Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mallikavin Veedu
Mallikavin Veedu
Mallikavin Veedu
Ebook124 pages38 minutes

Mallikavin Veedu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்களுக்கான சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் நான் இயங்கினாலும் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது, என் மனதுக்குள் விவரிக்க இயலாத மகிழ்ச்சி நிலவுகிறது. காரணம், இதைப் படிக்கும் குழந்தைகள் நிச்சயம் இந்தக் கதைகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி நடக்க முற்படுவார்கள் அல்லது தங்களின் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்குவார்கள் என்பதுதான்!

அழ. வள்ளியப்பா, டாக்டர் பூவண்ணன், செல்ல கணபதி, ரேவதி, இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதித் தந்திருக்கும் கிருங்கை சேதுபதி உள்ளிட்ட சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் பலரும், புதுப்புது உத்திகள், புதிய கதைக் களங்களுடன், தரமான கதைகள் பலவற்றைத் தந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரின் நோக்கமும் நிச்சயம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். விசித்திர மாயாவி, பறக்கும் பாய், பேசும் விலங்குகள் என்று நடக்காத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனையால் நடத்திக் காட்டும் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலரின் கதைகளை நாம் படித்திருப்போம்.

அவையெல்லாம் நமக்குள் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியதை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டோம். இன்றைய சூழ்நிலையில் மாயாவிக் கதைகளைவிட மரம் நடுவதன் அவசியம் பற்றிய கதைகளையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கதைகளையும், நல்லொழுக்கக் கதைகளையும், நவீனத் தொழில்நுட்பத்தின் பாதிப்புகளை உணர்த்தும் கதைகளையும் சிறுவர்கள் மனத்தில் பதியும்படி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம். கதை சொல்லும் பாட்டிகளும், கதை சொல்லிகளும் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், சிறந்த கதைகள் மூலம் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை குழந்தைகள் மனத்தில் பதிய வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப் பட்டவை. இதில் உலாவரும் கதாபாத்திரங்களில் பலர், ரத்தமும், சதையுமாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். கதைக் களங்களும், அதை மெருகேற்ற நான் கையாண்ட உத்தியும் மட்டுமே கற்பனை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் வகையில் வடிவமைத்திருக்கிறேன். கதை படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்காக அமையாமல், பொது அறிவை வளர்த்துக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். கதைகள் மூலம் பசுமையை விதைக்க நான் முற்பட்டிருக்கிறேன். தூய்மை பாரதத்தை உருவாக்க விளைந்திருக்கிறேன். சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க முயற்சி எடுத்திருக்கிறேன்.

இதைப் படிக்கும் குழந்தைகளின் சிந்தனையில் நாட்டுப்பற்று, சமூகச் சிந்தனை, வறியோருக்கு உதவும் குணம், சக மனிதர்களை நேசிக்கும் பண்பு வளர வேண்டும் என்பதே என் விருப்பம். இவை நிச்சயம் குழந்தைகள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

இந்தப் புத்தகத்துக்கு அழகானதொரு அணிந்துரையை அளித்திருக்கும் எழுத்தாளர் கிருங்கை சேதுபதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கதைகளுக்கேற்ப, பொருத்தமான, அழகிய ஓவியங்களை வரைந்து தந்திருக்கும் ஓவியர் செந்தமிழ்ச்செல்வனுக்குப் பாராட்டுகள்.

மிக்க அன்புடன், ஜி. மீனாட்சி

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127304396
Mallikavin Veedu

Read more from G. Meenakshi

Related to Mallikavin Veedu

Related ebooks

Reviews for Mallikavin Veedu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mallikavin Veedu - G. Meenakshi

    http://www.pustaka.co.in

    மல்லிகாவின் வீடு

    சிறுவர் சிறுகதைகள்

    Mallikavin Veedu

    Siruvar Sirukathaigal

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    1. செல்லப் பெண்

    2. காகங்களின் சேவை

    3. மல்லிகாவின் வீடு

    4. மெழுகுவர்த்திச் சுடர்

    5. கண்டு படிக்கலாம்!

    6. ஃபேஸ்புக் நண்பர்கள்

    7. காட்டுக்குள் ஒரு விபத்து!

    8. புதன்கிழமை ரகசியம்

    9. வண்ணங்களும் எண்ணங்களும்!

    10. மயில்சாமி வாத்தியார்

    11. நான்கில் ஒரு பங்கு

    12. தோல்வியின் ருசி!

    13. அப்பாவை ஏன் பிடிக்கும்?

    14. தேன் குடித்த நரி

    15. பசுமைத் தூதர்!

    16. பரிசுப் பணம்

    அணிந்துரை

    குழந்தைகளுக்குக் கதைகள் மிகவும் பிடிக்கும். சொல்லச் சொல்ல, 'உம்' கொட்டிக் கேட்கக் கேட்க வளரும் கதைகள் தமிழில் உண்டு.

    சொல்வது போல எழுதுகிற கதைகளும் நிறைய வருகின்றன. என்னதான் எழுதினாலும் அதை எடுத்துப் படிக்கிறபோது, எழுதுகிறவர் முன்னின்று சொல்கிற மாதிரிதானே எல்லாமும் இருக்கிறது. முகம் பார்த்துச் சொல்லப்படுகிற கதைகள் காற்றின் வழியாகச் செவியேறி மனம் நுழைகின்றன. எழுதப்படுகிற கதைகளோ கண்கள் வரியாகக் கருத்தில் கலக்கின்றன.

