Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Prabalamanavargalin Vetri Ragasiyangal
Prabalamanavargalin Vetri Ragasiyangal
Prabalamanavargalin Vetri Ragasiyangal
Ebook192 pages1 hour

Prabalamanavargalin Vetri Ragasiyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபலங்கள் (வி.ஐ.பி.க்கள்)...

இந்த மந்திரச் சொல்லைக் கேட்டவுடன், உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் பிரமிப்புடன் விழி உயர்த்தாதவர்கள் வெகு சிலரே. சாதனைகளாலும், கடின உழைப்பாலும் பிரபலங்கள் என்ற நிலையை எட்டிப் பிடித்தவர்களைப் பார்த்து வியக்காதவர்கள் எவரேனும் உள்ளனரா? பிரபலங்களாக இருப்பதாலேயே, அவர்களை மற்றவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள்.

எவரொருவரும் பிறந்த உடனேயே பிரபலமாகி விடுவதில்லை. தங்கள் உழைப்பால், விடாமுயற்சியால், செயற்கரிய செயல்களால் பிரபலங்களாக மலர்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை...?

தூக்கம் தொலைத்து, மெய் வருத்தி, அசுர சாதகம் செய்து, இரவும் பகலும் ஆராய்ந்து என்று பல நிலைகளைக் கடந்துதான் பிரபலங்கள் என்ற சிகரத்தை எட்ட முடிகிறது. அப்படிப்பட்ட சிலரை நேரடியாகச் சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் 'தினமணி' நாளிதழின் கோவைப் பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில், இந்தப் பேட்டிக் கட்டுரைகள் 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் 'ஞாயிறு கொண்டாட்டம்' மற்றும் 'தினமணி கதிரில்’ தொடர்ந்து பிரசுரமாயின.

பிரபலங்களைப் பார்த்ததும் ஒரு ரசிகனைப் போல ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கத் துடித்திருக்கிறேன். ஆனால், பத்திரிகைத் துறையில் எந்த ஒரு பேட்டிக்கும், ஒரு சில எல்லைக்கோடுகள் உள்ளன. கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் பிரசுரித்துவிட முடியாது. இடப்பற்றாகுறை என்ற ஒரு வில்லன், பொங்கி வழியும் நம் ஆர்வத்துக்குத் தடை போட்டுவிடுவான்.

இருப்பினும், என் பேட்டிகளில் முக்கியமான செய்திகள் விடுபடாமலும், வாசகர்களுக்குத் தேவையான தகவல்களைச் சுவைபடவும் கொடுக்க முற்பட்டிருக்கிறேன்.

கே. ஜே. யேசுதாஸ், சுதா ரகுநாதன் போன்றவர்களைப் பேட்டி எடுப்பது அவ்வளவு எளிதாக எனக்கு வாய்க்கவில்லை. பல முறை முயற்சித்து, இடைவிடாமல் தொடர்பு கொண்டு, பல நாட்கள், பல மாதங்கள் காத்திருந்துதான் பேட்டி எடுக்க முடிந்தது. அந்த அனுபவங்களை எழுதினால், அதுவே ஒரு சுவாரஸ்யமான கட்டுரையாகிவிடும்.

கவிப்பேரரசு வைரமுத்து சாகித்ய அகாதெமி விருது பெற்ற போதும், கலைஞர் டி.வி.யில் ரமேஷ் பிரபா பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எடுத்த நேர்காணல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

உச்ச நிலையைத் தொட்டுவிட்ட மனிதர்களுக்குள்ளும் சில சோகங்கள், வடுக்கள் இருப்பதை இந்தப் பேட்டிகளின் போது உணர முடிந்தது. அவமானங்கள், ஏளனங்கள் என்று பலவிதத் தடைகளைத் தாண்டித்தான் பிரபலங்கள் என்ற இந்த நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். தத்தமது துறைகளில் சாதனையாளர்களாகத் திகழும் இந்தப் பிரபலங்கள், தங்கள் சாதனையை எண்ணி மகிழ்ந்து போய் அப்படியே இருந்துவிடவில்லை. விருதுகள், பட்டங்கள் பல பெற்றும், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். புதிது புதிதாய் சிந்தித்துக் கொண்டே தங்களைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.

