Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Casanova - 99
Casanova - 99
Casanova - 99
Ebook494 pages3 hours

Casanova - 99

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545566
Casanova - 99

Read more from Yandamoori Veerendranath

Related to Casanova - 99

Related ebooks

Reviews for Casanova - 99

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Casanova - 99 - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    காஸனோவா - 99

    Casanova-99

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    Yandamoori Veerendranath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    கதைக்கு முன் கதை:

    16 டிசம்பர் 1971

    கிழக்கு பாகிஸ்தானில் 'டாகா' நகரம் முழுவதும் துப்பாக்கிச் சத்தங்களால் நிறைந்திருக்கிறது. ஐந்துமணி நேரம் கடுமையான போராட்டம் நடந்தது. இந்திய ராணுவத்தின் கமாண்டர்-இன்-சீஃப் ஜெனரல் மானெக் ஷா பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரியிடம் கடைசி எச்சரிக்கை விடுத்தார்.

    பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

    நாலா பக்கமும் சூழ்ந்துகொண்ட இந்திய ராணுவம், 'முக்தி வாஹினி' யின் உதவியுடன் டாகா நகரத்தைக் கைப்பற்றியது. மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடைசியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.

    ராணுவ விதிகளின்படி, தோற்றுப்போன நாட்டைச் சேர்ந்த ராணுவத்தின் அதிகாரி, ஜெயித்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரியிடம் தன்னுடைய பதக்கங்களை, நட்சத்திர சின்னங்களை ஒப்படைக்க வேண்டும். இந்த நியமத்தை அனுசரித்து பாகிஸ்தான் லெஃப்ட்னெண்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா கான்ஜியாஜி, பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு தன்னுடைய பதக்கங்களை, நட்சத்திர சின்னங்களை, எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு ஒப்பந்த பத்திரத்தின் மீது கையெழுத்துப் போட்டார்.

    அப்பொழுது நேரம் சரியாக மாலை 4-31

    பரிகஸ்தான் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துவிட்டது.

    பங்களாதேஷ் சுதந்திர நாடாக மலர்ந்தது.

    தன்னிடமிருந்து பங்களாதேஷைப் பிரித்த இந்தியாவைக் கண்டால் பாகிஸ்தானுக்கு ஆத்திரம் கட்டுக்கு அடங்காமல் போயிற்று. காஷ்மீரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டது. இந்தக் காரியத்திற்குச் சில ஆயிரம் மில்லியன் டாலர்களைச் செலவழிக்கவும் தயங்கவில்லை. சில திட்டங்களையும் போட்டது. அதில் முக்கியமான ஒரு திட்டம் - யாராலும் ஊகிக்க முடியாதது. அதற்காகச் செலவழிக்கப் போகும் தொகை கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய். காஷ்மீருக்காக பாகிஸ்தான் செலவழிக்கும் பணத்துடன் ஒப்பிட்டால் இது சின்ன தொகையாகத் தோன்றலாம். ஆனால் வேறுவிதமாக பார்த்தால்...!

    ஒரே ஒரு நபர்மீது நம்பிக்கையை வைத்து, முப்பது நாற்பது வருடங்கள் கழித்து காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கக்கூடிய சாமர்த்தியம் படைத்தவன் என்ற எதிர்பார்ப்புடன் நூறு கோடி ரூபாயைச் செலவழிப்பது என்றால், அது சாதாரணமான திட்டமாக இருக்க முடியாது.

    அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனோ யாருக்கும் தெரியாது இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட சமயத்தில் நாட்டை விட்டுப்போய் விட்டான். பாகிஸ்தான் ஒற்றர் பிரிவில் மிகவும் முக்கியமான அந்த நபரின் பெயர் ஃபரூக் ஓம் க்ஸேவியர் (குயசசழழம ழுஅ ஓயஎழைரச)அதில் வரும் முதல் மூன்று எழுத்துக்களைச் சேர்த்து நெருங்கியவர்கள் அவனை ஃபாக்ஸ் (குழஒ) என்று அழைப்பார்கள்.

    1931

    மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சி நடப்பதற்குச் சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்...

    இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஹிந்து-முஸ்லிம்களுக்கு இடையே துவேஷம் பகையாய் பரிணமித்துக் கொண்டிருந்தது.

    1940-ல் 'பாகிஸ்தான்' என்ற புதுப்பெயர் சிருஷ்டிக்கப் பட்டது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று முகம்மத் அலி ஜின்னா பிடிவாதம் பிடித்ததால், மதத்தை அடிப்படையாக வைத்து ஹிந்துஸ்தான் இரண்டு பகுதிகளாக (இந்தியா-பாகிஸ்தான்) பிரிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வந்த காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருப்பதையே மக்கள் விரும்பினார்கள். பாகிஸ்தான் இதை எதிர்த்துப் போராடினாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை.

