Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gramathu Raatinam
Gramathu Raatinam
Gramathu Raatinam
Ebook173 pages1 hour

Gramathu Raatinam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இந்த 'கிராமத்து ராட்டினம்’ உங்கள் மனதிலும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்திச் சுழலும் என்று நம்புகிறேன். இதிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. பெண்மையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுபவை.

ஒரு விஷயம் அரசியலாக்கப்படும்போது, தனி மனிதர்களை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஒரு சிலரின் அனுபவங்களின் வாயிலாக உணர்ந்தபோது ஜனித்ததுதான் 'பதுங்கி இருக்கும் பாம்புகள்', அலுவலகத்துக்குள் நடக்கும் பதவிப்போட்டி, நகர வாழ்க்கையின் அவசரத்தில் தொலைந்து போன மனிதம், தங்களின் பேராசையால் இளந்தளிர்களின் பிஞ்சு, மனதை குத்திக் கிழிக்கும் பெற்றோர்- என்று தினசரி வாழ்வில் நாம் சந்திக்கிற சம்பவங்களே என் கதைக்கான களங்கள்.

இந்த சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தந்திருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு, என் மனப்பூர்வமான நன்றிகள், சிற்பி எங்கள் ஊர்க்காரர் மட்டுமல்ல, என் மரியாதைக்குரிய ஆசிரியரும்கூட. என்னுடைய இலக்கிய ஆர்வத்துக்கு, சிற்பியின் கவிதைகளும், சொற்பொழிவும் உரமிட்டன என்றால் அது மிகையில்லை.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லூரியில் பி.காம்படிக்கச் சேர்ந்தபோது, சிற்பி எனக்குப் பேராசிரியராக வரவேண்டும் என்பதே என் வேண்டுதலாக இருந்தது. ஆனால் நான் அங்கு சேர்ந்த நேரம், அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றச் சென்றுவிட்டார். அதில் எனக்கு அளவில்லாத ஏமாற்றம். ஆனாலும், எங்கள் ஊரில் நடைபெறும் சிற்பியின் கவியரங்கங்கள், இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று அவரது பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருப்பேன். என்னுடைய சிறுகதைகளுக்கு அணிந்துரை எழுதித்தர அவரை அணுகியபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அணிந்துரை கையில் கிடைக்கும்வரை, தேர்வு எழுதிவிட்டுக் காத்திருக்கும் மாணவியின் மனநிலையில் இருந்தேன். அணிந்துரையைப் படித்ததும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிம்மதி ஏற்பட்டது.

அன்புடன்,
ஜி.மீனாட்சி

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127304443
Gramathu Raatinam

Read more from G. Meenakshi

Related to Gramathu Raatinam

Related ebooks

Reviews for Gramathu Raatinam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gramathu Raatinam - G. Meenakshi

    http://www.pustaka.co.in

    கிராமத்து ராட்டினம்

    Gramathu Raatinam

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. அவளுக்கென்று ஒரு மனம்

    2. கிராமத்த ராட்டினம்

    3. பதுங்கி இருக்கும் பாம்புகள்!

    4. நடைக்குப் பின்னே...

    5. வெள்ளையம்மா

    6. கடல் சாட்சி

    7. தாய் மனசு

    8. ஃபாரின் பக்கிரி!

    9. காக்கைக்கும் தன் குஞ்சு...

    10. பதவி என்றொரு ஆயுதம்!

    11. சிறகொடிந்த பறவைகள்!

    அணிந்துரை

    பரிவும் பாசமும் மிக்க படைப்புகள்

    கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

    மெல்ல மழைத் துளிகள் பொட்டுப் பொட்டென்று விழத் தொடங்கிய விடியற்காலை. ஊர் போர்வையை உதறி விழித்தெழும் நேரம். எங்கள் கிராமத்தின் புழுதித் தரையிலிருந்து ஒரு புதுமணம் பொங்கி எழலாயிற்று. எதற்கும் இல்லாத புது வாசனை எங்கும் கமழ்ந்தது. இளம் காரமும் சத்தும் சாரமும் உள்ள வாசனை. அது நகரத்தில் கிடைக்காத சுகமான மண் வாசனை!