பிரபலங்களாகிவிட்ட பலரும், தங்கள் பிரபலத்தை இந்தச் சமூகத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்ற உண்மையும் எனக்குப் புலப்பட்டது. பலர், ஏற்கெனவே சத்தமில்லாமல் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். தாங்கள் சார்ந்திருக்கும் துறைக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை, உதவியை நிறைவேற்றி வருகிறார்கள்.

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்களுக்கும், வெற்றி இலக்கை நோக்கி முன்னேறத் துடிப்பவர்களுக்கும், தாம் விரும்பும் துறையில் முதன்மை பெற முயல்பவர்களுக்கும் இந்தப் பிரபலங்களின் அனுபவங்கள், ஒரு சிறிய பிறைக் கீற்றாய் ஒளி காட்டும் என்று நம்புகிறேன்.

என் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் திரு. வைத்திய நாதன் அவர்களுக்கும், 'ஞாயிறு கொண்டாட்டம்', 'தினமணி கதிர்’ நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ப்ரியங்களுடன், ஜி. மீனாட்சி

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127304393
Prabalamanavargalin Vetri Ragasiyangal

Read more from G. Meenakshi

Related to Prabalamanavargalin Vetri Ragasiyangal

Related ebooks

Reviews for Prabalamanavargalin Vetri Ragasiyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Prabalamanavargalin Vetri Ragasiyangal - G. Meenakshi

    http://www.pustaka.co.in

    பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்

    Prabalamanavargalin Vetri Ragasiyangal

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இந்நூல்... எழுதுவதற்கு ஊக்கமும், வாய்ப்பும் அளித்த

    'தினமணி' ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்

    அவர்களுக்கு ...

    என்னுரை

    பிரபலங்கள் (வி.ஐ.பி.க்கள்)...

    இந்த மந்திரச் சொல்லைக் கேட்டவுடன், உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் பிரமிப்புடன் விழி உயர்த்தாதவர்கள் வெகு சிலரே. சாதனைகளாலும், கடின உழைப்பாலும் பிரபலங்கள் என்ற நிலையை எட்டிப் பிடித்தவர்களைப் பார்த்து வியக்காதவர்கள் எவரேனும் உள்ளனரா? பிரபலங்களாக இருப்பதாலேயே, அவர்களை மற்றவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள்.

    எவரொருவரும் பிறந்த உடனேயே பிரபலமாகி விடுவதில்லை. தங்கள் உழைப்பால், விடாமுயற்சியால், செயற்கரிய செயல்களால் பிரபலங்களாக மலர்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை...?

    தூக்கம் தொலைத்து, மெய் வருத்தி, அசுர சாதகம் செய்து, இரவும் பகலும் ஆராய்ந்து என்று பல நிலைகளைக் கடந்துதான் பிரபலங்கள் என்ற சிகரத்தை எட்ட முடிகிறது. அப்படிப்பட்ட சிலரை நேரடியாகச் சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் 'தினமணி' நாளிதழின் கோவைப் பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில், இந்தப் பேட்டிக் கட்டுரை கள் 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் 'ஞாயிறு கொண்டாட் டம்' மற்றும் 'தினமணி கதிரில்' தொடர்ந்து பிரசுரமாயின.

    பிரபலங்களைப் பார்த்ததும் ஒரு ரசிகனைப் போல ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கத் துடித்திருக்கிறேன். ஆனால், பத்திரிகைத் துறையில் எந்த ஒரு பேட்டிக்கும், ஒரு சில எல்லைக்கோடுகள் உள்ளன. கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் பிரசுரித்துவிட முடியாது. இடப்பற்றாகுறை என்ற ஒரு வில்லன், பொங்கி வழியும் நம் ஆர்வத்துக்குத் தடை போட்டுவிடுவான்.

    இருப்பினும், என் பேட்டிகளில் முக்கியமான செய்திகள் விடுபடாமலும், வாசகர்களுக்குத் தேவையான தகவல்களைச் சுவைபடவும் கொடுக்க முற்பட்டிருக்கிறேன்.