    சுதந்திரம் வந்த இருபது வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் தேர்தல்கள் நடந்தன. மேற்கு பாகிஸ்தானில் ஜூல்ஃபகர் ஆலி புட்டோ-கிழக்கு பாகிஸ்தானில் முஜிபூர் ரஹமான் வெற்றி பெற்றார்கள்.

    முஜிபூர் ரஹமானுக்கு மெஜாரிட்டி கிடைத்தது. இருந்தாலும் ஒரு பெங்காலி முஸ்லிமை பாகிஸ்தான் பிரதம மந்திரியாக நியமனம் செய்வதை ஜனாதிபதியான யாஹ்யாகான் விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருப்பதில் புட்டோவுக்கும் விருப்பம் இல்லை.

    26 மார்ச் 1971 அன்று ஷேக் முஜிபூர் ரஹமானைக் கைது செய்யச் சொல்லி பாகிஸ்தான் ஜனாதிபதி ஆணை பிறப்பித்தார். புட்டோவும் இதற்கு ஓப்புதலை அளித்திருந்தார். அதே நாளில் ஷேக் முஜியூர் ரஹமான் பங்களாதேஷை சுதந்திர நாடாக அறிவித்தார். பங்களாதேஷைக் கைப்பற்ற மேற்கு பாகிஸ்தானில் ராணுவம் இமயமலை வழியாக கிழக்கு பாகிஸ்தானுக்குள் (பங்களாதேஷ்) நுழைந்தது. உள்நாட்டுப் போராட்டம் தொடங்கிவிட்டது. இந்தியாவின் பிரதம மந்திரியாக திருமதி இந்திராகாந்தி இருந்த காலம் அது. இந்திய அரசாங்கம் பங்களாதேஷை சுதந்திர நாடாக ஏற்றுக்கொண்டதோடு, முக்திவாஹினிக்கு (பங்களாதேஷின் ராணுவம்) உதவியாகத் தன்னுடைய ராணுவத்தை அனுப்பியது.

    1971 டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டது. ஷேக் முஜிபூர் ரஹமானை விடுதலை செய்ய புட்டோ ஒப்புக்கொண்டார்.

    ரவீந்திரநாத் தாகூர் எழதிய கவிதை பங்களாதேஷின் தேசிய கீதமாக மாறியது.

    1971 டிசம்பர் 17 தேதி-மாலை நான்கு மணிக்கு இஸ்லாமாபத்தில் ஜனாதிபதி யாஹ்யாகானின் விருந்தினர் மாளிகைக்கு ஜெனரல் புட்டோ வந்தார். அவருடைய முகம் அவமானத்தால் கன்றி, களை இழந்து தென்பட்டது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து பங்களாதேஷ் சுதந்திர நாடாக மாறியதை, அதற்கு இந்தியா துணையாக நின்றதை, அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    'இதைவிட அவமானம் வேறு இருக்க முடியாது' எரிச்சலுட்ன புட்டோ சொன்னார்.

    யாஹ்யாகான் எதுவும் பேசவில்லை. இப்படி நடந்ததற்குக் காரணம் புட்டோதான் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. தேர்தலில் தனக்கு மெஜாரிட்டி கிடைக்காதபோது, அதிகாரத்தை முஜிபூர் ரஹமானிடம் ஒப்படைத்து இருந்தால், இன்று இந்த நிலைமை வந்திருக்காது. திரை மறைவில் இருந்து கொண்டே தன்னைக் குற்றவாளியாக்கி விட்ட புட்டோ மீது எரிச்சல் ஏற்பட்டாலும், வெளியில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.

    'இதற்குச் சரியான பதிலடி கொடுக்கும் வரை என்னுடைய ஆன்மா சாந்தி அடையாது...' புட்டோ ஆவேசமாகச் சொன்னார்.

    'நம்மால் என்ன செய்ய முடியும்?' ஜனாதிபதி கேட்டார்.

    'காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்.'

    'ஒரு நாட்டுடன் சேர்ந்த மாநிலத்தை அதிலிருந்து பிரிப்பது சுலபமான விஷயம் இல்லை.'

    'ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்தார்களே!'

    'அந்த நிலைமை வேறு. கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முஜிபூர் ரஹமானை தங்களுடைய நாயகனாகத் தேர்வு செய்தார்கள். அவரை நாம் ஏற்றுக் கொள்ளாததால் சிவில் வார் வந்தது.'

    'காஷ்மீரில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள். மதத்தை ஆயுதமாக பயன்படுத்தினால் காஷ்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து போவதையே விரும்புவார்கள்.'

    'அவர்களுடைய விருப்பத்தை வைத்துக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்? அவர்களைத் தூண்டி விட்டால் காஷ்மீர் சுதந்திர நாடாக மாறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!'

    'காஷ்மீர் பாகிஸ்தானைச் சேர்ந்தது.' புட்டோவின் ஆவேசம் இன்னும் தணியவில்லை.

