Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vacha Kuri Thappathu...
Vacha Kuri Thappathu...
Vacha Kuri Thappathu...
Ebook171 pages1 hour

Vacha Kuri Thappathu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வச்ச குறி தப்பாது தொகுப்பில் உள்ள எனது சிறுகதைகள் வெவ்வேறு களம் கொண்டவை. 

இன்னார்க்கு இன்னாரென்று என் பெங்களூரு நண்பர் ஒருவன் வாழ்வில் (கிட்டத்தட்ட) நடந்த சுவையான சம்பவத்தின் அடிப்படையில் உருவானது.

உலகம் யாவையும் - கொரோனா போன்ற கொடிய நுண்துமியின் (Virus) தாக்குதல் சோகமாகவாகவே முடியவேண்டுமா என்ன? எதையும் சவாலாக ஏற்றுக்குக்கொண்டு சந்திக்கும் இரு பெண்களின் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம்......எதையும் பாஸிட்டிவ்வாக சந்தியுங்கள் என வலியுறுத்தும் ஒரு கதை.

கத்திமுனை காயம் செய்யும் - ஒரு பிரபல கவர்ச்சி நடிகையின் வாழ்வில் நிஜமாகவே நடந்த சில சம்பவங்கள், ஒரு இளம் தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரியின் பார்வையில்.....

கர்மா நின்று பேசும், நான் பார்த்ததிலே, நானே வருவேன், வரலாம் வா  போன்றவை - Flash Fiction எனப்படும் புனைவு வகையில் என்னுடைய சில கற்பனை முயற்சிகள்....

ப்ரம்மாஸ்திரம் - Time Travel மூலம் கடந்த காலம் சென்று ஒரு குறிப்பிட்ட பிரபலத்தைச் சந்தித்து உரையாடுவது. நிச்சயம் சுவாரஸ்யமான விஞ்ஞானப் புதினமாக இருக்க நான் கியாரண்டி.

விபரீத முரண்: ஒரு விபரீத சுவையான கற்பனை என படிப்போரால் பாராட்டப்பட்ட வித்தியாசமான சிறுகதை. 

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் வலம் தமிழ் இலக்கிய மாத இதழில் வந்தவை. ஒவ்வொன்றும் படிப்போரின் கவனத்தைக் கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580131305642
Vacha Kuri Thappathu...

Read more from Ram Sridhar

Related to Vacha Kuri Thappathu...

Related ebooks

Reviews for Vacha Kuri Thappathu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vacha Kuri Thappathu... - Ram Sridhar

    http://www.pustaka.co.in

    வச்ச குறி தப்பாது...

    சிறுகதைத் தொகுப்பு

    Vacha Kuri Thappathu...

    Sirukathai Thoguppu

    Author:

    ராம் ஸ்ரீதர்

    Ram Sridhar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ram-sridhar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இன்னார்க்கு இன்னாரென்று...

    உலகம் யாவையும்...

    கத்திமுனை காயம் செய்யும்... கண்பட்டால் மாயம் செய்யும்….

    கர்மா நின்று பேசும்…

    சிக்கன் (Chiken) ஆட்டம்

    நாமே நீயோ/நானோ அல்ல.நாமே நாம்

    நானே வருவேன்…...

    நான் பார்த்ததிலே...

    ப்ரம்மாஸ்திரம் :

    மறைக்கப்பட்ட உண்மைகள்-

    வரலாம் வா...

    வலையில் சிக்காத மாமத யானை!!

    விஞ்ஞானப் புதினங்களின் பார்வையில் எதிர்காலம்

    விதி விட்டு விலகி...

    விபரீத முரண்

    ராம் ஸ்ரீதர் எழுதிய முந்தைய புஸ்தகா வெளியீடு...

    சிறுகதைகளைப் பற்றி சில

    மதிப்பீடுகள்...

    வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில் புத்தகத்தைப் பற்றி வாசகர் திரு. குரு ராஜன் ஒரு கண்ணோட்டம்:

    http://www.pustaka.co.in/home/ebook/tamil/vaathiyar-sujatha-kaattiya-vazhiyil

    1-அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும் ஏர் ஹோஸ்டஸ் பேயும்

    சாதாரண ஒரு சம்பவத்தைத் தேர்ந்த எழுத்தாளர் போல அலசிய விதம் அருமை. ஐ.டி யில் பணி புரியும் மகனுடன் அமெரிக்காவிற்கு முதல்முறையாக விமானத்தில் செல்லும் அம்மாவிற்கு நெஞ்சு வலி வந்து, அதற்காக தாயும் மகனும் படும்பாடு சுவையான ஒரு சம்பவமாக சொல்லப்படுகிறது. ஏர் ஹோஸ்டஸ் துளிக்கூட இரக்கமே இல்லாமல் இருப்பதும், முன் பின் தெரியாத ஒரு நர்ஸ் உதவிக்கு வருவதையும் சராசரவெனச் சொல்லி, நம்மையும் கொஞ்சம் நேரம் கவலைப்பட வைப்பது அருமை. நடிகர் 'பியர்ஸ் ப்ராஸ்னன்' போலத் தோற்றமுள்ள இளம் டாக்டர், நெக்ஸியம் என்று விஷயங்களை அடுக்குவது கதைக்கு சுவை கூட்டுகிறது. தாயார் - மகன் சம்பாஷணைகள் மிக யதார்த்தம்.

    2-எங்கெங்கு காணினும் சக்தியடா

    Female infanticide சப்ஜெக்ட்டை மிக நாசூக்காகக் கையாண்டது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், அந்த கெமிக்கல் அதன் பெயர் / குணநலன்கள் (என்னதான் பொறுப்புத் துறப்பு இருந்தாலும்) அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்களும் பெண் குழந்தை என்றால் வேப்பங்காய் என நினைப்பவர்களுக்கு முடிவு நிச்சயம் அதிர்ச்சி தரும்.

    3-எதிர்காலக் குற்றங்கள்

    இது சமீபத்தில் கணையாழி இதழில் வெளிவந்த கதை. ஒரிஜினல் கதையை மிகவும் சிதைத்துவிட்டார்கள் என்று திரு Ram Sridhar வருத்தப்பட்டு சொல்லியிருந்தார். உண்மைதான். கதை பாதியிலிருந்து ஆரம்பித்தாலும், கொண்டு சென்ற விதம், அதிலுள்ள கருத்துக்கள் பாராட்டுக்குரியவை. முழுக் கதையையும் இங்கு (Facebook -ல்) முடிந்தால் பகிர வேண்டுகிறேன்.

    4-காற்றினில் கரைந்த உண்மை

    கிட்டத்தட்ட சுஜாதாவின் கொலையுதிர்காலம் போல அமானுஷ்யத்தையும், மெய்ஞானத்தையும் கலந்த விதமும், கணேஷ் - வசந்த் பற்றிய குறிப்புகளும், அந்த இரட்டையரைப் போலவே வரும் விஸ்வா - பிரஷாந்த் ஜோடியும் கலக்கல். முடிவு சத்தியமாக யூகிக்க முடியாத ஒரு புதுமை. பாராட்டுக்கள்.

    5-சொல்லாதே யாரும் கேட்டால்...

    ஆஹா... சாமர்த்தியமாக சுஜாதவின் சரித்திரப் பாத்திரங்களான கணேஷ் - வசந்த் ஜோடியை உலவ விடுவது மிகச்சிறப்பு. கொலை நடக்கும் விதமும், கணேஷ் அந்த முடிச்சை அவிழ்க்கும் விதமும் சூப்பர்ப். அதே போல கணேஷ் - வசந்த் உரையாடல்கள். வாத்தியார் பாதிப்பு நிறைய இருந்தாலும், மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளன. தொகுப்பில் இந்தச் சிறுகதைக்கு என் முதல் மதிப்பெண். அட்டகாசம்.

    6-தொலைபேசி வழியே சாப்பாடு

    அந்திமழை மாத இதழில் படித்திருக்கிறேன். ஒரு அம்மாவின் ஆதங்கம். டிபிக்கல் கணவன் பாத்திரம். சமையலில் ஆரம்பித்து அதிலேயே சுபமாக முடிப்பது நல்ல விஷயம். சுவாரஸ்யமான கதை.

    7-பார்க்கக் கூடாத பா(ர்)வை

    இவ்வளவு டெக்னிகலாக எழுதினால் ஒரு சராசரி எழுத்தாளர் வரிசையில் சேராதே!! வித்தியாசமான சிறுகதை.

    8-மழை நடுவே தாயம்

    அந்நியனில் சுஜாதா குறிப்பிட்ட கருடபுராணம் reference திரு Ram Sridhar -ஐ ரொம்பவே பாதித்துள்ளது என்று தெரிகிறது. ம்ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமான ஆனால் நிச்சயம் ரசிக்கத்தக்க சிறுகதை. அப்பா - மகன் உறவை நன்றாக establish செய்துள்ளார்.