    கே. ஜே. யேசுதாஸ், சுதா ரகுநாதன் போன்றவர்களைப் பேட்டி எடுப்பது அவ்வளவு எளிதாக எனக்கு வாய்க்கவில்லை. பல முறை முயற்சித்து, இடைவிடாமல் தொடர்பு கொண்டு, பல நாட்கள், பல மாதங்கள் காத்திருந்துதான் பேட்டி எடுக்க முடிந்தது. அந்த அனுபவங்களை எழுதினால், அதுவே ஒரு சுவாரஸ்யமான கட்டுரையாகிவிடும்.

    கவிப்பேரரசு வைரமுத்து சாகித்ய அகாதெமி விருது பெற்ற போதும், கலைஞர் டி.வி.யில் ரமேஷ் பிரபா பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எடுத்த நேர்காணல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

    உச்ச நிலையைத் தொட்டுவிட்ட மனிதர்களுக்குள்ளும் சில சோகங்கள், வடுக்கள் இருப்பதை இந்தப் பேட்டிகளின் போது உணர முடிந்தது. அவமானங்கள், ஏளனங்கள் என்று பலவிதத் தடைகளைத் தாண்டித்தான் பிரபலங்கள் என்ற இந்த நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். தத்தமது துறைகளில் சாதனையாளர்களாகத் திகழும் இந்தப் பிரபலங்கள், தங்கள் சாதனையை எண்ணி மகிழ்ந்து போய் அப்படியே இருந்துவிடவில்லை. விருதுகள், பட்டங்கள் பல பெற்றும், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். புதிது புதிதாய் சிந்தித்துக் கொண்டே தங்களைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.

    பிரபலங்களாகிவிட்ட பலரும், தங்கள் பிரபலத்தை இந்தச் சமூகத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்ற உண்மையும் எனக்குப் புலப்பட்டது. பலர், ஏற்கெனவே சத்தமில்லாமல் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். தாங்கள் சார்ந்திருக்கும் துறைக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை, உதவியை நிறைவேற்றி வருகிறார்கள்.

    வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்களுக்கும், வெற்றி இலக்கை நோக்கி முன்னேறத் துடிப்பவர்களுக்கும், தாம் விரும்பும் துறையில் முதன்மை பெற முயல்பவர்களுக்கும் இந்தப் பிரபலங்களின் அனுபவங்கள், ஒரு சிறிய பிறைக் கீற்றாய் ஒளி காட்டும் என்று நம்புகிறேன்.

    என் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் திரு. வைத்திய நாதன் அவர்களுக்கும், 'ஞாயிறு கொண்டாட்டம்', 'தினமணி கதிர்' நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ப்ரியங்களுடன், ஜி. மீனாட்சி

    உள்ளடக்கம்

    1. அதிசய ராகம்... ஆனந்த ராகம்... அபூர்வ ராகம்!

    - டாக்டர் கே. ஜே. யேசுதாஸ்

    2. மகிழ்ச்சிதான் என் பாலிசி!

    - ஜெயஸ்ரீ (சன் டி.வி. தொகுப்பாளினி)

    3. காகிதம் காலியாக... உண்மையை எழுதுகிறேன்!

    - கவிஞர் சுகுமாரன்

    4. சங்கீத மழை மொழியும் செளம்யா!

    - கர்நாடக இசைப் பாடகி செளம்யா

    5. உண்மைகளை ஓங்கிச் சொல்ல எனக்கு தைரியம் உள்ளது!

    - கவிப்பேரரசு வைரமுத்து

    6. 'அரசு விருது கிடைக்கலயே...'

    - பரவை முனியம்மா

    7. என் கணவர் கேட்ட சீர்வரிசை!

    - மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா

    8. பாரம்பரியம் போற்றும் பரதத் தம்பதி!

    - நடனத் தம்பதிகள் சாந்தா, தனஞ்ஜயன்

    9. குருகுலவாசம் கொண்டாடும் கோபாலன்!

    - கர்நாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தான கோபாலன்

    10. பெண்களுக்கு அரசியல் ஈடுபாடு வேண்டும்!

    - உ. வாசுகி

    11. நவீன பரதத்தின் நாயகி!

    - நடனக் கலைஞர் அனிதா ரத்னம்

    12. இன்று இலக்கியத்துக்கு வந்துள்ள ஆபத்து!