    'இரண்டு எதிர்மறையான கருத்துகள் தேவையில்லை. நமக்கு வேண்டியது என்ன? காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமா இல்லை இந்தியாவிலிருந்து அதைப் பிரித்துச் சுதந்திர நாடாக மாற்ற வேண்டுமா? இரண்டிற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு இணங்க பங்களாதேஷ் சுதந்திர நாடாக மாற்றுவதற்கு இந்தியா துணை புரிந்தது. சுயநலமற்ற இந்தச் செயலால் மற்றநாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துவிட்டது. நம்முடைய நிலைமை அப்படி இல்லை. காஷ்மீர் மக்கள் போராட்டம் நடத்துவதற்கும் நாம் உதவி செய்தால் அது வேறு விஷயம். மக்கள் விரும்பும் ஆட்சியை நிலைநாட்ட துணை போனோம் என்று நாம் வாதனைப் புரியலாம். ஆனால் காஷ்மீரை நம்முடன் இணைத்தக் கொள்ள அந்த வாதம் எடுபடாது. மேலும் சுயநலம் மிக்கவர்களாக அழைக்கப்படுவோம்.'

    'யாருடைய பார்வையில்?'

    'உலக நாடுகளின் பார்வையில்.'

    'இந்த விஷயத்தில் அமெரிக்கா நமக்கு உதவி செய்யும். காஷ்மீர் சுதந்திர நாடாக மாறுவதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை. அமெரிக்கா நம் பக்கம் இருந்தால், நாம் யாரையுமே பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.' புட்டோ ஆணித்தரமாய்ச் சொன்னார்.

    'இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருக்கும் வரை இது நடக்கும் என்று தோன்றவில்லை.'

    புட்டோ, ஜனாதிபதியைக் கண் இமைக்காமல் பார்த்தார். 'அது மட்டுமே இல்லை. பாகிஸ்தான் ஜனாதிபதியாக நீங்கள் இருக்கும் வரை இந்தக் காரியம் நடக்க வாய்ப்பு இல்லை...' மனதில் எண்ணிக் கொண்டார்.

    இந்த உடையாடல் நடந்த நான்காவது நாள், அதாவது டிசம்பர் 20, 1971 அன்று-யாஹ்யாகானைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புட்டோ பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    நான்கு வருடங்களுக்குப் பிறகு...

    ஆகஸ்ட் 1975

    இஸ்லாமாபாத்

    பாகிஸ்தான் ஒற்றர்பிரிவில் முக்கிய நபராக கருதப்படும் ஃபரூக் ஓம் க்ஸேவியர் புட்டோவைச் சந்தித்தான். யாருக்கும் தெரியாமல் பங்களாதேஷிலிருந்து கிளம்பி அன்று காலையில்தான் பாகிஸ்தானுக்கு வந்திருந்தான்.

    'என்ன நடந்தது?' புட்டோவின் கேள்வியில் ஆர்வம் தென்பட்டது.

    'எல்லாம் நாம் எதிர்பார்த்தது போலவே நடந்து வருகிறது. இஸ்லாமிக் மேஜர்ஸ் எல்லோரும், முஜிபூர் ரஹமானின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள். புரட்சிக்காரர்கள் ரகசியமாகச் செயல்பட்டு வருகிறார்கள். நான் போன காரியம் முடிந்துவிட்டது.'

    'உன்மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.' திருப்தி அடைந்தவர்போல் தலையை அசைத்தார் புட்டோ. 'நான்கு வருடங்களாக இருந்து வந்த பகை இனிமேல்தான் தீரப் போகிறது.'

    பாக்ஸ்(குழஒ) சிரித்தான். அரசியல்வாதிகளுக்கு நடுவில் இருக்கும் பணம் எப்படிப்பட்டதென்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

    'இனி காஷ்மீர் ஒன்று தான் பாக்கியிருக்கிறது.' புட்டோ சொன்னார்.

    'அதுவும் நம் வசமாகிவிடும்.'

    'ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாஹ்யாகான் நான்கு வருடங்களுக்கு முன் சொன்ன வார்த்தைகளில் உண்மை இருக்கிறது. காஷ்மீரைச் சுதந்திர நாடாக மாற்றுவது சுலபமாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானுடன் அதை இணைத்துக் கொள்வத என்றால் ரொம்ப கஷ்டம். கிட்டத்தட்ட அசாத்தியம் என்றே சொல்லவேண்டும்.'

    'அதற்கு ஒரு வழி இருக்கிறத... தாங்கள் என்மீது நம்பிக்கையை வைத்தால்...'

    திடீரென்று அங்கே ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது.

    ஆர்வம் மிகுதியில் புட்டோ சற்று முன்னால் குனிந்து 'எப்படி?' என்று கேட்டார்.

    ஃபாக்ஸ் தாழ்ந்த குரலில் தன்னுடைய திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான். நான்கு வருடங்களாக தான் சேகரித்த விவரங்களை, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விவரமாகத் தெரிவித்தான்.

    எல்லாம் கேட்ட பிறகு பிரமித்துப் போன புட்டோ, 'இது... இது.... சாத்தியப்படும் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?' என்று சந்தேகமாகக் கேட்டார்.

