Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...
Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...
Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...
Ebook139 pages56 minutes

Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில்…” சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எல்லாமே சுஜாதா எழுதியது போல பல்நோக்கு களங்களுடன் கூடிய வித்தியாசமான கதைகள்தாம். கிட்டத்தட்ட எல்லாக் கதைகளின் அடிநாதமும் ஒரு மர்மம் / ஒரு திகிலான சம்பவம் சார்ந்ததாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று நிச்சயம் வேறுபடும்.

அம்மாவும் ஏர்ஹோஸ்டஸ் பேயும் சிறுகதை நான் நேரில் (ஒரு விமானப் பயணத்தில்) பார்த்த சம்பவத்தின் அடைப்படையில் எழுதப்பட்டது.

எங்கெங்கு காணினும் சக்தியடா சிறுகதை என் நண்பன் ஒருவனின் அண்ணிக்கு நேர்ந்த நிகழ்வும், அந்த அண்ணி துணித்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்பதின் கற்பனையே.

நாமே நீயோ / நானோ அல்ல; நாமே நாம் சிறுகதை என் நண்பன் ஒருவனின் தங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியை ஒட்டிய கற்பனை உருவகமே.

கர்மா நின்று பேசும் சிறுகதை ஒருவித FLASH FICTION. சட்டென ஆரம்பித்து, சடுதியில் முடிந்துவிடும் இதுவும் நான் நேரில் சந்தித்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவான கற்பனையாக்கமே.

மற்ற சிறுகதைகளிலும் அவ்வாறே. ஆசான் சுஜாதா அவர்கள் காட்டிய வழியில் அனாவசியமான வார்த்தை வர்ணனைகள், விரிவான விவரிப்புகள் போன்றவை எதுவுமின்றி சுருக்கமாக அமைய முயற்சி செய்துள்ளேன்.

படித்து இன்புறுங்கள். படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131305035
Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...

Read more from Ram Sridhar

Related to Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...

Related ebooks

Related categories

Reviews for Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil... - Ram Sridhar

    http://www.pustaka.co.in

    வாத்தியார் சுஜாதா காட்டிய வழியில்….

    சிறுகதைத் தொகுப்பு

    Vaathiyar Sujatha Kaattiya Vazhiyil...

    Sirukathai Thoguppu

    Author:

    ராம் ஸ்ரீதர்

    Ram Sridhar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ram-sridhar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர்ஹோஸ்டஸ் பேயும்

    எங்கெங்கு காணினும் சக்தியடா....

    எதிர்காலக் குற்றங்கள்

    காற்றினில் கரைந்த உண்மை.......

    சொல்லாதே யாரும் கேட்டால்

    தொலைபேசி வழியே சாப்பாடு.

    பார்க்கக்கூடாத பா(ர்)வை......

    மழை நடுவே தாயம்...

    வாசனை மூக்கு விவகாரம்

    விட்டு விடுதலையாகி.........

    விபரீத முரண்

    அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர்ஹோஸ்டஸ் பேயும்

    அவசரமாக அலுவலக வேலை நிமித்தம் நியூ யார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்ன போது ஆரம்பித்தது வினை.

    டே கண்ணா, அம்மா அமெரிக்கா போனதே இல்லடா, கூட்டிண்டு போடா, என்றாள்.

    என்னமா, நியூ யார்க் என்ன பாம்பே, டெல்லியா, நெனச்ச போது போறதுக்கு, ஏகப்பட்ட செலவு ஆகும்மா, என்றேன்.

    அம்மா நொடித்துக் கொண்டாள். நீ நெனச்சா முடியும், போறது போ, என்றாள்.

    தனக்கென எதுவுமே வேண்டுமென அம்மாஅதுவரை கேட்டதில்லை. எனவே அம்மாவின் அந்த குழந்தைத்தனமான வேண்டுகோளைத் தட்டுவதற்கு என் மனம் கேட்காமல் அம்மாவையும் கூட்டிக்கொண்டு யு.எஸ் செல்ல ஆயத்தமானேன்.

    சென்னை யு.எஸ் கான்ஸலேட்டில் அதிகம் படுத்தாமல் விஸா கொடுத்துவிட, அம்மா அவளுடைய உறவினர்கள் ஒருவர் விடாமல் தொலைபேசி தன்னுடைய யு.எஸ் பிரயாணத்தைப் பற்றி சொல்லி, சொல்லி மாய்ந்துபோனாள்.

    ஒரு அதிகாலைப் பொழுதில் விமானத்தில் ஏறிவிட்டோம். இமிக்ரேஷன் சமயத்தில் அம்மா அங்கு இருந்த அனைவரிடமும் தான் யு.எஸ்ஸுக்கு முதன்முதலாக போவதை பற்றி சொல்லி பெருமைப் பட்டுக்கொள்ள, நான் அலுத்துக்கொண்டேன்.