    - கவிஞர் சிற்பி

    13. ஊர்கூடித் தேர் இழுத்தால் சாத்தியமாகும்!

    - நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம்

    14. ஆன்மிகச் சொற்பொழிவு ஆனந்த அனுபவம்!

    - ஜெயா சீனிவாசன்

    15. இளைஞர்களைக் கெடுக்கும் நிகழ்ச்சிகளை நான் தயாரிப்பதில்லை!

    - ரமேஷ் பிரபா

    16. கொண்டாடுவதற்கே வாழ்க்கை!

    - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

    17. எல்லா நடனமும் அழகுதான்!

    - நடிகர் வினீத்

    18. கின்னஸுக்குப் போகும் நாவல்கள்!

    - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

    19. பாட்டியிடம் கற்ற பாடம்!

    - கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்

    20. உலக சாதனை நாயகன்!

    - மிருதங்கச் சக்ரவர்த்தி குழல் மன்னன் கே. ஜி. ராமகிருஷ்ணன்

    21. வனம் பெருக வளம் பெருகும்!

    - சுற்றுச்சூழல் ஆர்வலர் 'ஓசை' காளிதாஸ்

    22. பிடித்த விஷயங்களைத் துறப்பது ஆத்ம துரோகம்!

    - பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்

    23. மாலைப் பொழுதின் மயக்கத்திலே...

    - கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன்

    24. நதியிடம் நான் கற்ற பாடம்!

    - தமிழருவி மணியன்

    25. படைப்பு என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்!

    - கவிஞர் புவியரசு

    1. அதிசய ராகம்... ஆனந்த ராகம்... அபூர்வ ராகம்!

    மெளனம் சுமக்கும் இரவுகளிலும்

    அந்திப் பகல் பொழுதுகளிலும்

    ஆறுதலாய் அரவணைக்கும் தென்றல் அது.

    இதயம் கனத்துப் போகும்

    தருணங்களில் மயிலிறகாய்

    தடவிக் கொடுக்கும் வருடல் அது.

    அதற்குச் சொந்தக்காரர் –

    கே.ஜே. யேசுதாஸ்.

    சங்கீதம் மட்டுமின்றி உலக சமாதானமும் பேசுகின்ற இந்த சாதகப் பறவை, இனி உங்களோடு...

    * இப்போதெல்லாம் திரைப்படங்கள்ல நீங்க அதிகமாகப் பாடறதில்லையே...

    நிறையப் பாடியாச்சு. கிளாஸிகல் மியூஸிக்ல இருந்து, 'தண்ணித் தொட்டி தேடி வந்த...'ங்கற வரை பல தரத்துலயும், விதத்துலயும் பாடியாச்சு. இப்பல்லாம் ரொம்ப செலக்டிவ்வாத்தான் பாடறேன். என்னோட வாய்ஸ் ரொம்ப மெலடியானது. 'நீங்க பாடினாத்தான் இந்தப் பாடல் நல்லாயிருக் கும்'னு வர்றவங்களுக்குப் பாடிக் கொடுக்கறேன். சமீபத்துல கூட இளையராஜா இசையில் ஒரு திரைப்படத்துக்காகப் பாடினேன்.

    * நீங்க, எஸ்பிபினு குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாடகர்கள் மட்டுமே பாடிட்டிருந்ததுபோய், இப்ப ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொருத்தர்னு நிறையப் பேர் பாட வந்துட்டாங்க. பல நேரங்கள்ல யார் பாடின பாடல் அதுன்னு கூட கண்டுபிடிக்க முடியறதில்லை. பாடகர்களும் பிரகாசிக்க முடியாமப் போகுதே...

    நான் பாட வந்த புதுசுல, இந்தப் பாடலுக்கு இவர் பாடினாத்தான் நல்லா இருக்கும்னு முத்திரை குத்தப்பட் டிருந்தது. 'செளந்தர்ராஜன் அண்ணன் பாடினாத்தான் அந்தப் பாடல் நல்லாயிருக்கும். யேசுதாஸ் பாடினாத்தான் இந்தப் பாடலுக்கு அழகுன்னு' ஓர் அளவுகோல் இருந்தது. ஒரு பொருளுக்கு விளம்பரத் தூதர்கள் போல், ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு நடிகர்களுக்கு சில குறிப்பிட்ட பாடகர்கள் பாடினாத்தான் சிறப்பா இருக்கும்னு இருந்தது. ஆனா, இப்போ அப்படியில்லை. இளம் தலைமுறை பாடகர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குது. ஆனா, நவீன தொழில்நுட்பங்களோட ஆதிக்கத்தால், பாடகர்களோட தரம் வீணடிக்கப் பட்டிருச்சு.

