Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anubava Alaigal
Anubava Alaigal
Anubava Alaigal
Ebook215 pages2 hours

Anubava Alaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர்களின் கதைகளில், நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் என்று சொல்லாவிட்டாலும் அநேகமாக தம் வாழ்க்கையின் அனுபவங்களை வைத்துத்தான் எழுதுகிறார்கள். சுத்தமாக கற்பனை என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்த்து, கேட்ட அனுபவித்த நிகழ்ச்சிகள், இன்பம் துன்பம் எப்படியோ வரி வடிவங்களில் தலைகாட்டும். "அனுபவ அலைகள்” என்ற இந்தக் கருத்துக்குளியலில் இளம் வயதில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பேட்டில் எழுதுவது போல் மிகலாகவமாகத் தம் எழுத்து வன்மையில் சித்தரித்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.

நம் வாழ்க்கையில் அன்றாடம் வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகள்தாம் என்றாலும் எழுத்தாளன் எழுத்தில் வடிக்கும்போது கற்பனை மெருகூட்டி பட்டை தீட்டிய வைரம்போல் பளிச்சிடச் செய்துவிடுவான்.

பாமரன் உலகைப் பார்க்கும் பார்வையும் எழுத்தாளன் பார்க்கும் பார்வையும் வெவ்வேறு விதம். எதையும் ஊடுருவிப் பார்த்து தான் பார்த்ததைப் பிறரும் காணும் வண்ணம் எழுத்தில் வடித்துக் காட்டி பிரமிக்க வைப்பது. செப்பிடு வித்தை காட்டுவது எழுத்தாளனின் தீர்க்க தரிசனத்தைக் காட்டும்.

இன்றைக்கும் இத்தனை வருடங்கள் ஆன பின்பும் நேற்று கேட்ட மாதிரி இருக்கிறது, நீங்களே சொல்லுங்கள். உங்களில் யாருக்காவது இந்த வயதில் இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறதா? அதனாலேயே சொல்கிறேன், அனுபவ அலைகள் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்று தன் முத்திரையைப் பதிக்கிறார்.

இந்த வகையில் எழுத்தாளர் திருமதி.அனுராதா ரமணன் அவர்கள் சொற்சிலம்பம் ஆடி வாசகர்களை மகிழச் செய்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003751
Anubava Alaigal

Read more from Anuradha Ramanan

Related to Anubava Alaigal

Related ebooks

Reviews for Anubava Alaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anubava Alaigal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    அனுபவ அலைகள்

    Anubava Alaigal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    பதிப்புரை

    எழுத்தாளர்களின் கதைகளில், நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் என்று சொல்லாவிட்டாலும் அநேகமாக தம் வாழ்க்கையின் அனுபவங்களை வைத்துத்தான் எழுதுகிறார்கள். சுத்தமாக கற்பனை என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்த்து, கேட்ட அனுபவித்த நிகழ்ச்சிகள், இன்பம் துன்பம் எப்படியோ வரி வடிவங்களில் தலைகாட்டும்.

    அனுபவ அலைகள் என்ற இந்தக் கருத்துக்குளியலில் இளம் வயதில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பேட்டில் எழுதுவது போல் மிகலாகவமாகத் தம் எழுத்து வன்மையில் சித்தரித்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.

    நம் வாழ்க்கையில் அன்றாடம் வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகள்தாம் என்றாலும் எழுத்தாளன் எழுத்தில் வடிக்கும்போது கற்பனை மெருகூட்டி பட்டை தீட்டிய வைரம்போல் பளிச்சிடச் செய்துவிடுவான்.

    பாமரன் உலகைப் பார்க்கும் பார்வையும் எழுத்தாளன் பார்க்கும் பார்வையும் வெவ்வேறு விதம். எதையும் ஊடுருவிப் பார்த்து தான் பார்த்ததைப் பிறரும் காணும் வண்ணம் எழுத்தில் வடித்துக் காட்டி பிரமிக்க வைப்பது. செப்பிடு வித்தை காட்டுவது எழுத்தாளனின் தீர்க்க தரிசனத்தைக் காட்டும்.