    விமானத்தின் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து, அம்மாவுக்கு ஸீட் - பெல்ட் முதல் மற்ற உபகரணங்கள் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு, விமானம் மேலேறியபின் வந்த பணிப்பெண் ஒருவரிடம் அம்மாவுக்கு சுத்தமான போர்வை கேட்டு வாங்கிக் கொடுத்தேன். தூக்கக் கலக்கத்திலும் விமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து வியந்து கொண்டிருந்த அம்மாவைத் தூங்க வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன். பிறகு நானும் கண் அயர்ந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது,

    திடீரென அம்மா என்னை எழுப்பி, விடிஞ்சாச்சுடா, டாய்லட் போய்ட்டு, பல் தேச்சுண்டு வா, காஃபி தரேன், என்ற அம்மாவை என்ன சொல்லுவது என்று புரியவில்லை.

    அம்மா, அதெல்லாம், எறங்கினதுக்கு அப்புறம் பாத்துக்கலாம், அப்புறம் இவா தர்ற காஃபி மூத்திரம் மாதிரி இருக்கும், அதையெல்லாம் ட்ரை பண்ணவேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணயர்ந்தேன்.

    மறுபடியும் அம்மா என்னை எழுப்பி, கண்ணா, என்கிட்டே நல்ல கோதாஸ் காஃபி பௌடர் இருக்கு, அதுல வேணும்னா கொஞ்சம் அந்த ஹோஸ்டஸ் பொம்னாட்டிகிட்ட குடுத்து, அதுல, நல்ல ஸ்ட்ராங் காஃபி போட்டுக் கொடுன்னு சொல்லலாமா, என்றாள்.

    அம்மா, அதெல்லாம் பண்ண இது என்ன கல்யாண வீடா? பிளேன்! இரண்டாவது, அதெல்லாம் செக்-இன் பாக்கேஜ்ல போயிடுத்து, ஹாண்ட் பாக்ல, நம்ம பாஸ்போர்ட்ஸ், பணம், உன்னோட மருந்து, ஒண்ணு -ரெண்டு புஸ்தகம் இதெல்லாம் மட்டும்தான் இருக்கு, என்றேன்.

    அம்மா அலுத்துக்கொண்டாள். ஆனாலும், ஒனக்கு பொறுப்பு பத்தாதுடா, கல்யாணம் ஆகி, நல்ல, ஆம்டையாளா வரணும், அப்போதான் சரிப்படும், என்றாள்.

    24 வயதாகிறது எனக்கு, அம்மா அதற்குள் ஒரே பையன் என்பதால் ஜாதகப் பரிவர்த்தனையை ஆரம்பித்து விட்டாள். இது வேறு அடிஷனல் தலைவலி.

    விமானத்தினுள் பிரேக்ஃபாஸ்ட் அறிவிப்பு வந்து, வண்டியைத் தள்ளிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். இது என்ன கிரகச்சாரம்டா, பல்லே தேக்கல, அதுக்குள்ள டிஃபன்! என்று அலுத்துக்கொண்டாள் அம்மா.

    அம்மா, உனக்கு நெக்ஸியம் மாத்திரை கொண்டுவந்தாயா? என நான் கேட்டேன், அம்மா இல்லை எனத் தலையை ஆட்டினாள். சட், என்ன ஒரு முட்டாள்த்தனம்! அம்மாவுக்கு வயிற்றில் அஸிடிட்டி பிரச்னை இருக்கிறது. நேரத்திற்கு சாப்பிட்டால் கூட சிலசமயம் படுத்தி எடுத்துவிடும்.

    அருகிலிருந்த பணிப்பெண்ணை அழைத்து, பிரேக்ஃபாஸ்ட் அப்புறம் முதலில் எனக்கு ஒரு நெக்ஸியம் கொண்டு வருகிறீர்களா? என்று கேட்டேன்.

    நெக்ஸியம் புகழ்வாய்ந்த மருந்து. மற்ற கன்றாவி மருந்துகளோடு ஒப்பிட்டால், பக்கவிளைவுகளும் குறைச்சல் எனபதால்தான் டாக்டர் ராமன் அம்மாவுக்கு அதைப் பரிந்துரைத்திருந்தார். அம்மாவின் வயதுக்கும் ஏற்ற மருந்து என்பதும் ஒரு காரணம்.

    பணிப்பெண் , லெட் மி செக் என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள். சிறிது நேரம் கழித்துத் திரும்பி, ஸாரி சார், நோ ஸச் மெடிசின் வித் அஸ் என்றாள், குரலில் வருத்தமே இல்லாமல். நொந்து கொண்டேன்.