    'கட்டாயம் நிறைவேறும்.' சற்று தாமதித்து ஃபாக்ஸ் சொன்னான், 'நீங்கள் எல்லோரும் என்மீது நம்பிக்கையை வைத்தால்...'

    'எல்லோரும் நம்பி ஆக வேண்டும் என்ற தேவையில்லை. நிதிக்கு அனுமதி வழங்க வேண்டியது நான் மட்டும் தான். மொத்த செலவு எவ்வளவு ஆகும்?'

    'நூறு கோடி ரூபாய் தேவைப்படும்.'

    'நூ...று...கோ...டியா?'

    'ஆமாம். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முப்பது நாற்பது வருடங்கள் பிடிக்கலாம். அதுவரை நான் உயிரோடு இருந்தால்...' மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக்கொண்டு ஃபாக்ஸ் சொன்னான். 'காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவது நிச்சயம்.'

    அதற்குள் இண்டர்காம் ஒலித்தது.

    'என்ன விஷயம்? இங்கே நான் முக்கியமான நபருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்...' புட்டோவின் குரலில் எரிச்சல் தென்பட்டது.

    'அர்ஜென்ட் மெஸேஜ் சார்' மறுமுனையில் குரல் ஒலித்தது.

    'என்ன விஷயம்?'

    'ஷேக் முஜிபூர்ரஹமானை, அவருடைய குடும்பத்தினரை இஸ்லாமிக் ஆர்மீ மேஜர்ஸ் கொன்று விட்டார்கள்.'

    அவ்வளவுதான்! ரிசீவரைக்கீழே வைத்துவிட்டு மகிழ்ச்சியின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஃபாக்ஸை இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.

    'எனக்குத் தெரியும் ஃபாக்ஸ். உன்னால் சாதிக்க முடியும். காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்கும் பொறுப்பை உன்னிடம ஒப்படைக்கிறேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. உன்னை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். இன்றே இந்தியாவுக்குப் புறப்படு.'

    ஃபாக்ஸ் எழுந்து நின்று கொண்டு ராணுவ முறைப்படி புட்டோவுக்கு வணக்கம் தெரிவித்தான்.

    'நான் மறுபடியும் உங்களைச் சந்திக்க முடியாமல் போகலாம். இந்தியாவிலேயே நான் இறந்து போய்விடலாம். என் வேலை முடிய இன்னும் ஐம்பது வருடங்கள் பிடிக்கலாம்.

    அதுவரை நான் உயிரோடு இருந்தால்...' சற்று நிறுத்தி மேலும் சொன்னான், 'காஷ்மீர் காபிஸ்தானுடன் இணைந்த பிறகே நான் பாகிஸ்தானில் காலடி எடுத்து வைப்பேன்.'

    புட்டோ ஃபாக்ஸூடன் கைக்குலுக்கினார். 'உன்னைக் கண்டு பாகிஸ்தான் ஒற்றர் பிரிவு ரொம்பப் பெருமையாக உணருகிறது ஃபாக்ஸ். உன் திட்டத்தைச் செயல்படுத்து... பெஸ்ட் ஆஃப்...லக்...'

    ஃபாக்ஸ் புட்டோவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான்.

    பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால், கஷ்டப்பட்டு தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்ற தேவையில்லை. ராணுவத்தின் உதவியால் எதிர்ப்பை கிளப்பி விட்டால் போதும், அதிகாரத்தில் இருப்பவனைக் குடும்பத்துடன் கொலை செய்துவிட்டு அந்தப் பதவியை அடைந்து விடலாம்.

    பங்களாதேஷில் நடந்தது அதுதான். அரசியலில் தனக்கு எதிரியாக இருந்தவன் கொலையுண்டதற்கு புட்டோ மகிழ்ச்சி அடைந்த தென்னவோ உண்மைதான். ஆனால் அந்த மகிழ்ச்சி ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. 1979 ஏப்ரல் நாலாம் தேதி அன்று புட்டோவின் அரசியல் எதிரியாக இருந்த ஜெனரல் ஜியா-உலக நாடுகளின் வேண்டுகோளையும் புறக்கணித்து விட்டுப் புட்டோவுக்கு தூக்குத் தண்டனையை அளித்தார்.

    காலம் யாருக்காகவும் நிற்காது. புட்டோவுக்குத் தூக்குத் தண்டனை அளித்த ஜெனரல் ஜியா விமான விபத்தில் இறந்து போனார். புட்டோவின் மகள் பெனஜீர் புட்டோ பாகிஸ்தானின் பிரதம மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டாள்.

    இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவில் இருக்கும் தாராபூர் அணுமின்நிலையத்தின் மீது ந்யூக்ளியர் பாம்பை போடுவதற்கு பாகிஸ்தான் திட்டம் வைத்திருந்தது.

    பாகிஸ்தான் மீது ஹைட்ரோஜன் பாம்பை வீசுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக (?) அமெரிக்காவின் ஒற்றர் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.