    8-வாசனை மூக்கு விவகாரம்

    கணேஷ் - வசந்த் பாதிப்பில் உருவான விஸ்வா - பிரஷாந்த் தோன்றும் மற்றுமொரு கதை. ஸலாமியா, தீவிரவாதி, மார்ஸிபன் என்று கலந்துகட்டி ஒரு சுவையான, சுவாரஸ்யமான சிறுகதை.

    10-விட்டு விடுதலையாகி...

    லேட்டஸ்ட் ட்ரெண்டான Fake video தொழில்நுட்பத்தைத் திறமையாக உள்ளே நுழைத்து பின்னப்பட்ட ஒரு சுவாரஸ்யக் கதை. காரணம் தெரிய வரும்போது இதற்காக இவ்வளவு பாடுபட வேண்டுமா என்று தோன்றுகிறது.

    11- விபரீத முரண்

    அட்டகாசம். வாதினி வெளியீடான தீபாவளி மலரில் முதலில் வந்து படித்துள்ளேன். மிக, மிக வித்தியாசமான சிந்தனை. புத்திசாலி கதாநாயகன் மட்டுமல்ல. புத்திசாலி வில்லனும் கூட வரும் அற்புதக் கதை. கதைக்களம் ரொம்ப டாப்பிக்கலாக இருப்பது இன்னொரு விசேஷம்.

    Ram Sridhar மென்மேலும் நிறைய கதைகள் எழுதிப் புகழ்பெற மனமார வாழ்த்துகிறேன். கடவுள் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.

    அன்புடன்,

    கே குரு ராஜன்

    டெபுடி ஜெனரல் மேனேஜர் (ஓய்வு),

    தென்னக ரயில்வே,

    சென்னை

    நமது ராம் ஸ்ரீதர் அவர்கள் எழுதி புஸ்தகாவில் வெளியிட்டுள்ள வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில் சிறு கதை தொகுப்பு பற்றிய நண்பர் திரு.ஸ்ரீனிவாசன் ராமமூர்த்தி சிறு அறிமுகம் -

    அனைத்து கதைகளும் தொகுப்பின் தலைப்பிற்கு ஏற்றவாறு சிறிதும் மாறாமல் உள்ளன என்பதில் ஐயமில்லை .சுஜாதா சொல்லி இருக்கின்ற சிறு கதை இலக்கணத்தின் படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் அருமையாக அமைந்து இருப்பதால், படித்து முடித்த உடன் சுஜாதா கதைகளை படித்து முடித்த பின் ஏற்படும் அதே உணர்வு ஏற்படுகிறது

    1. அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர்ஹோஸ்டஸ் பேயும்

    நெக்ஸியம் என்கிற மாத்திரையை மறந்து விட்டு விமானத்தில் ஏறி விடுகிறார்கள் என்ற கருவை வைத்து யதார்த்தமாக எழுதப்பட்ட கதை சுவாரசியம் .

    2. எங்கெங்கு காணினும் சக்தியடா

    மாமியார் மருமகள் வெறுப்பு உறவை வித்யாசமான முறையில் வெளிப்படுத்தும் எழுத்து நடை... முடிவும் வித்யாசம்...

    3. எதிர் கால குற்றங்கள்

    இந்த கதையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடித பரிமாற்றங்கள் அண்மையில் உண்மையாகவே கதை போட்டியில் பங்குபெறும் ஒரு புதிய எழுத்தாளருக்கும் கதை போட்டி நடத்தும் நடுவர்களுக்கும் நடந்த நிகழ்வு என்று படித்ததாக ஞாபகம். அதை கருவாக வைத்து அந்த எழுத்தாளரையே கதை பத்திரமாக்கி சர்க்காஸ்ட்டிக்காக நகரும் கதை...

    4.காற்றினில் கரைந்த உண்மைகள்

    இறந்தவரின் ஆவி பழிவாங்குகிறது என்று சொல்லிக்கொண்டு அதற்கு உதவி செய்ய நாடியவர்களே எதிர் பாராத வகையில் முடிவுறும் விறு விறுப்பான கதை

    5. சொல்லாதே யாரும் கேட்டால்

    திடமான மெடீரியல் எவிடென்ஸ் மூலம் கொலை வழக்கில் கைதானவரை விடுவிக்க தலைவரின் கணேஷ் வசந்ததை பயன்படுத்தி அதே பாணியில் துப்பு துலக்கி உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்டும் க்ரைம் ஸ்டோரி .பிட்ஸா டெலிவரி இளைஞன் மூலம் க்ளூ கிடைத்ததாக காட்டி இருப்பது சிறப்பின் உச்சம்...