    நுகர்ந்தவர்களுக்குத்தான் அதன் அருமையும் பெருமையும் புலப்படும். ஜி.மீனாட்சியின் பசுமை மணம் கமழும் சிறுகதைகளுக்குள் பயணம் போகிற பாக்கியசாலிகள் நிச்சயமாக இந்த மண்ணின் மணத்தை அனுபவிக்க முடியும்.

    தமிழ்ச் சிறுகதை, காற்றாண்டைத் தாண்டி ஓடுகிற காலம் இது. புதுமைப்பித்தனின் வைரச் செதுக்கல்களும், கு.ப.ரா.வின் உள்ளமன விம்மல்களும், ஜெயகாந்தனின் முரண் தர்க்கங்களும், பிரபஞ்சனின் எளிமை வியப்புகளும், மெளனியின் மனக்குகை ஓவியங்களும் எனக் கனத்த ஒரு பாரம்பரியம் தமிழ்ச் சிறுகதைகளுக்கு உண்டு.

    எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என மாறுபட்ட தரிசனங்களின் ஊடேயும் சிறுகதை புதிய பரிமாணங்களை நோக்கி நகர்ந்திருக்கிறது. அத்திப் பூ எனச் சோதனை முயற்சிகளும், நாஞ்சில் நாடன் நிகர்த்த உரைநடை ஆளுமைகளின் தீவிரங்களும், கல்யாண்ஜி போன்ற இயல்பு நவிற்சி வெளிப்பாடுகளும் சிறுகதைக் கலையைச் செழுமைப் படுத்தியிருக்கும் காலம் இது.

    இந்தத் திக்பிரமையூட்டும் ஆரண்யத்துக்குள் - அடர் வானம் கண்டு பிரமிக்காமல் தொடரோட்டம் நடத்தும் குழந்தையின் உற்சாகத்தோடு ஜி.மீனாட்சி களத்துக்குள் இறங்குகிறார். பாக்கும் தேக்கும் செழித்த கானகத்தில், என்னையும் பாரேன் என்று பசுந்தழையும், பூக் குலைகளுமாக வளைகள் குலுங்கும் வனத்தின் இளங்கொடிபோலக் காட்சி தருகின்றன இவருடைய சிறுகதைகள்.

    மொத்தம் பதினொரு கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் படைப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பெண் மனச் சிக்கல்களையும் இயல்புகளையும் பேசும் கதைகள், வாழ்வின் மற்ற பரிமாணங்களைச் சித்திரிக்கும் கதைகள் எனப் பொதுவாக இருவகையான கதைகள். அவளுக்கென்று ஒரு மனம், நடைக்குப் பின்னே, வெள்ளையம்மா, கடல் சாட்சி, தாய் மனசு, காக்கைக்கும் தன் குஞ்சு ஆகியவை முதல் பிரிவுக்கு உரியவை. மற்ற கதைகள் இரண்டாம் பிரிவின.

    என்னதான் கூர்மை மிக்க பார்வை ஓர் எழுத்தாளனுக்கு இருந்தாலும் பெண் மனதை முழுமையாக ஊடுருவிப் பார்க்க ஒரு பெண்ணுக்கு இருக்கிற அனுபவமும் பக்குவமும் வேறுதான். இந்த உண்மைக்குச் சாட்சியம் வகிக்கின்றன ஜி.மீனாட்சியின் பெண் மனச் சித்திரிப்புகள், நீண்டகாலம் சந்திக்க வாய்ப்பின்றிப் போன தோழிகள் ஒருவரையொருவர் எதிர்பாராமல் சந்தித்துக்கொள்கிற போது, ஆசை ஆசையாகக் கதைகளைப் பரிமாறிக் கொள்வார்களே, அந்த நெருக்கமும் நேசமும் இந்தக் கதைகளில் நெருக்கி நெசவு செய்யப்பட்டுள்ளன.