    அதிர்ஷ்டவசமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுத போராட்டம கைவிடப்பட்டது. இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்குமோ என்னவோ! அணு ஆயுத் விஷயத்தில் முடிவு எடுத்த பத்து நாட்களுக்குப் பிறகு இந்திராகாந்தியின் கொலை நடந்தது. அதன் பிறகு பிரதமராக பதவியை ஏற்றுக்கொண்ட ராஜீவ்காந்தியும் கொல்லப்பட்டார்.

    பி.வி.நரசிம்மராவ் பிரதம மந்திரியாக பதவியை ஏற்றார். சில நாட்கள் கழித்து கூட்டணி அரசாங்கம்... மறுபடியும் காங்கிரஸ்... நாளை இன்றாக, இன்று நேற்றாக, நேற்று என்பது கடந்த காலமாக... காலம் மதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது... 'ஸ்ரீ வாத்ஸவா' இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியை ஏற்றுக்கொண்டார்.

    ஜெனிவாவில் மனித உரிமைகளை மீறிய விஷயத்திலிருந்து, 'ஆஜாத் காஷ்மீர்' என்று முழக்கங்களை எழுப்பும் வரை, காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் செயல்படாத திட்டம் இல்லை. இந்த ரகளைகளுக்கு நடுவில் பாகிஸ்தான் ஃபாக்ஸ் பற்றி மறந்து போய் விட்டதோ இல்லை விருப்பத்தைக் கைவிட்டதோ தெரியவில்லை.

    எங்கேயோ மழை பெய்தால் வேறு எங்கேயோ இடிவிழுந்தாற்போல், ஒரு பக்கம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் நாளுக்கு நாள் துவேஷமும் பகையும் அதிகமாகி வந்ததோடு, எந்த நிமிஷமும் யுத்தம் வரலாம் என்ற நிலைமை உருவாகியிருந்த நேரத்தில், மறுபக்கம் ஃபாக்ஸின் திட்டம்... இவை இரண்டம் மோதிக் கொண்டதில் இதன் பாதிப்பு ஒரு இளம் பெண்ணின் மீது விழுந்தது. அந்தப் பெண்ணின் பெயர்... மதுசாலினி.

    1

    'இங்கே பற்கள் அழகாகப் பிடுங்கப்படும்.'

    ரிக்ஷாவிலிருந்து இறங்கும்போதே சுவற்றின் மீது கரித்துண்டால் கோணல் மாணலாக எழுதப்பட்டிருந்தஅந்த எழுத்துக்களைக் கோபத்துடன் பார்த்தாள் மதுசாலினி. 'முருகா...முருகா' மனதில் எண்ணிக் கொண்டாள். கோபம் வந்தாலும், முருகனை நினைத்துக் கொள்வது அவளுடைய பழக்கம். யாரோ போக்கிரிப் பையன் நேற்றிரவு எழுதியிருக்க வேண்டும். போய் அழித்து விடலாமா என்று நினைத்துக் கொண்டாலும், தான் அழிப்பதை யாராவது பார்த்துவிட்டால் நன்றாக இருக்காது என்று அந்த யோசனையைக் கைவிட்டாள்.

    ரிக்ஷாக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே வரும்போது, வாசலில் பொருத்தியிருந்த பெயர்ப்பலகையைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டாள்.

    'டாக்டர் மதுசாலினி டீ.னு.ளு டெண்டல் சர்ஜன்' என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் மின்னிக் கொண்டிருந்தன. மதுசாலினிக்கு இருபத்தி நான்கு வயது இருக்கலாம். சற்று பூசினாற் போன்ற உருவ அமைப்பு. சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட பதட்டப்படும் சுபாவம். அவளைப் பார்த்தால் அடுத்தவீட்டுப் பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும். யாராக இருந்தாலும் சரி. ரொம்ப நாளாக பழகியவள்போல் சரளமாகப் பேசுவாள். பேசும்போது, 'ஆமாங்க! அப்படித்தான்' போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவாள். தான் ஒரு டாக்டர் என்றும், இன்னும் கொஞ்சம் டிக்னிஃபைடாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவளுக்குத் தோன்றியதே இல்லை.

    அந்தக் காலனியில் அவள் பிராக்டீஸைத் தொடங்கி ஆறு மாதங்கள் முடியப்போகின்றன. சாதாரணமாகப் பல் மருத்துவர்கள் தங்களுடைய ஆஸ்பத்திரிக்கு 'டெண்டல் க்ளினிக்' என்றுதான் பெயர் வைப்பார்கள். ஆனால் மதுசாலினி வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தன்னுடைய க்ளினிக்கிற்கு 'டூத் கேர் செண்டர்' என்று பெயர் வைத்தாள். யாரோ 'கேர்' என்று இருந்ததை அடித்து 'பேஸ்ட்' என்று எழுதியிருந்தார்கள். வந்த நோயாளிகள் தன்னைப் பார்த்து மறைவில் சிரித்தக்கொள்வதைக் கவனித்தவளுக்கு, முதலில் விஷயம்புரியவில்லை. ஒருநாள் யதேச்சையாகப் பலகை பக்கம் பார்த்தபோது திடுக்கிட்டாள். 'டூத் பேஸ்ட் செண்டர்' என்று எழுதியிருந்தது.

