட் லீடர்ஸ் மீட் இருக்கு. ஜி. எம் வராரு... ஆறு மணிக்கு வேணா பீச் போகலாம். நான் போய் ரொம்ப நாளாச்சு... என்றவள்,

    என்ன நீரஜ் சொல்லப் போறே.?...அலுத்துக் கொண்டாள்.

    கடற்கரையில் பேசலாம் என்ற அவள் முடிவில் அவ்வளவாக விருப்பம் இல்லை அவனுக்கு.

    ஸ்டார் ஹோட்டல், காஃபி ஷாப் எல்லாம் மறுத்தாள்.

    ஏழு ஏழரைக்குள் வீட்டுக்குப் போகணும் நீரஜ்... இல்லேன்னா அப்பா டென்ஷனாயிடுவார்... உனக்குத் தெரியாதா?

    நீரஜ் வீட்டில் அம்மா கல்யாணம் என்கிறாள். அவளது இரண்டு விட்ட அண்ணன் மகள் ஷாலினி. அவனுக்கு தன் பெரிய ஐ.டி. நிறுவனத்தில் அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தவள். பார்த்த உடனே பிடித்து, கடந்த பல மாதங்களாக அவனது கல்யாணக் கனவுகளின் வலம் வருபவள்.

    ஃபோன் ஒலித்தது.

    ஆவலாக எடுத்தான். ஷாலு இல்லை. சுதாகர் அவன் நெருங்கிய நண்பன்.

    சொல்லுடா... உன்னோட ப்ரமோஷன் கன்ஃபர்ம் ஆச்சா?

    ஆல்மோஸ்ட் கன்ஃபர்ம்ட்தான்... அஃபிஷியலா ஆர்டர் கையிலே வரணும்... அதான் ஆஃபீஸ்லேயே வெய்ட் பண்றேன். ஆமா, நீ எங்கே இருக்கே நீரஜ்,

    அப்புறமா சொல்றேன்... நானும் ஒரு குட் நியூஸ் சொல்றேன்... இன்னைக்கு டின்னருக்கு மீட் பண்ணலாமா?

    ஷ்யூர்...

    ஷாலினி வருவதைப் பார்த்து ஃபோனை ஆஃப் செய்தான்.

    தென்றல் போல் மிதப்பது போன்ற நடையில் ஷாலினி... வருகிறாள். இளம் மஞ்சள் நிற சுரிதாரில், இந்த மாலை வெயிலில் ஒரு மஞ்சள் ரோஜா போல் ஷாலினி...

    கரும் பட்டாய் கூந்தல் இரு தோள் வழியே வழிந்து காற்றில் அலைபாய்வதும் அதை லேசாக கைகளால் தள்ளியபடியே நடந்து வருவதும் தான் எத்தனை அழகு...?

    ஆஃபீஸுக்கு என்றுமே சுரிதார் அல்லது புடவைதான். ஜீன்ஸ் எல்லாம் போட மாட்டாள்

    ஷாலினி, உன் முகம் மட்டும் எப்படி இவ்வளவு பளபளப்பாக ஸில்க்கியா இருக்கிறது?

    ஒரு முறை கேட்டபோது நிறைய தண்ணீர் குடிப்பதாக சொன்னாள். அழகிய லெபனான் பெண்ணைப் போல உயரமும் பளீர் நிறமும் கண்களும் எப்படி உனக்கு கிடைத்தன?

    இதை அவளிடம் கல்யாணத்துக்குப் பின்தான் கேட்க வேண்டும்.

    முகூர்த்த நாள் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1