    நான் தமிழ்ல பாட வந்தப்போ, எனக்கு தமிழ் அவ்வலவாத் தெரியாது. தமிழ்ப் பாடல்களை மலையாளத்துல எழுதி வச்சிட்டுதான் பாடிட்டிருந்தேன். 'திருக்கோயிலே'னு எழுதிக் கொடுத்தால் 'தெருக்கோயிலே'னு பாடினார்னு என் மேலே ஒரு குற்றச்சாட்டு கூட உண்டு. நான் அப்படிப் பாடினது தப்புதான். ஆனா, சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் வந்து திருத்தியிருந்தா நான் சரியாகப் பாடியிருப்பேன். தமிழ் மொழியில் 'த'ங்கறது ஒரு எழுத்துதான். மலையாளத்துல நாலு 'த' இருக்குது. எந்தத் 'த'வை பாடறது? சரியானபடி அப்ப சொல்லிக் கொடுத்திருந்தா இந்தத் தவறு நேர்ந்திருக் காது.

    மலையாள மொழிங்கிறது தமிழ், கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து உற்பத்தி ஆனதுதான். கேரளத் தோட கொல்லம் பக்கத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள்கிட்டேயிருந்து தோன்றின பாஷை மலையாளம்னு சொல்றதுண்டு. 'தேங்காய்'கிற தமிழ் வார்த்தையை மலையாளத்தில 'தேங்ங'னும், மாங்காய்ங்கிற வார்த்தையை 'மாங்ங'னும் சொல்றதப்போல சின்னச் சின்ன வித்தியாசம் தான் இருக்கு. காலப்போக்கில் நான் தமிழ் பேச, எழுத கற்றுக்கிட்டேன். தமிழ்ப் பாடல் வரிகளோட அர்த்தம் புரிந்து மலையாளத்தில் எழுதி வைச்சு சரியான உச்சரிப்பில் பாடறேன்.

    * சங்கீதத்துல உச்சபட்ச இடத்தை அடைந்த பிறகும், இத்தனை விருதுகள் வாங்கின பிறகும்... இப்பவும் சாதகம் பண்றது உண்டா?

    சாதகம் பண்ணாம இருக்க முடியாதே! சங்கீதம் கடல் மாதிரி. தினம், தினம் புதுசு புதுசா கற்றுக்க ஏராளமான விஷயங்கள் இருக்கு. இன்னிக்கு காலையில கூட, பழக்கத்தில் இல்லாத ராகம் ஒன்றைப் பற்றி நண்பர்கள்கூட பேசிட் டிருந்தேன். சங்கீதத்துக்கு எல்லையே இல்லை. அது ஒரு சாகரம். பணத்துக்காக மட்டுமே நான் பாடறதில்லை. ஆத்ம திருப்திக்காகவும் தான் பாடறேன்.

    * குருவாயூர் கோயிலுக்குள்ள போக முடியலையேங்கிற வருத்தம் இன்னமும் உங்க மனசில இருக்கா...

    கடவுள் எப்போதும் நிரந்தரமானவன். அவனுக்கு அழிவே இல்லை. பிறப்பும், இறப்பும் இல்லாத கடவுளுக்கு, சாதி, மொழி, மத வேறுபாடு மட்டும் எப்படி இருக்கும்? ஒரு வீட்டுக்கு நம்மள வரவேண்டாம்னு சொன்னா, நாம் அங்க போகவா போறோம்? இல்லையே. நம்மை மதிக்காத இடத்துக்கு நாம் போக முடியலையேனு வருத்தப்படறதுல அர்த்தம் இல்லை. நான் பாட வந்த புதுசுல, ஏகப்பட்ட அவமானங்களைச் சந்திச்சிருக்கேன். சாதி, மதங்கற பேர்ல நிறையப்

    Enjoying the preview?
    Page 1 of 1