    அன்று இரவு ரொம்ப நேரம் அழுதாள். மறுநாள் காலையில் அந்த விஷயத்தை அப்படியே மறந்தும் விட்டாள். அவளுடைய இயல்பு அதுதான். நிமிடங்களில் தன் வேதனையை மறந்துவிட்டு கலகலவென்று சிரித்து விடுவாள். இயற்கை அவளுக்கு ஆரோக்கியத்துடன் இணைந்த அழகை வரமாக அளித்திருந்தது.

    மதுசாலினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. ஒரு நோயாளிகூட வந்திருக்கவில்லை. நோயாளிகளைப் பார்க்கும் நேரம் பத்து மணிக்கு தான். வீட்டில் யாரும் இல்லை. பெற்றோர்கள் சின்ன வயதிலேயே இறந்து போய்விட்டார்கள்.

    அவளால் ஓர் இடத்தில் நிலையாக உட்கார்ந்து கொள்ள முடியாது. உள்ளே நாற்காலியில் உட்காரப் போனவள் எதையோ நினைத்துக்கொண்டு, க்ளினிக்கின் கொல்லைப் புறத்தில் இருந்த தோட்டத்தினுள் நுழைந்தாள். தடுப்புச் சுவற்றுக்கு அந்தப் பக்கம் அடுத்த வீட்டு மாமி துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

    'மாமி... நல்லா இருக்கீங்களா?' சுவருக்கு அருகில் சென்று குசலம் விசாரித்தாள்.

    மாமி திரும்பிப் பார்த்துவிட்டு, 'நீயாம்மா... என்ன ஓய்வாக இருக்கிறாய் போல் இருக்கே? நோயாளிகள் யாரும் வரவில்லையா என்ன?' என்று கேட்டாள்.

    'இல்லைங்க. மணி இன்னும் பத்து ஆகவில்லையே, உங்கள் வேலைக்காரி இன்னிக்கு வரவில்லையாங்க?'

    'வாரத்தில் ஒருநாள் மட்டம் போடாவிட்டால் அவளுக்குத் தூக்கம் வராது. நேற்று நானும் மாமாவும் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போய் வந்தோம். சிரஞ்சீவி நடித்த படத்தை முதல் ஷோ பார்த்தால்தான் எனக்குத் திருப்தியாக இருக்கும். 'பசங்க யாரும் துணைக்கு வரமாட்டேன்னுட்டாங்க. அரைமணி நேரம் கெஞ்சிய பிறகு இவர் வர சம்மதித்தார். அவசரமாய் தியேட்டருக்கு ஓடினால் ஹவுஸ்ஃபுல். மாமாவோ வீட்டுக்குத் திரும்பிப்போய் விடலாம்னு பிடிவாதம் பிடித்தார். நீயே சொல்லு! அத்தனை தூரம் மெனக்கெட்டு போன பிறகு சினிமா பார்க்காமல் திரும்பி வர மனசு வருமா?'

    'பக்கத்தில் இருக்கும் தியேட்டருக்குப் போயிருக்கலாமே மாமி...'

    'வேறு வழி? 'கட்டில் கீழே காதலன், கட்டில் மீது கணவன்' என்று அந்தக் கண்றாவி படத்தைப் பார்த்து விட்டுத்தான் வந்தோம். என்னவோ போ! வரவர எந்தச் சினிமாவிலும் இரட்டை அர்த்தம் இல்லாமல் வசனமே இல்லை. ஆமாம், கொல்லையில் புடலங்காய்க்குக் கல்லைக்கட்டச் சொன்னேனே, செய்தாயா?'

    'நீங்கள் சொல்லாவிட்டால் எனக்கு அப்படி கல்லைக் கட்டணும்னு தெரியாது மாமி...' நன்றி உணர்ச்சி பொங்கியது அவளுடைய குரலில்.

    'உன்னைப் பார்த்தால் ரொம்ப ஆசையாய் இருக்கும்மா... டாக்டராய் இருந்துகிட்டு பிராக்டீசுடன் நின்று விடாமல் புடலங்காய், அவரைக்காய்ன்னு கறிகாய் செடிகளைப் போட்டிருக்கே... இந்தக் காலத்தில் வாடகை வீட்டைப் பற்றி யார் இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்க... சொல்லு...'

    இதற்குள் ராஜூவின் குரல் கேட்டது, 'டாக்டரம்மா... உள்ளே வர்றீங்களா இல்லை. அங்கேயே நின்னு பேசிக்கிட்டு இருக்கப் போறீங்களா? பேஷண்ட்ஸ் காத்துக்கிட்டு இருக்காங்க...'

    ராஜூ மதுசாலினியின் க்ளினிக்கில் அசிஸ்டெண்டாக வேலை செய்கிறான். வயது பன்னிரெண்டு இருக்கும்.

    'இதோ வந்துகிட்டே இருக்கேன்' குரல் கொடுத்தான் மதுசாலினி.