    அடுத்து என்ன என்கிற ஆர்வத்தைத் தூண்டி, அவற்றுள் வருகிற பாத்திரங்களுடன் ஒன்றிவிடச் செய்யும் கதைகள்தாம் பசைபோட்டு மனதில் ஒட்டிக் கொள்கின்றன; அசைபோட்டுச் சிந்திக்க வைக்கின்றன. சுவையான கதைகள் திரும்பத் திரும்ப மனதுக்குள் உலா வரத் தொடங்குகின்றன.

    அப்படியான கதைகளில் வரும் பல நல்ல செய்திகள், அனுபவம் நிறைந்த நீதிநெறிகள், வாசிப்போர் மனங்களை வளப்படுத்துகின்றன. கதையில் வருவதுபோல் அந்றாட வாழ்வில் நேரும் சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன. சொல்லப்போனால், எழுதப்படுகிற பல கதைகள் அன்றாட நிகழ்வின் அடிப்படையில் தோன்றியவைதாம்!

    வீட்டிலும், வெளியிலும், பள்ளியிலும், பொது இடங்களிலும் நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து கதைக்குரிய கூறுகளைக் கவனித்து எடுத்துக் கற்பனைச் சுவைபடச் சொல்லுகிறபோது, கதைகள் உருவாகின்றன; புதிதுபுதிதான அனுபவங்களும், அறிவு நிறைந்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன.

    உண்மையும் கற்பனையும் கலந்த அந்தக் கதைகளுக்குரிய காட்சிகளைச் சித்திரங்களோடு இணைத்துத் தருகிற புத்தகங்கள் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரியவை.

    ஒரு நல்ல புத்தகம் என்பது கையில் எடுக்கும்போது, தாள்கள் நிரம்பிய கட்டாகத்தான் தெரியும்; பக்கங்களை விரித்துப் படிக்கத் தொடங்கிய பிறகு, அது எடுத்து வைத்திருப்பவர்களையே எடுத்துக் கொள்ளும்; தன்னுள் பல பாத்திரங்களாக, வாசிப்பவர்களை ஆக்கிவிடும் மாயத்தைச் செய்து விடும்.

    புத்தகத்துக்குள் முழுமையாகப் புகுந்து வெளிவருகிற போது, புதிய அனுபவங்களோடும், ஆற்றலோடும் வருகிறோம் என்றால் அது நல்ல புத்தகம்.

    அப்படியான புத்தகங்கள் தமிழில் நிறைய வருகின்றன. ஆனால், அவை குழந்தைகளைச் சென்று சேர்கின்றனவா என்பதுதான் ஐயமாக இருக்கிறது.

    பாடப் புத்தகங்கள் தாண்டிப் பயனுள்ள நல்ல புத்தகங்கள் நிறைய வருகின்றன. அவற்றை வாங்கிக் கொடுப்பவர்களும், வைத்துப் படிப்பவர்களும் எண்ணிக்கையில் அதிகமானால், எண்ணத்திலும் பல நல்ல வளர்ச்சிகள் தோன்றும்.

    அந்த நம்பிக்கையும் ஆர்வமும் உடையவர்கள்தான் குழந்தைகளுக்கான இலக்கியம் படைக்க வருகிறார்கள். அதில் ஒருவர் சகோதரி திருமதி ஜி. மீனாட்சி.

    இதழியல் துறையில் அவரது பணி என்றாலும், சிறார்களின் அன்பு உலகத்தில், கதைச் சொல்லும் அக்காவாகவும், அம்மாவாகவும், நல்ல தோழியாகவும் உலா வருகிறார். சின்னச் சின்ன கதைகள் சொல்கிறார்; செல்லமான நடையில் சொல்கிறார்; நல்லவர்கள் பாத்திரங்களாக வருகிறார்கள்; நல்ல செய்திகளைத் தருகிறார்கள்; அன்றாடச் செய்திகளில் இருந்து அவசியமான பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ளத் தருகிறார்கள்.

    தன்னை நேசிப்பது போலவே, தன்னைச் சுற்றிலும் உள்ள இயற்கையை, சுற்றுச்சூழலை நேசிக்க வேண்டும். பேண வேண்டும் என்பதை, நடைமுறைப்படுத்திக் காட்டுகிறார்கள். மனிதர்கள் மட்டுமின்றி, பறவைகளும், விலங்குகளும் பாத்திரங்களாக வருவது சிறார் இலக்கியத்தின் இயல்பு. இந்தப் புத்தகத்தில் வண்ணங்களும் பாத்திரங்களாக வருவது சிறப்பு. இதில் இடம்பெறும் 'புதன்கிழமை இரகசியம்' சிறுகதை ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கிறது. அது என்ன இரகசியம் என்று சொல்லக்கூடாது. படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாக் கதைகளின் இரகசியங்களும் அப்படிப்பட்டதுதானே!

    ஒவ்வொரு கதைக்கும் அழகான ஓவியம் உண்டு. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல, ஒவியம் இல்லாத சிறார் புத்தகமும் அத்தனை ருசி தருவதில்லை அல்லவா?

    இதில் வளரும் குழந்தைகளுக்கேற்ப, புத்தகங்களைத் தரவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட அதன் உரிமையாளர் முனைவர் திரு.இராமநாதன் அவர்களுக்குப் பாராட்டு.

    அன்புச் சகோதரி ஜி. மீனாட்சி அவர்கள் இன்னும் சிறந்த சிறார் கதைகளைத் தருவார் என்கிற நம்பிக்கையை, இந்தத் தொகுப்பு தருகிறது. எழுதிய அவருக்கும் எடுத்து வாசிக்கும் இனிய வாசக உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துகள்.

    மிக்க அன்புடன்

    கிருங்கை சேதுபதி

    முன்னுரை

    குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்களுக்கான சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் நான் இயங்கினாலும் குழந்தைகளுக்குக் கதை

    Enjoying the preview?
    Page 1 of 1