    ஆண்-பெண் உறவு, அது காலானாலும், கல்யாணம் முடித்த வாழ்க்கையானாலும் அந்தரங்கத்தின் மெல்லிழைகளால் பின்னப்படுகிறது. இழைகள் அறுபடுகிறபோது ஆழ்மனக் காயங்களில் தேங்கும் வேதனை பெண்ணுக்கே வைக்கப்படும் சோதனையாகி விடுகிறது. காதலைத்தூண்டும் வயதில், மனசு எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி ஆணிடம் சரணாகதி அடைந்து விடுகிறது. சட்டென்று அவன் எந்தவிதப் பச்சாதாபமும் இன்றிவிலகி ஓடும்போது பூகம்பத்துக்கு இரையாகும் பெண் படும் எல்லையற்ற சோகத்தைப் பேசுகின்றன அவளுக்கென்று ஒரு மனம், கடல் சாட்சி ஆகிய கதைகள்.

    முதல் கதையில் வரும் காஞ்சனா, காதலிலும் தோற்று, காதலனின் மரணத்தையும் எதிர்கொண்டு சுக்குநூறாகிறாள். பிறகு திருமணமும் காதலும் எனப் பிறர் வாழ்வில் வரும் மகிழ்ச்சிகளைக் கூட அவளால் தாங்க முடிவதில்லை, வெள்ளத்தில் சிக்கிய துரும்பாகிறது அவள் உள்ளம். ஆனால் 'கடல் சாட்சி’யின் நாயகி ஒரு கிராமத்துப் பெண்ணுக்கே உரிய துணிவோடு தன் காதலனின் நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொள்கிறாள். தன் காதலுக்குச் சாட்சியாக இருந்த கடலிடம் நியாயம் கேட்கிறாள். குமுறியெழும் அலைகள் கரைதொட்டு அமைதியுறுவது போல் அவளும் மனமாற்ற முறுகிறாள். அதன் அடையாளமாக அவள் தன் செல்போனில் இருந்த அவன் எண்ணை 'டிலிட்' செய்கிற காட்சி நம்பிக்கையின் குறியீடாகிறது. சிதையும் பெண் மனத்தை ஒரு கதை படம் பிடிக்கும்போது மற்றொரு கதை தன்னைத் திரட்டிக் கொள்ளும் ஆளுமை மிக்க பெண்ணை முன் வைக்கிறது.

    பிரசித்தி பெற்ற ஆண்களின் சபவத்துக்கு எடுத்துக்காட்டு 'நடைக்குப் பின்னே’ சந்திராவின் அறுபது வயது நிரம்பிய கணவர். அந்த வயதில் அவருக்கு ஓர் அலுவலகச்செயலாளர் ரீட்டா மீது மோகம். தள்ளாத வயதில் கணவனின் அன்பை மீட்கச் சந்திரா நடையோ நடையென்று நடைப்பயிற்சி மேற்கொண்டு உடம்பைக் கச்சிதமாக்க முயல்கிறார். கணவரின் ரீட்டா மோகம் தீர்ந்த பின்னும், சந்திரா நடைப்பயிற்சியை விடவில்லை.

    பொம்பளைங்க எத்தனை வயசானாலும் உடம்பை ஃபிட்டா வச்சுக்கலன்னா எப்படிப்பட்ட விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என் அனுபவம் உணர்த்திடுச்சு என்னும் சந்திராவின் வாக்குமூலம் ஒரு நல்ல மனைவி மற்ற பெண்களுக்குச் சொல்லும் வாழ்வியல் ரகசியம்.

    தாய்மை தெய்வீகமானது. கெட்டுக் குட்டிச் சுவராகிக் காணாமல் போன மகன் முத்துவைத் தேடி அலைபாயும் பாவாயி ஏழைதான். ஆனால் ‘தாய் மனசு' என்ற சங்க நிதி, பதும நிதிக்குச் சொந்தக்காரி, பள்ளிக்குப் போன மகன் ராகுல் திரும்பி வராத நிலையில் இளம்தாய் சைலஜா படுகிற பாடு (காக்கைக்கும் தன் குஞ்சு) இன்னொரு பாசமலராய் விரிகிறது. சூழல்கள் வெவ்வேறு என்றாலும் தாய்மை என்ற ஆலயத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் ஆகின்றன இக் கதைகள்.

    குடிசைவாசியான ‘வெள்ளையம்மா' ஒரு குணச்சித்திரம், தன்னை மறந்து, தன் நோயை மறந்து என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற சித்தாந்தத்தின் திருவுரு வெள்ளையம்மாள். மறக்க முடியாத பாத்திரப் புனைவு.