    என்ன ஒரு முட்டாள் நான், விமானம் தரையிறங்கும் வரை எதுவும் ப்ராப்ளம் வராத வரை சரி. டாய்லட் சென்று திரும்பிய அம்மா, அது என்னடா கண்ணா, எலிவளை மாதிரி இத்துணூண்டுக்கு ஒரு டாய்லட், என்றாள். நான் மெதுவாக, அம்மா, காலை ஏதாவது சாப்பிடு. பழம் கிடைக்கும் வாங்கித் தருகிறேன், என்றேன். நெக்ஸியம் இல்லாத குறையை மறைக்க முயன்றேன். ஆனால், தினசரி காலை உணவுக்கு முன் எடுக்கொள்வது பழக்கம் என்பதால் அம்மா மறக்காமல், அந்த நெக்ஸியம்?... என்று இழுத்தாள்.

    இல்லை எனத் தலையை ஆட்டினேன். உனக்கு ஞாபகப் படுத்த மறந்து போனது என் தப்புமா, என்றேன்.

    போறது போ, ஒரு நாள் இல்லைனா ஒண்ணும் ஆகாது, என்றாள் அம்மா.

    காலை உணவாக, வெண்ணெய் தடவிய ரொட்டி, பழம், காஃபி என எல்லாம் முடிந்தது. அம்மா தன்னிடமிருந்த லலிதா ஸஹஸ்ரநாம புத்தகத்தில் ஆழ்ந்தாள். நான் ஃபோர்ப்ஸ் இதழைப் புரட்டினேன். டெஸ்லாவின் மஹாத்மியங்களுக்கு நடுவே வேறு சில செய்திகளையும் பார்க்க முடிந்தது.

    சிலமணிநேரம் கடந்து, ஃபிராங்ஃபர்ட் நெருங்கும் செய்தியை பைலட் வெளியிட்டு, விமானம் மூன்று மணிநேரம் அங்கிருக்கும் என்ற செய்தியைச் சொல்லி வயிற்றில் பால் வார்த்தார். ஃபிராங்ஃபர்ட் விமனநிலையம் பெரிய, நவீன நிறுத்தம் என்பதால் நெக்ஸியம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

    ஃபிராங்ஃபர்ட்டில் விமானம் தரையிறங்கிய போது வெளியே நல்ல மழை. அம்மாவை விஐபி லௌஞ்சில் உட்காரவைத்துவிட்டு ஃபார்மஸியைத் தேடினேன். அதோ, 24 HOURS என்ற பெயரில் ஒரு பச்சை போர்டு ஒளிர்ந்தது. கௌண்டரில் இருந்த பெண் ஆங்கிலம் நன்றாகவே பேசினாள், எஸ் ஸார் ஹவ் மே ஐ ஹெல்ப் யூ? என்றாள். அவளிடம் நெக்ஸியம் வேண்டுமென்றேன். அவள் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் எங்கே என எதிர்க் கேள்வி கேட்டாள். ப்ரிஸ்க்ரிப்ஷன் ஹாண்ட் பேகில் இல்லை, உள்ளே செக்-இன் பாக்கேஜ்ஜில் இருக்கிறது, தற்போது எடுக்கும் நிலையில் இல்லை என்ற என் விளக்கத்தையெல்லாம் கேட்கப் பொறுமை இல்லாமல், ஸாரி, அதைப் போன்ற மருந்துகள் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தரமுடியாது, என்றாள் மிகத் தீர்மானமாக.

    இந்தியாவில் ஒரு சௌகரியம், மருந்துக் கடை கௌண்ட்டரில் கருக்கலைப்பு மாத்திரை வரை சொல்லியே வாங்கிவிடலாம். ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாம் கேட்க மாட்டார்கள். இங்கே அது வேலைக்காகாது.

    அதற்குப் பதில் ஓடிஸி மருந்து வேறு ஏதாவது தரலாமா? என்றாள். ஓவர் தி கௌண்ட்டர் (ஓடிஸி) மருந்துகள் மேல் நம்பிக்கை இல்லாமல், என் அம்மாவின் வயதையும் மனதில் கொண்டு மறுத்தேன்.

    மே பி ட்ரை சம் சோடா என்றாள் புரியாமல்.

    நொந்துபோய் அம்மா அமர்ந்திருக்கும் இடம் திரும்பினேன். அம்மா டிவியில் பொம்மை பார்த்துக்கொண்டிருந்தாள்.

    இரண்டு, மூன்று கடைகளில் செக் செஞ்சாச்சு அம்மா, நெக்ஸியம் கெடைக்கல. என்று அபத்தமாகப் புளுகினேன். உள்ளுக்குள் நியூ யார்க் சென்றடையும் வரை எந்த விதமான பிரச்னையும் வரக்கூடாதே என்று ஒரு ஐஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1