Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sontham Illatha Bandham
Sontham Illatha Bandham
Sontham Illatha Bandham
Ebook73 pages26 minutes

Sontham Illatha Bandham

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

மீரா என்பவள் கறுப்பாக இருப்பதனால் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறாள். தந்தையே அவளை வெறுக்கும் அவலநிலை ஏன் ஏற்பட்டது? இதற்கான காரணம் என்ன? புவனேச்வரி என்பவளுக்கும் மீராவுக்கும் உள்ள தொடர்பு என்ன? மீரா தன் தந்தை வெறுப்பதற்குரிய காரணத்தை அறிவாளா? வாருங்கள் வாசித்து அறிவோம்…

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580125407558
Sontham Illatha Bandham

Read more from Vaasanthi

Related to Sontham Illatha Bandham

Related ebooks

Reviews for Sontham Illatha Bandham

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sontham Illatha Bandham - Vaasanthi

    https://www.pustaka.co.in

    சொந்தம் இல்லாத பந்தம்

    Sontham Illatha Bandham

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ஜன்னலுக்கு வெளியே தெரிந்த நீல வானத்தில் மெல்ல மெல்ல கரிய பொதிகள் நகர ஆரம்பித்தன. மீரா முகத்தை சுளித்தாள். இன்றைக்கும் வெளியில் போக முடியாது. இன்னும் சிறிது நேரத்தில் வானத்தின் நீலம் எல்லாம் மறைந்து முழுவதும் கரிய போர்வையால் மூடப்பட்டுவிடும். பிறகு சடசடவென்று மழை பெய்ய ஆரம்பித்தால் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப முடியாது என்று அம்மா மறுத்து விடுவாள். நான்கு நாட்களாக ஹைபிங்ஸ் பூ திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் இந்தப் பாழாய்போன மழை சரியாக சாயங்கால வேளைகளில் பிடித்துக் கொள்கிறது.

    டெலிபோன் ஒலித்தது. மீரா துள்ளிக்கொண்டு ஓடினாள்.

    மறுமுனையில் ரூபாவின் உயர்ந்தக் கீச்சுக்குரல் கேட்டது.

    நீ என்ன இன்னிக்கு வரல்லியா? ஃபாஷன் பரேட் உண்டு! ஆஸ்திரேலியாவிலே பயிற்சி அடைஞ்ச மாடல்ஸ் வராங்களாம்!

    வரணும்னு தான் பிளான் போட்டிருக்கோம். ஆனா மழை வரும்போல இருக்கு! அம்மா கிளம்புவாங்களோ இல்லையோ!

    எல்லாம் கிளம்புவாங்க! இது அபூர்வமான ஷோன்னு சொல்லு. லட்டோக்கா பூராவும் இன்னிக்கு அங்கே இருக்கப் போகிறது

    சரி. சொல்லிப் பார்க்கறேன்!

    மீரா ஒருமுறை வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு அம்மாவிடம் விரைந்தாள். மழை ஆரம்பிக்கத் தொடங்குமுன் அம்மாவைக் கிளப்பினால்தான் உண்டு. நல்லவேளை அம்மாவைத் கிளப்புவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. அவளுக்கே ஃபாஷன் பரேடுக்குப் போக ஆர்வம் இருந்தது தெரிந்தது. முகத்தில் ஒரு உல்லாசம் படர்ந்தது.

    சீக்கிரம் தயாராகு. நான் அப்பாவுக்கு டெலிபோன் செய்கிறேன்!

    மீரா அவசரமாகத் தன்னைத் தயார் செய்து கொள்ளச் சென்றாள்.

    கண்ணாடியின் முன் நிற்கும்போது வழக்கமான நெருடல் ஏற்பட்டது.

    இந்த நிறம் -

    மாநிறத்துக்கும் கீழான பார்த்தவுடன் ‘கருப்பு’ என்று சொல்லும்படியான நிறம்.

    இந்த மாதிரி ஒரு தோல் எனக்கு எப்படி வந்தது?

    அம்மா நல்ல வெளுப்பு. அப்பாவும் கருப்பில்லை.

    நான் எப்படி இப்படிக் கருப்பாய் பிறந்தேன்?

    ‘என் வழியிலோ அப்பாவின் வழியிலோ பாட்டன் முப்பாட்டன் என்று யாராவது கருப்பாக இருந்திருப்பார்கள்’ என்று அம்மா சில சமயங்களில் சமாதானமாகச் சொல்லுவாள். அம்மாவுக்குள் இதைப் பற்றி ஒரு குற்ற உணர்வோ அவமானமோ இருப்பது போல் அந்தக் குரலில் நிழலாடும் தயக்கத்தைக் கண்டு மீரா நினைத்துக் கொள்வாள்.

    சின்ன வயசிலிருந்து அவளுக்கு விவரம் தெரிவதற்கு முன்பிலிருந்து அவளை வார்த்தைகளால் அப்பா சதுர்வேதி சீண்டிய நினைவு இது நாள் வரை அவளை நிழல் போல் துரத்தி வந்திருக்கிறது. பீதி பரவி வந்திருக்கிறது.

    தன்னுடைய பரிகாச வார்த்தைகளின் விளைவு அவளுள் ஒரு ஜுவாலையாக உருவாகி வருவது அவருக்கு தெரியுமா?

    அவளுக்குக் கண்களில் நீர் தளும்பிற்று. இனம் புரியாத ஆத்திரம் ஏற்பட்டது. தலைமுடியை வெடுக் வெடுக்கென்று வாரிக்கொள்கையில் அடர்த்தியான நீண்டு அலையான கூந்தல் தோளில் சரிந்தது.

    ‘நான் மட்டும் கொஞ்சம் சிவப்பாக இருந்திருந்தால்... அந்த ஃபாஷன் பரேடில் வரும் மாடல்களையெல்லாம் சாப்பிட்டிருப்பேன்.’

    இன்னும் தயாராகலே நீ?

    அவள் பதில் சொல்லாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1