    வாழ்வியலின் மற்ற பக்கங்களையும் ஜி.மீனாட்சியின் கதைகள் கண்டெடுத்துத் தருகின்றன.

    நகர நெரிசல்களிலிருந்து நாட்டுப் புறத்தின் தீராத ஆறுதலுக்காகத் தவிக்கு ஜெயராமனின் கதை ‘கிராமத்து ராட்டினம்', ஒரு மறு வருகையில் தன் கிராமம் அதன் வறுமையையும், இடிபாடுகளையும் இன்னும் சுமந்து கொண்டிருப்பதைக் காண்கிறார் ஜெயராமன். ஆனாலும் ஈரம் கசியும் மனிதத்தின் துளிகளைக் கிராமம் இழந்து விடவில்லை என்பதைக் காட்டும் அழகிய பதிவு ‘கிராமத்து ராட்டினம்' - இயல்பான, நெகிழ்வான சுதை.

    அலுவலகங்களின் அதிகாரப் போட்டியைத் தொட்டுக் காட்டுகிறது ‘பதவி என்றொரு ஆயுதம்', இதையே பல மடங்கு பெரிதுபடுத்தினால் நம் நாட்டு அரசியலாக மாறும் அரசியல் விளையாட்டுகள் மக்களை எப்படி அவலத்துக்கு இரையாக்குகின்றன என்பதைக் கூறும் கதை 'பதுங்கி இருக்கும் பாம்புகள், இரு மாநில எல்லைக் கோட்டுக்கு இப்புறமும் அப்புறம் பதுங்கி இருக்கும் வெட்கம் கெட்ட அரசியலை மென்மையாக, ஆனால் வலிமையாகப் புலப்படுத்துகிறது ஆசிரியரின் பேனா.

    நகர நாகரிகத்தின் கோமாளித்தனத்தை 'பாரின் பக்கிரி’ அடையாளப்படுத்துகிறான். பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் போலித்தனம் வெகு லாகவமாக இக்கதையில் வெளிப்படுத்தப்படுகிறது.

    இந்தத் தொகுப்பின் முத்திரைக் கதை என்று ‘சிறகொடிந்த பறவைகள்' கதையைக் கூறலாம். குழந்தைகளின் படிப்பை வியாபாரமாக்குகின்ற பள்ளிக்கூடங்கள், பிள்ளைகளை மதிப்பெண்கள் பெறும் உணர்ச்சியற்ற யந்திரங்கள் ஆக்குகின்ற பெற்றோர்கள், இவர்களுக்கிடைய மொக்கையாக, சக்கையாகப் பிழியப்படும் குழந்தைகள் என்ற முப்பரிமாணத்தை மிக அற்புதமாக, உணர்வின் நிறங்கள் ததும்ப வடித்துத் தருகிறது இக்கதை. எந்த ஒரு தகப்பனுடைய, தாயுடைய கண்களையாவது இந்த எழுத்தின் வெளிச்சம் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன். அரசும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய எச்சரிக்கைப் பனுவல் இது. விமல் இக்காலக் குழந்தைகளின் குழந்தைமை சாகடிக்கப்படுவதன் அடையாளம்.

    இதழியல் துறையில் பல ஆண்டுகளாக அழுத்தமான அனுபவங்களைப் பெற்றவர் ஜி.மீனாட்சி. இன்றைய சமூகத்தின் குறுக்கையும் நெடுக்கையும் பத்திரிகைச் செய்திகளாகப் பதிவு செய்தவர், அந்த அனுபவச் செழுமையை இத்தொகுப்பின் கதைகள் கூர்மையாகப் புலப்படுத்துகின்றன.

    ஜிமீனாட்சியின் கதை சொல்லும் நேர்த்தியில் காணப்படும் இரண்டு கூறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். ஒன்று மிக இயல்பான மொழி நடை. தாய் குழந்தையோடு பேசுவது போன்ற அழகும் பரிவும் செல்வமும் அன்பும் கலந்த நடை, அன்னியமாதல் இல்லாத அன்னியோன்னியமான நடை எளிமையின் அருமை துலங்கும் நடை, 'நான் இதைச் சொல்லப் போகிறேனாக்கும்'

    Enjoying the preview?
    Page 1 of 1