    6. தொலைபேசி வழியாக சாப்பாடு

    கணவனிடமிருந்து எப்போதும் வெறுப்பையே கிடைக்க பெற்று மனம் உடைந்த நிலையில் இருக்கும் மகப்பேறு இல்லாத ஒரு பெண்மணிக்கு வருகிற ராங் கால் மூலம் கிடைக்கும் மகன் உறவை விவரிக்கும் புது விதமான கதை .

    7. பார்க்ககூடாத பா(ர்)வை

    டபுள் கிராஸ் வகை கதைகள் படித்திருக்கிறோம் இந்த கதையை ட்ரிபிள் கிராஸ் வகையில் சேர்க்கலாம்... சாதாரணமாக ஆரம்பித்து, சஸ்பென்ஸ் கொடுத்து, ட்விஸ்டுடன் முடிந்திருக்கும் சிறப்பான ஒரு கதை...

    8. மழை நடுவே தாயம்

    திகில் கதை வகையை சேர்ந்த இந்த கதை சற்றே மாறுபட்ட பின்னணியை கொண்டிருக்கிறது... கருட புராணத்தில் இருந்து சொல்லப்பட்டு இருக்கும் அந்த விஷயங்களுக்கு பெயர் ஏதும் இருந்தால் குறிப்பிட்டு இருக்கலாமே கிருமிபோஜனம் என்கிற மாதிரி...

    9. வாசனை மூக்கு விவகாரம்

    இந்த கதையின் தலைப்பே வித்யாசமாக இருக்கிறது .மூக்கையும், வாசனையும் பற்றி மணமான விஷயங்கள குறிப்பிட பட்டுள்ளன... கதையில் சதியும் சிறப்பாகவே விஷ்வா, பிரசாந்த் (கணேஷ் வசந்த் மறு உருவாக்கம்) என்கிற துடிப்பான வக்கீல் இளைஞர்களால் மோப்பம் பிடிக்கப்பட்டு தலைவர் பாணியிலேயே முடிக்க பட்டுள்ளது .

    10. விட்டு விடுதலையாகி

    திரில்லர் வகை கதைகளில் வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் டெக்நாலஜியை கொண்டு வரும் போது அதிக சுவாரஸ்யம் கிடைக்கும். தலைவரின் கதைகள் என்றும் மனதில் நிலைத்து நிற்க இதுவும் ஒரு காரணம்... இந்த கதை அந்த வகையை சேர்ந்தது தலைவரின் கூற்றின் படி உண்மைக்கு அருகில் வரும் கதை வகை...

    11.விபரீத முரண்

    கதையின் பெயருக்கேற்றார் போல முரணாகவே ஆரம்பித்து விபரீத முரணாக முடிகிறது .பரபரப்பான நிகழ்வுகளுடன் நகர்ந்து ஊகிக்க முடியாத நிகழ்வுடன் முடிகிறது .தலைவர் கதைகளில் புதிய விஷயங்களை அறிமுகபடுத்தி அதை மையமாக வைத்து எழுதுவார். அந்த வகை கதை போல் இது உள்ளது. உதாரணம் டெக்ஸ்ட்ரோகார்டியா...

    அன்புடன்,

    ஸ்ரீனிவாசன் ராகவன்,

    BSNL (Retired),

    சென்னை

    நண்பர் ராம் ஸ்ரீதரின் வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில்… சிறுகதைத் தொகுப்பு - நண்பர் திரு. ஸ்ரீனிவாசன் உப்பிலி, மினி விமர்சனம்…

    1-அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும் ஏர் ஹோஸ்டஸ் பேயும்

    அம்மா - மகன் - ஏர் ஹோஸ்டஸ் - நெக்ஸியம் நாலே கேரக்டர்ஸ். ஜாலியாக ஆரம்பித்து, கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து உங்கள் உதடுகளில் ஒரு புன்னகையை வரவழைக்கும் கதை. சரளமான நடை. கண்டிப்பாக படியுங்கள் என பரிந்துரைக்கிறேன்.

    2-எங்கெங்கு

    Enjoying the preview?
    Page 1 of 1