    'என்னவோ, அவன் டாக்டர் போலவும், நீ அவனுக்கு அசிஸ்டெண்டாக இருப்பது போலவும் அதிகாரம் செய்கிறானே! நன்றாகத்தான் இருக்கு போ' காமாட்சி மாமி முகவாய் கட்டையைத் தோள் பட்டையில் இடித்துக்கொண்டாள்.

    'போகட்டும் மாமி. சின்ன பையன்தானே! வர்றேன்.' என்று மதுசாலினி உள்ளே ஓடினாள்.

    ராஜூ ஒவ்வொரு நோயாளியாக உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தான். நான்கு நோயாளிகளைக் கவனித்து, இரண்டு பேருக்கு பற்களைப் பிடுங்கி அனுப்பிய பிறகு மணியைப் பார்த்துக் கொண்டாள். பதினொன்றாகி விட்டிருந்தது. பிளாஸ்க்கிலிருந்து பாலைக் கோப்பையில் ஊற்றிக்கொண்டு குடித்தாள்.

    அடுத்தாற்போல் வந்த நோயாளி வாட்டசாட்டமாய் இருந்தான். பட்டிக்காட்டு ஆசாமியைப் போல் தென்பட்டான். கன்னத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டே உள்ளே வந்து, எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

    'டாக்டரம்மா... எனக்குக் கல்லு வலி' என்றான்.

    மதுசாலினி குழப்பம் அடைந்தவளாய், 'கல் ஏதாவது குத்தி உங்கள் பல் வலிக்கிறதா?' என்று கேட்டாள்.

    'இல்லை...இல்லை... கல்லுதான் வலிக்கிறது.'

    'கல்லுக்கு வலியாக இருந்தால் உங்களுக்கு என்ன கஷ்டம்?'

    'என் கல்லில்தான் வலி டாக்டரம்மா!'

    கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டு வந்திருப்பானோ என்ற சந்தேகம் வந்தாலும், கன்னம் வீங்கியிருப்பதைக் கவனித்துவிட்டு எழுந்து அருகில் வந்தாள்.

    'உங்கள் பெயர்?'

    'கார்த்தசாரதி...'

    சட்டென்று மதுசாலினிக்குப் புரிந்து விட்டது. 'ப' என்ற எழுத்து அந்த ஆளின் வாயில் நுழைய மறுத்துவிட்டது என்று.

    மதுசாலினி அவனுடைய பற்களைப் பரிசோதித்துப் பற்களின் நடுவில் சிக்கி இருந்த உணவுத் துகளை நீக்கினாள். நிமிட நேரத்தில் அவனுடைய வலி குறைந்துவிட்டது. காலில் விழாத குறையாகக் கும்பிடு போட்டுவிட்டுக் கேட்டான்.

    'ஃபீசு எத்தனை டாக்டரம்மா?'

    'இருபது ரூபாய்.'

    'அவ்வளவுதானா?' என்று கேட்க நினைத்து, சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான். 'நூறு ரூபாயாவது ஆகும்னு நினைச்சேன்' என்றான்.

    மதுசாலினி புன்னகைத்து விட்டு மவுனமாக இருந்தாள்.

    அவன் சொன்னது உண்மைதான். எல்லாத் துறைகளிலும் மனிதர்களை ஏமாற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மருத்துவத் துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அதே தெருவில் இருக்கும் மற்றொரு பல் மருத்துவரின் பெயர் சங்கர நாராயணன். நோயாளிகளின் அந்தஸ்தைப் பொறுத்து ஃபீஸை வசூல் செய்வார். புதிதாகப் பல்லைப் பொருத்துவதற்கு, வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று சொல்லி, பத்தாயிரம் ரூபாய் வசூல் செய்து விடுவார். நோயாளிகளின் அறியாமையை நன்றாக பயன்படுத்திக்கொண்டார்.

    தன்னிடமிருக்கும் 'எலக்டரானிக் பீம்' மிஷினை வைத்துக்கொண்டு பணத்தை நிறையவே கொள்ளையடித்து விட்டார். நோயாளி நல்ல பணக்காரனாகவும், விஷயம் தெரியாதவனாகவும் இருந்தால் போதும். காஸ் லைட்டர் சைஸில் இருக்கும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பல்லாக நகர்த்திக் கொண்டே போவார். பத்து வினாடிகளுக்கு ஒருமுறை அந்தக் கருவியிலிருந்து 'பீப்' என்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். எந்த இடத்தில் பீப் என்ற சத்தம் வருமோ அந்தப் பல்லில் கிருமி இருப்பதாகவும், உடனடியாக அதை நீக்காவிட்டால் கான்சர் வரவாய்ப்பு இருக்கிறது என்றும் நோயாளியிடம் சொல்வார். ஏற்கனவே பல் வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளி இதைக் கேட்டதும் பயந்துபோய் ஃபீஸையும் கொடுத்துவிட்டு 'கிருமி' யின் தொல்லையிலிருந்து விடுதலை பெறுவான். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இந்த முறையில் நிறைய பணத்தைச் சம்பாதித்து விட்டார். அதே தெருவில் மதுசாலினி க்ளினிக்கை திறந்தாள்.