    இன்றைக்கும் இத்தனை வருடங்கள் ஆன பின்பும் நேற்று கேட்ட மாதிரி இருக்கிறது, நீங்களே சொல்லுங்கள். உங்களில் யாருக்காவது இந்த வயதில் இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறதா? அதனாலேயே சொல்கிறேன், அனுபவ அலைகள் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்று தன் முத்திரையைப் பதிக்கிறார்.

    இந்த வகையில் எழுத்தாளர் திருமதி.அனுராதா ரமணன் அவர்கள் சொற்சிலம்பம் ஆடி வாசகர்களை மகிழச் செய்கிறார்.

    இந்நூலை வெளியிடுவதிலே நாங்கள் பெருமை அடைகிறோம். தமிழ் மக்களும் நூலாக வெளிவரும் இதை வரவேற்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

    நூலை வெளியிட இசைவு தந்த திருமதி.அனுராதா ரமணன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

    அ. இராமநாதன்

    அனுபவ அலைகள்

    1

    வயது நாற்பத்தியாறு... இந்த வயசுக்கு அலங்காரம் கொஞ்சம் அதிகம் தான். இருக்கட்டும், பரவாயில்லை... மனசளவில் இளமைக்கு விடை கொடுக்க நான் இன்னும் தயாராகவில்லை என்றே நினைக்கிறேன்.

    மனசுக்கு வயசு உண்டா... என் வரையில் அது எப்போதும் போல்தான் இருக்கிறது. பார்க்கப் போனால் பல சமயங்களில் சின்னக் குழந்தை மாதிரி பிடிவா தம் பிடிக்கிறது. அல்ப விஷயங்களில் அகமகிழ்ந்து போகிறது.

    நாலைந்து நாட்களுக்கு முன் ஒரு நாள் - முன் இரவில் சடபடவெனத் தூறல்…பரவலான மழை...

    எனக்கு உடனே போய் மழையில் நனைந்து கொண்டு நிற்க வேண்டும் போல இருந்தது.... என் பெண்ணைக் கேட்டேன்...

    நீயும் வர்றியா... ரெண்டு பேருமாப் போய் கொஞ்ச நேரம் ஜாலியா மழையில நின்னுட்டு வரலாம்...

    அவள் என்னை பார்த்த பார்வை அத்தனைச் சரியாயில்லை...

    ஏன், ஜூரம் ஒண்ணுதான் பாக்கி, அதையும் வர வழச்சுக்கணும்னு ஆசையா இருக்கா... மழையில் நனையற வயசா இது...

    ‘பொக்' கெனப் பொங்கும் பாலில் நீர் தெளித்தார் போல...

    நிஜம் தான். மனசு இருக்கிற இளமைக்கு உடம்பு ஒத்து வரவில்லை...

    சரி... எனக்குத்தான் மழையில் நனைய முடியாது. உடம்புக்கு வரும்... நீ போய் நனையேன்... உன் வயசுல நான் மழை வந்தா-மொட்டை மாடியிலப் போய் நிற்பேன்...

    அது சரி...உன் டேஸ்ட் அது....எனக்கு அதெல்லாம் பிடிக்காது...

    நான் உள்ளே போய்-அடுப்பில் குக்கரை ஏற்றிக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன்.

    அம்மா...சின்ன வயசுல மழையில போய் நின்னிருக்கியோ...

    அது மாதிரி பித்துக் குளித்தனமெல்லாம் நான் செஞ்சதே - கிடையாது... வானம் உறுமறச்சேயே, தாவணித் தலைப்பை எடுத்து தலையிலப் போட்டுண்டு ஓடி வந்துடுவோம்...ஏன்... என்ன இப்ப...

    ஒண்ணுமில்லே. சும்மாத்தான் கேட்டேன்...

    நான் மாடிக்கு வந்து ஜன்னல் வழியே கொட்டும் மழையையே இமைக்காமல் பார்த்தேன். சாரல் என் பக்கம் வீசும் போதெல்லாம் புல்லரித்து கண் மூடி அனுபவித்தேன்...

    எனக்குப் பிடித்த - அல்லது எனக்கு நேர்ந்த அனுபவம் ஏன் என் அம்மாவுக்கோ, பெண்ணுக்கோ பிடிக்கவில்லை? நேரவில்லை?

    அனுபவம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது…

    நான் மழையில் சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறேன்... என் பதினெட்டு வயசில் மிகப் பெரிய மழையில் இடுப்பளவு தண்ணீரில் அண்ணா நகரில் ஒரு கார் ஷெட்டில் - தெப்பலாக நனைந்து நின்றிருக்கிறேன்... கையில் சில ஆயில் பெயிண்டிங்குகளும், தூரிகைகளுமாய்....

    இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது... அந்த வீட்டின் முகப்பு ஐன்னல் வழியே கொட்டும் மழையை ஆனந்தமாக ரசித்தபடி-சோபா கம் பெட்டில் எண்பது வயசுக் கிழவர்...

    உக்கும்... ஜன்னல் கதவைத் திறந்து வச்சிட்டு பச்சைக் குழந்தை மாதிரி வேடிக்கை-பார்க்க வேண்டியது...அப்புறம் மாரைப் பிடிச்சிட்டு இருமி ஊரைக் கூட்ட வேண் டியது... உடனே பெத்த பொண்ணுங்க ரெண்டு பேரும், எங்க அப்பாவை சரியாவே கவனிச்சுக்கலையின்னு என் தலையைப் போட்டு உருட்ட வேண் டியது. இத்தனைச் சொல்றேன்… காதுல வாங்கிக்கறத பாரேன்-ஜடாயு... ஜடாயு...

    கிழவர் ஜன்னல் கதவை ஒருக்களித்தாற் போலச் சாத்தினார்... என்னைப் பார்த்து, உள்ளே வந்து நிற்கும் படி ஜாடை காட்டினார்.

    தாங்க்ஸ்... பரவால்யில்லே-நான் இங்கேயே நிற்கிறேன்...

    இடுப்பளவு நீரில் நின்றபடி நான் சொல்ல-புன்னகையுடன் தலையசைத்தார் கிழவர். மழை நீரை கையில் ஏந்த-கம்பி வழியே கை நீட்டினார்…

    யார் கண்டது... இந்த மழையே இவர் பார்க்கும் கடைசி மழையாக இருக்கலாம்...

    ஜன்னலின் ஸன் ஷேட் நீளமாக இருந்ததால் கிழவரின் ஆசை நிறைவேறவில்லை.... மேலும் மருமகள் வந்து விடுவாளோ என்கிற பயம் வேறு…

    நீட்டிய கரத்தின் மேல் தோல் சுருங்கி, உலர்ந்து போயிருந்தது... ஒரு நிலையில் நிற்காமல், கை மேலும் கீழுமாய் ஆடியது...

    நான் 'சட்'டென மழை நீரை என் கையில் ஏந்தி, கிழவரின் கையில் வைத்தேன்...

    அம்மாடி... கொள்ளை சந்தோஷம், முகம் முழுக்க பரவசம்...கையில் வாங்கிய நீரை ஜாக்கிரதையாய் உள்ளுக்கு இழுத்து தன் தலையில் தேய்த்துக் கொண்டார்...மலரச் சிரித்தார்... மறுபடி கை நீட்டல், மறுபடி நான் மழை நீரைப் பிடித்துத் தர-இந்த முறை முகத்திலும் பிடரியிலும் தடவிக் கொண்டு...

    யாரங்கே... யாரோடப் பேச்சு...

    மருமகள் வர-‘சொல்லதே’ என்பது போல் தாத்தா விழியாலேயே கெஞ்ச... நான் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண் டு, எண்ணெய் குடமாய் நிற்கும் வானத்தைப் பார்த்தபடி நின்றேன்.