    முதல் மூன்று மாதங்களில் ஒரு நோயாளி கூட அவளுடைய க்ளினிக்கிற்கு வரவில்லை. ஒரு டாக்டர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் இருப்பதோடு, சாதாரணப் பெண்போல் அவள் தோற்றமளித்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அத்துடன் அவள் கன்சல்டிங்க அறையில் உட்காருவதைவிட புடலங்காய்க்கு கல்லைக் கட்டுவது, அடுத்த வீட்டு மாமியுடன் அரட்டை அடிப்பது போன்ற எளிய காரியங்களில் ஈடுபட்டு வந்தது எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது.

    மதுசாலினிக்குப் பெற்றோர்கள் இல்லை. தாய்மாமன் அவளை வளர்த்து, படிக்க வைத்து, இந்த நிலைக்கு உயர்த்தினார். ஒரு லட்ச ரூபாயை அவள் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்துவிட்டு இறந்துபோய் விட்டார். மதுசாலினி ஒரு சின்ன பிளாட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தனியாக வசித்து வந்தாள். டாக்டருக்குப் படித்திருக்கிறாளே தவிர அவளுக்கு நாட்டு நிலவரம் எதுவும் தெரியாது. இந்திராகாந்தியின் மகன் பெயர் என்ன என்று கேட்டால் சொல்லத் தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்... 'நன்றாகப் பேசுவாள்.' பஸ்ஸில் போகும்போது பக்கத்து சீட்டு அம்மாமி யாராவது தப்பித் தவறி 'உன் பெயர் என்னம்மா? என்ன செய்கிறாய்?' என்று கேட்டுவிட்டால் போதும், தான் பிறந்து வளர்ந்த கதையை ஆதியோடு அர்த்தமாகச் சொல்லி முடித்துவிடுவாள். ரொம்ப வெகுளி, ஆனால் தொழிலைப் பொறுத்தவரை ரொம்ப திறமையானவள்.

    அவள் க்ளினிக்கைத் தொடங்கிய மூன்று மாதங்கள் கழித்து ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    தினமும் காலையில் எழுந்ததும் அரைமணி நேரம் பூஜை செய்துவிட்டு க்ளினிக்கிற்குப் புறப்படுவது அவளுடைய வழக்கமாக இருந்தது. அன்றும் பூஜை முடித்துக் கொண்டு கிளம்பும்போது, ராமசாமியின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.

    ராமசாமி அந்த ஏரியாவின் முனிசிபல் கவுன்சிலர். ஆரம்பகாலத்தில் பெரிய ரவுடியாக இருந்து, அரசியலில் செட்டில் ஆனபிறகு நல்ல பெயரை பெற்று விட்டவன். ஓரிரு நல்ல காரியங்களைச் செய்ததில் மக்களிடையே அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

    மதுசாலினி ராமசாமியின் வீட்டுக்குப் போனபோது, ராமசாமி வலி தாங்க முடியாமல் முனகிக்கொண்டிருந்தான். இடது கன்னம் நன்றாக வீங்கியிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்னால் நள்ளிரவு நேரம் கழித்து அடையாளம் தெரியாத எதிரிகள் யாரோ அவனை அடித்து விட்டார்களாம். கன்னத்து எலும்பு ஃபிராக்சர் ஆகிவிட்டது. புகழ்பெற்ற டெண்டல் சர்ஜனராக இருக்கும் சங்கரநாராயணன்தான் சிகிச்சை அளித்து இருக்கிறார். இன்று வலி அதிகமாக இருப்பதுடன், மூச்சு இரைப்பும் ஏற்பட்டது. டாக்டருக்காகத் தகவல் அனுப்பிய போது, அவர் விடியற்காலையில் வெளியூருக்குக்குப் போய் விட்டதாகத் தெரிந்து வேறு வழி இல்லாமல் மதுசாலினிக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

    மதுசாலினி ராமசாமியைப் பரிசோதித்துக்கொண்டே 'சாராயக் கடையில் நள்ளிரவு வரைக்கும் இருந்தீங்களா?' என்று கேட்டாள். இடது பக்கம் மேண்டிப்யுலர் ஃபிராக்சர். வலது பக்கமும் வீங்கியிருந்தது. அவனால் வாயைத் திறந்து சரியாகப் பேச முடியவில்லை.

    'தினமும் கடை மூடும் வரை அங்கேதான் இருப்பேன்.'

    'அடடா! இப்படி குடித்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?' மதுசாலினி வருத்தப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

    'கடை என்னுடையது. நான்தான் கடையைப் பூட்டிக் கொண்டு வரவேண்டும்.'

    மதுசாலினி நாக்கைக் கடித்துக்கொண்டாள். 'அது இல்லை. இங்கே சித்திக்குத் தனியாக போர்

    Enjoying the preview?
    Page 1 of 1