    மருமகள் ‘வெடுக்' கெனத் தலை நீட்டி என்னைப் பார்த்தாள். உடனே நத்தை போல் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

    காபி வச்சிருக்கு. குடிச்சிட்டு அப்புறம் யோசனை பண்ணலாம். குடி முழுகிப் போயிடாது...

    மறுபடியும் மாமனாரிடம் அன்பான வார்த்தையாடல் பின் தனக்குள்ளேயே முணுமுணுப்பு...

    அது என்ன யோசனையோ... இங்கே நஞ்சையும் புஞ்சையுமா விட்டுட்டுப் போறாப்பலத்தான்…கிழத்துக்கு ரொம்பத்தான் தலைகனம்...

    அடுத்த சில விநாடிகள் பேச்சைக்காணம்...

    கிழவர் ஓசையின்றி ஜன்னல் கதவை ஒருக்களித்து திறந்தார்…

    காபியை டபராவில் ஊற்றி மெள்ள என் பக்கம் நகர்த்தினார்.

    'எனக்கா...ஐயோ...வேண்டாம்...'

    இல்லே... ஒரு வாய் சாப்பிடு...

    வார்த்தையில்லாத மெளன உரையாடல்...

    கடைசியில் தாத்தா தான் ஜெயித்தார்...

    அவர் திருப்திக்காக அந்த வெந்நீர் தண்ணி காபியைக் குடித்து வைத்தேன்...

    மழை சற்று விட்டு வெளியே கிளம்பிய போது அவர் முகத்தில் நான் பார்த்த துக்கம்...

    பாவமாயிருந்தது....

    கை நிறைய மழை நீர் பிடித்து அவர் முகத்தில் (ஜன்னல் வழியாகத்தான்) 'ஜில்'லென வீச-அவர் அப்படியே சிலிர்த்து, முகம் பொத்திச் சிரிக்க...

    டாட்டா...

    கையசைத்து நான் வெளியே ஓடியதும், அடுத்து வந்த இரண்டு நாட்களும் மழைக்காக-கை நடுங்க காத்திருந்த தாத்தாவும் மனசுக்குள் அலை எழுப்பிக் கொண்டே இருந்ததும்...

    அப்புறம் இரண்டு மாதங்கள் போல நான் அவர் வீட்டுப் பக்கம் போகவில்லை... மழையும் இல்லை... எப்போதாவது அந்த வீட்டைத் தாண்டிப் போனாலும்-அந்த வீட்டின் ஜன்னல் கதவு மூடியே இருக்கும்...

    ஒரு நாள் மாலை-நாலு மணி சுமாருக்கு நான் அந்த வீட்டைத் தாண்டும் போது...

    வாசலில் திட்டாக கும்பல்… யார் யாரோ வந்து போய் கொண்டிருக்க- கிழவர்- மூங்கில் கட்டிலில் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்... நாற்பத்தியைந்து வயசு மதிக்கத்தக்கப் பிள்ளை ஈர வேட்டியோடு மசமச வென நின்று கொண்டிருந்தார்...

    அந்த வீட்டுப் பெண்கள்-கிழவரின் சற்றே திறந்த வாயில் பிடிப் பிடியாய் அரிசியைப் போட... நடுவில் எனக்குப் பரிச்சயமான மருமகள் முகத்தில் அதே கடுப்போடு...

    நான் வேகமாய் நடந்தேன்....

    அன்றிரவு முழுக்க-என்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாதக் கிழவரை நினைத்து அழுதேன்...

    ஒரு வேளை அன்று செய்தாற்போல்-மழை நீரை அவர் முகத்தில் விசிறி அடித்திருந்தால் எழுந்து உட்கார்ந் திருப்பாரோ...

    இதோ-இப்போதும் கூட-ஒவ்வொரு காலத்திலும் மழைத்துளிக்காக கையேந்திய அந்தப் பெரியவர் என் மனசுக்குள்...

    அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் அவரைப் பிடித்து இழுத்து வந்து மழை நீரில் ஆனந்தமாய் நனைய விட்டு ரசித்திருப்பேனோ...

    என் அனுபவக் கடலில் அடித்த அலை இது... எனக்கு மட்டும் நேர்ந்தது...என் காலை மட்டும் தழுவிய அலை... ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் எனது இந்த அனுபவம் என் அம்மாவுக்கு இல்லை...என் வயிற்றில் பிறந்திருந்தாலும் என் பெண்ணுக்கு இந்த அலையின் ரகசிய சோகம் புரியப் போவதில்லை...

    அவரவர் அனுபவம் அவரவர்க்கு...

    எனக்கு வாய்த்த அனுபவங்கள்-என் அம்மாவை என் குழந்தையாக பாவிக்க வைத்தது...

    அதுவே என்னுள் இன்னும் இளமையைத் தேக்கி நான் பெற்ற பெண் முன் என்னை மழலையாக்கி புருவத்தை உயர்த்த வைக்கிறது…

    அலைகள் என் பாதம் தேடி வந்தவைதான்...ஆனா லும் அதிலிருந்து உள்ளங்கை நீர் எடுத்து உங்கள் முகத்திலும் விசிறுகிறேன்...

    நீர் திவலைகள் முகத்தை மட்டுமின்றி-உங்கள் உள்ளத்தையும் நனைக்கட்டும்…

    அதோ-அடுத்த அலை வருகிறது… இது கொஞ்சம் பெரிய அலை-பாதத்தை அழுந்த ஊன்றாமல் பராக்கு பார்த்தால் ஆளையே இழுத்துக் கொண்டு போய் விடும் ராட்சத அலை...

    2

    இந்த நாளையப் பதினாலு வயசு சிறுமிகளுக்கு SEX பற்றி நாலு தலை முறைகளுக்குத் தேவையான அளவுக்குத் தெரிந்திருக்கிறது.

    அறுபதுகளில் பெண் குழந்தைகள் நிஜமாகவே குழந்தைகளாக இருந்தார்கள். பெற்றோருடன் சேர்ந்து அவர்களது கண் காணிப்பில் வளரும் குழந்தைகளாவது ‘இது’ பற்றி ஏதோ இலைமறை காயாகத் தெரிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    தாத்தா பாட்டியிடம் வளரும் சிறுமிகள், அசலான ரிஷ்ய சிருங்கிகள் (ரிஷ்யசிருங்கருக்கு பெண் பால் சிருங்கி)

    அதுவும் நான்...

    சுத்தமான சுப்பிராணி இதோ இந்த சம்பவம் வரையில் ஆண் பெண் பேதம் தெரியாது வளர்ந்தவள்.

    சினிமாக்கள் கூட அந்த நாட்களில் ஓரளவு சபை நாசரீகம் கருதி கண்ணியமாக இருந்தன.

    சிவாஜியும் பத்மினியும் தொட்டுக் கொள்ளாமலேயே ஓடத்தில் முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டைப் பற்றிப் பாடிக் கொண்டு போன காலம்.

    இந்தப் பார்வையும் அந்தப் பார்வையும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒன்றையொன்று தவ்விப் பிடிக்க இதெல்லாம் எதற்கு என்கிற விவரம் புரியாமலேயே அதே சமயம் இந்தக் காட்சியில் மனம் ஒன்றிப் போய் பார்த்திருக்கிறேன்.

    அந்த வயசில் என்னைக் கவர்ந்தவை பெயிண்டிங், மெட்டுக்கு தகுந்தபடி பாட்டு மெட்டு கட்டிப் பாடுவது, Throw Ball நித்திய மல்லிகைப் பந்தலின் மீதேறி பூப் பறிப்பது. தீபாவளி நாட்களில் ஆண்பிள்ளைப் பையன்களுக்கு சமமாய் வாசலில் நின்று பட்டாசு கொளுத்துவது-

    (இதில் பாட்டு எழுவதும், பட்டாசு

    Enjoying the preview?
    Page 1 of 1